search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஹேமந்த் சோரன்"

    • கடந்த 13-ம் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
    • அதில் சுமார் 67 சதவீதம் வாக்குகள் பதிவானது.

    பாட்னா:

    ஜார்க்கண்ட் மாநிலத்தில் நவம்பர் 13 மற்றும் 20-ம் தேதிகளில் 2 கட்டமாக தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

    அதன்படி, ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்தமுள்ள 81 தொகுதிகளில் 43 தொகுதிகளுக்கு கடந்த 13-ம் தேதி முதல் கட்ட தேர்தல் நடந்தது. அதில் சுமார் 67 சதவீதம் வாக்குகள் பதிவானது.

    இதையடுத்து, அங்கு 2-வது கட்டமாக 38 தொகுதிகளில் விறுவிறுப்பான தேர்தல் பிரசாரம் நடந்தது. நேற்று மாலையுடன் பிரசாரம் நிறைவு பெற்றது. தலைவர்கள் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். தேர்தலை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

    இந்நிலையில், பீகார் தலைநகர் பாட்னாவில் மத்திய ஜவுளித்துறை மந்திரி கிரிராஜ் சிங் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    முதல் மந்திரி ஹேமந்த் சோரனும், காங்கிரசும் தலைநகர் ராஞ்சியை கராச்சியாக மாற்ற விரும்புகின்றனர்.

    அதேபோல் தும்கா, தியோகர் மற்றும் சாஹிப்கஞ்ச் மாவட்டங்களை வங்காளதேசமாக மாற்ற விரும்புகிறார்கள். காங்கிரசும் அதன் கூட்டணி கட்சிகளும் எங்களைப் பிரிக்க நினைக்கின்றன.

    ஜார்க்கண்டில் இறுதிக்கட்ட வாக்குப்பதிவுக்கு ஒரு நாள் முன்னதாக, மக்கள் தங்கள் 'பாஹு-பேட்டி'யின் பாதுகாப்பிற்காக வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    அவர்கள் 'ஓட்டு ஜிஹாத்' பற்றி பேசுகிறார்கள். பெரும்பான்மை சமூகத்தின் வாக்குகளைப் பிரிப்பதே இவர்களின் அடிப்படை நோக்கம். இதை மக்கள் அனுமதிக்கக் கூடாது என தெரிவித்தார்.

    • பா.ஜ.க.-வின் பிரித்தாளும் சூழ்ச்சிக்கு வாக்காளர்கள் மயங்கிவிடக் கூடாது.
    • பாஜக-வின் முழக்கம் மாநிலத்தில் நிலவும் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை சீர்குலைப்பதை நோக்கமாகக் கொண்டது.

    ஜார்க்கண்ட் மாநிலத்தில் 2-வது கட்ட தேர்தல் வாக்குப்பதிவு 20-ந்தேதி நடைபெற இருக்கும் நிலையில் பாஜக தலைவர்கள், இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    பிரதமர் மோடி தனது பிரசாரத்தில் ஜார்க்கண்டின் மண், மக்கள், உணவு (Mati, Beti, Roti) ஆகியவற்றை பா.ஜ.க. காப்பாற்றும் என்ற கோஷத்தை கூறி வருகிறார்.

    இந்த நிலையில் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோர்ன் இன்று இந்தியா கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளரும், மந்திரியுமான தீபிகா பாண்டே சிங்கை ஆதித்து பிரசாரம் மேற்கொண்டார்.

    அப்போது பா.ஜ.க., Mati, Beti and Roti கோஷத்தை அரசியல் ஆதாயத்திற்காக மக்களை தவறாக வழிநடத்துகிறது என்றார்.

    பா.ஜ.க.-வின் பிரித்தாளும் சூழ்ச்சிக்கு வாக்காளர்கள் மயங்கிவிடக் கூடாது. பாஜக-வின் முழக்கம் மாநிலத்தில் நிலவும் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை சீர்குலைப்பதை நோக்கமாகக் கொண்டது. இது பதட்டத்தைத் தூண்டுவதற்கு அக்கட்சியின் தவறான முயற்சி.

    மிகப்பெரிய வெற்றியை பெற இந்தியா கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவு அளிக்க வேண்டும். மாநிலத்தை சீர்குலைக்கவும், ஒற்றுமையை சீர்குலைக்கவும் கடந்த ஓராண்டாக பாஜக சதி செய்து வருகிறது.

    ஜார்க்கண்ட் மக்கள் நம்பிக்கையைப் பொருட்படுத்தாமல் ஒன்றாக பண்டிகைகளை கொண்டாடுகின்றனர். மேலும் இந்த உணர்வு தொடர இந்தியா கூட்டணி வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டும். ஒவ்வொரு வருடமும் திருவிழாக்கள் வரும், ஆனால் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல்கள் வரும் என்று ஹேமந்த் சோரன் தெரிவித்தார்.

    • ஜார்க்கண்ட் மாநிலத்தில் 38 தொகுதிகளுக்கு 2-வது கட்டமாக 20-ந்தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது.
    • நவம்பர் 23-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

    ஜார்க்கண்ட் மாநிலத்தில் 81 தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற இருக்கிறது. முதற்கட்ட தேர்தல் ஏற்கனவே கடந்த 13-ந்தேதி 43 தொகுதிகளுக்கு நடந்து முடிந்துவிட்டது. 38 தொகுதிகளுக்கு வருகிற 20-ந்தேதி நடைபெற இருக்கிறது.

    பா.ஜ.க. தலைவர்களும், இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களும் தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். ஜார்க்கண்ட் மாநிலத்திற்குள் ஊடுருபவர்கள் தொடர்பான பிரச்சனை தேர்தல் பிரசாரத்தில் பிரதானதாக இருந்து வருகிறது.

    இந்த நிலையில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் பழங்குடியினரின் மக்கள் தொகை குறைந்து வருவதற்கு ஹேமந்த் சோரன்தான் முக்கிய காரணம். அவர் ஊடுருவல்காரர்களை அனுமதிக்கிறார். இதற்கு ஹேமந்த் சோரன் பொறுப்பேற்க வேண்டும். பிரதமர் மோடி ஜன்ஜதியா கவுரவ் வர்ஷ் (Janjatiya Gaurav Varsh) உள்ளிபட்ட பல்வேறு திட்டங்களை அவர்களுக்கு அறிவித்து பழங்குடியினரின் பெருமைமை மீட்டெடுத்தார் என பா.ஜ.க. தலைவரும், மத்திய உள்துறை மந்திரியுமான அமித் ஷா தெரிவித்துள்ளார்.

    • ஹேமந்த் சோரனின் ஆளும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி மீண்டும் ஆட்சியை பிடிப்பதில் தீவிரம் காட்டி வருகிறது.
    • காந்தே தொகுதியில் கல்பனா சோரன் போட்டியிடுகிறார்

    ஜார்கண்ட் தேர்தல்  

    81 சட்டமன்றத் தொகுதிகள் கொண்ட ஜார்கண்ட் மாநிலத்தில் நவம்பர் 13 மற்றும் நவம்பர் 20 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடக்கிறது. நாளை முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில் நேற்றுடன் தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது. இந்தியா கூட்டணியில் இடம்பெற்ற ஹேமந்த் சோரனின் ஆளும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி மீண்டும் ஆட்சியை பிடிப்பதில் தீவிரம் காட்டி வருகிறது.

     

    கூட்டணி 

    கடந்த 2019 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் மற்றும் லாலுவின் ராஷ்ட்ரிய ஜனதா தள கூட்டணி மீண்டும் இந்த தேர்தலில் இந்தியா கூட்டணியாக களமிறங்குகிறது. அனைத்து ஜார்கண்ட் மாணவர் சங்கம், ஐக்கிய ஜனதா தளம், அனைத்து ஜார்கண்ட் மாணவர் சங்கம் ஆகியவற்றுடன் பாஜக களமிறங்குகிறது. சம்பாய் சோரன் சரைகேலா தொகுதியில் பாஜக வேட்பாராளராக நிற்கிறார்.

     அமலாக்கத்துறை பதிந்த நில முறைகேடு தொடர்பான இரண்டு வருட பழைய வழக்கில் கடந்த ஜனவரியில் மக்களவை தேர்தல் சமயத்தில் ஹேமந்த் சோரன் திடீரென கைது செய்யப்பட்டார். அதன்பின் ஜூன் மாதம் ஜாமினில் வெளிவந்தார். ஹேம்நாத் சோரன் சிறையில் இருந்த சமயத்தில் முதல்வராக இருந்த சம்பாய் சோரன் சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் பாஜகவுக்கு தாவினார்.

    கல்பனா சோரன்

    இதனால் ஹேமந்த் சோரன் கட்சி பின்னடைவு என்று கூறப்படுகிறது. சம்பாய் சோரன் அரசு நிர்வாகத்தை கவனித்து வந்தாலும் ஹேம்நாத் சோரன் ஜனவரியில் கைது செய்யப்பட்டதில் இருந்து கட்சி தலைமையில் ஹேமந்த் சோரன் மனைவி கல்பானா சோரன் தீவிரமாக செயல்பட்டு வந்தார். இந்த மக்களவை தேர்தலில் முக்தி மோர்ச்சா கட்சியின் நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்துள்ள கல்பனா முர்மு சோரன் [39 வயது] உருவெடுத்துள்ளார்.

    இந்த தேர்தலில் பாஜகவின் முக்கிய பிரசாரமாக வங்கதேச ஊடுருவல், இஸ்லாமியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு, லவ் ஜிகாத், லேண்ட் ஜிகாத் ஆகியவை பயனப்டுத்தப்பட்டுள்ளது. பாஜக கட்டமைக்கும் இந்த வியூகத்துக்கு எதிராக ஆளும் ஹேம்ந்த் சோரன் கட்சி பழங்குடியின அடையாளம், மாநிலம் உரிமைகள், ஆகியவற்றை முன்னிறுத்தி தனது பிரசாரத்தை மேற்கொண்டது. முக்கியமாக பழங்குடியின பெண்களிடையே ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா சோரன் தனது பிரசாரங்களின்மூலம் அதிக செல்வாக்கை பெற்றவராக திகழ்கிறார். 

     

     

    கட்சியின் முகம்

    எனவே இந்த தேர்தலில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் முகமாககாந்தே தொகுதியில் போட்டியிடும் கல்பனா சோரன் மாறியுள்ளார் ஜார்கண்டில் கட்சி செயல்படுத்திய சமூக நலத் திட்டங்களை பிரதானதப்படுத்தி கல்பனா சோரன் மேடைகள் தோறும் பேசினார். சமூக நலத் திட்டங்களை செயல்படுத்தியதாலேயே தனது கணவர் சிறையில் அடைக்கப்பட்டார் என்ற குற்றச்சாட்டையும் முன்னிறுத்தினார்.

     

    அரசியல் உரைகளாக அல்லாமல் பழங்குடியின பெண்களை சென்று சேரும் வகையில் எளிமையாக கல்பனா சோரன் பேசியது பெரும் வரவேற்பை பெற்றது. கணவர் ஹேமந்த் சோரனை போலல்லாது தனது பேச்சு குறித்த திட்டமிடல் கல்பனாவிடம் உள்ளதாக ஆங்கில ஊடங்கங்கள் கூறுகின்றன.

    இதனால் தங்கள் தொகுதியிலும் அவர் பேச வேண்டும் என்ற கோரிக்கைகளும் வந்தன என இந்தியா டுடே கள நிலவரம் கூறுகிறது. நேற்றைய தினம் இறுதிக்கட்ட கட்ட பிரசாரத்தில் கல்பனா சோரனின் ஹெலிகாப்ட்டர் தரையிறங்க  அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் அவர் போன் மூலமே பிரசார மைக்கில் உரையாற்றிய சம்பவமும் நிகழ்ந்துள்ளது. 

     81 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு 41 இடங்கள் வேண்டிய நிலையில் ஹேமந்த் அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணி 41- 44 இடங்களிலும், பாஜக 36-39 இடங்களிலும், இதர கட்சிகள் 3-4 இடங்களிலும் வெல்ல வாய்ப்புள்ளதாக லோகபால் கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது .

    • மத்திய அமைச்சர் அமித் ஷாவும் தனது பிரசாரங்களில் அதையே மீண்டும் மீண்டும் பேசி வந்தார்.
    • யோகி ஆதித்யநாத் உருவாக்கிய இந்த கோஷம் பிரதமர் மோடியாலும் மேடைகளில் உச்சரிக்கப்பட்டது

     ஜார்கண்ட் தேர்தல்  

    81 சட்டமன்றத் தொகுதிகள் கொண்ட ஜார்கண்ட் மாநிலத்தில் நவம்பர் 13 மற்றும் நவம்பர் 20 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடக்கிறது. நாளை முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில் நேற்றுடன் தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது. இந்தியா கூட்டணியில் இடம்பெற்ற ஹேமந்த் சோரனின் ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி மீண்டும் ஆட்சியை பிடிப்பதில் தீவிரம் காட்டி வருகிறது.

    ஹேமந்த் சோரன்  - சம்பாய் சோரன் 

    சட்ட விரோதமாகச் சுரங்கம் குத்தகை எடுத்ததாகவும், அதன் மூலம் பண பலன்களை அடைந்ததாகவும் அமலாக்கத்துறை பதிந்த நில முறைகேடு தொடர்பான இரண்டு வருட பழைய வழக்கில் கடந்த மக்களவை தேர்தல் சமயத்தில் ஹேமந்த் சோரன் திடீரென கைது செய்யப்பட்டார்.

    அந்த சமயத்தில் ஜார்கண்ட் முதல்வராக கட்சியின் மூத்த தலைவர் சம்பாய் சோரன் பணியாற்றினார். 5 மாதங்கள் கடந்த ஜூன் வாக்கில் ஹேம்நாத் சோரன் ஜூலையில் மீண்டும் முதல்வரானார். இதைத்தொடர்ந்து சட்டமன்றத் தேர்தல் சம்பாய் சோரன் கடைசி நேரத்தில் பாஜக பக்கம் தாவியது பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

    கூட்டணி 

    கடந்த 2019 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் மற்றும் லாலுவின் ராஷ்ட்ரிய ஜனதா தள கூட்டணி மீண்டும் இந்த தேர்தலில் இந்தியா கூட்டணியாக களமிறங்குகிறது. அனைத்து ஜார்கண்ட் மாணவர் சங்கம், ஐக்கிய ஜனதா தளம், அனைத்து ஜார்கண்ட் மாணவர் சங்கம் ஆகியவற்றுடன் பாஜக களமிறங்குகிறது. சம்பாய் சோரன் சரைகேலா தொகுதியில் பாஜக வேட்பாளராக நிற்கிறார்.

    பாஜக தேர்தல் வியூகம் 

    இந்த தேர்தலில் பாஜகவின் முக்கிய பிரசாரமாக வங்கதேச ஊடுருவல், இஸ்லாமியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு, லவ் ஜிகாத், லேண்ட் ஜிகாத் ஆகியவை பயன்படுத்தப்பட்டுள்ளது. அசாம் பாஜக முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா ஜார்கண்ட் தேர்தல் பொறுப்பு தலைவராக இந்த கருத்துக்களை தீவிரமாக மக்களிடையே பரப்ப முயற்சி மேற்கொண்டார்.

     

     

    சட்டவிரோதமாக உள்ளே நுழைந்த வங்கதேச முஸ்லிம்களும், ஜார்கண்டில் உள்ள முஸ்லிம்களும் பழங்குடியின பெண்களைத் திருமணம் செய்வது லவ் ஜிகாத் என்றும் திருமணத்தின் மூலம் அவ்வாறு பெறப்படும் நிலம் லேண்ட் ஜிகாத் என்று பாஜக பிரசாரம் செய்தது. மத்திய அமைச்சர் அமித் ஷாவும் தனது பிரசாரங்களில் அதையே மீண்டும் மீண்டும் பேசி வந்தார். பாஜக ஆதரவு அல்லாத இந்துக்களைக் குறிவைத்து பதேங்கே தோ கதேங்கே [ஒன்றுபட்டால் பாதுகாப்பு தனியாக இருந்தால் வெட்டப்படுவீர்கள்] என்ற கோஷமும் பிரத்தமானதாக பாஜக மேடைகளில் ஒலித்தது. 

     

    உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உருவாக்கியவர் ஆவார். கோஷம் பிரதமர் மோடியாலும் மேடைகளில் உச்சரிக்கப்பட்டது. மகாராஷ்டிர தேர்தலிலும் இந்த கோஷமே பாஜகவால் முன்னிறுத்தப்படுகிறது. ஆனால் இது இந்து மதத்தினர் தாங்கள் ஆபத்தில் இருப்பதுபோன்ற போலியான பிம்பத்தை உருவாகும் உளவியல் தாக்குதல் என கார்கே உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் முன்வைக்கின்றனர். ஜார்கண்ட் இஸ்லாமியர்களுக்கு மட்டும்தான் சொந்தமா என்ற கேள்வியையும் யோகி பிரசாரத்தில் எழுப்புயிருந்தார்.

     

    ஜார்கண்டில் முந்தைய தேர்தல்களில் பழங்குடியினரிடையே கிறிஸ்துவ ஆதிக்கத்தை முன்னிறுத்தி பாஜக தனது பிரசார வியூகங்களை வகுத்துச் செயல்பட்ட நிலையில் இந்த தேர்தலில் இஸ்லாமிய ஆதிக்கம் என்பதை நோக்கி பாஜக மக்களைத் திருப்பும் வியூகத்துடன் செயல்பட்டது. ஆனால் பாஜக கூறும் இஸ்லாமிய மக்களின் எண்ணிக்கை அதிகரித்தல் என்பதை நிரூபிக்கும் வகையிலான புள்ளிவிவரங்கள் எதுவும் இல்லை என எதிர்க்கட்சிகள் மறுக்கின்றன.

    • ஜார்கண்ட் மாநிலத்தில் நவம்பர் 13 மற்றும் நவம்பர் 20 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடக்கிறது.
    • இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஹேமந்த் சோரனின் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா [ஜெ.எம்.எம்] கட்சி ஆட்சியில் உள்ளது.

    கடந்த மக்களவை தேர்தலில் பாஜகவின் என்டிஏ கூட்டணியை எதிர்க்க காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சேர்ந்து இந்தியா கூட்டணியை உருவாகின. இதில் தமிழகத்தில் திமுக, உ.பி.யில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி, டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி, மகாராஷ்டிராவில் சரத் பவார் என்சிபி, உத்தவ் தாக்கரே சிவசேனா, பீகாரில் லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் இதில் அங்கம் வகிக்கின்றன.

    இந்த கூட்டணி மக்களவை தேர்தலில் ஆட்சியை பிடிக்கவில்லை என்றாலும் என்சிஏ கூட்டணியை திணறடிக்கும் அளவுக்கு கணிசமான வெற்றியை பதிவு செய்தது. இதனால் தனிப்பெரும்பான்மை இழந்த பாஜக ஆட்சி அமைக்க கூட்டணி கட்சிகளை சார்ந்திருக்கவேண்டிய நிலையும் ஏற்பட்டது. மக்களவை தேர்தலுக்கு பின்னும் தொடரும் இந்தியா கூட்டணி சார்பில் உமர் அப்துல்லாவின் தேசியவாத காங்கிரஸ் காஷ்மீரில் ஆட்சியைப் பிடித்தது.

    இந்நிலையில் தற்போது மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற உள்ளன. 288 சட்டமன்றத் தொகுதிகள் கொண்ட மகாராஷ்டிராவில் வரும் நவம்பர் 20 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 81 சட்டமன்றத் தொகுதிகள் கொண்ட ஜார்கண்ட் மாநிலத்தில் நவம்பர் 13 மற்றும் நவம்பர் 20 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடக்கிறது.

    இரண்டு மாநிலங்களிலும் அரசியல் கட்சிகள், கூட்டணியின் தேசிய தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஜார்கண்ட் மாநிலத்தைப் பொறுத்தவரை இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஹேம்நாத் சோரனின் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா [ஜெ.எம்.எம்] கட்சி ஆட்சியில் உள்ளது.

    தற்போது வங்கதேச ஊடுருவல், அதிகரிக்கும் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட தனது அஸ்திரங்களை பயன்படுத்தி பாஜக தேர்தல் பிரசாரம் செய்து வருகிறது. பழங்குடியின அடையாளம் என்பதை முன்னிறுத்தி ஹேமந்த் சோரன் பிரச்சாரம் செய்கிறார்.

     

    இந்நிலையில் பீகாரில் இந்தியா கூட்டணியில் இடம்பெற்ற ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் ;லாலு பிரசாத் யாதவ் ஜார்கண்டில் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். சாத்ரா [Chatra] தொகுதியில் நிற்கும் தனது கோதர்மா [Koderma] பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் லாலு உரையாற்றினார்.

    அப்போது பேசிய அவர், இந்தியா கூட்டணி ஒன்றுபட்டுள்ளது. எல்லோருக்கும் இந்தியா கூட்டணியை தெரிந்துள்ளது. ஆனால் நரேந்திர மோடி என்று ஒன்றும் இல்லை, யார் நரேந்திர மோடி, பாஜகவை நீங்கள் தூக்கி எறிய வேண்டும் என்று பேசினார். 

    • ஐந்து வருடங்களில் 11 லட்சம் ரேசன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டன.
    • ஐந்து ஆண்டுகளில் 13 ஆயிரம் பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டது ஏன்?.

    ஜார்க்கண்ட் மாநிலத்தில் 81 தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற இருக்கிறது. முதற்கட்ட தேர்தல் வருகிற 13-ந்தேதியும், 2-ம் கட்ட தேர்தல் வருகிற 20-ந்தேதியும் நடக்கிறது.

    தற்போது முதலமைச்சராக இருக்கும் ஹேமந்த் சோரனின் கட்சியான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. பா.ஜ.க. சில கட்சிகளுடன் கூட்டணி வைத்துள்ளது.

    தற்போது தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. அமித் ஷா, பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் ஜார்க்கண்டில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டனர். அதேவேளையில் ஹேமந்த் சேரன் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

    இந்த நிலையில் கோழைத்தனமான ஆங்கிலேயர்களைப் போல் பின்னால் இருந்து தாக்குவது ஏன் என பா.ஜ.க.-வை ஹேமந்த் சோரன் விமர்சித்துள்ளார்.

    இது தொடர்பாக ஹேமந்த் சோரன் கூறியதாவது:-

    உங்களுக்கு தைரியம் இருந்தால் முன்னால் இன்று மோதவும். கோழைத்தனமான ஆங்கிலேயர்களை போன்று பின்னால் இருந்து தாக்குவது ஏன்?.

    எனக்கு எதிராக சில நேரங்களில் அமலாக்கத்துறை, சில நேரங்களில் சிபிஐ, சில நேரங்களில் ஒரு அமைப்பு, சில நேரங்களில் வேறு யாரோ... என ஏவப்பட்டது. தற்போது என்னுடைய பெயரை களங்கப்படுத்த கோடிக்கணக்கில் செலவழிக்கப்படுகிறது. விசித்திரமான நிலைமை.

    பா.ஜ.க. இதற்கு முன்னதாக 5 வருடங்கள் ஆட்சியில் இருந்தது. அப்போது பள்ளிகளை மூடியது. ரேசன் கார்டுகளை ரத்து செய்தது. ஜார்க்கண்ட் பொது சேவை ஆணையம் (JPSC) தேர்வை நடத்தவில்லை. பா.ஜ.க. மத்தியில் 11 வருடங்கள் ஆட்சியில் இருந்து வருகிறது. ஜார்க்கண்டில் 5 வருடம் இருந்துள்ளது. அவர்களை டபுள் என்ஜின் அரசு என்று அழைத்துக் கொள்கிறார்கள். பிறகு ரகுபார் ஆட்சியில் யானை மட்டும் ஏன் ஐந்து வருடங்கள் பறந்தது?. ஐந்து ஆண்டுகளில் 13 ஆயிரம் பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டது ஏன்?. ஐந்து வருடங்களில் 11 லட்சம் ரேசன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டன.

    ஏன் ஐந்து வருடத்தில் ஒரு ஜே.பி.எஸ்.சி. தேர்வு கூட நடத்தப்படவில்லை?. வயது முதிர்ந்த பெண்கள் மற்றும் விதவைகள் உதவித்தொகை ஏன் உயர்த்தப்படவில்லை. ஐந்து வருடங்களில் ஏன் பெற முடியவில்லை? ஏன் பட்டினியால் நூற்றுக்கணக்கானோர் இறந்தனர்?. ஏன் இளைஞர்கள் சைக்கிள்கள் தயாரித்து வாழைப்பழம் விற்பனை செய் வலியுறுத்தப்பட்டது?.

    மீண்டும் தனது அரசு தேர்வு செய்யப்பட்டால் மக்களுக்காகவும் ஒவ்வொரு ஜார்க்கண்ட் மக்களின் நலனுக்காகவும் தொடர்ந்து பணியாற்றுவோம்.

    இவ்வாறு ஹேமந்த் சோரன் விமர்சனத்தை வீசியுள்ளார்.

    ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்தம் 2.6 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இதில் 1.31 கோடி ஆண் வாக்காளர்களும், 1.29 கோடி பெண் வாக்காளர்களும் உள்ளனர்.

    2020-ல் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா 30 இடங்களிலும், பா.ஜ.க. 25 இடங்களிலும் வெற்றி பெற்றன. காங்கிரஸ் 16 இடங்களில் வெற்றி பெற்றது.

    2014-ல் பா.ஜ.க. 37 இடங்களில் வெற்றி பெற்றது. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா 19 இடங்களிலு், காங்கிரஸ் 6 இடங்களிலும் வெற்றி பெற்றது.

    • ஜார்க்கண்டில் இரு கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
    • முதல் மந்திரி ஹேமந்த் சோரன் புதிய வாக்குறுதிகளை வெளியிட்டார்.

    ராஞ்சி:

    ஜார்க்கண்ட் மாநிலத்தில் இரு கட்டங்களாக (நவம்பர் 13 மற்றும் நவம்பர் 20) சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.

    இந்நிலையில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா சார்பில் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் முதல் மந்திரி ஹேமந்த் சோரன் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

    ஜார்க்கண்டில் பொது சிவில் சட்டம் மற்றும் என்.ஆர்.சி போன்றவை தேவையில்லை.

    ஜார்க்கண்ட் மாநிலத்தில் முந்தைய பா.ஜ.க. ஆட்சியின்போது 11 லட்சம் ரேசன் கார்டுகள் நீக்கப்பட்டன. இதனால் ஏராளமான பழங்குடியின மக்கள், தலித் மக்கள் பசி பட்டினியால் உயிரிழந்தனர்.

    எங்கள் ஆட்சியில் ஒவ்வொருவரும் தங்கள் உரிமைகளுக்கு ஏற்ப ரேசன் மற்றும் பென்சன் பெறுகிறார்கள்.

    மாநிலத்தில் மீண்டும் எங்கள் அரசு அமைந்தவுடன், பொது விநியோகத் திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டு ஒரு நபருக்கு 5 கிலோ உணவு தானியத்துக்குப் பதிலாக 7 கிலோ உணவு தானியம் வழங்கப்படும்.

    ஓய்வூதியத் தொகை உயர்த்தி வழங்கப்படும். கூடுதலாக 10 லட்சம் பேர் பொது விநியோக திட்டத்தில் சேர்க்கப்படுவார்கள்.

    மையன் சம்மான் யோஜனா திட்டத்தின் கீழ் பெண் பயனாளிகளுக்கு மாதம் 2,500 ரூபாய் நிதி வழங்கப்படும் என தெரிவித்தார்.

    • 2021-ல் ஹேமந்த் சோரன் தன்னுடைய வயது 45 எனக் குறிப்பிட்டிருந்தார்.
    • தற்போது 2024-ல் 49 வயது எனக் குறிப்பிட்டுள்ளார். இது எப்படி சாத்தியமாகுமா? எனக் கேள்வி.

    ஜார்க்கண்ட் மாநிலத்தில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற இருக்கிறது. நவம்பர் 13-ந்தேதி மற்றும் நவம்பர் 20-ந்தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.

    20-ந்தேதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்றுடன் முடிவடைந்தது. ஜார்க்கண்ட் மாநில முதல்வராக இருக்கும் ஹேமந்த் சோரன் வேட்மனுவுடன் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் ஏராளமான வேறுபாடு இருப்பதாக பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் பிரதுல் ஷா தியோ தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறுகையில் "ஹேமந்த் சோரனின் 2021 மனுத்தாக்கலுக்கும், 2024 மனுத்தாக்கலுக்கும் ஏராளமான வித்தியாசத்தில் உள்ளது. 2021-ல் ஹேமந்த் சோரன் தனக்கு 45 வயது எனக் குறிப்பிட்டிருந்தார். தற்போது 49 வயது எனக் குறிப்பிட்டுள்ளார். இது எப்படி சாத்தியமாகும்? 2021-ல் ஏகப்பட்ட சொத்துகள் இருப்பதாக பிரமாண பத்திரத்தில் தெரிவித்திருந்தார். தற்போது அந்த சொத்து விவரங்களில் இல்லை" எனக் குறிப்பிட்டுள்ளார்.

    • இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி அங்கு ஆட்சியில் உள்ளது.
    • மனைவி கல்பனா சோரனும் காண்டே தொகுதியில் இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்

    81 தொகுதிகளை கொண்ட ஜார்க்கண்ட் சட்டமன்றத்திற்கு நவம்பர் 13 மற்றும் நவம்பர் 20 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி அங்கு ஆட்சியில் உள்ளது.

    முதல்வராக ஹேமந்த் சோரன் பதவி வகித்து வருகிறார். ஹேமந்த் சோரன் பக்கம் இருந்த முக்கிய தலைவர் சம்பாய் சோரனை தங்கள் பக்கம் இழுத்து சீட் கொடுத்துள்ளது பாஜக. ஆட்சியைப் பிடிக்க பாஜக தீவிரம் காட்டி வரும் நிலையில் இந்தியா கூட்டணி ஆட்சியை தக்கவைக்கும் வியூகங்களை வகுத்து வருகிறது.

    இந்நிலையில் ஹேமந்த் சோரன் பர்ஹைத் தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை இன்று தாக்கல் செய்தார். அதேசமயம் ஹேமந்த் சோரன் மனைவி கல்பனா சோரனும் காண்டே தொகுதியில் இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

    இவர்களை உள்ளடக்கிய 35 பேர் கொண்ட முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா நேற்று வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

    • ஜார்கண்டில் காங்கிரஸ் மற்றும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சிகள் 70 தொகுதிகளில் போட்டியிடுகின்றன
    • தேர்தலில் பதிவான வாக்குகள் நவம்பர் 23-ம் தேதி எண்ணப்படுகின்றன

    ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல் நவம்பர் 13 மற்றும் 20 தேதிகளில் இரு கட்டமாக நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் நவம்பர் 23-ம் தேதி எண்ணப்படுகின்றன

    ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்திக்கின்றன.

    ஜார்கண்டில் உள்ள 81 தொகுதிகளில் காங்கிரஸ் மற்றும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சிகள் 70 தொகுதிகளிலும், ஆர்.ஜே.டி, கம்யூனிஸ்ட் கட்சிகள் இதர தொகுதிகளிலும் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், 35 பேர் கொண்ட முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா வெளியிட்டுள்ளது. முதல்வர் ஹேமந்த் சோரன் ஏற்கனவே சட்டமன்ற உறுப்பினராக உள்ள பர்ஹைத் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். அவரது மனைவி கல்பனா சோரன் காண்டே தொகுதியிலும் ஹேமந்த் சோரனின் சகோதரரான பசந்த் சோரன் தும்கா தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். 

    • வங்கதேசத்தில் இருந்து சாந்தல் பர்கானாவிற்கு ஊடுருவியவர்கள், நிலத்தை ஆக்கிரமித்தது பற்றி அவர் ஒரு வார்த்தை கூட பேசவில்லை.
    • ஏனென்றால் இது அவருடைய வாக்கு வங்கி பற்றியது.

    பா.ஜ.க.-வின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். பெருச்சாளிகளை போல் மாநிலத்துக்குள் ஊடுருவி அழிவு வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்கள் என ஜார்க்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் கடுமையாக விமர்சித்திருந்தார்.

    இந்த நிலையில் பா.ஜ.க.வின் செய்தி தொடர்பாளர் ஷேசாத் பூனவாலா ஹேமந்த் சோரனுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

    ஹேமந்த் சோரன் கூறிய கருத்து தொடர்பாக ஷேசாத் பூனவாலா கூறியதாவது:-

    ஹேமந்த் சோரன் தேசியவாதிகள் மற்றும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை பெருச்சாளி என்று அழைத்தார். ஆனால், வங்கதேசத்தில் இருந்து சாந்தல் பர்கானாவிற்கு ஊடுருவியவர்கள், நிலத்தை ஆக்கிரமித்தது பற்றி அவர் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. ஏனென்றால், இது அவருடைய வாக்கு வங்கி பற்றியது. மக்கள் தொகை மாற்றம் ஜார்க்கண்டில் இல்லை. இது மேற்கு வங்காளத்தில் நிகழ்ந்துள்ளது எனச் சொல்கிறார்.

    மேற்கு வங்கத்தில் யாருடைய ஆட்சி நடைபெறுகிறது?. அங்கு பா.ஜ.க. ஆட்சி இல்லை. இடது சாரிகள் ஆட்சி செய்தன. தற்பேது திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி செய்கிறது. இடது சாரி அதனைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி செய்து வரும் மேற்கு வங்கத்தில் மக்கள் தொகை மாற்றம் நிகழ்ந்துள்ளதை அவர் ஏற்றுக்கொண்டுள்ளார்.

    இதன் அர்த்தம் இந்தியா கூட்டணியில் உள்ள ஒரு கட்சி மற்றொரு கட்சியை குறிவைக்கிறது. அவர்களுக்கு திட்டம் கிடையாது, பார்வை கிடையாது, பொதுவான பகுதி கிடையாது, அவர்களுடைய சொந்த ஊழல் மற்றும் குழப்பம் குறித்து ஒரே இலக்குதான். அவர் அவர்களை கவனக்குறைவாக அல்லது வேண்டுமென்றே தாக்கினாரா என்பது அவருக்குத்தான் தெரியும். ஆனால் உண்மையில் மேற்கு வங்கத்தில் மக்கள்தொகை மாற்றம் நிகழ்ந்துள்ளது என்ற உண்மை வெளிவந்துள்ளது.

    ஆனால், ஜார்க்கண்டிலும் இப்படித்தான் நடக்கிறது என்பதுதான் கேள்வி, உயர்நீதிமன்றமும் அதையே கூறியுள்ளது. இதுகுறித்து ஹேமந்த் சோரன் பேச வேண்டும்.

    இவ்வாறு ஷேசாத் பூனவாலா தெரிவித்துள்ளார்.

    ×