என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சென்னை விமானம்"
- விமான நிலையத்திற்கு வந்த பல விமானங்கள் வேறு பகுதிகளுக்கு திருப்பி விடப்பட்டன.
- விமான நிலையத்திற்கு வந்து சேரும் சாலைகளும் நீரில் மூழ்கி இருந்தன.
ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் நேற்று பெய்த கனமழையால் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், சாலைகளில் மழைநீர் தேங்கியது. பல இடங்களில் வாகன போக்குவரத்தும் முடங்கியது.
கனமழை மற்றும் வெள்ளம் எதிரொலியாக, விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டது. துபாயில் சர்வதேச பயணிகள் அதிகம் வரக்கூடிய, உலகில் பரபரப்புடன் இயங்க கூடிய துபாய் சர்வதேச விமான நிலையத்தில் வெள்ளநீர் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.
இதனை தொடர்ந்து, விமான நிலையத்திற்கு வந்த பல விமானங்கள் வேறு பகுதிகளுக்கு திருப்பி விடப்பட்டன.
விமான ஓடுபாதையில் வெள்ளம் புகுந்ததில், விமானங்கள் மற்றும் கார்கள், நீரில் பாதியளவு மூழ்கின. விமானங்கள் நிறுத்தும் பகுதியில் வெள்ளநீர் புகுந்தது. விமான நிலையத்திற்கு வந்து சேரும் சாலைகளும் நீரில் மூழ்கி இருந்தன.
கனமழை எதிரொலியால் சென்னையில் இருந்து துபாய் செல்லக்கூடிய 5 விமானங்கள் நேற்று ரத்து செய்யப்பட்டன. இதேபோல், மறு மார்க்கத்தில் இருந்து சென்னை வரும் 5 விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தில் பெய்த கனமழையால் இன்று இரண்டாவது நாளாக சென்னையில் இருந்து விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து துபாய் செல்லும் விமானம் ரத்து தொடர்பாக தகவல் தெரிவிக்கப்படவில்லை என புகார் எழுந்துள்ளது.
துபாய் செல்ல வந்த 300க்கும் மேற்பட்ட பயணிகள் விமான நிறுவன கவுன்டரில் வாக்குவாதம் நடைபெற்றது. விமான நிறுவன அதிகாரிகள் அலட்சியமாக செயல்படுவதாக பயணிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
- விமானம் தாமதமாக புறப்பட்டுச் செல்லும் என்று மட்டும் அறிவிக்கப்பட்டு இருந்தது.
- 35 பயணிகளும், சென்னை விமான நிலையத்திற்குள் அமர்ந்து திடீர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆலந்தூர்:
அபுதாபியில் இருந்து சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கு இரவு 7 மணிக்கு வரும் ஏர் அரேபியா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் மீண்டும் இரவு 7:45 மணிக்கு அபுதாபிக்கு புறப்பட்டு செல்லும்.
நேற்று அந்த விமானத்தில் சென்னையில் இருந்து அபுதாபிக்கு செல்வதற்கு 182 பயணிகள் செல்ல இருந்தனர். அவர்கள் அனைவரும் மாலை 4:30 மணிக்கு, சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து விட்டு, பாதுகாப்பு சோதனைகள் உட்பட அனைத்து சோதனைகளையும் முடித்து பயணம் செய்ய தயாராக இருந்தனர்.
இந்த நிலையில் ஏர் அரேபியா ஏர்லைன்ஸ் விமானம், நேற்று இரவு 7 மணிக்கு சென்னையில் தரையிறங்க வந்து கொண்டிருந்தபோது சென்னை விமான நிலையப் பகுதியில் சூறைக்காற்றுடன் மழை பெய்ததால் அந்த விமானம் பெங்களூருக்கு திருப்பி அனுப்பப்பட்டது. மேலும் விமானம் பெங்களூருக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது பற்றி சென்னையில் உள்ள பயணிகளுக்கு முறையாக தெரிவிக்கவில்லை என்று தெரிகிறது. அது பற்றிய அறிவிப்பும் கொடுக்கவில்லை. ஆனால் விமானம் தாமதமாக புறப்பட்டுச் செல்லும் என்று மட்டும் அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த விமானத்தில் அபுதாபிக்கு வேலைக்காக செல்லும் 5 பெண்கள் உட்பட,35 பேர் ஒரு குழுவாக இருந்தனர். மற்ற பயணிகள் தனியாக இருந்ததாக தெரிகிறது. இதற்கிடையே நள்ளிரவு 12 மணி வரையும் அபுதாபி விமானம் பற்றி எதுவும் அறிவிக்காததால் தனியாக இருந்த பெண்கள் உள்பட 35 பயணிகளும் ஏர் அரேபியா ஏர்லைன்ஸ் கவுண்டரில் விபரம் கேட்டனர். அப்போது அவர்கள் செல்லக்கூடிய விமானம் மற்ற பயணிகளுடன் நள்ளிரவு 12:18 மணிக்கு சென்னையில் இருந்து, அபுதாபிக்கு புறப்பட்டு சென்று விட்டதாக தெரிவித்தனர். மேலும் இனிமேல் எதுவும் செய்ய முடியாது. உங்கள் போர்டிங் கேன்சல் ஆகிவிட்டது. நீங்கள் முறைப்படி பணத்தை திரும்ப பெற்று புதிதாக டிக்கெட் முன்பதிவு செய்து வேறு விமானத்தில் பயணம் செய்யுங்கள் என்று விமான நிறுவன ஊழியர்கள் கூறினர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த 35 பயணிகளும், சென்னை விமான நிலையத்திற்குள் அமர்ந்து திடீர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் விமான நிலைய ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை விமான நிலைய அதிகாரிகள், பாதுகாப்பு அதிகாரிகள், பயணிகளை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
சென்னையில் இருந்து அபுதாபிக்கு இரவு 7:45-க்கு செல்ல வேண்டிய இந்த விமானம், நள்ளிரவு 12:18 மணிக்கு, 4½ மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றுள்ளது. ஆனால் இந்த தாமதம் பற்றி பயணிகளுக்கு எந்தவிதமான அறிவிப்பும் செய்யவில்லை. மேலும் போர்டிங் பாஸ் வாங்கிய 35 பயணிகள் விமானத்தில் ஏறாதது ஏன்? என்று, விமான ஊழியர்கள் முறையாக விசாரிக்காமல் இருந்து உள்ளனர். இதுபற்றி 35 பயணிகளும் விமான நிறுவன உயர் அதிகாரிகள், சென்னை விமான நிலைய அதிகாரிகள், மற்றும் சென்னை விமான நிலைய போலீசில் புகார் செய்து உள்ளனர்.
- விமானத்தில் 184 பயணிகள் இருந்தனர்.
- விமானி, சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார்.
குவைத்தில் இருந்து சென்னைக்கு நேற்று இரவு பயணிகள் விமானம் வந்து கொண்டு இருந்தது. அந்த விமானத்தில் 184 பயணிகள் இருந்தனர். விமானம் நடு வானில் பறந்து கொண்டிருந்த போது அந்த விமானத்தில் பயணம் செய்த மராட்டிய மாநிலம் தானே பகுதியைச் சேர்ந்த முகமத் சதாம்(32) என்பர் புகைபிடித்து ரகளையில் ஈடுபட்டார்.
இதுபற்றி விமானி, சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். விமானம் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் தரையிறங்கியதும் பாதுகாப்பு அதிகாரிகள் முகமத் சதாமை அதிரடியாக கைது செய்து சென்னை விமான நிலைய போலீசில் ஒப்படைத்தனர்.
- விஜய் வசந்த் எம்.பி. கோரிக்கை
- தமிழக நாடார் சங்க நிர்வாகிகளுடன் மத்திய விமான போக்கு வரத்துத்துறை செயலாளர் ராஜீவ் பன்சாலை நேரில் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தார்.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி நாடாளு மன்ற தொகுதி காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த் தமிழக நாடார் சங்க நிர்வாகிகளுடன் மத்திய விமான போக்கு வரத்துத்துறை செயலாளர் ராஜீவ் பன்சாலை நேரில் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தார்.
அதில் கூறியிருப்பதாவது:-
சென்னையில் உள்ள உள்நாட்டு விமான நிலைய கட்டிடத்துக்கு தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் காமராஜர் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் வருகிற 8-ந் தேதி புதிதாக திறக்கப்பட இருக்கும் விமான நிலைய கட்டிடத்தில் 'பெருந்த லைவர் காமராஜர் விமான நிலையம்' என்ற பெயர் பலகை இடம்பெற வேண்டும்.
மற்ற விமான நிலை யங்களில் தலைவர்களுக்கு சிலை உள்ளது போல் சென்னை உள்நாட்டு விமான நிலைய வளாகத்தில் காமராஜருக்கு முழு உருவ வெண்கல சிலை அமைத்து தரவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
விஜய் வசந்த் எம்.பி.யுடன், தமிழ்நாடு நாடார் சங்கபொதுச் செயலாளர் வி.எல்.சி. ரவி, தலைமை நிலைய செயலாளர் பொன் ராஜ், கொள்கை பரப்பு செயலாளர் சுரேஷ்மாறன், மாநில ஒருங்கிணைப்பாளர் அனந்தகுமார், மராட்டிய மாநில் தலைவர் தெய்வ குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.
- விமானத்தில் இருந்த பயணிகள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.
- விமான பணிப்பெண்களும் விமான ஊழியர்களும் அவசர கால ஒலி எழுந்தது குறித்து ஆய்வு செய்தனர்.
ஆலந்தூர்:
அசாம் மாநிலம் கவுகாத்தியில் இருந்து சென்னைக்கு பயணிகள் விமானம், வந்து கொண்டு இருந்தது. 147 பயணிகள் இருந்தனர். கவுகாத்தியை சேர்ந்த ஹேம்நாத் என்பவர் தனது 8 வயது பேத்தி உள்பட குடும்பத்தினர் 4 பேருடன் பயணம் செய்தார்.
விமானம், நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது திடீரென விமானத்தில் அவசரகால சைரன் ஒலி விமானத்துக்குள் கேட்டது. இதனால் விமானத்தில் இருந்த பயணிகள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. விமான பணிப்பெண்களும் விமான ஊழியர்களும் அவசர கால ஒலி எழுந்தது குறித்து ஆய்வு செய்தனர்.
இதில் பயணி ஹேம்நாத்தின் பேத்தி தான் அமர்ந்திருந்த, விமான இருக்கைக்கு கீழே உள்ள அவசரகால உபயோகத்திற்காக வைக்கப்பட்டிருந்த, லைப் ஜாக்கெட்டை பட்டனை அழுத்தி எடுத்து அணிந்து கொண்டிருந்தார்.
இதை அடுத்து விமான பணிப்பெண்கள் சிறுமியிடம் விசாரித்து அவசர கால ஒலியை நிறுத்தினர். இதனால் பயணிகள் நிம்மதி அடைந்தனர்.
இதற்கிடையே அவசர கால ஒலி எழுந்தது தொடர்பாக சென்னையில் உள்ள விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சென்னையில் விமானம் தரையிறங்கியதும் விமான நிலைய அதிகாரிகள் ஹேம் நாத்தின் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அவர்களை அதிகாரிகள் எச்சரித்து விடுவித்தனர். இதனால் சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து விமான ஊழியர்கள் கூறும்போது, விமானத்தில் ஒவ்வொரு இருக்கைக்கும் கீழே லைப் ஜாக்கெட் இருக்கும்.
ஆபத்து நேரத்தில் மட்டுமே அதில் உள்ள பட்டன் அழுத்தி எடுக்க வேண்டும். இது தவிர மற்ற நேரங்களில் யாராவது உபயோகப்படுத்தினால், இதைப்போல் அபாய சைரன் கேட்கும் என்றனர்.
- சென்னை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
- வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை விமான நிலையத்தில் இருந்து துபாய் செல்ல இருந்த இண்டிகோ விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வெடிகுண்டு மிரட்டல் காரணமாக இன்று காலை 7.20 மணிக்கு புறப்பட வேண்டிய விமானம் தாமதம் ஏற்பட்டுள்ளது. விமானத்தில் சுமார் 160 பயணிகள் இருந்த நிலையில், வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்