என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பஸ் பாஸ்"
- பள்ளி மாணவ-மாணவிகள் 22,985 பேருக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்பட்டது.
- கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகளை பெற்று பயன் பெறலாம்.
காரைக்குடி
தமிழ்நாடு அரசு போக்கு வரத்து கழகம் கும்பகோணம் லிமிடெட் காரைக்குடி மண்டலத்திற்கு உட்பட்ட சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் கட்டண மில்லா பயணம் செய்வதற்கு ஏதுவாக சிவ கங்கை மாவட்டத்தில் 13,061 மாணவ, மாணவி களுக்கும், ராமநாதபுரம் மாவட்டத்தில் 9,924 மாணவ, மாணவி களுக்கும் மொத்தம் 22,985 மாணவ, மாணவிகளுக்கு ஸ்மார்ட் கார்டு வடிவிலான கட்டணமில்லா பேருந்து அட்டைகள் வழங்கப்பட்டது.
சிவகங்கை மாவட்டம் மன்னர் மேல்நிலைப் பள்ளி யில் நடந்த இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் மாணவ மாணவி களுக்கு கட்டணமில்லா பேருந்து அட்டைகளை வழங்கினார். ஏனைய பள்ளிகளில் காரைக்குடி மண்டலத்தில் உள்ள 2 கோட்ட மேலாளர்கள், 11 கிளை மேலாளர்கள் மூலம் பள்ளி மாணவ, மாணவி களுக்கு கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகள் வழங்கப்பட்டது.
மேலும் இது நாள் வரை கட்டணமில்லா பேருந்து பயண அட்டைக்கு விண் ணப்பிக்காத மாணவ, மாணவிகள் உடனடியாக விண்ணப்பித்து கட்டண மில்லா பேருந்து பயண அட்டைகளை பெற்று பயன் பெறுமாறு மாணவ, மாணவிகளுக்கு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
- நேரடியாக போட்டோ ஒட்டி விண்ணப்பங்களை பெற்று நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
- பள்ளி, கல்லூரிகளுக்கு பஸ் பாஸ் வழங்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என உதவிப் பொறியாளர் தெரிவித்தார்.
கடலூர்:
பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பஸ் பாஸ் வழங்க, விழுப்புரம் அரசு போக்குவரத்து கழக கடலூர் மண்டலம் சார்பில் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று நேரடியாக போட்டோ ஒட்டி விண்ணப்பங்களை பெற்று நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். கடலூர் மண்டலத்தில் மாணவர்களுக்கு பஸ் பாஸ் வழங்க பள்ளி, கல்லூரிகளிலிருந்து உரிய படிவங்களை உரிய நேரத்தில் கிடைக்கப் பெறதாததால், விழுப்புரம் அரசு போக்குவரத்து கழக கடலூர் மண்டல உதவிப் பொறியாளர் (இயக்கம்) பரிமளம் மற்றும் அலுவலர்கள், பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களுக்கு பஸ் பாஸ் வழங்க, அந்தந்த பள்ளி மற்றும் கல்லூரிக்கு சென்று மாணவ, மாணவிகளிடம் போட்டோ ஓட்டி விண்ணப்பங்களை பெற்று வருகின்றனர். மேலும் விண்ணப்பங்களை பெற்று அந்தந்த பள்ளி, கல்லூரிகளுக்கு பஸ் பாஸ் வழங்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என உதவிப் பொறியாளர் தெரிவித்தார்.
- மாணவர்கள் சீருடை அல்லது பள்ளிகளில் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை நடத்துனர்களிடம் காண்பித்து பயணிக்க அனுமதிக்க வேண்டும்.
- அடையாள அட்டைகளை வைத்து இருக்கும் மாணவர்களை பேருந்தில் இருந்து இறக்கி விட்டால் நடத்துனர்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்படுகிறது.
சென்னை:
சென்னை மாநகர போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் அனைத்து கிளை மேலாளர்கள், கண்டக்டர்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது:-
மாணவர்-மாணவியர்களுக்கான கட்டணமில்லா புதிய பேருந்து பயண அட்டைக்கான விபரங்கள் சேகரித்து, அச்சடித்து, லேமினேஷன் செய்து வழங்குதலில் உள்ள கால அளவு போன்றவற்றினை கருத்தில் கொண்டு, மாநகர போக்குவரத்து கழக பேருந்துகளில் பள்ளி மாணவ-மாணவியர்கள் சீருடை அல்லது பள்ளிகளில் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை நடத்துனர்களிடம் காண்பித்து தத்தம் இருப்பிடத்தில் இருந்து பயிலும் பள்ளி வரையிலும் சென்று வர அனுமதிக்க வேண்டும்.
அதே போன்று, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அரசு இசைக் கல்லூரி, அரசு கவின் கலைக் கல்லூரி, அரசினர் கட்டிடக் கலை மற்றும் சிற்பக் கலை கல்லூரி (மாமல்லபுரம்) அரசு பல்தொழில்நுட்ப கல்லூரி, அரசு தொழில் பயற்சி நிலைய மாணவ-மாணவியர்கள் தங்களது கல்வி நிறுவனத்தால் வழங்கிய புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை அல்லது மாநகர போக்குவரத்து கழகத்தில் 2022-2023-ம் ஆண்டில் வழங்கப்பட்ட கட்டணமில்லா பேருந்து பயண அட்டையை மாநகர போக்குவரத்து கழக நடத்துனர்களிடம் காண்பித்து தத்தம் இருப்பிடத்தில் இருந்து பயிலும் கல்வி நிறுவனம் வரை மாநகர போக்குவரத்து கழகத்தால் கட்டணமில்லா பயண அட்டை வழங்கப்படும் வரை கட்டணமின்றி பயணிக்க அனுமதிக்க வேண்டும் என்று அனைத்து மாநகர போக்குவரத்து கழக நடத்துனர்களுக்கும் உத்தரவிடப்படுகிறது.
இந்த உத்தரவினை மீறி சீருடையில் உள்ள மாணவர்களை அல்லது மேற்கூறிய அடையாள அட்டைகளை வைத்து இருக்கும் மாணவர்களை பேருந்தில் இருந்து இறக்கி விட்டால் நடத்துனர்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
- நடப்பாண்டு அனைத்து பள்ளிகளும் முழுமையாக செயல்பட்டு வருகிறது.
- தற்போது மாணவ- மாணவி களின் பழைய பஸ் பாைச உபயோகப்படுத்தி பயணம் செய்து வருகின்றனர்.
சேலம்:
தமிழ்நாடு அரசு போக்கு வரத்து கழகம் சேலம் கோட்டத்தின் கீழ் சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களை உள்ளடக்கியது. இம்மாவட்டங்களில் 700-க்கும் மேற்பட்ட டவுன் பஸ்கள் இயக்கப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளாக ஏற்பட்ட கொரோனா காரணமாக மாணவ- மாணவிகளுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்படவில்லை.
சீருடை
நடப்பாண்டு அனைத்து பள்ளிகளும் முழுமையாக செயல்பட்டு வருகிறது. தற்போது மாணவ- மாணவி களின் பழைய பஸ் பாைச உபயோகப்படுத்தி பயணம் செய்து வருகின்றனர். சீருடை அணிந்திருந்தாலே மாணவர்களிடம் பஸ் பாஸ் கேட்பதில்லை. மேலும், மாணவர்களை பஸ்சில் இருந்து கீழே இறக்கி விடக்கூடாது என்று கண்டக்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நடப்பாண்டுக்காக இலவச பஸ் பாஸ் பயண அட்டை மற்றும் 50 சதவீ தம் கட்டணம் சலுகை பயன்படுத்தும் அட்டை தயாரிப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. முதல் கட்டமாக மாணவர்க ளின் எண்ணிக்கை உள்ளிட்ட விபரங்கள் பள்ளிகளிடம் இருந்து, அந்தந்த பணிமனைகளில் கேட்டு பெறப்பட்டுள்ளது.
2.75 லட்சம் பஸ் பாஸ்கள்
அதன்படி, சேலம் கோட்டத்திற்குட்பட்ட சேலம், நாமக்கல் மாவட்டங்களில் 1 லட்சத்து 50 ஆயிரம் இலவச பஸ் பாஸ் அட்டையும், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் 1 லட்சத்து 25 ஆயிரம் இலவச பஸ் பாஸ் அட்டையும், 50 சதவீதம் சலுகை கட்டணத்தில் பயணிக்கக்கூடிய அட்டையும் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. விரைவில் இலவச பஸ் பாஸ் அட்டை வழங்கும் பணி தொடங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்