என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "அழுகிய நிலையில்"
- மோரூர் பிட் 1 கிராமம் அரசன் காட்டில் முருகேசன் என்பவருக்கு சொந்தமான புளியமர தோட்டம் உள்ளது.
- இந்த தோட்டத்தில் உடல் முழுவதும் அழுகி சிதைந்த நிலையில் தலை தனியாகவும், உடல் தனியாகவும் ஆண் பிணம் கிடந்தது.
சேலம்:
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே மோரூர் பிட் 1 கிராமம் அரசன் காட்டில் முருகேசன் என்பவருக்கு சொந்தமான புளியமர தோட்டம் உள்ளது. சம்பவத்தன்று இந்த தோட்டத்தில் உடல் முழுவதும் அழுகி சிதைந்த நிலையில் தலை தனியாகவும், உடல் தனியாகவும் ஆண் பிணம் கிடந்தது. இதை பார்த்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் கிராம நிர்வாக அலுவலர் குணசேகரனுக்கு தகவல் கொடுத்தனர். அவர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு சங்ககிரி போலீஸ் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்தார். அதன் பேரில் சங்ககிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவி பிரேதத்தை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இறந்த கிடந்த ஆணின் வலது கையில் சுமன் என்று ஆங்கிலத்தில் பச்சை குத்தப்பட்டு உள்ளது. அவர் பச்சை நிறத்தில் வெள்ளை நிற கட்டம் போட்ட முழு கை சட்டையும், அடர் நீல நிற ஜீன்ஸ் பேன்ட்டும் அணிந்துள்ளார். மேலும் இவர் இறந்து சுமார் 3 முதல் 5 வாரம் இருக்காலாம் எனவும் போலீசார் தெரிவித்தனர். இவர் யார்? எதற்காக இங்கு வந்தார்? எப்படி இறந்தார் என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வனப்பகுதியில் இரவு நேரத்தில் யானை மற்றும் வன விலங்குகள் நட மாட்டம் அதிகம் இருக்கும்.
- இது குறித்து பர்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட கொம்பு தூக்கி அம்மன் கோவில் வன ப்பகுதியில் நேற்று இரவு அடையாளம் தெரியாத 70 வயது மதிக்கத்தக்க ஒரு மூதாட்டி பிணம் கிடப்பதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து வனத்துறை அதிகாரி விஸ்வநாதன் பர்கூர் போலீஸ் நிலை யத்திற்கு தகவல் தெரி வித்தார். வனப்பகுதியில் இரவு நேரத்தில் யானை மற்றும் வன விலங்குகள் நட மாட்டம் அதிகம் இருக்கும்.
இதனால் இன்று காலை சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்தனர்.
அப்ேபாது வனப்பகுதி யில் 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி பிணம் அழுகிய நிலையில் இருந்தது. இதை யடுத்து அவரது உடலை கைப்பற்றி அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர் என தெரிய வில்லை.
மேலும் இறந்த மூதாட்டி விறகு எடுத்து வருவதற்காக வனப்பகுதிகளுக்குள் சென்ற போது வன விலங்குகள் ஏதேனும் தாக்கி உயிரிழந்து விட்டாரா? அல்லது எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இது குறித்து பர்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.
- வாழைத்தோப்பு காட்டில் அருகே முதியவர் பிணம் அழுகிய நிலையில் கிடந்தது.
- கிராம நிர்வாக அலுவலர் மொடக்குறிச்சி போலீசாருக்கு தகவல் அளித்தார்.
மொடக்குறிச்சி:
மொடக்குறிச்சி பேரூராட்சிக்கு உட்பட்ட பஞ்சலிங்கபுரம் அருகே உள்ள பட்டாணி வயல் பகுதியில் மகேஷ் குமார் என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது.
இவரது தோட்டத்தின் வாழைத்தோப்பு காட்டில் அருகே உள்ள சிறிய வாய்க்கால் பகுதியில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதையடுத்து பொதுமக்கள் அங்கு சென்று பார்த்தனர். அங்கு 50 வயது மதிக்கத்தக்க முதியவர் பிணம் அழுகிய நிலையில் கிடந்தது.
இது குறித்து சாத்தம்பூர் கிராம நிர்வாக அலுவலர் பூபதி ராஜாவுக்கு பொது மக்கள் தகவல் தெரி வித்தனர். இதையடுத்து கிராம நிர்வாக அலுவலர் மொடக்குறிச்சி போலீ சாருக்கு தகவல் அளித்தார்.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மொடக்குறிச்சி போலீசார் வாய்க்கால் அருகே கிடந்த அடையாளம் தெரியாத 50 வயது மதிக்கத்தக்க அழுகிய நிலையில் கிடந்த முதியவர் பிணத்தை மீட்டனர். அவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்? என தெரிய வில்லை.
இதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த டாக்டர் சங்கர் தலைமையிலான மருத்துவ குழுவினர் அவரது உடலை பிரேத பரிசோதனை செய்து பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து இது கொலையா? தற்கொ லையா? என தொடர்ந்து தீவிர விசா ரணை நடத்தி வருகின்றனர்.
- தொட்டியில் ஆணின் பிணம் கிடந்துள்ளது.
- வீரப்பன்சத்திரம் போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
ஈரோடு:
ஈரோடு வெட்டுக்காட்டு வலசு சைவ மாரியம்மன் கோவில் எதிர்புறம் ஒரு தொட்டியில் சம்பவத்தன்று 50 வயது மதிக்கத்தக்க ஆணின் பிணம் கிடந்துள்ளது.
இது குறித்து வீரப்பன்சத்திரம் போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அந்த நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அந்த நபரின் உடல் அழுகிய நிலையில் இருந்தது. அவர் வெள்ளை நிற அரக்கை சட்டை அணிந்து இருந்தார். இறந்த நபர் அந்த வழியாக சென்றபோது தொட்டியில் தவறி விழுந்து இறந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இறந்த நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் போன்ற விவரம் தெரியவில்லை. இது குறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கல்குவாரியில் அழுகிய நிலையில் தங்கராஜ் பிணமாக கிடந்தார்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் அரச்சலூர் அடுத்த ஓடாநிலை வாழை தோட்ட வலசு பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ் (40). இவரது மனைவி பேபி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
தங்கராஜ் லேத் பட்டறையில் வேலை பார்த்து வந்தார். அவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. குடியை நிறுத்த முடியாததால் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சித்தோட்டில் உள்ள ஒரு மறுவாழ்வு மையத்திற்கு சென்று சிகிச்சை பெற்று அதன் பின்னர் வீடு திரும்பியுள்ளார்.
இந்நிலையில் சம்பவத்தன்று காலையில் மோட்டார் சைக்கிளில் முத்தூரில் லேத் பட்டறைக்கு வேலைக்கு சென்று வருவதாக கூறி தங்கராஜ் சென்றுள்ளார்.
அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. அவரை பல்வேறு இடங்களில் தேடியும் எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் கொல்லன் வலசு பகுதியில் உள்ள ஒரு கல்குவாரியில் கழிவு கற்கள் கொட்டப்படும் இடத்தில் அழுகிய நிலையில் தங்கராஜ் பிணமாக கிடந்தார்.
இது குறித்து அரச்சலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அளவுக்கு அதிகமாக மது அருந்தி இறந்து இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நிலம் அளக்க முயன்ற போது அந்த பகுதியில் அழுகிய நிலையில் ஆண் பிணம் காணப்பட்டது.
- போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஏற்காடு:
ஏற்காடு காவல்நிலைய குடியிருப்பு கட்டுவதற்காக இடம் தேர்வு செய்ய ஏற்காடு இன்ஸ்பெக்டர் செந்தில் ராஜ்மோகன், சப் இன்ஸ்பெக்டர் ஆனந்த குமார், கிராம நிர்வாக அலுவலர் மோகன்ராஜ், நில அலுவலர் பாஸ்கர் மற்றும் அதிகாரிகள் ஏற்காடு மலை உச்சிக்கு சென்றனர். நிலம் அளக்க முயன்ற போது அந்த பகுதியில் அழுகிய நிலையில் ஆண் பிணம் காணப்பட்டது.
உடனே போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மோகன் குமார மங்கலம் மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் அழைத்து வரப்பட்டு அவர்களும் விசாரித்தனர்.இறந்து கிடந்தவர் யார்? எந்த ஊர் ?என தெரியவில்லை இது குறித்து அனைத்து காவல் நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் ரெயிலில் அடிபட்ட நிலையில் பிணமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- பிணமாக கிடந்தவர் உடல் அழுகி உருக்குலைந்து எலும்பு கூடாக காட்சி அளித்தது.
சேலம்:
சேலம் ரெயில்வே காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட காகங்கரை- சாமல்பட்டி ரெயில் நிலையங்களுக்கு இடையே சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் ரெயிலில் அடிபட்ட நிலையில் பிணமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பிணமாக கிடந்தவர் உடல் அழுகி உருக்குலைந்து எலும்பு கூடாக காட்சி அளித்தது. அவர் ஜீன்ஸ் பேண்ட் அணிந்த நிலையில் காணப்பட்டார். அவரை பற்றி தெரிந்தவர்கள் சேலம் ரெயில்வே போலீஸ் நிலையத்திற்கு தகவல் சொல்லலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்