என் மலர்
நீங்கள் தேடியது "தலைப்பு"
- சொட்ட சொட்ட நினையுது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டைட்டில் ப்ரொமோ அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
- மும்பையில் நடிப்பு மற்றும் திரைக்கதை படித்த, நவீன் s ஃபரீத் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.
ஆல்டர் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் நவீத் s ஃபரீத் இயக்கத்தில், நிஷாந்த் ரூஷோ, வர்ஷிணி, ஷாலினி நடிப்பில், இன்றைய தலைமுறை கதையை, கலக்கலான் காமெடி எண்டர்டெயின்மெண்ட் படமாக உருவாகியுள்ள திரைப்படம் "சொட்ட சொட்ட நனையுது".
இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டைட்டில் ப்ரொமோ அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களான இயக்குனர் வெங்கட் பிரபு, நடிகர்கள் காளிதாஸ் ஜெயராம், ரியோ ராஜ், ரோபோ சங்கர், ரக்ஷன், நிதின் சத்யா, மா.க.ப ஆனந்த், KPY புகழ், தீனா, பாலா, பிக் பாஸ் பிரபலம் முத்துக்குமரன், இசையமைப்பாளர் ஜிப்ரான், தீபக், தயாரிப்பாளர் சி.வி குமார், லிப்ரா ரவிச்சந்திரன், மற்றும் நடிகை செளந்தர்யா ஆகியோர் தங்கள் சமூக வலைத்தள பக்கம் வழியே இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டைட்டில் ப்ரொமோவை வெளியிட்டுள்ளனர்.
இன்றைய தலைமுறையின் முக்கிய சிக்கலை, ஒரு கலக்கலான கமர்ஷியல் படமாக சிரிக்க சிரிக்க வைக்கும் ஒரு படமாக இப்படம் உருவாகியுள்ளது.
இளம் வயதில் தலையில் சொட்டை விழும் நாயகனுக்கு வீட்டில் திருமணம் செய்யத் திட்டமிடுகிறார்கள். இதைத்தொடர்ந்து நடக்கும் கலகலப்பான சம்பவங்களும், அதிரடி திருப்பங்களும் தான் இப்படத்தின் மையம். அனைத்து தரப்பினரும் கொண்டாடும் ஒரு கமர்ஷியல் படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது.
மும்பையில் நடிப்பு மற்றும் திரைக்கதை படித்த, நவீன் s ஃபரீத் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். கலக்கப்போவது யாரு புகழ் ராஜா இப்படத்திற்கு கதை வசனம் எழுதியுள்ளார்.
இப்படத்தில் நாயகனாக நிஷாந்த் ரூஷோ நடிக்கிறார். ஜோடியாக பிக்பாஸ் வர்ஷிணியும், அறிமுக நடிகை ஷாலினியும் நடிக்கின்றனர். இவர்களுடன் மேலும் சிலரும் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்தின் முழுப்படப்பிடிப்பும் சென்னையில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. விரைவில் டீசர், டிரெய்லர் பற்றிய அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- எக்ஸ் தளத்தில் ஒருவர் புத்தகத்தில் உள்ள பாடத்தினை புகைப்படம் எடுத்து மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.
- இந்த யுகத்தில் இதை ஏற்றுக்கொண்டு பாடத்திட்டத்தில் இது போன்ற தலைப்புகளை சேர்த்தால் ஆச்சரியமாக இருக்கிறது.
புதுடெல்லி:
மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ. 9-ம் வகுப்பு பாட புத்தகத்தில் டேட்டிங் மற்றும் ரிலேசன்ஷிப் குறித்த பாடங்கள் இடம்பெற்றிருப்பது இணையத்தில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதில் டேட்டிங் மற்றும் உறவுகள், பேய், கேட்பிஷிங், சைபர்புல்லிங் போன்ற அத்தியாயங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த புத்தகம் சிறந்த நட்பு போன்ற தலைப்புகளை உள்ளடக்கி உள்ளது. இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் ஒருவர் புத்தகத்தில் உள்ள பாடத்தினை புகைப்படம் எடுத்து மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.
அதில், இளம் வயது என்பது உணர்ச்சிகளால் நம் மனதையும், இதயத்தையும் அடிக்கடி குழப்பும் பருவம். இப்படியான பருவத்தில் மாணவர்களுக்கு வெவ்வேறு டேட்டிங் விதிமுறைகள் குறித்த வழிகாட்டுதலை வழங்கி இருப்பது வரவேற்கத்தக்கது என கூறி உள்ளார்.
மற்றொரு பயனர், காலம் மாறிக்கொண்டிருக்கிறது, இப்போதெல்லாம் மக்கள் மிக இளம் வயதில் இருந்தே டேட்டிங் செய்ய தொடங்குகிறார்கள். இந்த யுகத்தில் இதை ஏற்றுக்கொண்டு பாடத்திட்டத்தில் இது போன்ற தலைப்புகளை சேர்த்தால் ஆச்சரியமாக இருக்கிறது.
இந்த சிக்கலான இயக்கவியலை புரிந்துகொள்ள குழந்தைகளுக்கு உதவுவது நம் நாட்களில் டேட்டிங் எவ்வாறு நடத்தப்பட்டது என்பதை விட மிகவும் சிறந்தது என பதிவிட்டுள்ளார். மற்றொரு பயனர், இது நேர்மையாக பெரியது. இந்திய கல்வி முறையின் உண்மையான வளர்ச்சியை அனைவரும் பார்க்க விரும்புகிறார்கள் என பதிவிட்டுள்ளார்.
இதுபோன்று நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வரும் நிலையில், புத்தகத்தில் இடம்பெற்ற இந்த தலைப்பு விவாத பொருளாக மாறி உள்ளது.
- கடந்த முறை நடந்த புத்தகத் திருவிழாவில் ரூ.50 லட்சத்துக்கு புத்தகங்கள் விற்பனையாகின.
- 45 அரங்குகள் அமைக்கப்பட்டு பல்வேறு தலைப்புகளில் ஏராளமான புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.
மன்னார்குடி:
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி காந்தி சாலையில் உள்ள தேசிய மேல்நிலைப் பள்ளியில் 2-வது புத்தகத் திருவிழா நேற்று கோலாகலமாக தொடங்கியது. வருகிற 28-ந் தேதி வரை புத்தகத் திருவிழா நடைபெறுகிறது.
மன்னார்குடி மிட்டவுன் ரோட்டரி சங்கம் , தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து நடத்திய இந்த புத்தகத் திருவிழாவை தமிழக அரசின் மாநில திட்ட குழு துணை தலைவர் ஜெயரஞ்சன், டி.ஆர்.பி. ராஜா எம்.எல்.ஏ, மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் ஆகியோர் தலைமை தாங்கி தொடங்கி வைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் மிட்டவுன் ரோட்டரி அறக்கட்டளை தலைவர் டாக்டர் வி.பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசும்போது:-
புத்தகத் திருவிழா நமது அறிவை மேம்படுத்திக் கொள்ளும் ஒரு திருவிழாவாகும். கடந்த முறை நடந்த புத்தகத் திருவிழாவில் ரூ.50 லட்சத்துக்கு புத்தகங்கள் விற்பனை ஆகின. இம்முறை ரூ.1 கோடிக்கு புத்தகங்கள் விற்பனையாகும் என எதிர்பார்க்கிறோம். 45 அரங்குகள் அமைக்கப்பட்டு பல்வேறு தலைப்புகளின் ஏராளமான புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.
அனைவரும் புத்தகங்கள் வாங்கி வாசித்து பயன்பெறுங்கள். மாணவ-மாணவிகளுக்கு இந்த புத்தகத் திருவிழா மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றார்.
இந்த நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் சென்னு கிருஷ்ணன், நகராட்சி தலைவர் சோழராஜன், துணைத் தலைவர் கைலாசம், தேசிய மேல்நிலைப்பள்ளி தாளாளர் சேதுராமன், யேசுதாஸ், பி.ரமேஷ், அறிவியல் இயக்க தலைவர் அன்பரசு, அறிவியல் இயக்க பொருளாளர் பாஸ்கரன், மிட்டவுன் ரோட்டரி சங்கம் தலைவர்
டி.ரெங்கையன், செயலாளர் வி.கோபாலகிருஷ்ணன், பொருளாளர் டி.அன்பழகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.