search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அந்தியூரில்"

    • போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்று செல்லும் நிலை ஏற்படுகிறது.
    • புறவழி சாலையை அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும் திருச்செங்கோடு, சங்ககிரி, குமாரபாளையம், கோபி உள்ளிட்ட பகுதிகளில் இரு ந்து நாள்தோறும் கல்லூரி வாகனம், பள்ளி வாகனங்க ள், காலை நேரத்தில் ஏராளமாக பஸ் நிலையம் பகுதி வழியாக செல்கின்றது.

    மேலும் அந்தியூர் வழியாக பர்கூர், கர்நாடக மாநிலம் மைசூருக்கு செல்லக்கூடிய பிரதான சாலை உள்ளது.

    இதனால் கனரக வாகனங்க ளும், கோவை உள்ளிட்ட பகுதிகளுக்கு கனரக வாகனங்கள் இரவு நேரம் மற்றும் பகல் நேரங்களிலும் அதிக அளவில் செல்வதால் பஸ் நிலையம் பகுதியில் காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் நீண்ட வரிசையில் ஆங்கங்கே நின்று செல்லும் நிலை ஏற்படுகிறது.

    இந்த நெரிசலை தவிர்க்க பவானி சாலையில் உள்ள சந்தியபாளையம் பிரிவு (மங்களம்பள்ளி அருகில்) பகுதியில் இருந்து தவிட்டுப்பாளையம்-பிரம்மதேசம் இணைக்கும் சாலை வழியா க புறவழிச்சாலை அமைத்தால் போக்குவரத்து நெரிசலும் குறையும், வாகனங்கள் செல்வதற்கு குறைந்த தூரமே வரும் என்பதால் இந்த புறவழி சாலையை அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகளும், சமூக ஆர்வல ர்களும், பொதுமக்களும் அரசுக்கு கோரிக்கை விடுக்கின்றார்கள்.

    • அந்தியூரில் இலவச பன்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
    • சிறப்பு மருத்துவர்கள் பங்கேற்று மருத்துவ சிகிச்சை மற்றும் ஆலோச னைகளை வழங்கினார்.

    அந்தியூர்:

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி அந்தியூரில் இலவச பன்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

    முகாமில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை சார்பில் நடைபெற்ற இம்முகாமை அந்தியூர் ஏ.ஜி.வெங்கடா ஜலம் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

    இதில் வட்டார மருத்துவ அலுவலர் சக்தி கிருஷ்ணன் வரவேற்றார். முகாமில் இதயம், நுரையீரல், சிறுநீரகம், நரம்பியல் உள்ளிட்ட அனைத்து வகை யான சிறப்பு மருத்துவர்கள் பங்கேற்று மருத்துவ சிகிச்சை மற்றும் ஆலோச னைகளை வழங்கினார்.

    இதில் 450-க்கும் மேற்பட்டோருக்கு இ.சி.ஜி., 150-க்கும் மேற்பட்டோருக்கு எகோ, 190 பேருக்கு எக்ஸ்ரே பரிசோதனை மற்றும் 800-க்கும் மேற்பட்டோருக்கு ரத்த பரிசோதனைகள் செய்யப்பட்டன. உயர் சிகிச்சை தேவைப்படு வோருக்கு அரசு மருத்துவ மனை மற்றும் ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு பரிந்துரை செய்யப்பட்டனர்.

    முதல்- அமைச்சரின் விரி வான மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை களும் வழங்க ப்பட்டன. நிகழ்ச்சியில் அந்தியூர் பேரூராட்சி தலைவர் பாண்டியம்மாள் மாதேஷ், துணைத்தலைவர் ஏ.சி. பழனிச்சாமி, பேரூராட்சி செயல் அலுவலர் செல்வ குமார், துப்புரவு ஆய்வாளர் குணசேகரன், மேற்பா ர்வையாளர் ஈஸ்வரமூர்த்தி, அலுவலகப்பணியாளர் சாந்து முகமது, தினேஷ், சிவலிங்கம், தலைமை எழுத்தர் தாமரை,

    தாசில்தார் பெரியசாமி, நில வருவாய் ஆய்வாளர் சுதாகர், கிராம நிர்வாக அலுவலர் பிரகாஷ், வருவாய்த்துறையினர், கவுன்சிலர்கள் சண்முகம், சேகர், யாஸ்மின் தாஜ், தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட துணை அமைப்பாளர் நாகராஜ், மைக்கேல்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் சரவணன், சங்கரா பாளை யம் ஊராட்சி மன்ற தலைவர் குருசாமி, கெட்டி சமுத்திரம் ஊராட்சி மன்ற தலைவர் மாறன், அல்ட்ரா தொண்டு நிறுவன தலைவர் தண்டாயுதபாணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அந்தியூர் அடுத்த செம்பளிச்சம்பாளையம் காலனி பகுதியில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு புதியதாக கழிவுநீர் வடிகால் அமைக்கப்பட்டது.
    • இதனால் இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் அவதிப்பட்டு வந்தனர்.

    அந்தியூர்:

    அந்தியூர் அடுத்த செம்பளிச்சம்பாளையம் காலனி பகுதியில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு புதியதாக கழிவுநீர் வடிகால் அமைக்கப்பட்டது.

    இந்தப் பணி 2 மாதங்களாக நடந்து முடிந்தும் கழிவுநீர் வெளியே செல்ல முடியாத நிலையில் அப்படியே தேங்கி கிடந்தது. அந்த கழிவு நீர் சாலையில் சென்று துர் நாற்றம் வீசியது. இதனால் இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் அவதிப்பட்டு வந்தனர்.

    இதனால் அந்த பகுதி பொதுமக்களும் மிகுந்த வேதனையோடு இருந்து வந்தனர்.

    இந்த நிலையில் மாலை மலரில் இது தொடர்பான செய்தி வெளியிடப்பட்டது. இதையொட்டி ஒட்ட பாளையம் ஊராட்சி தலைவர் பெருமாள்சாமி, ஊராட்சி செயலாளர் (கிளார்க்) குருசாமி வார்டு உறுப்பினர்கள் ஆகியோர் அதை சரி செய்ய நட வடிக்கை எடுத்தனர்.

    இதை தொடர்ந்து பணியாளர்கள் மூலம் அந்த இடத்தில் மண் கொண்டு வரப்பட்டு சாலையில் நீர் தேங்கிய பகுதிகளில் கொட்டப்பட்டு ஜே.சி.பி. எந்திரத்தின் மூலம் சமன்படுத்தப்பட்டு சரி செய்யப்பட்டது.

    ×