search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில்"

    • வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் ஏலம் நடைபெற்றது.
    • விவசாயிகள் 2 ஆயிரத்து 84 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

    சென்னிமலை:

    ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் ஏலம் நடைபெற்றது.

    ஏலத்தில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 2 ஆயிரத்து 84 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில் கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்ச விலையாக 20 ரூபாய் 15 காசுக்கும்,

    அதிகபட்ச விலையாக 23 ரூபாய் 77 காசுக்கும், சராசரி விலையாக 22 ரூபாய் 77 காசுக்கும் ஏலம் போனது. மொத்தம் 969 கிலோ எடையுள்ள தேங்காய்கள் 22 ஆயிரத்து 28 ரூபாய்க்கு விற்பனை யானது.

    இதேபோல் கொப்பரை தேங்காய்கள் 5 மூட்டைகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில் கிலோ ஒன் றுக்கு குறைந்தபட்ச விலையாக 65 ரூபாய் 96 காசுக்கும்,

    அதிகபட்ச விலையாக 80 ரூபாய் 50 காசுக்கும், சராசரி விலையாக 69 ரூபாய் 36 காசுக்கும் ஏலம் போனது. மொத்தமாக 87 கிலோ எடையுள்ள கொப்பரை தே ங்காய்கள் ரூ.6 ஆயிரத்து 83-க்கு விற்பனையானது.

    தேங்காய், கொப்பரை தேங்காய்கள் 2-ம் சேர்த்து மொத்தம் ரூ.28 ஆயிரத்து 111-க்கு விற்பனை நடை பெற்றது என விற்பனை கூடத்தின் கண்காணிப்பா ளர் தெரிவித்தார்.

    • வாழப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் பருப்பு மற்றும் மக்காச்சோளம் மறைமுக ஏலம் நடைபெற்று வருகிறது.
    • வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை தேங்காய் பருப்பு, செவ்வாய் மற்றும் வியாழன் தோறும் மக்காச்சோளம் ஏலம் நடைபெறுகிறது.

    வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையின், சேலம் விற்பனைக்குழு, வாழப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் பருப்பு மற்றும் மக்காச்சோளம் மறைமுக ஏலம் நடைபெற்று வருகிறது.வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை தேங்காய் பருப்பு, செவ்வாய் மற்றும் வியாழன் தோறும் மக்காச்சோளம் ஏலம் நடைபெறுகிறது. மேலும் மஞ்சள், நிலகடலை ஆகிய விளைப்பொருளுக்கும் மறைமுக ஏலம் நடத்தப்பட உள்ளது.உள்ளூர், வெளியூர் வியாபாரிகள் ஏலத்தில் கலந்து கொள்வதால், விவசாயிகளின் விளைபொருளுக்கு நல்ல விலை கிடைக்க வாய்ப்புள்ளது. ஆகவே, விவசாயிகள் தங்களது விளைப்பொருட்களை தரம் பிரித்து, வாழப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திற்கு கொண்டு வந்து, ஏலத்தில் விற்பனை செய்தால் தரத்திற்குரிய விலை கிடைக்கும்.ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில், விவசாயிகளிடம் எந்தவித கமிஷன் (தரகு) பிடித்தமும் செய்வதில்லை. விற்பனை செய்த முழுத்தொகையும் பெறலாம். எனவே, விவசாயிகள் மேற்படி மறைமுக ஏலத்திற்கு விளைப்பொருட்களை கொண்டு வந்து விற்பனை செய்து பயன் பெறலாமென, ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் பிரபாவதி தெரிவித்துள்ளார்.

    • விவசாயிகளின் விலை பொருட்கள் கொண்டு வரப்பட்டு விற்ப னை நடைபெறும்.
    • தற்போதுமுதல் பட்டம் மாசி மாதத்தில் பருத்தி வரத்து இருந்து வந்தது.

     அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூடம் அத்தாணி சாலை வாரச்சந்தை எதி ர்ப்புறம், அமைந்துள்ளது.

    இதில் விவசாயிகளின் விலை பொருட்கள் கொண்டு வரப்பட்டு விற்ப னை நடைபெறும். அந்த வகையில் தற்போதுமுதல் பட்டம் மாசி மாதத்தில் பருத்தி வரத்து இருந்து வந்தது.

    தற்போது இரண்டாம் பட்டம் பருத்தி வரத்து அந்தியூர், தவிட்டு ப்பாளையம், வெள்ளிய ம்பாளையம், வட்டக்காடு, புதுக்காடு, காந்திநகர், சங்கரா பாளையம், எண்ண மங்கலம், சின்னத்தம்பி பாளையம், பச்சம் பாளையம், கள்ளிமடை குட்டை உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் பயிரிட்ட பருத்தி வெள்ளி க்கிழமை முதல், திங்கட்கி ழமை வரை ஒழுங்குமுறை விற்பனை கூட கட்டிடத்தில் வைக்க ப்பட்டு அதன் ஏலம் இன்று திங்கட்கிழமை அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணி ப்பாளர் ஞான சேகர், செயலாளர் சாவி த்திரி, ஏ.ஜி.வெங்கடாஜலம் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னி லையில் நடை பெற்றது.

    இந்த ஏலத்தில் புளியம்பட்டி, அன்னூர், கொங்கணாபுரம், சத்திய மங்கலம், அவிநாசி, ஆந்திர மாநிலம் உள்ளிட்ட பகுதி களில் இருந்து வியா பாரிகள் வந்து பருத்தியின் விளைச்சலுக்கு ஏற்றவாறு விலை நிர்ணயித்து வாங்கி சென்றனர்.

    • விவசாயிகள் கரும்புக்கு பதிலாக வாழை பயிரிட்டு வருகின்றனர்.
    • திங்கட்கிழமை தோறும் வெப்பிலி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாழைத்தார் ஏலம் நடைபெறும்.

    சென்னிமலை:

    சென்னிமலை அருகே வெப்பிலியில் துணை ஒழுங்குமுறை விற்பனை கூடம் உள்ளது. இங்கு வாரந்தோறும் செவ்வாய்க்கி ழமை ஈரோடு வேளாண் விற்பனைக்குழு மூலம் தேங்காய்கள் ஏலம் நடைபெற்று வருகிறது.

    சென்னிமலை பகுதியில் முன்பு விவசாயிகள் அதிக அளவில் கரும்பு பயிரிட்டு வந்தனர்.

    ஆனால் கரும்பு வெட்டுக்கூலி அதிகரிப்பு மற்றும் ஆலைகளில் பணம் பெறுவதில் தாமதம் என பல காரணங்களால் பெரும்பாலான விவசாயிகள் கரும்புக்கு பதிலாக வாழை பயிரிட்டு வருகின்றனர்.

    ஆனால் வாழைத்தாருக்கு போதுமான விலை கிடைக்க வேளாண்மை துறை மூலம் ஏலம் நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இந்த நிலையில் விவசாயி களின் கோரிக்கை ஏற்று வருகிற 20-ந் தேதி (திங்கட்கிழமை) முதல் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை அன்று காலை 10 மணி அளவில் வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாழைத்தார் ஏலம் நடைபெறும் என ஈரோடு வேளாண் விற்பனை குழு அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

    மேலும் இந்த ஏலத்திற்கு அனைத்து ரக வாழைத்தார்களையும் விவசாயிகள் கொண்டு வரலாம் என்றும்,

    ஏலத்தில் கலந்து கொள்ள வெளியூர்களில் இருந்து வியாபாரிகள் வருவதால் விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்கும் என்றும் விற்பனைக்குழு அலு வலர்கள் தெரிவித்துள்ளனர்.

    • வியாபாரி வந்து எள் மூட்டையை எடுக்கும் போது ஒரு எள் மூட்டை மட்டும் மாயமாகி இருந்தது தெரியவந்தது.
    • இது குறித்து சம்பவ இடத்திற்கு வந்த பவானி இன்ஸ்பெக்டர் கிருஷ்ண மூர்த்தி விசாரணை மேற்கொண்டார்.

    அந்தியூர்:

    அந்தியூர் அருகே உள்ள மைலம்பாடியில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகின்றது.

    இங்கு மைலம்பாடி, அம்மாபேட்டை, நால்ரோடு, அந்தியூர், ஒலகடம், பூனாச்சி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விவசாயிகள் தாங்கள் பயிரிட்டுள்ள எள் மூட்டைகளை விற்பனைக்காக கொண்டு வருவார்கள்.

    பின்னர் சனிக்கிழமை அன்று ஏலம் நடைபெறும். இந்த ஏலத்தில் ஈரோடு, சங்ககிரி, சேலம், சிவகிரி, கோபி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வந்து ஏலத்தில் எடுத்து செல்வார்கள்.

    இந்த நிலையில் சனிக்கிழமை 100 எள் மூட்டைகள் விவசாயிகள் கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. இதில் சிவகிரி பகுதியை சேர்ந்த வியாபாரி ஒருவர் 10 எள் மூட்டை ஏலத்தில் எடுத்துள்ளதாகவும்,

    அந்த வியாபாரி எள் மூட்டைகள் அனைத்தும் மைலம்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வைத்துவிட்டு பிறகு வந்து எடுத்து சென்று விடலாம் என்று சென்றதாக கூறப்படுகிறது.

    இதனையடுத்து அந்த வியாபாரி வந்து எள் மூட்டையை எடுக்கும் போது 9 மூட்டைகள் மட்டும் அங்கு இருப்பு இருந்தது. ஒரு எள் மூட்டை மட்டும் மாயமாகி இருந்தது தெரியவந்தது.

    இது குறித்து மைலம்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் கனிமொழி பவானி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்து மாயமான எள் மூட்டையை கண்டுபிடித்து தருமாறு கேட்டுள்ளார்.

    இது குறித்து சம்பவ இடத்திற்கு வந்த பவானி இன்ஸ்பெக்டர் கிருஷ்ண மூர்த்தி விசாரணை மேற்கொண்டார். மேலும் சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் வரவழைத்தும், கைரேகை நிபுணர்கள் மற்றும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.

    • கவுந்தப்பாடி ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் தேங்காய் ஏலம் விடப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
    • விவசாயிகள் தங்கள் தோட்டத்தில் உள்ள கருப்பு மற்றும் வெள்ளை ரக தேங்காய்கள் என தரம் பிரித்து ஏல விற்பனைக்கு கொண்டு வந்து பயன்பெற வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.

    கவுந்தப்பாடி:

    கவுந்தப்பாடி ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இந்த விற்பனை கூடத்தில் கடந்த பல ஆண்டுகளாக கவுந்தப்பாடி மற்றும் ஓடத்துறை, அய்யம்பாளையம், பெருந்தலையூர், பொன்னாட்சி புதூர், குட்டியபாளையம், சலங்க பாளையம், வேலம்பாளையம் உள்பட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து விவசாயிகள் கரும்பு சக்கரை தயாரித்து விற்பனைக்கு கொண்டு வருவது வழக்கம்.

    இந்த விற்பனை கூடத்து க்கு கொண்டு வரப்படும் சர்க்கரை மூட்டைகள் குறிப்பாக பழனி பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில் பஞ்சாமிர்த பிரசாதத்திற்கு அதிக அளவில் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் வருகிற 26-ந் தேதி முதல் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் தேங்காய் ஏலம் விடப்படும் என ஈரோடு விற்பனை குழு செயலாளர் சாவித்திரி, கவுந்தப்பாடி விற்பனை கூட கண்காணிப்பாளர் சீனிவாசன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

    இது குறித்து அதிகாரிகள் கூறும்போது, விவசாயிகள் தங்கள் தோட்டத்தில் உள்ள கருப்பு மற்றும் வெள்ளை ரக தேங்காய்கள் என தரம் பிரித்து ஏல விற்பனைக்கு கொண்டு வந்து பயன்பெற வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.

    ×