search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தூய்மை பணிகள் தொடக்கம்"

    • நம்ம ஊரு சூப்பரு இயக்கத்தின் கீழ் தூய்மை பணிகள் நடைபெற்றது.
    • பொதுமக்கள் கலந்து கொண்டு தூய்மை பணிகளை மேற்கொண்டனர்.

    தேன்கனிக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம் தளி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நம்ம ஊரு சூப்பரு இயக்கத்தின் கீழ் தூய்மை பணிகள் நடைபெற்றது.

    ஒன்றிய குழு தலைவர் சீனிவாசலு ரெட்டி தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் விமல் ரவிக்குமார் முன்னிலை வகித்தார். ஒன்றிய குழு அலுவலகம் மற்றும் அலுவலக வளாகத்தில் ஒருங்கிணைந்த தூய்மை பணி நடைபெற்றது.

    தூய்மை பணியாளர்கள், தூய்மை காவலர்கள், தன்னார்வலர்கள் ஊர் முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு தூய்மை பணிகளை மேற்கொண்டனர்.

    இந்த நிகழ்ச்சியில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி மன்ற செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    முகாமில் நீர் மேலாண்மை, சுகாதார மேலாண்மை , திடம் மற்றும் திரவக்கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    • நெகிழி பயன்பாட்டை முற்றிலும் தவிர்க்க பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்
    • அமைச்சர் எ.வ.வேலு பேச்சு

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தார் மாவட்டம், ஜோலார்ப்பேட்டை ஊராட்சி ஒன்றியம், பாச்சல் ஊராட்சியில் அன்னைநகர் பகுதியில் வேடிச்சேரி ஏரியில் "நம்ம ஊரு சூப்பரு திட்டத்தின்" கீழ் மாபெரும் தூய்மை பணிகளை பொதுப்பணிகள் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ வேலு கொடியசைத்து துவக்கி வைத்தார்.

    இவ்விழாவிற்கு மாவட்ட வருவாய் அலுவலர் இ.வளர்மதி,

    திருவண்ணாமலை எம.பி. சி.என்.அண்ணா துரை, எம்எல்ஏக்கள் க.தேவராஜி, அ.நல்லதம்பி, அ.செ.வில்வநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பொதுப்பணிகள் தெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு நிகழ்ச்சியில் பேசியதாவது:-

    திருப்பத்தூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் கிராம ஊராட்சி பகுதிகளில் நீர், சுகாதாரம் மற்றும் கழிவுநீர் மேலாண்மை போன்ற பணிகளை மக்கள் பங்கேற்புடன் செய்யும் வகையில் "நம்ம ஊரு சூப்பரு" திட்டத்தின் கீழ் சிறப்பு விழிப்புணர்வு.

    பிரச்சாரம் வருகிற 02.10.2022 வரை நடைபெற உள்ளது. கிராம பகுதிகளில் "நம்ப ஊரு சூப்பரு" என்ற சிறப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளும் பொருட்டு விழிப்புணர்வு பிரச்சாரத்தைச் சிறப்பாக நடத்துவதற்கு பொறுப்பு அலுவலர்கள் மற்றும் கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    செப்டம்பர் 2 ஆம் தேதி வரை ஊரகப் பகுதிகளில் பூங்காக்கள், பஸ் நிலையங்கள், வழிபாட்டு தலங்கள் போன்ற பொது இடங்கள் மற்றும் நீர்நிலைகளில் தூய்மை செய்யும் பணிகளை மேற்கொள்ளப்படும்.

    மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் நிலையான பாதுகாப்பான சுகாதாரத்தை கடைபிடிக்க உறுதி செய்யும் வகையில், சுற்றுப்புறத்தை தூய்மையாக பராமரித்தல் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு மேம்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்திடவும், பொது மக்களுக்கு சீரான பாதுகாப்பான குடிநீர் வழங்கும் பணிகள் மேற்கொள்ளப்படும்.

    இத்திட்டத்தின் கீழ் தினமும் குப்பைகளை, மக்கும் கழிவுகள், மக்காத கழிவுகள் என தரம் பிரித்து அப்புறபடுத்தவும், ஒருமுறை பயன்படுத்தப்படும் நெகிழி பயன்பாட்டை முற்றிலும் தவிர்க்கவும் மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    ×