என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தடுப்புசுவர்"

    • புயல் கரையை கடந்த போது அதனுடைய தாக்கத்தில் சின்னங்குடி மீனவர்களின் 20-க்கும் மேற்பட்ட படகுகள் சேதம் அடைந்தது.
    • கடந்த 10 ஆண்டுகளாக கோரிக்கைகள் விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, செம்பனார்கோயில் ஒன்றியம், மருதம்பள்ளம்‌ ஊராட்சி, சின்னங்குடி மீனவ கிராமத்தில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. மீன்பிடி தொழிலை செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் மாண்டஸ் புயல் சென்னையில் கரையை கடந்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சின்னங்குடி கிராமம், மீனவர்கள் படகுகளை கரைகளில் வரிசையாக அடுக்கி வைத்து பாதுகாத்து வந்தனர்.

    புயல் கரையை கடந்த போது அதனுடைய தாக்கத்தில் சின்னங்குடி மீனவர்களின் 20-க்கும் மேற்பட்ட படகுகள் சேதம் அடைந்தது.

    அது மட்டுமல்லாமல் மழைக்காலங்களில் கடல் சீற்றம் அதிகரிக்கும்போது கடல்நீர் வீட்டுக்குள் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

    இதற்கு தடுப்பு சுவர் அல்லது கருங்கல் கொட்டி தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த 10 ஆண்டுகளாக கோரிக்கைகள் விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    ஒவ்வொரு வருடமும் இதுபோன்ற நிலைகளில் பாதிக்கப்பட்டு வருவதாகவும் இதனை தமிழக அரசு கவனத்தில் கொண்டு சின்னங்குடி கடற்கரையில் தடுப்புச் சுவர் அல்லது கற்களை கொண்டு தடுப்பு நடவடிக்கை எடுக்குமாறும், சேதமடைந்த படகுகளுக்கு இழப்பீடு வழங்கவும் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தடையாணை மூலம் அ.தி.மு.க.வுக்கு தடுப்புசுவர் எழுப்பிட முடியாது.
    • முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.

    மதுரை

    முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் எம்.எல்.ஏ. இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    அ.தி.மு.க. வளர்ச்சிக்காக வும், தொண்டர்களின் நன்மைக்காகவும் எடுத்த அத்தனை முயற்சி களையும் நடத்த விடாமல் முட்டுக்கட்டை போட்டவ ர்கள் யார் என்று பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறேன், அவர் தான் ஓ.பி.எஸ். அவர்தான் ஒத்துழையாமை இயக்கத்தின் தலைவராக இந்த நிமிடம் வரை செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.

    நீதிமன்றத்திற்கு நீங்கள் எத்தனை முறை செல்வீர்கள் உரிமையில் நீதிமன்றம், உயர் நீதிமன்றம், உச்சநீதிமன்றம் செல்வீர்கள் இன்றைக்கு நீங்கள் கிடைத்த தீர்ப்பை கொண்டாடிக் கொண்டிருக்கிறீர்கள்,

    உணர்வுபூர்வமாக, உளப்பூர்வமாக தொண்டர்கள் தலைமையை ஆதரிக்கும் போது அதை நீங்கள் தடையாணை வைத்து தடுப்பு சுவர் எழுப்பி விடலாம் என்று கனவு கண்டால், அது பகல் கனவாகவே தான் போகும். தவிர எந்த நாளும் நிலைத்து நிற்கிற தடுப்பு சுவராக இருக்காது,

    எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்றைக்கு அ.தி.மு.க. வலிவோடும், பொலிவோடும் திகழ்கிறது. அம்மாவின் லட்சிய கனவை நிறைவேற்று வகையில் ஒன்றரை கோடி தொண்டர்களும் அவரை மனதார ஏற்றுக்கொள்கின்றனர்,

    ஏகமனதாக சீர்திருத்த நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு கொடுப்பதில் உங்களுக்கு என்ன மன வருத்தம், கட்சியின் முன்னேற்றத்திற்கு ஒத்துழைப்பு கொடுப்பதற்கு என்ன மனவருத்தம்.

    நீங்களும் அ.தி.மு.க. முகமாக அறியப்பட்டு உள்ளீர்கள். அதனால் தான் 15 முறை எடப்பாடியார் உங்களிடம் உடன்பட்டு பேச்சுவார்த்தை நடத்து வதற்கு எடுத்த முயற்சியில் நீங்கள் ஒத்துழைப்பு கொடுக்க வில்லை.

    அம்மா அரசு அமை வதற்கு நீங்கள் ஒத்துழை யாமை இயக்க தலைவராக உள்ளீர்கள். ஒத்துழைப்பு தரமாட்டேன் என்றும், உடன்பட்டு பணியாற்ற மாட்டேன். உழைக்க மாட்டேன், வேடிக்கை பார்ப்பேன், விமர்சனம் செய்வேன் என்றும், ஒத்துழையாமை இயக்க தலைவராக உள்ள உங்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்ததை தவிர கட்சியில் எந்த பிளவும் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×