என் மலர்
நீங்கள் தேடியது "3 தனிப்படைகள் அமைப்பு"
- ஜேடர்பாளையம் பகுதியில் கடந்த மார்ச் மாதம் முதல் 9 மாதங்களுக்கு மேலாக தொடர்ந்து வீடுகள், வெல்ல ஆலை மற்றும் விவசாய தோட்டங்களை சேதப்படுத்துதல் சம்பவம் நடைபெற்று வருகின்றன.
- ரூ.10 லட்சம் மதிப்பிலான சுமார் 4,000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்களை மர்ம நபர்கள் வெட்டி சாய்த்து சேதப்படுத்திவிட்டு சென்றனர்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா ஜேடர்பாளையம் பகுதியில் கடந்த மார்ச் மாதம் முதல் 9 மாதங்களுக்கு மேலாக தொடர்ந்து வீடுகள், வெல்ல ஆலை மற்றும் விவசாய தோட்டங்களை சேதப்படுத்துதல் சம்பவம் நடைபெற்று வருகின்றன.
வாழைகள் வெட்டி சாய்ப்பு
அதன் தொடர்ச்சியாக கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஜேடர்பாளையம் அருகே உள்ள வி.புதுப்பாளையம் பகுதியை சேர்ந்த இளங்கோமணி என்கிற சுப்பிரமணி (42) என்பவரது 5 ஏக்கரில் பயிர் செய்திருந்த ரூ.10 லட்சம் மதிப்பிலான சுமார் 4,000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்களை மர்ம நபர்கள் வெட்டி சாய்த்து சேதப்படுத்திவிட்டு சென்றனர். இது குறித்து தகவல் அறிந்ததும் நாமக்கல் மாவட்ட கலெக்டர் டாக்டர் உமா தலைமையில் திருச்செங்கோடு ஆர்.டி.ஓ. சுகன்யா, பரமத்தி வேலூர் தாசில்தார் தமிழ்ச்செல்வி மற்றும் வருவாய் துறையினர் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் தலைமையில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கனகேஸ்வரி, உள்ளிட்ட அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். அதனை தொடர்ந்து நாமக்கல்லில் இருந்து மோப்ப நாய், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு பல்வேறு சோதனை நடைபெற்றது.
இந்த நிலையில் மர்ம கும்பலை பிடிக்க நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் உத்தரவின் பேரில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாலசுப்பிரமணி மேற்பார்வையில் பரமத்தி வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜமுரளி தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் இந்திராணி (பரமத்தி வேலூர்), ரவி (பரமத்தி), செல்வராஜ் (வேல கவுண்டன்பட்டி) மற்றும் சப்- இன்ஸ்பெக்டர்கள், போலீசார் கொண்ட 3 தனிப்படைகள் அமைக்கப்பட் டுள்ளது.
இந்த தனிப்படையினர் பல்வேறு பகுதிகளில் ஆய்வு நடத்தி,வாழை மரங்கள் வெட்டப்பட்ட பகுதிக்கு செல்லும் வழியில் உள்ள அனைத்து கண்காணிப்பு கேமராவில் இரவு நேரத்தில் பதிவான பதிவுகளை வைத்தும், அந்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ள செல்போன் கோபுரத்தில் பதிவான செல்போன் எண்களை வைத்தும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு நேரங்களில் நடமாடுபவர்கள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஜேடர்பாளையம் பகுதிகளில் நடைபெற்ற குற்ற சம்பவங்களில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தவர்கள் யாராவது வாழை மரம் வெட்டிய சம்பவத்தில் ஈடுபட்டார்களா? என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மூட்டையில் இருந்து கயிற்றை அவிழ்த்து பிரித்து பார்த்தபோது அதில் 45 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் அழுகிய நிலையில் கிடந்தது தெரியவந்தது.
- இந்நிலையில் கொலையாளிகளை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவின் பெயரில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஈரோடு:
ஈரோடு மோளகவுண்டம் பாளையம் ஜீவானந்தம் வீதியில் செல்லும் சாக்கடையில் இருந்து நேற்று இரவு பயங்கர துர்நாற்றம் வீசியது. இதனால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அங்கு சென்று பார்த்தனர்.
அப்போது சாக்கடையில் ஒரு மூட்டை கிடந்தது. அதிலிருந்து துர்நாற்றம் வீசியதால் சந்தேகம் அடைந்த பொதுமக்கள் உடனடியாக ஈரோடு தாலுகா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் தலைமையில் ஈரோடு டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆனந்தகுமார், இன்ஸ்பெக்டர்கள் சோமசுந்தரம், தீபா, கோமதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.
பின்னர் சாக்கடையில் கிடந்த மூட்டையை வெளியே எடுத்தனர். அப்போது அந்த மூட்டை கயிற்றால் கட்டப்பட்டிருந்தது.
மூட்டையில் இருந்து கயிற்றை அவிழ்த்து பிரித்து பார்த்தபோது அதில் 45 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் அழுகிய நிலையில் கிடந்தது தெரியவந்தது. பிணம் அழுகிய நிலையில் இருந்ததால் உடனடியாக அடையாளம் காண முடியவில்லை.
மர்மநபர்கள் கொலை செய்துவிட்டு சாக்கு மற்றும் போர்வையால் உடலை கட்டி கொண்டுவந்து சாக்கடையில் வீசி சென்றது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மோப்பநாய் ஜெர்ரி சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டது. சிறிது தூரம் சென்று விட்டு நின்றது. இதைத்தொடர்ந்து இறந்தவரின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பிணம் கிடந்த பகுதியில் ஒரு சில வீடுகள் மட்டுமே உள்ளன.
மேலும் இருட்டாக இருப்பதால் மர்மநபர்கள் கொலை செய்த பிணத்தை கொண்டு வந்து வீசி சென்று இருக்கலாம் என்று கோணத்தில் விசாரணை நடத்தப்படுகிறது.
எனவே ஜீவானந்தம் வீதிக்கு செல்ல வேண்டிய கரூர் ரோடு, கல்யாணசுந்தரம் வீதி உள்ளிட்ட பகுதிகளில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான வீடியோக்களை போலீசார் பார்வையிட்டு வருகிறார்கள்.
கொலை செய்யப் பட்டவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்? என்ன காரணத்துக்காக கொலை செய்யப்பட்டார்? போன்ற விவரங்களை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கொலையாளிகளை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவின் பெயரில் டவுன் டி.எஸ்.பி ஆனந்தகுமார் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் சோமசுந்தரம், கோமதி, தீபா ஆகிய கொண்ட 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தனிப்படை போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
மேலும் ஈரோடு. திருப்பூர், கோவை, சேலம், நாமக்கல், கரூர் போன்ற பகுதியில் உள்ள போலீஸ் நிலையங்களில் காணாமல் போனவர்கள் பற்றிய விவரங்களை சேகரித்து வருகின்றனர்.
- பொதுமக்கள் குற்றம் சார்ந்த நிகழ்வுகளுக்கு 100 என்ற போன் நம்பரை பயன்படுத்த வேண்டும்.
- புகார் செய்தவர்களின் பெயர்கள் ரகசியமாக வைக்கப்படும்.
பரமத்தி வேலூர்
பரமத்திவேலூர் டி.எஸ்.பி. கலையரசன் கூறியதாவது:-பரமத்தி வேலூர் தாலு காவில் உள்ள அனைத்து வியாபார கடைகள், நிதி நிறுவனங்கள், அனைத்து வீடுகளிலும் திருட்டை தடுக்கும் வகையில் கேமரா வைக்க வேண்டும். கடைகளில் வைத்திருக்கும் கேமராக்கள் சாலையில் வருவோர், போவோர் அடையாளம் தெரியும்படி கேமராவை வைக்கவேண்டும்.
கடைகளில் கல்லாப்பெட்டியை குறிவைத்தே கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. பெரும்பாலான கடைகளில் வைக்கப்பட்டுள்ள கேமராக்கள் செயல்பட்டும் பதிவு ஆகாத நிலையில் உள்ளது. சாலையில் செல்வோரை கண்காணிக்கு ம் வகையில் கேமராக்கள் அமைக்கப்பட வேண்டும்.
குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் எவரேனும் நின்று கொண்டிருந்தாலோ சுற்றிக் கொண்டிருந்தாலோ, நோட்டமிட்டாலோ உடனடியாக தொலைபேசி எண் 100-க்கு போன் செய்து தகவல் தெரிவித்தால் உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நடவடிக்கை எடுப்பார்கள்.
மேலும் பொதுமக்கள் குற்றம் சார்ந்த நிகழ்வுகளுக்கு 100 என்ற போன் நம்பரை பயன்படுத்த வேண்டும். மேலும் சட்டவிரோதமாக செயல்படும் சூதாட்டம், லாட்டரி ,கஞ்சா, பான் மசாலா, குட்கா போன்ற தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள பொருட்களை விற்பனையை தடுக்க புகார் செய்தால் உடனடி நடவடிக்கை எடுக்கபப்டும்.புகார் செய்தவர்களின் பெயர்கள் ரகசியமாக வைக்கப்படும். பரமத்தி வேலூர் பகுதியில் நடந்த திருட்டு சம்பவத்தில் தொடர்பு உடையவர்களை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள். தற்போது இரவுநேர ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.