என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "இறகு பந்து போட்டி"
- 14 வயதுக்குட்பட்டோருக்கான ஆண்கள் இரட்டையர் பிரிவில் ரித்விக், கிருத்திக் பிரணவ் ஜோடி முதலிடம் பெற்றனர்.
- நிகழ்ச்சி ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
திருப்பூர்:
திருப்பூர் காந்திநகர் பகுதியில் உள்ள ஏ.வி.பி. டிரஸ்ட் பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளியில் திருப்பூர் சகோதயா கூட்டமைப்பு பள்ளிகளுக்கு இடையேயான இறகுப்பந்து போட்டி நடைபெற்றது. திருப்பூர் சகோதயா கூட்டமைப்பில் உள்ள 23-க்கும் அதிகமான சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் இருந்து 250-க்கும் அதிகமான மாணவர்கள் கலந்துகொண்டனர். 12 வயதுக்குட்பட்டோருக்கான பெண்கள் இரட்டையர் பிரிவில் வர்ணிகாஸ்ரீ, மகிமிதா ஜோடி முதலிடம் பெற்றனர். 14 வயதுக்குட்பட்டோருக்கான ஆண்கள் இரட்டையர் பிரிவில் ரித்விக், கிருத்திக் பிரணவ் ஜோடி முதலிடம் பெற்றனர். 14 வயதுக்குட்பட்டோருக்கான பெண்கள் இரட்டையர் பிரிவில் ஐஸ்வர்ய லட்சுமி, ஸ்வேதா ஜோடி முதலிடம் பெற்றனர். ஆண்கள் ஒற்றையர் பிரிவில் மாணவன் ரித்விக் முதலிடம் பெற்றார். 16 வயதுக்குட்பட்டோருக்கான ஆண்கள் ஒற்றையர் பிரிவில் மாணவன் கவுஷிக் குகன் 2-ம் இடம் பெற்றார்.
முன்னதாக தொடக்க விழாவுக்கு ஏ.வி.பி.பள்ளி தாளாளர் கார்த்திகேயன் அருள்ஜோதி தலைமை தாங்கி பேசினார். முதல்வர் பிரமோதினி வரவேற்றார். மாநகராட்சி கமிஷனர் ஜி.பவன்குமார், திருப்பூர் யூரோலைன் ஏற்றுமதி நிறுவன மேலாண்மை இயக்குனர் மெய்நம்பி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். வெற்றிபெற்ற மாணவர்களை பள்ளியின் தாளாளர் கார்த்திகேயன் அருள்ஜோதி, பொருளாளர் லதாகார்த்திகேயன், முதல்வர் பிரமோதினி, ஒருங்கிணைப்பாளர் வி.மோகனா, பயிற்சியாளர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர். மாலையில் பரிசளிப்பு விழா நடைபெற்றது. இதில் திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதி கே.என்.விஜயகுமார் எம்.எல்.ஏ, ஸ்ரீமுருகன் நிட்ஸ் ஏற்றுமதி நிறுவன தலைவரும் முன்னாள் திருப்பூர் மாமன்ற உறுப்பினருமான பாலசுப்பிரமணியம் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்கள். உடற்கல்வி ஆசிரியர் ஞானசுந்தரி நன்றி கூறினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
- மாற்றுத்திறனாளிகளுக்கான இறகு பந்து போட்டியில் பங்கேற்று தங்கம் வென்றுள்ள செய்தியறிந்து பெருமிதமும், மகிழ்ச்சியும் அடைந்தேன்.
- எனது அன்பையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
ஜெர்மனியில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான பன்னாட்டு இறகுபந்து போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம் என்ற சிறுவன் தங்கம் வென்றுள்ளார். அவருக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் ஒடுக்கம்பட்டியை சேர்ந்த தம்பி இராஜ்குமாரின் மகன் பாலசுப்பிரமணியம், ஜெர்மனியில் நடைபெற்ற பன்னாட்டு மாற்றுத்திறனாளிகளுக்கான இறகு பந்து போட்டியில் பங்கேற்று தங்கம் வென்றுள்ள செய்தியறிந்து பெருமிதமும், மகிழ்ச்சியும் அடைந்தேன்.
'ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித் தாழாது உஞற்று பவர்' எனும் தமிழ்மறையோன் நமது பெரும்பாட்டன் வள்ளுவப் பெருந்தகையின் கூற்றுக்கிணங்க, தன் நிலை கண்டு துவண்டு, சோர்ந்து விடாமல், தொடர்ச்சியாக முயன்று, தனக்குக் கிடைக்கப்பெற்ற மிகச்சொற்ப வாய்ப்பினைப் பயன்படுத்தி, தமது அயராத முயற்சியினாலும், அபாரத் திறமையினாலும் உலக அரங்கில் தமிழினத்தைத் தலைநிமிரச் செய்துள்ள அன்புமகன் பாலசுப்பிரமணியமுக்கு எனது அன்பையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
கடுமையான உழைப்பும், தளராத மன ஊக்கமும் இருந்தால் எத்தகைய சூழலிலும் சாதிக்க முடியும் என்பதை நிரூபித்து, இளந்தலைமுறை தமிழ் பிள்ளைகளுக்கு முன்னுதாரணமாகத் திகழும் அன்புமகன் பாலசுப்பிரமணியம் மேலும் பல சாதனைகளைப் படைக்க எனது உள்ளம் கனிந்த புரட்சி வாழ்த்துகள்!" இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
மாற்றுத்திறனாளிகளுக்கான இறகு பந்து போட்டியில் பங்கேற்று தங்கம் வென்றுள்ள செய்தியறிந்து பெருமிதமும், மகிழ்ச்சியும் அடைந்தேன்.
- சோழசிராமணி பிரண்ட்ஸ் பேட்மிட்டன் கிளப் நடத்திய 6-ம் ஆண்டு இறகு பந்து போட்டி மாரப்பம்பாளையத்தில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்றது.
- இறகு பந்து போட்டியில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டு விளையாடின.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா சோழசிராமணி பிரண்ட்ஸ் பேட்மிட்டன் கிளப் நடத்திய 6-ம் ஆண்டு இறகு பந்து போட்டி மாரப்பம்பாளையத்தில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்றது.
இறகு பந்து போட்டி தொடக்க விழாவிற்கு சோழசிராமணி ஊராட்சி முன்னாள் தலைவர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். அரிமா சங்க மாவட்ட முன்னாள் ஆளுநர் சந்திரசேகரன் முன்னிலை வைத்தார். தனியார் பள்ளி தாளாளர் தேவராஜன் வரவேற்றார்.
சிறப்பு விருந்தினராக கபிலர்மலை யூனியன் சேர்மன் ஜே.பி.ரவி கலந்து கொண்டு இறகு பந்து போட்டியை தொடங்கி வைத்தார். இறகு பந்து போட்டியில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டு விளையாடின.
இதில், கவுந்தப்பாடி அணி முதலிடத்தையும், திருச்செங்கோடு அணி 2-ம் இடத்தையும், ஜேடர்பாளையம் 3-ம் இடத்தையும், சோழசிராமணி அணி 4-ம் இடத்தையும் பெற்றது. வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. முடிவில் சோழசிராமணி பிரண்ட்ஸ் பேட்மிட்டன் கிளப்பைச் சேர்ந்த பரத் நன்றி கூறினார்.
- இளைஞர்க ளுக்கான இறகு பந்து போட்டி இரவில் மின்னொழியில் நடைபெற்றது.
- சிறப்பு விருந்தினராக பாப்பிரெட்டிப்பட்டி மேற்கு ஒன்றிய தி.மு.க செயலாளர் சரவணன் விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைத்தார்.
பாப்பிரெட்டிப்பட்டி,
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி மேற்கு ஒன்றியத்தில் உள்ள பொ. மல்லாபுரம் பேரூராட்சியில் கிறிஸ்தவர்கள் சார்பில், புனித அந்தோணியார் ஆலயம் அருகே இளைஞர்க ளுக்கான இறகு பந்து போட்டி இரவில் மின்னொழியில் நடைபெற்றது.
இதில் பத்துக்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டனர். மேலும் போட்டியில் வெற்றி பெரும் அணிகளுக்கு முதல் பரிசு ரூ.7000, இரண்டாவது பரிசு ரூ.5000, மூன்றாவது பரிசு ரூ.3000 வழங்கப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பாப்பிரெட்டிப்பட்டி மேற்கு ஒன்றிய தி.மு.க செயலாளர் சரவணன் விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைத்தார்.
இதற்கான ஏற்பாடுகளை பொ.மல்லாபுரம் பேரூராட்சி நகர செயலாளர் கௌதமன் செய்திருந்தார். இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.
- 2:0 என்ற புள்ளி கணக்கில் பிரன்ட்லைன் பள்ளி மாணவி பிரவந்திகா வெற்றி பெற்றார்.
- இணை செயலாளர் வைஷ்ணவி நந்தன் மற்றும் பள்ளியின் முதல்வர் வசந்தராஜ் ஆகியோர் பாராட்டினர்.
திருப்பூர் :
பள்ளி கல்வித்துறை சார்பில், மாநில அளவிலான இறகுபந்து போட்டி, தர்மபுரி மாவட்டம், டான் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இதில், 39 மாவட்டங்களிலிருந்து பள்ளி மாணவியர் பங்கேற்றனர்.
ஒற்றையர் பிரிவு இதில், திருப்பூர் பிரன்ட்லைன் பள்ளி மாணவி, ஒற்றையர் பிரிவில் இறுதிப் போட்டியில் கன்னியாகுமரி மாவட்ட மாணவியை, 2:0 என்ற புள்ளி கணக்கில் பிரன்ட்லைன் பள்ளி மாணவி பிரவந்திகா வெற்றி பெற்றார்.
அதேபோல், இரட்டையர் பிரிவில் இறுதி போட்டியில், விருதுநகர் மாவட்ட பள்ளி மாணவியரும், பிரண்ட்லைன் பள்ளி மாணவியரும் மோதினர். இதில், 2:0 என்ற புள்ளி கணக்கில் பிரண்ட்லைன் பள்ளி மாணவியர் பிரவந்திகா மற்றும் பிரசிதா வெற்றி பெற்று தங்கப்பதக்கம் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தனர்.
வெற்றி பெற்ற மாணவி யரை, பள்ளியின் தாளாளர் டாக்டர். சிவசாமி, செயலாளர் டாக்டர். சிவகாமி, பள்ளி இயக்குனர் சக்தி நந்தன், இணை செயலாளர் வைஷ்ணவி நந்தன் மற்றும் பள்ளியின் முதல்வர் வசந்தராஜ் ஆகியோர் பாராட்டினர்.
- இறகு பந்து போட்டியில் சரசுவதி நாராயணன் கல்லூரி அணி வெற்றி பெற்றது.
- மதுரை காமராசர் பல்கலைக்கழக ‘பி’ மண்டல கல்லூரிகளுக்கான இறகு பந்து போட்டி விவேகானந்த கல்லூரியில் நடைபெற்றது.
மதுரை
மதுரை காமராசர் பல்கலைக்கழக 'பி' மண்டல கல்லூரிகளுக்கான இறகு பந்து போட்டி விவேகானந்த கல்லூரியில் நடைபெற்றது. 8 கல்லூரி அணிகள் பங்கு பெற்ற இப்போட்டியில் சரசுவதி நாராயணன் கல்லூரி அணி முதலிடம் பெற்றது.
இதன்மூலம் மதுரை காமராஜர் பல்கலைக்கழக மண்டலங்களுக்கு இடையேயான இறகு போட்டிக்கு சரசுவதி நாராயணன் கல்லூரி அணி தகுதி பெற்றது. வெற்றி பெற்ற மாணவர்களை கல்லூரி முதல்வர் கண்ணன், துணை முதல்வர் மோதிலால், வணிகவியல் துறைத்தலைவர் ஜெயக்கொடி மற்றும் உடற்கல்வி இயக்குநர் யுவராஜ் ஆகியோர் பாராட்டினர்.
- மண்டல அளவிலான, குறுமைய விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.
- 12 வகுப்பு மாணவிகள் என். முகமதா, எஸ். அரிப்ரீத்தி முதலிடத்தில் வெற்றி பெற்றனர்.
பல்லடம் :
பல்லடத்தில் மண்டல அளவிலான, குறுமைய விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.இதில் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான மகளிர் இறகுப்பந்து போட்டியில், சுவாமி விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 12 வகுப்பு மாணவிகள் என். முகமதா, எஸ். அரிப்ரீத்தி, ஆகியோர் முதலிடத்தில் வெற்றி பெற்றனர்.
வெற்றி பெற்ற மாணவிகளை,பள்ளி தாளாளர் சுகந்தி முத்துக்குமார், நிர்வாக அறங்காவலர் பிரேம் அஸ்வத், முதல்வர் லவ்லின் ராஜகுமாரி, மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள்,மாணவ,மாணவிகள் பாராட்டினர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்