என் மலர்
நீங்கள் தேடியது "மதுபார்"
- மது பிரியர்கள் பாலத்தின் கீழ்பகுதியில் அமர்ந்து மதுகுடித்து வருகிறார்கள்.
- பொதுமக்கள் இந்த பாலத்தின் கீழ் பகுதிவழியாக சென்று வருகிறார்கள்.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு நகரத்தின் முக்கியமான பகுதியான அண்ணாநகர் பகுதியில் மாமல்லபுரம் செல்லும் பாலம் உள்ளது. இந்த பாலத்தின் கீழ் பகுதியை அண்ணாநகர் பகுதியில் வசிப்பவர்கள் மற்றும் மேலமையூர் மற்றும் திருமணி ஆகிய பகுதிகளுக்கு செல்பவர்கள் பயன்படுத்தி வருகிறார்கள். தினந்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இந்த பாலத்தின் கீழ் பகுதிவழியாக சென்று வருகிறார்கள்.
இந்த நிலையில் இந்த பகுதி தற்போது இரவு நேர மதுபாராக மாறி உள்ளது. பாலத்தின் அருகே மதுக்கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு மதுபாட்டில்களை வாங்கும் மது பிரியர்கள் பாலத்தின் கீழ்பகுதியில் அமர்ந்து மதுகுடித்து வருகிறார்கள்.
இதனால் அந்த இடம் தற்போது இரவு நேர மதுபாராக மாறி உள்ளது.
தினந்தோறும் மதுபோதையில் மோதல் சம்பவமும் நடந்து வருகிறது. போதை நபர்கள் பயன்படுத்திய காலி மது பாட்டில்கள், பிளாஸ்டிக் டம்ளர் மற்றும் குப்பை கழிவுகள் அங்கேயே அகற்றப்படாமல் குவிந்து கிடக்கிறது. அந்த இடமே குப்பை கிடங்குபோல் மாறி உள்ளது.
பகல் நேரங்களிலும் பாலத்தின் கீழ் பகுதியில் கூட்டம் கூட்டமாக அமர்ந்து மது அருந்துவதால் அவ்வழியே செல்லும் பொது மக்கள், பெண்கள் மற்றும் பள்ளிக்கு செல்லும் மாணவ மாணவிகள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.
இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு பொதுமக்கள் புகார் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்று அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் திறந்த வெளிபாராக மாறி உள்ளதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
- கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.
- குடிபோதையில் வரும் வாகன ஓட்டுகளால் அதிக விபத்து நடக்கிறது.
கோவை
கோவை கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. சோமையன்பாளையம் பகுதி மக்கள் அளித்த மனுவில், சோமையன்பாளையம்-கவுண்டர்மில் ரோடு அருகே தனியார் பார் ஒன்று உள்ளது.இந்த பாரால் மக்கள் பல இடையூறுகளை சந்தித்து வருகின்றனர். பள்ளிக்கூட குழந்தைகள் சாலையை கடக்க முடியாமல் அவதிக்குள்ளாகிறார்கள். பாரில் குடித்துவிட்டு குடிபோதையில் வரும் வாகன ஓட்டுகளால் அதிக விபத்து நடக்கிறது.
எனவே போலீசார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் தனியார் பாரை இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
சூலூர் பகுதி ஊர் மக்கள் அளித்துள்ள மனுவில், சூலூர் கண்ணம்பாளையம் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் அரசு விடுமுறைகளை கடைபிடிக்காமல் டாஸ்மார்க் கடை ஒன்று திறக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு ஏற்கனவே மக்கள், அரசியல் கட்சிகள், அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து பல போராட்டங்கள் நடத்தினர். ஆனாலும் இப்பகுதியில் டாஸ்மார்க் கடை திறக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
உடனடியாக மாவட்ட நிர்வாகம் கள ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்து பொதுமக்களை காக்க வேண்டும் என்றனர்.