என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மாற்று இடம்"
- மாற்று இடம் வழங்க நடவடிக்கை எடுக்கக் கோரி அனைத்து வியாபாரிகள் சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.
- சாலையை ஆக்கிரமித்து கடைகளை நடத்துவதால் விபத்துகள் ஏற்படுகின்ற
அவிநாசி:
அவிநாசியில் சாலையோர வியாபாரிகளுக்கு மாற்று இடம் வழங்க நடவடிக்கை எடுக்கக் கோரி அனைத்து வியாபாரிகள் சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதுகுறித்து அவிநாசி அனைத்து வியாபாரிகள் சங்கத்தினா் தாசில்தாரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:- அவிநாசி நகரப் பகுதியில் கடைகளின் முன் உள்ள சாலையோரத்தில் புதிது புதிதாக கடைகள் உருவாகி செயல்பட்டு வருகின்றன. சாலையை ஆக்கிரமித்து கடைகளை நடத்துவதால் விபத்துகள் ஏற்படுகின்றன. சாலையோர கடைகளால் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுகின்றனா்.
எனவே, பாதசாரிகள், வாகன ஓட்டிகளுக்கு இடையூறு இல்லாத வகையிலும், சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையிலும் அவா்களுக்கு மாற்று மாற்று இடம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 7.30 மணியளவில் சுமார் 200-க்கும் மேற்பட்ட கூலித் தொழிலாளர்கள் இங்கு வந்து விடுவர்.
- அய்யனார் மற்றும் போலீசார் அதிரடியாக பாலக்கரை பஸ் நிறுத்தத்திற்கு விரைந்தனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பாலக்கரையில் மும்முனை சந்திப்பில் பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த பஸ் நிறுத்தம் எதிரில் விருத்தாசலம் அடுத்த சிக்கலூர், விளங்காட்டூர், கண்டபாங்குறிச்சி, பரனூர், பரவலூர் ஆகிய கிராமங்களை சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் ஒன்று கூடுவர். தினமும் காலையில் 7 மணியிலிருந்து வரத் தொடங்குவர். 7.30 மணியளவில் சுமார் 200-க்கும் மேற்பட்ட கூலித் தொழிலாளர்கள் இங்கு வந்து விடுவர். இதில் அதிகளவில் கட்டுமான பணிகளுக்கு செல்லும் தொழிலாளர்கள் இருப்பர். இங்கு வரும் என்ஜினியர்கள் மற்றும் கட்டுமான மேஸ்திரிகள் தங்களுக்கு தேவையான எண்ணிக்கையிலான தொழிலாளர்களை அழைத்து சென்று பணி வழங்குவார்கள்.
இது தவிர வீடு சுத்தம் செய்தல், தோட்டங்களை பராமரிளத்தல் போன்ற வேலைகளுக்கும் பொதுமக்கள் இங்கு வந்து பணியாளர்களை அழைத்து செல்வர். இவர்களுக்கு என்று நிரந்தர பணி இல்லாவிட்டாலும், இங்கு வந்து நின்றால் வேலை நிச்சயமாக கிடைக்கும். இந்நிலையில் மும்முனை சந்திப்பில் உள்ள பஸ் நிறுத்தம் எதிரில் 200-க்கும் மேற்பட்டோர் நிற்பதாலும், இவர்களை பணிக்கு அழைக்க 100-க்கும் மேற்பட்டோர் வருதாலும், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக வாகன ஓட்டிகள் போலீசாரிடம் புகார் அளித்தனர். புகாரின் பேரில் இன்று காலை 7.30 மணிக்கு விருத்தாசலம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆரோக்கியராஜ், இன்ஸ்பெக்டர் முருகேசன், சப்-இன்ஸ்பெக்டர் அய்யனார் மற்றும் போலீசார் அதிரடியாக பாலக்கரை பஸ் நிறுத்தத்திற்கு விரைந்தனர். அங்கு நின்றிருந்த 200-க்கும் மேற்பட்ட கூலித் தொழிலாளர்களை அங்கிருந்து கலைந்து செல்ல வலியுறுத்தினர்.
எங்களை வேலைக்கு அழைப்பவர்கள் காலங்காலமாக இங்கு வந்துதான் எங்களை அழைத்து செல்கின்றனர். அதனால் இங்கு நின்றால் மட்டுமே வேலை கிடைக்கும். கலைந்து சென்றால் எங்களுக்கு வேலை கிடைக்காமல், எங்கள் குடும்பம் பட்டினி கிடக்கும் சூழல் ஏற்படும் என கூறினர். இதையடுத்து மும்முனை சந்திப்பில் உள்ள பாலக்கரை பஸ் நிறுத்தத்தில் இருந்து 500 மீட்டர் தள்ளி நிற்க போலீசார் கூறினர். இதனையேற்ற கூலித் தொழிலாளர்கள் அங்கிருந்து 500 மீட்டர் தள்ளி சென்று நின்றனர். இதனால் இன்று காலை 7.30 மணிமுதல் 8.30 மணிவரை பாலக்கரை பஸ் நிறுத்தம் அருகே பரபரப்பு நிலவியது.
- 15 நாளில் வீடுகளை அனைவரும் காலி செய்ய வேண்டும் என ரெயில்வே அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
- வீடுகளை உடனே காலி செய்தால், 120 குடும்பங்களை சேர்ந்த 609 பேர் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்
பொன்னேரி:
கும்மிடிப்பூண்டியில் திருவள்ளூர் நகர், வள்ளியம்மன் நகர், கரிமேடு உள்ளிட்ட ரெயில்வேக்கு சொந்தமான இடத்தில் 30 ஆண்டுகளாக 120 குடும்பங்கள் வீடு கட்டி வாழ்ந்து வந்தனர். கடந்த மாதம் 27 ஆம் தேதி வீடுகளை காலி செய்யும்படி சென்னை தென்னக ரெயில்வே தலைமை அலுவலகத்தில் இருந்து பொதுமக்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.
அவர்களை மார்ச் 23ஆம் தேதி சென்னை ரெயில்வே தலைமை அலுவலகத்திற்கு அழைத்தனர். அங்கு சென்ற பொதுமக்களிடம், அடுத்த நோட்டீஸ் வழங்கியதும் 15 நாளில் வீடுகளை அனைவரும் காலி செய்ய வேண்டும் என ரெயில்வே அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
இதனை தொடர்ந்து சார் ஆட்சியர் ஐஸ்வர்யா ராமநாதனிடம் பாமக திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர் விஎம் பிரகாஷ் தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் கோரிக்கை மனு வழங்கினர்.
வீடுகளை உடனே காலி செய்தால், 120 குடும்பங்களை சேர்ந்த 609 பேர் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். குறிப்பாக பள்ளி மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். எனவே, மேற்கண்ட 120 குடும்பத்தாருக்கும் மாற்று இடம் ஒதுக்கி தரும் வரை வீடுகளை காலி செய்ய கால அவகாசம் வழங்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தனர்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த பாமக மாவட்ட செயலாளர் விஎம் பிரகாஷ், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசும். அதிகாரிகளும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
- விருத்தாசலத்தில் வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து பொது மக்கள் ஊர்வலமாக சென்று மனு கொடுத்தனர்.
- தனி நபர் ஒருவர் தொடுத்த வழக்கின் அடிப்படையில் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடலூர்:
விருத்தாசலத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கட்டிடங்களை இடிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி வருவாய் துறையினர் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட கட்டிடங்களை இடித்து வருகின்றனர். இந்நிலையில் தங்களது குடியிருப்புகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து இந்திரா நகர் பகுதி மக்கள் நேற்று ஊர்வலமாக வந்து விருத்தாசலம் ஏ.எஸ்.பி.,யிடம் நேற்று மனு அளித்தனர். ஆக்ரமிப்பு அகற்றத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் பகுதியில் இருந்து, கோரிக்கை பாதாகைகளை ஏந்தி ஊர்வலமாக, விருத்தாசலம் போலீஸ் நிலையம் வந்தனர்.அங்கு ஏ.எஸ்.பி. அங்கித் ஜெயினிடம் புகார் மனு அளித்தனர்.
அந்த மனுவில் பல ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வரும் எங்களது வீடுகளை இடிக்க கூடாது. மாற்று இடம் எதுவும் தங்களுக்கு இல்லாததால் போக்கிடம் செல்ல முடியாமல் பிள்ளை குட்டிகளோடு தவிப்பதாகவும், தனி நபர் ஒருவர் தொடுத்த வழக்கின் அடிப்படையில் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. உயர்நீதிமன்றம் கருணை அடிப்படையில் எங்கள் வீடுகளை இடிக்காமல் இருக்க வேண்டும்.மேலும் அந்த தனிநபர் வீடுகளை இடிக்காமல் இருக்க வேண்டுமானால் பணம் தர வேண்டும் என எங்களை மிரட்டி வந்தார், எனவே அவர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறி உள்ளனர். மனுவை பெற்றுக் கொண்ட ஏ.எஸ்.பி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததால் அனைவரும் கலைந்து சென்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்