என் மலர்
நீங்கள் தேடியது "தூக்குப் போட்டு"
- ஏலச்சீட்டு நடத்தி வந்ததாக கூறப்படுகிறது.
- ஏல சீட்டில் பணம் எடுத்த சிலர் அதை திருப்பி தராமல் இருந்ததாக தெரிகிறது.
சேலம்:
சேலம் டவுன் ஜலால் புறா வீதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 64). இவர் ஏலச்சீட்டு நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. இவரது மனைவி யுவராணி, நேற்று மாலை வீட்டில் இருந்து வெளியே சென்று விட்டு, இரவு 8 மணி அளவில் வீடு திரும்பியுள்ளார்.
அப்போது வீட்டில் ராஜேந்திரன் தூக்கில் தொங்கி கொண்டிருந்தார். இதைக் கண்ட யுவராணி கூச்சலிட்டார். சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள், ராஜேந்திரனை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ராஜேந்திரன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்த புகாரின் பேரில் சேலம் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், ராஜேந்திரன் நடத்தி வந்த ஏல சீட்டில் பணம் எடுத்த சிலர் அதை திருப்பி தராமல் இருந்ததாக தெரிகிறது. இதனால் பணம் கட்டியவர்கள், பணத்தை கேட்ட போது அதை தர முடியாததால் கடும் மன உளைச்சலில் இருந்த ராஜேந்திரன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சேலம் பள்ளப்பட்டி அங்கம்மாள் காலனி ஆதிசக்திபுரம் பகுதியை சேர்ந்தவர் இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று காலை வீட்டில் மணிகண்டன் தூக்கில் பிணமாக தொங்கினார்.
- இது குறித்த புகாரின் பேரில் பள்ளப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மணிகண்டன் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சேலம்:
சேலம் பள்ளப்பட்டி அங்கம்மாள் காலனி ஆதிசக்திபுரம் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மகன் மணிகண்டன் (வயது 37). இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று காலை வீட்டில் மணிகண்டன் தூக்கில் பிணமாக தொங்கினார்.
இது குறித்த புகாரின் பேரில் பள்ளப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மணிகண்டன் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் மணிகண்டன் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- கே.புதுப்பாளையம் பகுதியில் உள்ள உறவினர் அங்கம்மாள் வீட்டிற்கு சென்றார்.
- அங்கு யாரும் இல்லாத நிலையில் திடீரென அவர் தூக்குப் போட்டு கொண்டார்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் நல்லிபாளையம் அருகே கருப்பட்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடாசலம் (வயது 57). கூலித் தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவியை பிரிந்து வசித்து வந்தார்.
நேற்று வாழவந்தி அருகே உள்ள கே.புதுப்பாளையம் பகுதியில் உள்ள உறவினர் அங்கம்மாள் வீட்டிற்கு சென்றார். அங்கு யாரும் இல்லாத நிலையில் திடீரென அவர் தூக்குப் போட்டு கொண்டார்.
இதுகுறித்து பரமத்தி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- முதல் கணவர் அல்லிமுத்துவை பிரிந்த அவர் தற்பபோது பழனி என்பவருடன் அந்த பகுதியில் வசித்து வந்தார்.
- இதற்கிடையே சாமியாத்தா நேற்றிரவு வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சேலம்:
சேலம் கருப்பூரை அடுத்த தேக்கம்பட்டியை சேர்ந்தவர் சாமியாத்தா( வயது 35), இவருக்கு 18 வயதில் ஒரு மகளும், 17 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.
இந்த நிலையில் முதல் கணவர் அல்லிமுத்துவை பிரிந்த அவர் தற்பபோது பழனி என்பவருடன் அந்த பகுதியில் வசித்து வந்தார். இதற்கிடையே சாமியாத்தா நேற்றிரவு வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த உறவினர்கள்கதறி துடித்தனர்.
தகவல் அறிந்த கருப்பூர் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.