search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கணக்குகள்"

    • ஐ.ஜி.அஸ்ரா கார்க் தகவல்
    • மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தென் மண்டல ஐ.ஜி. ஆலோசனை மேற்கொண்டார்.

    கன்னியாகுமரி:

    நாகர்கோவிலில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தென் மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் ஆலோசனை மேற் கொண்டார். இதை தொடர்ந்து அஸ்ரா கார்க் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் நெல்லை சரகத்தில் உள்ள மாவட்டங் களில் சுமார் 10 வருடங்க ளுக்கு மேலாக நிலுவையில் இருந்த வழக்குகள் உள்பட நிலுவை யில் இருந்த 65 ஆயிரம் வழக்குகள் புலன் விசாரணை முடித்து சம்பந்தப்பட்ட நீதிமன்றத் தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    குமரி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை 27 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு உள்ளனர். ரவுடிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டு தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.

    குமரி மாவட்டத்தில் இதுவரை 554 ரவுடிகள் கைது செய்யப்பட்டு நன்னடத்தை பிணைய பத்திரம் பெறப்பட்டுள்ளது. 919 பேர் மீது பிணையில் வெளியே வர முடியாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள் ளது. குமரி மாவட்டத்தில் 24 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 63 பேர் கைது செய்யப்பட்டுள் ளனர். அவர்களிடமிருந்து 13½ கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

    27 பேரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. 6 கஞ்சா வியாபாரிகள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

    குமரி மாவட்டத்தில் 161 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 90 வழக்குகளில் புலன் விசாரணையின் மூலமாக குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு ரூ.70 லட்சத்து 30 ஆயிரத்து 738 மதிப்பிலான பொருட்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதுடன், இந்த குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வழக்குகள் நீதி மன்றத்தில் விசாரணையில் இருக்கும்போது வழக்கு விசாரணைக்கு வரும் நாட்களில் ஒவ்வொரு நிகழ்வுகளையும் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது புகார்தாரர்கள் தெரிந்து கொள்ளக்கூடிய வகையில் செல்போன்களில் குறுஞ் செய்தி மூலமாக தகவல் அனுப்பப்பட்டு வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

    • கிராம வருவாய் கணக்குகள் மற்றும் கணினியில் பட்டா மாறுதல் செய்து தரக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ் மாநில விவசாய தொழிலாளர்கள் சங்க நகர பொறுப்பாளர் சித்திரவேலு தலைமை வகித்தார்.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி தாசில்தார் அலுவலகம் முன்பாக தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தினர் பட்டா மாறுதல் செய்து தரக் கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    பேராவூரணி அருகேயுள்ள நாட்டாணிக்கோட்டை கிராமத்தில் 3 தலைமுறைகளாக குடியிருந்து வரும் விவசாய தொழிலாளர்களுக்கு உயர்நீதிமன்ற உத்தரவுப்படி மீண்டும் அவர்கள் பெயரிலேயே கிராம வருவாய் கணக்குகள் மற்றும் கணினியில் பட்டா மாறுதல் செய்து தரக் கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ் மாநில விவசாய தொழிலாளர்கள் சங்க நகர பொறுப்பாளர் சித்திரவேலு தலைமை வகித்தார்.

    தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட துணைச் செயலாளர் ராஜமாணிக்கம், த.மா. விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் கருப்பையா, மாவட்ட குழு ஜெயராஜ், சி.பி.ஐ நகரச் செயலாளர் மூர்த்தி, முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சி.பி.ஐ பேராவூரணி ஒன்றிய செயலாளர் கருப்பையா ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பக்கிரிசாமி ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்தார்.

    ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய, நகர தமிழ் மாநில விவசாய தொழிலாளர்கள் மற்றும் நாட்டாணிக்கோட்டை கிராமத்தார்கள் கலந்து கொண்டனர்.

    ×