search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மத்திய மந்திரி எல் முருகன்"

    • கிராமப்புற டீக்கடையில் கூட டிஜிட்டல் பணபரிமாற்றம் மேற்கொள்ளப்படுகிறது.
    • ஆவணப்படத்துக்கு ஆஸ்கர் விருது கிடைத்ததால் முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாம் உலக புகழ் பெற்றுள்ளது என புகழாரம் தெரிவித்தார்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் பந்தலூர் அடுத்த அய்யன்கொல்லியில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய மந்திரி எல்.முருகன் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

    நம் நாடு பல்வேறு வகையிலும் வல்லரசு நாடாக மாறி வருவதை வெளிநாடுகள் பாராட்டி வருகின்றன.

    அதற்கு காரணம் இளைய தலைமுறைகளின் அறிவு வளர்ச்சியாகும். விளையாட்டு துறையில் சாதிப்பதற்கு பல புதிய செயல் திட்டங்களை செயல்படுத்தியதால் ஆசிய விளையாட்டு போட்டிகளில் பெரும் வெற்றி கிடைத்தது.

    புதிய கல்வி கொள்கையால் போட்டி தேர்வுகளில் எளிதாக சாதிக்க முடியும். நாடு டிஜிட்டல் மயமானதன் மூலம், கிராமபுறங்களும் வளர்ச்சி கண்டுள்ளன.

    தற்போது கிராமப்புற டீக்கடையில் கூட டிஜிட்டல் பணபரிமாற்றம் மேற்கொள்ளப்படுகிறது. வரும் 25 ஆண்டுகளில் இந்தியாவை மிக சிறந்த வல்லரசு நாடாக உருவாக்கும் வகையில், மாணவர்கள் தங்களை தற்போதே முழுமையாக உருவாக்கி கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    தொடர்ந்து அவர் முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமுக்கு சென்றார். அங்கு ஆஸ்கர் விருது பெற்ற தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ் ஆவணப்படத்தில் நடித்த பொம்மன், பெள்ளி தம்பதியினர் வீட்டிற்கு சென்று, அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

    அப்போது ஆவணப்படத்துக்கு ஆஸ்கர் விருது கிடைத்ததால் முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாம் உலக புகழ் பெற்றுள்ளது என புகழாரம் தெரிவித்தார்.

    பின்னர் வளர்ப்பு யானைகள் முகாமுக்கு சென்ற அவர், ஆவணப்படத்தில் இடம் பிடித்த ரகு மற்றும் பொம்மியை பார்வையிட்டு உணவு வழங்கினார்.

    மேலும் வளர்ப்பு யானைகளுக்கு உணவு வழங்கப்படும் முறைகள், யானைகள் பராமரிப்பு, ஆஸ்கர் விருது பெற்ற ஆவணப்படம் எடுக்கப்பட்ட இடங்கள் குறித்து வனத்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

    அதனை தொடர்ந்து அவர் பந்தலூர், கொளப்பள்ளி, அய்யன்கொல்லி பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது அங்கு மக்களை சந்தித்து பேசினார். மக்களிடம் மத்திய அரசின் திட்டங்கள் குறித்தும், அவை முறையாக வந்து சேர்கிறதா என்பது குறித்தும் கேட்டறிந்தார்.

    தேவர்சோலை பகுதிக்கு சென்ற போது, அங்கிருந்த தனியார் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் தங்களுக்கு பல ஆண்டுகளாக சம்பளம் கொடுக்கவில்லை என புகார் தெரிவித்து மனு அளித்தனர். அதனை மத்திய மந்திரி பெற்றுக்கொண்டார். தொடர்ந்து பந்தலூர் நெல்லியாளம் பகுதிக்கு சென்று அங்கு பா.ஜ.க நிர்வாகிகளை சந்தித்து பேசினார்.

    • நெல்லை மாவட்டம் ஒருங்கிணைந்த மாவட்டமாக இருந்தபோது மிகப்பெரிய மாவட்டமாக இருந்தது.
    • சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்ட அதிகமானோர் நெல்லை மாவட்டத்தை சார்ந்தவர் என்பது மிகப்பெருமை உடையது.

    நெல்லை:

    75-வது சுதந்திர தின அமுதப் பெருவிழாவின் கொண்டாட்டமாக மத்திய மக்கள் தொடர்பாக சென்னை மண்டல அலுவலகம் சார்பில் பாளையங்கோட்டை பஸ் நிலையம் அருகே உள்ள மஹாலில் 10 நாட்கள் கண்காட்சி இன்று முதல் நடைபெறுகிறது.

    இந்த கண்காட்சியில் சுதந்திர போராட்டத்தில் இதுவரை அறியப்படாத ஆளுமைகளை மக்களுக்கு எடுத்து கூறும் வகையில் 130 பேரின் புகைப்படம், அவர்கள் குறித்த வரலாற்று குறிப்புகள் இடம்பெறுகின்றன.

    இதில் இந்தப் பகுதியை சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர்கள் ஒண்டிவீரன், வ.உ.சி., பாரதியார், வீரபாண்டிய கட்டபொம்மன் ஆகியோர் குறித்த செய்திகளும் இடம்பெறுகிறது.

    தொடக்க விழாவில் மத்திய தகவல் ஒளிபரப்பு துறை இணை மந்திரி எல். முருகன் கலந்து கொண்டு கண்காட்சியை தொடங்கி வைத்தார். பின்னர் கண்காட்சியை பார்வையிட்டு குத்துவிளக்கேற்றினார்.

    தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் கடந்த 14-ந்தேதி சுதந்திர போராட்ட வீரர்கள் குறித்து அறிந்து கொள்ளும் வகையில் ஸ்வராஜ் என்ற தொடர் ஒலிபரப்பப்படுகிறது. அதன் பிராந்திய மொழி ஒலிபரப்பையும் அவர் தொடங்கி வைத்தார்.

    பின்னர் மத்திய மந்திரி எல்.முருகன் பேசியதாவது:-

    நெல்லை மாவட்டம் ஒருங்கிணைந்த மாவட்டமாக இருந்தபோது மிகப்பெரிய மாவட்டமாக இருந்தது. சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்ட அதிகமானோர் நெல்லை மாவட்டத்தை சார்ந்தவர் என்பது மிகப்பெருமை உடையது.

    2047-ல் அப்துல்கலாம் கண்ட கனவு நிறைவேற வேண்டும். அனைத்தும் அனைவருக்கும் என்ற திட்டம் 100-வது சுதந்திர தினத்தில் நிறைவேற வேண்டும்.

    75-வது சுதந்திரதினத்தை முன்னிட்டு 75 சுதந்திர போராட்ட வீரர்களுடைய தொடர் தூர்தர்சனில் 9 பிராந்திய மொழிகளில் 75 வாரம் தொடர்ச்சியாக ஒளிபரப்பபட உள்ளது. 75 சுதந்திர போராட்ட வீரர்களில் 3 தமிழகத்தை சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

    வீரபாண்டிய கட்டபொம்மன், வேலு நாச்சியார், பூலித்தேவன் ஆகியோரது வரலாறு இடம்பெறுகிறது.

    இளைஞர் சமுதாயம் வேலை தேடும் சமுதாயமாக இல்லாமல் வேலை கொடுக்கும் சமுதாயமாக இருக்கவேண்டும் என்பதே மத்திய அரசின் கனவு. 25 ஆண்டுகளில் வல்லரசு இந்தியாவாக, முன்னேறிய நாடாக மாறும். சிறப்பான மனித வளத்தை இந்தியா கொண்டுள்ளது. மனிதகுல மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது

    ஸ்டார்ட் அப் இந்தியா, ஸ்டேண்ட் அப் இந்தியா உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வ.உ.சியின் பேத்தி, மாநகராட்சி செய்தி மக்கள் தொடர்பாளர் ஆறுமுக செல்வியை மத்திய இணை மந்திரி எல்.முருகன் சால்வை அணிவித்து கவுரவித்தார்.

    நிகழ்ச்சியில் நயினார்நாகேந்திரன் எம்.எல்.ஏ., தகவல் ஒலிபரப்பு அமைச்சக தென்பிராந்திய தலைமை இயக்குனர் வெங்கடேஷ்வர், தூர்தர்ஷன் நிகழ்ச்சி பிரிவு தலைவர் பாட்ஷா, மாநகராட்சி கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    ×