என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "குவாரிகள்"
- கல்குவாரிகளுக்கு உரிமம் வழங்குவது தொடர்பாக பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.
- கல்குவாரி தொழில் நடந்தால் தான் எங்கள் பகுதியில் ஓட்டல் தொழில் முதல் பெட்டிக்கடை தொழில் வரை நடக்கும்.
திருப்பூர் :
திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் பல்லடம் அருகே கோடங்கிப்பாளையம், இச்சிப்பட்டி பகுதியில் கல்குவாரிகளுக்கு உரிமம் வழங்குவது தொடர்பாக பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் வினீத் தலைமை தாங்கினார். மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தெற்கு பொறியாளர் சாமிநாதன் முன்னிலை வகித்தனர். முதலில் கோடங்கிப்பாளையம் கல் குவாரிகளுக்கு உரிமம் வழங்குவது தொடர்பான கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து இச்சிப்பட்டி குவாரிகளுக்கான கருத்து கேட்பு கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் கோடங்கிப்பாளையம், இச்சிப்பட்டி பகுதியை சேர்ந்த கிராம மக்கள் ஒரு தரப்பினர், 'கல் குவாரிகளால் தங்களுக்கு பாதிப்பு இல்லை. கல்குவாரி தொழில் நடந்தால் தான் எங்கள் பகுதியில் ஓட்டல் தொழில் முதல் பெட்டிக்கடை தொழில் வரை நடக்கும். குடும்ப வாழ்வாதாரத்துக்கு, சட்ட விதிகளுக்கு உட்பட்டு கல்குவாரிகள் செயல்பட அனுமதி வழங்க வேண்டும்' என்று பேசினார்கள். தொழிலாளர்கள் தரப்பினரும் தங்களுக்கு வேலை கிடைக்க குவாரி செயல்பட அனுமதிக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தனர்.
மற்றொரு தரப்பினர் பேசும்போது, 'கனிமவள சட்ட விதிகளுக்கு உட்பட்டு கல்குவாரிகள் செயல்பட அனுமதிக்கலாம். ஆனால் உரிய சட்ட விதிகளை பின்பற்றாமல் குவாரிகள் உள்ளன. பசுமை வளையங்கள், கம்பி வேலிகள் குவாரியை சுற்றி அமைக்கவில்லை. அதனால் அனுமதிக்கக்கூடாது' என்றனர்.
தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தை சேர்ந்த முகிலன் பேசும்போது, குவாரியில் இருந்து 300 மீட்டருக்குள் வீடுகள் உள்ளன. 50 மீட்டர் தூரத்துக்குள் வாய்க்கால் அமைந்துள்ளது. அதிகாரிகள் தெரிவித்த ஆவணங்களில் இவை தெளிவாக உள்ளது. ஆனால் விவரங்களை மறைத்து அனுமதி கோரியுள்ளனர். குவாரிகளுக்கு அனுமதி வழங்கக்கூடாது என்றார். இருதரப்பு கருத்துக்களையும் அதிகாரிகள் பதிவு செய்தனர். வீடியோவிலும் பதிவு செய்யப்பட்டது.
கலெக்டர் வினீத் பேசும்போது, அனைத்து குவாரிகளிலும் மரக்கன்றுகளை நட்டு பசுமை வளையங்கள் அமைக்க வேண்டும். கம்பி வேலி அமைப்பது அவசியம் என்றார்.
- 4 குவாரிகள் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் செயல்பட்டு வருகின்றன
- குத்தகை ஒப்பந்தம் 29.07.2026 வரை நடைமுறையில் உள்ளது. இக்குவாரி முறையான அனுமதி பெற்று இயங்கி வரும் குவாரி ஆகும்.
நாகர்கோவில் :
குமரி மாவட்டம், புவி யியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குநர் பால முருகன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் குறிப் பிட்டுள்ளதாவது:-
கன்னியாகுமரி மாவட் டத்தில் 7 கல் குவாரிகள் அரசு அனுமதி பெற்று இயங்கி வருகின்றன. இதில் 4 குவாரிகள் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் செயல்பட்டு வருகின்றன. மீத முள்ள 3 குவாரிகள் மலையிட வாழ் பகுதிகளில் முறையான கிளியரன்ஸ் மற்றும் மாநில சுற்றுப்புறசூழல் தாக்க மதிப் பீட்டு ஆணையத்தின் அனுமதி பெற்றும் இயங்கி வருகின்றன.
இதில் சித்திரங்கோட்டில் உள்ள குவாரி உதவி இயக்கு நர், புவியியல் மற்றும் சுரங் கத்துறை செயல்முறைகள் குத்தகை ஒப்பந்தம் 29.07.2026 வரை நடைமுறையில் உள்ளது. இக்குவாரி முறையான அனுமதி பெற்று இயங்கி வரும் குவாரி ஆகும்.
இக்குவாரியில் டிஜிபிஎஸ் சர்வே முடிக்கப்பட்டு நடைமு றையில் உள்ளது. இங்கு ஏதே னும் விதிமீறல் இருப்பின் தமிழ்நாடு சிறுகனிம சலுகை விதிகளின் கீழ் மேல் நடவடிக்கை மேற் கொள்ளப்படும். ஒவ்வொரு ஆண்டிலும் டிரோன் சர்வே செய்யப்பட்டு எடுக்கப்பட்ட கற்களின் அள வீடு குத்தகை காலத்தில் அனு மதிக்கப்பட்ட அளவிற்கும், எடுக்கப்பட்ட கனிமத்தின் அளவிற்கும் வேறுபாடு இருப் பின் கனிம உரிம தொகையும் அனுமதிக்கப்பட்ட அளவிற்கு மேல் எடுக்கப்பட்டிருப்பின் சிறு கனிம சலுகை விதி 36 (4)-ன் கீழ் அபராத நடவடிக்கை மேற் கொள்ளப்படும்.
இவ்வாறு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கல் குவாரிகள் நடத்துவதற்கு அரசு ஏராளமான விதி முறைகளை வகுத்துள்ளது என்று முன்னாள் எம்.எல்.ஏ அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
- அபராதம் விதிக்கப்பட்டவர்கள் யாரும் அபராதத்தை செலுத்தவில்லை என ரவி அருணன் கூறியுள்ளார்.
கடையம்:
தென்காசி, அம்பை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. ரவி அருணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கல்குவாரிகள்
கல் குவாரிகள் நடத்துவதற்கு அரசு ஏராளமான விதி முறைகளை வகுத்துள்ளது.
இந்த விதிமுறைகள் கனிம வளங்களை பாதுகாக்க மட்டுமல்ல அந்த தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்களின் பாதுகாப்பு, அந்தப் பகுதியில் வாழும் மக்களின் நலன், சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்ற பல்வேறு அம்சங்களை கருத்தில் கொண்டே உருவாக்கப்பட்டவை.
அனுமதி கேட்டு
நெல்லை மாவட்டத்தில் விதிகளை மீறிய குவாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு அது தொடர்ந்து இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
புதிய குவாரிகள் தொடங்க ஏராளமான விண்ணப்பங்கள் அனுமதி கேட்டு காத்து கொண்டிருக்கின்றன.
கடுமையாக நிபந்தனை
எனவே அவற்றை பரிசீலனை செய்து கடுமை யான நிபந்தனை விதித்து அவை இயங்குவதற்கு அனுமதி அளித்தால் தொழி லாளர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படுவதுடன் தற்போது நிலவும் கனிமவள தட்டுப்பாடும் நீங்கும்.
கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங் களுக்கு கனிம வளம் கடத்தப் படுவதை தடுத்தாலே கனிம பொருட்களின் விலை வெகுவாக குறையும்.
எச்சரிக்கை
ஏற்கனவே தவறு செய்தவர்களின் குவாரிகள் மூடப்படுமாயின் அது மற்ற குவாரிகளுக்கு ஒரு எச்சரிக்கையாக அமையும். விதிகளை மீறி குவரிகளை இயக்கியதால் அபராதம் விதிக்கப்பட்டவர்கள் யாரும் அபராதத்தை செலுத்தவில்லை.
மேலும் தங்களது உறவினர்கள் பெயர்களில் வேறு புதிய குவாரிகளை எடுப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். எனவே புதிய குவாரி உரிமம் வழங்கும் போது அவர்களின் பின்புலத்தை ஆராய வேண்டும.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
- அமைச்சர் மனோதங்கராஜ் எச்சரிக்கை
- கட்டையன்விளை பஞ்சபாண்டவர் கோவில் பகுதியில் சாலை பணியை அமைச்சர் தொடங்கி வைத்தார்.
நாகர்கோவில்:
நாகர்கோவில் மாநக ராட்சி 5-வது வார்டுக்கு உட்பட்ட கட்டையன்விளை பஞ்சபாண்டவர் கோவில் பகுதியில் சாலை பணியை அமைச்சர் மனோ தங்கராஜ் இன்று தொடங்கி வைத்தார்.
பின்னர் அமைச்சர் மனோ தங்கராஜ் நிருபர்க ளுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
குமரி மாவட்டத்தில் தற்போது 7 குவாரிகள் செயல்பட்டு வருகிறது. இதில் 5 குவாரிகளுக்கு நீதிமன்ற உத்தரவுப்படி அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவிற்கு கனிமவளங்கள் எடுத்துச் செல்வதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சித்திரங்கோடு பகுதியில் எடைமேடை அமைக்கப்பட்டுள்ளது. களியக்கா விளை, ஆரல்வாய்மொழி பகுதிகளில் எடைமேடை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பிறகு கனிமவளங்கள் எடுப்பதில் எந்த தவறும் நடந்து விடக்கூடாது என்பதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.அரசு பணிகளுக்கு கனிம வளங்கள் தட்டுப்பாடு இன்றி கிடைக்க வேண்டும் என்பதற்காக நடவடிக்கை மேற்கொண்டுள்ளேம்.
அரசு பணிகளுக்கு தேவையான ஜல்லி, எம்சாண்ட் வழங்காத குவாரிகள் மீது கடும் நடவடிக்தகை எடுக்கப்படும். தற்போது ெரயில்வே திட்டப் பணிகளுக்கும் நான்கு வழி சாலை பணிகளுக்கும் கனிவளங்கள் அதிகம் தேவைப்படுகிறது.குமரி மாவட்டத்தில் ஏற்கனவே 39 குவாரிகள் இருந்தது.இதில் பல குவாரிகள் மூடப்பட்டுள்ளது. 6 குவாரி கள் மட்டுமே செயல்பட்டு வருகிறது. அனுமதியில்லா மல் குவாரிகள் எதுவும் செயல்படவில்லை.
குமரி மாவட்டத்தில் சமீபத்தில் மட்டும் அதிக பாரம் ஏற்றி சென்ற வாகனங்களுக்கு இதுவரை ரூ.2.50 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சாலைகள் சேதம் ஏற்படா மல் சிறிய வாகனங்களில் மட்டுமே கனிம வளங்களை கொண்டு செல்ல அறிவுறுத்தி உள்ளோம். கனிமவளங்கள் கடத்தப்படுவதை தடுக்க அதிகாரிகள் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார்கள். நாகர்கோவில் மாநகர பகுதியில் சாலைகள் மிக மோசமாக இருந்தது.
தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பிறகு அந்த சாலைகள் படிப்படியாக சீரமைக்கப்பட்டு வருகிறது. நாகர்கோவில் கலெக்டர் அலுவலக பகுதியில் கடுமையான போக்குவரத்து தெருக்கடி ஏற்பட்டு வந்தது.அந்த பகுதியில் போக்குவரத்து நெருக்கடியை குறைக்கும் வகையில் ரவுண்டானா அமைக்கப்பட்டு வருகிறது.
இந்த ரவுண்டானா பணி முடிவடையும் பட்சத்தில் போக்குவரத்து நெருக்கடி தீர்வு ஏற்படும். மக்களின் பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் அரசு செயல்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார். மேயர் மகேஷ், ஆணையாளர் ஆனந்த்மோகன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்