search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தனித்திறன் போட்டிகள்"

    • திருச்சி காவேரி கல்லூரி மாணவிகளுக்கு கவிதை, பேச்சு, கட்டுரை உள்ளிட்ட பல்வேறு தனித்திறன் போட்டிகள் நடத்தப்பட்டன
    • ஆங்கிலத்துறை சார்பில் நடைபெற்ற இந்த போட்டியில் பங்கேற்ற மாணவிகள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்

    திருச்சி:

    திருச்சி காவேரி மகளிர் கல்லூரியில் ஆங்கிலத்துறையின் 'அரோரா மன்றம்' சார்பில் முதலாம் ஆண்டு மாணவிகளுக்கான 'தனித்திறன் தேடல்' போட்டிகள் கல்லூரி காவேரி அரங்கத்தில் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் முனைவர் வி.சுஜாதா வாழ்த்துரை வழங்கி போட்டிகளைத் தொடங்கி வைத்தார். கவிதை, பேச்சு, கட்டுரை, வினாடி-வினா போன்ற பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது.

    இந்நிகழ்வுகளுக்கான நடுவர்களாக முன்னாள் மாணவியர் புலத்தலைவர் முனைவர் ஜி.கனகா, சமூகப்பணித்துறைத் தலைவர் முனைவர் ஜி.மெட்டில்டா புவனேஸ்வரி, சமூகப்பணித்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் எஸ்.வித்யா, வணிகவியல் உதவிப்பேராசிரியர் முனைவர் எஸ்.செளமியா, நுண்ணுயிரியல் உதவிப் பேராசிரியர் முனைவர் என்.ஜீனத்துனிஷா, சமூகப் பணித்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் டி.அமிர்தா மேரி ஆகியோர் போட்டிகளில் பங்கேற்ற மாணவிகளில் வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுத்தனர்.

    அரோரா மன்றத்தின் ெபாறுப்பாளர்கள் முனைவர் பி.ஹெலன்ஜோனா மற்றும் வி.சுதந்திரா தேவி ஆகியோர் முதுகலை ஆங்கிலத்துறை தலைவர் முனைவர் பி.ஊர்மிளா மற்றும் இளங்கலை ஆங்கிலத்துறைத் தலைவர் முனைவர் எஸ்.ஜெயஸ்ரீ அகர்வால் ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் ேபாட்டிகளை நடத்தினர்.

    பல்வேறு துறைகளைச் சேர்ந்த முதலாம் ஆண்டு மாணவிகள் போட்டியில் பங்கேற்றனர்.

    • 5 முதல் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் பங்கேற்கலாம்
    • 22-ந்தேதிக்குள் முன்பதிவு கட்டாயம்

    வேலூர்:

    வேலூர் மாவட்ட அறிவியல் மையத்தில் 75 வது சுதந்திர அமுத திருநாள் கொண்டா ட்டத்தையொட்டி மாணவர்களுக்கான தனித்திறன் போட்டி வருகிற 23-ந் தேதி நடைபெற உள்ளது.

    5 முதல் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு அறிவியல் கண்டுபிடிப்பு திறமைகளை வெளிக்கொணரும் வகையில் ' ஆக்கபூர்வமான காரணங்களுக்கு அணு ஆற்றல் " என்ற தலைப்பில் சீர்மிகு ஒரு வார விழாவாக கொண்டாடப்படுகின்றது. இதன் தொடர்பாக கட்டுரை போட்டி, ஓவியப்போட்டி மற்றும் வினாடி - வினா போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் பங்கேற்கும் பள்ளி மாணவர்கள் வரும் 22-ந் தேதிக்குள் முன்பதிவு செய்து கொள்ளலாம். போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும். மேலும் தகவலுக்கு 0416- 2253297 / 2252297 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட அறிவியல் அலுவலர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

    ×