என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "அமைச்சர் கே.என். நேரு"
- குப்பைகளை கொட்டுவதற்காக வெள்ளமடை அருகே 10 ஏக்கரில் நிலம் ஒதுக்கீடு செய்யப்படும் என்று அமைச்சர் கே.என். நேரு தெரிவித்தார்.
- ஆறுமுகநேரி பேரூராட்சி நகராட்சியாக மாற்றப்படும் என்றும் அமைச்சர் அறிவித்தார்.
ஆறுமுகநேரி:
தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரிக்கு நேற்று கள ஆய்வு பணிக்காக வருகை தந்தார்.
அவருடன் தமிழக மீன்வளம் மற்றும் கால்நடை துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், ஓட்டப்பிடாரம் தொகுதி எம்.எல்.ஏ. சண்முகையா, தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் ஆகியோரும் வந்தனர். இவர்களை பேரூராட்சி தலைவர் கலாவதி கல்யாணசுந்தரம், துணை தலைவர் கல்யாணசுந்தரம், செயல் அலுவலர் கணேசன் ஆகியோர் வரவேற்றனர். தொடர்ந்து பேரூராட்சி மன்ற கூட்ட அரங்கில் நகரின் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
அப்போது, பேரூராட்சி அலுவலகத்தின் எதிரே உள்ள குப்பை கிடங்கில் குப்பைகளை அகற்றும் பணி முடிந்ததும் அங்கு வணிக வளாகம், பஸ் நிலையம், காய்கறி சந்தை ஆகியவற்றை அமைப்பது என்றும், பேரூராட்சியின் குப்பைகளை கொட்டுவதற்காக வெள்ளமடை அருகே 10 ஏக்கரில் நிலம் ஒதுக்கீடு செய்யப்படும் என்றும், மெயின் பஜாரில் உள்ள காமராஜர் பூங்கா மேம்படுத்தப்படும் என்றும் அமைச்சர் கே.என். நேரு தெரிவித்தார்.
மேலும் தார் சாலைகள் அமைக்கும் பணிக்காக ரூ.7 கோடி ஒதுக்கப்படுவதாகவும், விரைவில் ஆறுமுகநேரி பேரூராட்சி நகராட்சியாக மாற்றப்படும் என்றும் அவர் அறிவித்தார்.
கூட்டத்தில் வார்டு கவுன்சிலர்கள் வெங்கடேசன், மாரியம்மாள், தீபா, சந்திரசேகர், சிவகுமார், சகாய ரமணி, நிர்மலா தேவி ஆகியோர் பங்கேற்றனர். தொடர்ந்து ஆறுமுகநேரி பகுதிகளில் குப்பைகளை சேகரிக்கும் பணிக்காக 15 நவீன பேட்டரி வாகனங்களை அமைச்சர் நேரு வழங்கினார்.
பின்னர் அமைச்சர்கள் கே.என். நேரு, அனிதா ராதாகிருஷ்ணன், கலெக்டர் செந்தில்ராஜ் ஆகியோர் பஸ் நிலையம் மற்றும் வணிக வளாகம் அமைய உள்ள இடத்தை பார்வையிட்டனர்.
அப்போது ஆறுமுகநேரி நகர தி.மு.க. செயலாளர் நவநீத பாண்டியன், துணைச் செயலாளர் அகஸ்டின், மாவட்ட பிரதிநிதி ராதா கிருஷ்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.
- திருச்சியில் முக்குலத்தோர் தேவர் சமூக அறக்கட்டளை சார்பில் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடை பெற்றது.
- குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
திருச்சி,
முக்குலத்தோர் தேவர் சமூக அறக்கட்டளை சார்பில் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, அனைத்து சமுதாய தலைவர்களுக்கு மாமன்னர் புலித்தேவன் விருது வழங்கும் விழா திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள அருண் ஓட்டலில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்றது.
விழாவுக்கு முக்குலத்தோர் தேவர் சமூக அறக்கட்டளையின் தலைவர் டாக்டர் கே.எஸ்.சுப்பையா பாண்டியன் தலைமை தாங்கினார். திருச்சி மாநகராட்சி முன்னாள் கவுன்சிலரும், முன்னாள் பொது சுகாதாரக் குழு தலைவருமான டாக்டர் எஸ்.தமிழரசி சுப்பையா குத்து விளக்கு ஏற்றி வைத்தார்.
விழாவில் தி.மு.க. முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சருமான கே.என்.நேரு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கி அனைத்து சமுதாய தலைவர்களுக்கும் புலித்தேவன் விருது வழங்கி பேசினார். அப்போது அமைச்சர் கூறும்போது, நீங்கள் (டாக்டர் கே.எஸ்.சுப்பையா பாண்டியன், தமிழரசி சுப்பையா) தி.மு.க.வில் இணைந்து தொடர்ச்சியாக மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகிறீர்கள். உங்களுக்கு நான் என்ன கைமாறு செய்யப் போகிறேன் என தெரியவில்லை. ஆனால் என்றைக்கும் உங்களுக்கு பக்கபலமாக இருப்பேன் என்றார்.
இந்த விழாவில் அமைச்சர் கே.என்.நேருவுக்கும் விழா குழு சார்பில் புலித்தேவன் விருதினை அறக்கட்டளை தலைவர் டாக்டர் கே.எஸ்.சுப்பையா பாண்டியன் வழங்கினார்.
திருச்சி மாநகராட்சி மேயர் மு.அன்பழகன் கலந்துகொண்டு தேவர் ஜெயந்தி மலரினை பெற்றார். விழாவில் தி.மு.க. மத்திய மாவட்ட செயலாளர் க.வைரமணி, எம்.எல்.ஏ.க்கள் காடுவெட்டி என்.தியாகராஜன், எஸ்.ஸ்டாலின் குமார், சவுந்தரபாண்டியன்,
எஸ்.கதிரவன், மாவட்ட தி.மு.க. துணைச் செயலாளர்கள் முத்துசெல்வன், விஜயா ஜெயராஜ், பகுதி செயலாளர்கள் மோகன்தாஸ், கனகராஜ், கமல் முஸ்தபா, கே.எஸ்.நாகராஜ், கோட்டத் தலைவர்கள் துர்காதேவி, விஜயலட்சுமி கண்ணன், பகுதிச் செயலாளர்கள் காஜாமலை விஜி, ராம்குமார், இளங்கோ,
ரோட்டேரியன் டாக்டர் கே.சீனிவாசன், சுமதி பப்ளிகேஷன் வசந்த குமார், மாநகராட்சி கவுன்சிலர்கள் ஜெ.கலைச்செல்வி, நாகராஜ், கலைச்செல்வி மற்றும் டோல்கேட் சுப்பிரமணியன், பா.ஜான் ராஜ்குமார் ஆகியோருக்கு புலித்தேவன் விருது வழங்கப்பட்டது. முடிவில் டாக்டர் எஸ். விஜய் கார்த்திக் சுப்பையா, எஸ். மருதுபாண்டி, கே.ஆர்.கே. ராஜா ஆகியோர் நன்றி கூறினர்.
- தி.மு.க. முதன்மை செயலளரும், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சருமான கே. என். நேரு தலைமை தாங்கி திருமணத்தை நடத்தி வைக்கிறார்.
- கே.என். அருண்நேரு, மத்திய மாவட்ட தி.மு.க. பொறு ப்பாளர் க. வைரமணி, லால்குடி சட்டமன்ற உறுப்பினர் அ. சவுந்தர பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள்.
திருச்சி:
திருச்சி லால்குடி வட்டம் மேல வாழை தி.மு.க. கிளைச் செயலாளரும், தொழிலதி பருமான என்ஜினியர் எஸ்.மரிய பிரான்சிஸ் -. டார்த்தி ஐசந் தம்பதியரின் மகன் என்ஜினியர் எம்.ஃப்ரெட்ரிக், திருவாரூர் மன்னார்குடி புதுக்குடி ஏ. பஞ்சாட்சரம் பி.சீலா ராணி மகள் என்ஜினியர் பி.ஷைலா திருமண விழா நாளை (திங்கட்கிழமை) காலை 8:30 மணிக்கு மத்திய பஸ் நிலையம் ஃபெமினா ஹோட்டல் லோட்டஸ் ஹாலில் நடக்கிறது. என்ஜினியர் சா. மரிய பிரான்சிஸ் வரவேற்று பேசுகிறார்.
தி.மு.க. முதன்மை செயலளரும், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சருமான கே. என். நேரு தலைமை தாங்கி திருமணத்தை நடத்தி வைக்கிறார். கே.என். அருண்நேரு, மத்திய மாவட்ட தி.மு.க. பொறு ப்பாளர் க. வைரமணி, லால்குடி சட்டமன்ற உறுப்பினர் அ. சவுந்தர பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள்.
இதில் திருச்சி மாநகராட்சி மேயர் மு. அன்பழகன், வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் காடு வெட்டி தியாகராஜன் எம்.எல்.ஏ. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் ஸ்டாலின் குமார், பழனியாண்டி, கதிரவன், நகராட்சி தலைவர் துரை மாணிக்கம், ஒன்றிய குழு தலைவர் ரவிச்சந்திரன், ஒன்றிய குழு துணைத் தலைவர் நத்தம் பெரியய்யா, வடக்கு ஒன்றிய செயலாளர் கே.வி பேட்டை தமிழ் செல்வன், மாவட்ட துணைச் செயலாளர் துரை கந்தசாமி, மாவட்ட துணைச் செயலாளர் வைதேகி முருகேசன், மத்திய ஒன்றிய செயலாளர் சண்முகநாதன், ஓய்வு பெற்ற ஆசிரியர் பாலகிருஷ்ணன் ஆகியோர் மணமக்களை வாழ்த்தி பேசுகிறார்கள். விழாவில் கழக முன்னோடிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் திரளாக பங்கேற்கிறார்கள்.விழா நிறைவில் புதுக்கோட்டை ஓய்வு பெற்ற அரசு பள்ளி தலைமை ஆசிரியர் பஞ்சாட்சரம் நன்றி கூறுகிறார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்