என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "வலை வீச்சு"
- அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள் சிறுமியை தேடினர். அவர் எங்கும் கிடைக்கவில்லை.
- கடலூர் முதுநகர் போலீசில் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
கடலூர்:
கடலூர் முதுநகர் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி வீட்டில் இருந்து வந்தார். திடீரென்று சிறுமியை காணவில்லை. அதிர்ச்சிடைந்த அவரது உறவினர்கள் சிறுமியை தேடினர். அவர் எங்கும் கிடைக்கவில்லை. அக்கம் பக்கத்தில் விசாரித்த போது, அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவர் பள்ளி மாணவியை கடத்தி சென்றதாக தெரியவந்தது. இது குறித்து கடலூர் முதுநகர் போலீசில் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், சிறுமியை கடத்தி சென்ற வாலிபரை தேடி வருகின்றனர்.
- மண் கடத்திய லாரியை கலெக்டர் ஷ்ரவன்குமார் மடக்கி பிடித்தார்.
- தலைமறைவாகியுள்ள லாரி உரிமையாளர் பேட்டரி வெங்கடேசன் மற்றும் ராமரை போலீசார் தேடி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி:
சின்னசேலம் ஏரிக்கரையில் இருந்து மண் கடத்திய லாரியை நேற்று முன்தினம் இரவு கள்ளக்குறிச்சி கலெக்டர் ஷ்ரவன்குமார் மடக்கி பிடித்தார். இதனை சின்னசேலம் தாசில்தார் இந்திரா, இன்ஸ்பெகடர் ராஜாராம் ஆகியோரிடம் ஒப்படைத்து சென்றார். இது குறித்து சின்னசேலம் கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். சின்னசேலத்தை சேர்ந்த லாரி உரிமையாளர் பேட்டரி வெங்கடேசன் (வயது 46), சூரியபிரகாஷ் (27), சதீஷ்குமார் (45), ராமர் (58), டிரைவர் வரதராஜ் (43) ஆகிய 5 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதில் டிரைவர் உள்பட 3 பேரை கைது செய்த போலீசார், அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், தலைமறைவாகியுள்ள லாரி உரிமையாளர் பேட்டரி வெங்கடேசன் மற்றும் ராமரை போலீசார் தேடி வருகின்றனர். அரசிடம் அனுமதி பெறாமல் ஏரி மண் எடுத்தால் அவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என தாசில்தார் இந்திரா, இன்ஸ்பெக்டர் ராஜாராம் ஆகியோர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
- திண்டிவனம் அடுத்த ஒலக்கூர் கூட்டு சாலையில் தனியார் மெடிக்கல் இயங்கி வருகிறது
- இந்த தனியார் மெடிக்கலை சம்சுதீன் என்பவரின் மகன் சாதிக்பாஷா நடத்தி வருகிறார்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த ஒலக்கூர் கூட்டு சாலையில் தனியார் மெடிக்கல் இயங்கி வருகிறது. இந்த தனியார் மெடிக்கலை திண்டிவனம் ஆர்.எஸ் பிள்ளை வீதியைச் சேர்ந்த சம்சுதீன் என்பவரின் மகன் சாதிக்பாஷா நடத்தி வருகிறார் இந்த மெடிக்கல் குறித்து பல்வேறு புகார்கள் எழுந்த நிலையில், திண்டிவனம் முதன்மை மருத்துவர் சாந்தகுமாரி கொடுத்த புகாரின் பெயரில் திண்டி வனம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி, ஒலக்கூர் சப்- இன்ஸ்பெக்டர் சசி குமார் மற்றும் போலீசார் தனியார் மெடிக்கலில் விசா ரணை மேற்கொண்டனர்.
மேலும், கடையில் சோதனை செய்ய போலீசார் முயற்சித்தனர். அப்போது யாரும் எதிர்பாராத நேரத்தில் கடையை மூடிவிட்டு சாதிக் பாஷா தப்பிவிட்டார். விசாரணையில் அவர் 10-ம் படித்து விட்டு பொது மக்களுக்கு மருத்துவம் பார்த்து வந்தது தெரிய வந்தது. இதையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவாகியுள்ள சாதிக் பாஷாவை வலை வீசி தேடி வருகின்றனர்.
- காரைக்கால் ஜுவல்லரி யில் 12 பவுன் போலி தங்க நகையை விற்பனை வழக்கில், ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில், நேற்று சப்- இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட மேலும் 3 பேரை போலீசார் கைது செய்தனர்
- கொல்லாபுரத்தை சேர்ந்த ரிபாத் காமில்தான்(35) போலி தங்க நகையை தயாரித்து விற்பனை செய்ய கொடுத்தது தெரிய வந்தது. ,
புதுச்சேரி:
காரைக்கால் ஜுவல்லரி யில் 12 பவுன் போலி தங்க நகையை விற்பனை வழக்கில், ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில், நேற்று சப்- இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட மேலும் 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக ஒரு பெண்ணை போலீசார் தேடிவருகின்றனர். காரைக்கால் ராஜாத்தி நகரில் வசிப்பவர் கைலாஷ். இவர் காரைக்கால் பெரம சாமி பிள்ளை விதியில் ஜுவ்வல்லரி நடத்தி வரு கிறார். இவரது ஜூவல்ல ரிக்கு கடந்த 10-ந் தேதி, காரைக்கால் சின்னக் கண்ணு செட்டி வீதியை சேர்ந்த பரசுராமன் (வயது30) என்ற வாலிபர் சென்று, 12 பவுன்தங்க செயினை எடுத்து கொண்டு பணம் தரும்படி கேட்டுள்ளார். கைலஷ், தனது பெரியப்பா மகன் பாலமுரளிக்கு போன் செய்து விபரத்தை தெரிவித் துள்ளார். பாலமுரளி ஜுவல்லரிக்கு சென்று, நகையை பரிசோதித் துள்ளார்.
அப்போது, நகையின் மேல்புறம் மட்டும் 916 தங்கத்தால் முலாம் பூசி, உள்ளே செம்பு கம்பி போல் தெரிந்ததை அவர் உறுதி செய்தார். தொடர்ந்து, ஜுவல்லரி கடை உரிமையாளர்கள் சங்கத்தில் இது குறித்து, கைலாஷ் ஆலோசனை செய்து, பரசுராமனை கையும் களவுமாக பிடித்து, காரைக்கால் நகர போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். போலீசார் பரசுராமனி டம் நடத்திய விசாரணையில், திருவாரூர் மாவட்டம் கொல்லாபுரத்தை சேர்ந்த ரிபாத் காமில்தான்(35) போலி தங்க நகையை தயாரித்து விற்பனை செய்ய கொடுத்தது தெரிய வந்தது. தொடர்ந்து, ரிபாத் காமிலை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டதில், பல திடுக்கிடும் தகவல் வெளி வந்தது. இது போன்ற போலி தங்க நகை விற்பனைக்கு உடந்தையாக இருந்தவர் புதுச்சேரி சப்-இன்ஸ்பெக்டர் ஜெரோம் (38), காரைக்காலைச்சேர்ந்த ரமேஷ்(32) மற்றும் அவரது நெருங்கிய தோழியான புவனேஸ்வரி(35) இருப்ப தாக கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர், ஜெரோம் மற்றும் ரமேஷை கைது செய்த போலீசார், அவர்க ளிடம் விசாரனை மேற்கொண்ட போது, மேலும் பல திடுக்கி டும் தகவல் வெளிவந்தது.
அதாவது இந்த கூட்டணி, தமிழகம் மற்றும் புதுச்சேரியில், பல்வேறு வங்கிகளில் இது போ
- சென்னையில் இருந்து அரசு போக்குவரத்து பஸ்சில் திருவண்ணாமலைக்கு பயணம் செய்தார்.
- 2 பெண்கள் சூரியகாந்தி பக்கத்தில் அமர்ந்து வந்துள்ளனர்.
விழுப்புரம்:
சென்னை பொழிச்சலூர் பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி. அவரது மனைவி சூரியகாந்தி (வயது 68). இவர் சம்பவத்தன்று அதிகாலை சென்னையில் இருந்து அரசு போக்குவரத்து பஸ்சில் திருவண்ணாமலைக்கு பயணம் செய்தார். அப்போது மேல்மரு வத்தூர் பஸ் நிறுத்தத்தில் 3 பெண்கள் பஸ்சில் ஏறினர். அதில் 2 பெண்கள் சூரியகாந்தி பக்கத்தில் அமர்ந்து வந்துள்ளனர். அவர்கள் செஞ்சி வரும் வரை அவருக்கு நெருக்கடி கொடுத்து வந்தனர்.
நாட்டார்மங்கலம் வரும்போது 3 பெண்களும் இறங்கிவிட்டனர். பின்னர் பார்த்தபோது சூரியகாந்தி கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தங்க செயினை காணவில்லை. இதனை ஓடும் பஸ்சில் 3 பெண்களும் தனது தங்க செயினை அபேஸ் செய்து உள்ளதாக சூரியகாந்தி செஞ்சி போலீசில் கொடுத்தார். அதன் பேரில் செஞ்சி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தீபன்ராஜ் வழக்கு பதிவு செய்து பெண்களை வலை வீசி தேடி வருகிறார்கள்.
- இவர்கள் இருவரும் அரசு வீடு வேண்டும்என்று பண் ருட்டிஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில்பதிவுசெய்திருந்தனர்.
- பஞ்சாயத்து தலைவியின் கணவர் வேண்டுமென்றே எங்களுக்கு வீடு ஒதுக்காமல் தடுத்து நிறுத்தியுள்ளார் என்று முறையிட்டனர்.
கடலூர்:
பண்ருட்டி அருகே கீழ்மாம் பட்டுகிராமத்தை சேர்ந்தவர்ஜெயராமன். இவரது மனைவி வசந்தகுமாரி. ஊராட்சிமன்ற தலைவியாகஉள்ளார். இதே கிராமத்தை சேர்ந்தவர்சிகாமணி. இவரது மகன் ராஜசேகர். இவர்கள் இருவரும் அரசு வீடுவேண்டும்என்று பண் ருட்டிஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில்பதிவுசெய்திருந்தனர். ஆனால் இவர்களுக்கு அரசு சார்பில் வீடுஒதுக்கப்பட வில்லை. இதனைஅறிந்து இவர்கள் ஊராட்சி ஒன் றிய அலுவலக மேனேஜரிடம்புகார் கூறினர்.
பஞ்சாயத்து தலைவியின் கணவர் வேண்டுமென்றே எங்களுக்கு வீடு ஒதுக்காமல் தடுத்து நிறுத்தியுள்ளார் என்று முறையிட்டனர். அப்போது அங்கு வந்தபெண் ஊராட்சி மன்ற தலைவர் வசந்தகுமாரியின் கணவர் ஜெயராமனை பார்த்ததும் ஆத்திரமடைந்து அவரை அசிங்கமாக திட்டி தாக்க முயன்றதாகவும், அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததனர். இதுகுறித்து ஜெய ராமன் கொடுத்த புகாரின் பேரில்பண்ருட்டிபோலீஸ்இன்ஸ்பெக்டர் நந்தகுமார் வழக்கு பதிவு செய்துசிகாமணி, ராஜசேகர் ஆகிய 2 பேரை வலை வீசி தேடி வருகின்றனர்.
- விவசாயியை அரிவாளால் வெட்டிய பெண் உள்பட 4 பேருக்கு வலை வீசி தேடி வருகின்றனர்.
- 4 மாதங்களுக்கு முன்பு முருகன் மகன் தமிழரசனை கைது செய்தது தொடர்பாக இந்த சம்பவம் நடந்துள்ளது தெரியவந்தது
மதுரை
மதுரை மேலூரை அடுத்த வண்ணம்பாறைபட்டியைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது 40), விவசாயி. இவர் சம்ப வத்தன்று மாலை வீட்டில் இருந்தார். அப்போது பக்கத்து வீட்டில் வசிக்கும் முருகன் (49), அவரது மனைவி செல்வி (45) மற்றும் மகன்கள் மீனாட்சி சுந்தரேஸ் (19), தமிழரசன் (18) ஆகிய 4 பேரும் கும்பலாக வந்து தங்களை பற்றி போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசுக்கு உளவு கூறியதாக தகராறு செய்து ரமேசை அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பிச் சென்று விட்டனர்.
இது தொடர்பாக ரமேஷ் கீழவளவு போலீசில் புகார் செய்தார்.அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி னர்.
இதில், போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு முருகன் மகன் தமிழரசனை கைது செய்தது தொடர்பாக இந்த சம்பவம் நடந்துள்ளது தெரியவந்தது.
இதன் அடிப்படையில் ரமேசை வெட்டியதாக முருகன், அவரது மனைவி செல்வி, மகன்கள் மீனாட்சி சுந்தரேஸ், தமிழரசன் ஆகிய 4 பேரையும் கீழவளவு போலீசார் தேடி வருகின்றனர்.
- நள்ளிரவில் இந்த கோவிலுக்கு மர்ம கும்பல் வந்தது.
- இது குறித்து திருவெண்ணைநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் அருகே திரு வெண்ணைநல்லூர் போலீஸ் சரகத்துக்குட்பட்ட பெரிய செவலை பகுதியில் குண்டு மணி அய்யனாரப்பன் கோவில் உள்ளது. இந்ந கோவிலில் வழக்கம்போல் நேற்று மாலை யில் பூஜை முடித்துவிட்டு கோவில் பூட்டப்பட்டது. நள்ளிரவில் இந்த கோவிலுக்கு மர்ம கும்பல் வந்தது. அப்போது அந்த மர்ம கும்பல் கோவிலின் சுவரை உடைத்து உள்ளே நுழைந்தது. பின் கோவிலில் உள்ளே இருந்த பித்தளை பூஜை பொருள்கள் அனைத்தையும் திருடி சென்றனர். மேலும் கோவிலின் உள்ளே மற்றும் கோவிலின் முன்பு வைக்கப்பட்டிருந்த 2 உண்டியல்களை உடைத்து அதிலிருந்த பணத்தையும் திருடி சென்றனர்.
இன்று காலை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்த அதிர்ச்சி அடைந்து இது குறித்து திருவெண்ணைநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த திருவெண்ணைநல்லூர் சப் இன்ஸ்பெக்டர் பிரபு தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கொள்ளை நடந்த கோவிலை பார்வையிட்டு கோவிலின் சுவரை உடைத்து கைவரிசை காட்டிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
- பணத்தை திருப்பி கேட்ட வாலிபருக்கு பீர் பாட்டிலால் அடித்தனர்.
- ராம்குமாரை தாக்கியதாக, பிரபு செந்தில் உள்பட 5 பேர் கும்பலை தல்லாகுளம் போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
மதுரை
மதுரை நாராயணபுரம், குறிஞ்சி நகர், கபிலர் தெருவை சேர்ந்தவர் ராம்குமார் (வயது 48). இவர் தனது நண்பர் நீதிமோகன் என்பவருடன், நாராயணபுரம் பேங்க் காலனியில் உள்ள டாஸ்மாக் பாரில் மது அருந்திக் கொண்டு இருந்தார்.
அப்போது அங்கு வந்த பிரபு, செந்தில் உள்பட 5 பேர் கும்பல் ராம்குமாரிடம் தகராறு செய்து அவரை பிளாஸ்டிக் சேர் மற்றும் பீர் பாட்டிலால் சரமாரியாக தாக்கி விட்டு தப்பி சென்றது.
இதில் படுகாயமடைந்த ராம்குமாரை அங்கு இருந்தவர்கள் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக தல்லாகுளம் உதவி கமிஷனர் சுரேஷ்குமார் உத்தரவின் பேரில், இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
அப்போது ராம்குமாருக்கு கடந்த 2019-ம் ஆண்டு வேலை வாங்கி தருவதாக, பிரபு என்பவர் ரூ.20 லட்சம் வாங்கி உள்ளார். அதன் பிறகு அவர் ஏற்கனவே அளித்த வாக்குறுதிப்படி வேலை வாங்கித் தரவில்லை.
எனவே ராம்குமார் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டு உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த கும்பல் ராம்குமாரை தாக்கியது தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து ராம்குமாரை தாக்கியதாக, பிரபு செந்தில் உள்பட 5 பேர் கும்பலை தல்லாகுளம் போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்