search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தமிமுன் அன்சாரி"

    • மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ள வக்பு வாரியங்கள் நிர்வகிக்கின்றன.
    • அரசு சார்ந்த நிர்வாக பொறுப்புகளில் பிற சமூகத்தவரும் உள்ளனர்.

    சென்னை:

    மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இந்தியாவிலேயே ராணுவம் மற்றும் ரெயில்வே துறை நிர்வாகங்களுக்கு அடுத்து மிகப்பெரிய சொத்துக்களை கொண்டதாக வக்பு வாரியம் திகழ்கிறது. இவையெல்லாம் பள்ளிவாசல்கள், மதரஸாக்கள், தர்காக்கள், அறக்கட்டளைகள், சேவை அமைப்புகள் ஆகியவற்றுடன் தொடர்பில் இருப்பவையாகும். இவற்றின் வழியாக வரும் வருமானங்கள் இவை சார்ந்த நலப்பணிகளுக்கு செலவிடப்படுகின்றன. இவற்றை மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ள வக்பு வாரியங்கள் நிர்வகிக்கின்றன. இவற்றில் படித்த- சமூக ஈடுபாடு கொண்ட பெண்கள் பரவலாக பணியாற்றுகின்றனர்.

    இதன் அரசு சார்ந்த நிர்வாக பொறுப்புகளில் பிற சமூகத்தவரும் உள்ளனர். இந்த நிலையில் வெளியாகும் தகவல்கள் இவற்றை சீர்குலைக்கும் உள்நோக்கிலேயே பாஜக அரசின் புதிய அணுகுமுறைகளாக உள்ளன. இதில் ஆக்கப்பூர்வமான மாற்றங்கள் செய்வது எனில், அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்துடன் ஒரு குழுவை ஒன்றிய அரசு அமைக்க வேண்டும். அக்குழுவின் ஆலோசனைகளின் படியே எந்த சட்ட முன்வடிவையும் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

    இதை கவனத்தில் கொள்ளாமல் ஒன்றிய அரசு, அதிகார திமிருடன் அத்துமீறுமேயானால் நாடு தழுவிய ஜனநாயக போராட்டங்களை சந்திக்க வேண்டி வரும். எனவே நெருப்புடன் விளையாட வேண்டாம் என ஒன்றிய அரசை எச்சரிக்கிறோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தமிழகத்தில் வரும் 6ம் தேதி முதல் அரசுப் பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
    • வெப்ப அலையிலிருந்து வளரும் பிள்ளைகளை பாதுகாப்பது என்பதும் ஒரு அரசின் கடமையாகும்.

    தமிழகத்தில் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் மீண்டும் கடும் வெயில் வாட்டி வதைத்து வருகிறது.

    தமிழகத்தில் வரும் 6ம் தேதி முதல் அரசுப் பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

    இந்நிலையில், கடும் வெயில் எதிரொலியால் பள்ளிக் கூடங்கள் 2 வாரங்கள் தள்ளி திறக்க வேண்டும் என்று ம.ஜ.க தலைவர் தமிமுன் அன்சாரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    இதுகுறித்து தமிமுன் அன்சாரி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    மீண்டும் கடும் வெயில் தொடங்கியிருக்கிறது. வெப்ப அலையிலிருந்து வளரும் பிள்ளைகளை பாதுகாப்பது என்பதும் ஒரு அரசின் கடமையாகும்.

    எனவே பள்ளிக்கூட திறப்பு தேதியை இரண்டு வாரங்கள் ஒத்திப் போடுவது குறித்து தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • இந்த தேர்தல் களம் ஜனநாயக சக்திகளுக்கும், பாசிச சக்திகளுக்கும் இடையிலான சித்தாந்த போராட்டமாகும்
    • தேர்தலில் போட்டியிடுவதா? தேர்தல் அரசியலை முன்னிறுத்தும் ஜனநாயகத்தை பாதுகாப்பதா? என்ற நிலையில் இரண்டாவதை தேர்ந்தெடுத்திருக்கிறோம்

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்த மனிதநேய ஜனநாயகக் கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரி, வரும் பாராளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தார்

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அளிக்கையில், "இந்த தேர்தல் களத்தை ஜனநாயக சக்திகளுக்கும், பாசிச சக்திகளுக்கும் இடையிலான சித்தாந்த போராட்டமாக மனிதநேய ஜனநாயக கட்சி கருதுகிறது.

    நாட்டின் பன்மை கலாச்சாரத்தையும், ஜனநாயக மாண்புகளையும் பாதுகாப்பது அவசர முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனையாக மாறியுள்ளதை கவனத்தில் கொண்டு இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    தேர்தலில் போட்டியிடுவதா? தேர்தல் அரசியலை முன்னிறுத்தும் ஜனநாயகத்தை பாதுகாப்பதா? என்ற நிலையில் இரண்டாவதை தேர்ந்தெடுத்திருக்கிறோம்.

    கடந்த இரண்டு வாரங்களாக சான்றோர்கள், அறிஞர்கள், சமூக செயல்பாட்டாளர்கள் உள்ளிட்டோரின் நல்லெண்ண கருத்துகளை உள்வாங்கி, 18.03.2024 அன்று நடைபெற்ற கட்சியின் தலைமை நிர்வாகக் குழுவில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    தேசத்தை காக்கும் அறப்போரில் கட்டுமரத்தில் பயணிப்பதா? போர் கப்பலில் பயணிப்பதா? என்ற நிலையில், I.N.D.I.A கூட்டணி என்ற போர் கப்பலில் ஏறியுள்ளோம்.

    தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான I.N.D.I A கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடும் 39 பாராளுமன்ற தொகுதிகளிலும், புதுச்சேரியிலும் இக்கூட்டணியின் வெற்றிக்காக களமிறங்கி பணியாற்றுவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது" என்று அவர் தெரிவித்துள்ளார்.

    • பொது சிவில் சட்டத்தை ஏற்றுக் கொள்ள முடியாது.
    • பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு, நாட்டில் என்னென்ன நடக்கப் போகிறது என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

    ஓசூர்:

    ஓசூரில் நேற்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட மனிதநேய ஜனநாயக கட்சி மாநில தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான தமிமுன் அன்சாரி, நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், முருகன், சாந்தன் ஆகியோர் இன்னும் திருச்சியில் உள்ள இலங்கை தமிழர் முகாமில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

    அவர்களை விடுவித்து, அவர்கள் விரும்பும் பகுதிகளுக்கு சென்று நிம்மதியாக வாழ மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பொது சிவில் சட்டத்தை ஏற்றுக் கொள்ள முடியாது. கடந்த 30 ஆண்டுகளில் 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கொல்லப்பட்டு உள்ளனர். இந்திய வெளியுறவுத் துறை அதிகாரிகள், இலங்கை அரசுடன் பேசி தமிழர்கள் கொல்லப் படுவதை தடுத்து நிறுத்த வேண்டும்.

    பாராளுமன்ற தேர்தலைப் பொறுத்தவரை தேர்தல் ஆணையம் தேர்தல் தேதி அறிவித்த பின்னர், கட்சியின் தலைமை நிர்வாக குழு கூட்டத்தை கூட்டி, எங்களின் நிலைப்பாடு குறித்து முடிவு செய்யப்படும். பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு, நாட்டில் என்னென்ன நடக்கப் போகிறது என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தனியாா் தொலைக்காட்சி செய்தியாளா் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் கண்டிக்கத்தக்கது.
    • அரசியல் நிலைபாடுகளை மாற்றியுள்ளதை தவறு என்று சொல்ல முடியாது.

    திருப்பூா்:

    சந்தா்ப்பவாத அரசியலின் அடையாளம் நிதிஷ்குமாா் என்று மனித நேய ஜனநாயக கட்சியின் மாநில தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏ.வு மான மு.தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் திருப்பூரில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பல்லடத்தில் தனியாா் தொலைக்காட்சி செய்தியாளா் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் கண்டிக்கத்தக்கது. இன்று ஒட்டு மொத்த இந்தியாவும் சந்தா்ப்பவாத அரசியலின் பேராபாயத்தை உற்று நோக்கி அதனைப் பற்றிய விவாதத்தைத் தொடங்கியுள்ளது.

    பீகாா் மாநில முதல்வா் நிதீஷ்குமாா் கடந்த காலங்களில் கூட்டணி, அரசியல் நிலைபாடுகளை மாற்றியுள்ளதை தவறு என்று சொல்ல முடியாது. இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில் அரசியல் கட்சி ஒரு நிலைப்பாட்டை எடுப்பதும், நிா்வாகிகளின் முடிவுக்கு ஏற்ப கூட்டணி நிலைபாடுகளை மாற்றிக் கொள்வதும் தவிா்க்க முடியாதது. ஆனால் நிதிஷ்குமாா் பச்சை சந்தா்ப்பவாதத்தின் அடையாளமாக அரசியலில் காணப்படுகிறாா்.


    18 மாதங்களுக்கு முன்பு பா.ஜ.க.வுடன் இருந்தவா் முதல்வா் பதவிக்கு ஆபத்து என்றவுடன், லாலு பிரசாத் யாதவுடன் கூட்டணி ஏற்படுத்தி புதிய ஆட்சியை நடத்தப்போவதாக கூறினார்.

    இதன் பிறகு பா.ஜ.க.வுக்கு எதிராக பல்வேறு கட்சிகளை ஒருங்கிணைத்து இந்தியா கூட்டணி என்ற களத்தை அமைத்தாா். கடந்த ஒரு வாரத்தில் என்ன நடந்தது என்று தெரியவில்லை. முதல்வா் பதவியை ராஜினாமா செய்து விட்டு பா.ஜ.க. கூட்டணியுடன் முதல்வா் பதவியை ஏற்று புதிய பாதையை த்தொடங்கியுள்ளாா். இத்தகைய அரசியல்வாதிகளை நாட்டு மக்கள் புறக்கணிக்க வேண்டும்.

    திருச்சி மத்திய சிறைச்சாலையை வரும் பிப்ரவரி 10- ந்தேதி பல்லாயிரக்கணக்கான மக்களுடன் மனிதநேய ஜனநாயக கட்சி முற்றுகையிட உள்ளது. தமிழக சிறைகளில் 20 ஆண்டுகளைக் கடந்து சமூக வழக்குகள் தொடா்பாக வாடிவதங்கிக் கொண்டிருக்கும் 36 கைதிகள் உள்பட அனைவரையும் தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும். மீண்டும் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் 2024 பாராளுமன்ற தேர்தல்தான் கடைசி தேர்தலாக இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த சந்திப்பின்போது மனித நேய ஜனநாயக கட்சியின் மாவட்டத் தலைவா் ராயல் ராஜா, மாநில செயலாளா்கள் ஷபி, ஜாபா் அலி உள்ளிட்ட நிா்வாகிகள் உடனிருந்தனா்.

    • அடிக்கடி நூல் விலை ஏற்றத்தால் பின்னலாடை தொழில் மிகவும் நலிவடைந்து காணப்படுகிறது.
    • அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் பேசிய சனாதனத்துக்கு நான் பதில் கூற முடியாது

    திருப்பூர்:

    ஒரே நாடு ஒரே தோ்தல் சாத்தியமில்லை என்று மனிதநேய ஜனநாயக மக்கள் கட்சித் தலைவா் தமிமுன் அன்சாரி தெரிவித்தாா்.இது தொடா்பாக அவர் திருப்பூரில் நிருபர்களிடம் கூறும் போது, திருப்பூரில் அடிக்கடி நூல் விலை ஏற்றத்தால் பின்னலாடை தொழில் மிகவும் நலிவடைந்து காணப்படுகிறது. தமிழகத்தில் போதைப் பொருட்களை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும்.

    படிப்படியாக மதுக்கடைகளை மூட வேண்டும். இதற்கு அனைத்து கட்சிகள் கூட்டம் நடத்தி ஆலோசனை செய்ய வேண்டும்.அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் பேசிய சனாதனத்துக்கு நான் பதில் கூற முடியாது. ஒரே நாடு ஒரே தோ்தல் என்பது சாத்தியமற்றது. இந்தியா என்ற பெயரை மாற்ற வேண்டும் எனக் கூறியிருப்பது மக்களைத் திசை திருப்பக் கூடிய ஒரு செயலாகும். நாம் இந்தியா்கள் என்று உலக நாடுகளுக்கு பெருமையாக சொல்லிக் கொண்டிருக்கிறோம், அதை மாற்ற வேண்டும் என்பது தவறான செயல் என்றாா்.

    • சென்னையில் தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு மனிதநேய ஜனநாயக கட்சியினர் போராட்டம் நடத்த உள்ளோம்.
    • 8 மாதங்கள் ஆகியும் இதுவரை ஆணையம் எந்த முகவரியில் இயங்குகிறது என்று மக்களுக்கு தெரியவில்லை.

    மேட்டுப்பாளையம்

    நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து விட்டு கோவை செல்லும் வழியில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளரும், நாகை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வுமான தமிமுன் அன்சாரி நிருபர்களிடம் கூறியதாவது:-

    பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக சிறையில் ஆயுள் தண்டனை கைதிகளாக இருக்கும் சிறைவாசிகளை சாதி, மத பேதமின்றி பொது மன்னிப்பில் விடுதலை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிற 10-ந் தேதி சென்னையில் தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு மனிதநேய ஜனநாயக கட்சியினர் போராட்டம் நடத்த உள்ளோம்.

    போராட்டத்தில் தமிழகம் முழுவதும் இருந்து பொதுமக்கள் மற்றும் மனிதநேய ஜனநாயக கட்சியினர் கலந்து கொண்டு ஆயுள் சிறைவாசிகளுக்காக உரிமை குரலை முழக்கம் இடமுள்ளனர். அதன் அடிப்படையில் தமிழகத்தில் மேற்கு மண்டலத்தில் மக்களை சந்தித்து வருகின்றோம்.

    இதே கோரிக்கைக்காக கடந்த ஜனவரி மாதம் 8 -ந் தேதி கோவை மத்திய சிறையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினோம். அந்தப் போராட்டத்தை நாங்கள் அறிவித்த போது தமிழக அரசு ஆயுள் சிறைவாசிகளின் முன்விடுதலை பற்றி விவாதித்து முடிவெடுத்து பரிசீலனை பெறுவதற்காக நீதிபதி தலைமையில் ஆணையத்தை அமைத்தது. 8 மாதங்கள் ஆகியும் இதுவரை ஆணையம் எந்த முகவரியில் இயங்குகிறது என்று மக்களுக்கு தெரியவில்லை.

    நாங்கள் பதிவு தபாலில் அனுப்பி வைத்த கோரிக்கை மனு கூட இந்த முகவரியில் அலுவலகம் இல்லை என்று திரும்பி வந்துள்ளது. எனவே தமிழக அரசு இனியும் தாமதிக்காமல் மனிதாபிமான அடிப்படையில் உடனடியாக ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்ய ஆவணம் செய்ய வேண்டும் .

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியின் போது வடக்கு மாவட்ட பொதுச் செயலாளர் ஜாபர், பொருளாளர் அப்துல் ஜப்பார், மாவட்ட இளைஞரணி செயலாளர் அசார், துணைச் செயலாளர் ஜாபர் அலி, காஜாமைதீன் உள்பட கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

    ×