என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "நகராட்சி ஆணையர்"
- துர்கா குரூப் 2 தேர்வில் வெற்றி பெற்று நகராட்சி ஆணையராக பதவியேற்க உள்ளார்.
- கல்விதான் ஒரு தலைமுறையையே முன்னேற்றிடும் ஆற்றல் பெற்றது.
திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த துர்கா குரூப் 2 தேர்வில் வெற்றி பெற்று நகராட்சி ஆணையராக பதவியேற்க உள்ளார்.
என் தாத்தாவும், அப்பாவும் தூய்மைப்பணியாளர்கள், அந்த அடையாளத்தை மாற்ற வேண்டும் என நினைத்தேன்,இன்றிலிருந்து எங்க வாழ்க்கை மாறியுள்ளது என்று துர்கா நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
இந்த வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பகிர்ந்துள்ளார். அவரது பதிவில், "நகராட்சி ஆணையராகப் பொறுப்பேற்கும் திருமிகு துர்கா அவர்களின் பேட்டியைக் கேட்டு அகமகிழ்ந்தேன். கல்விதான் ஒரு தலைமுறையையே முன்னேற்றிடும் ஆற்றல் பெற்றது என்பதற்குத் திருமிகு துர்கா அவர்களே எடுத்துக்காட்டு. நான் மீண்டும் சொல்கிறேன்…கல்விதான் யாராலும் பறிக்க முடியாத சொத்து" என்று தெரிவித்துள்ளார்.
- மனோகரன் ரூ. 2 ஆயிரம் லஞ்சம் பெற்ற போது கைது செய்யப்பட்டார்.
- 2015-ம் ஆண்டு மனோகரனை குற்றவாளி என தீர்ப்பளித்தது.
கடலூர்:
கடலூர் மாவட்டம், பண்ருட்டி நகராட்சி ஆணையராக கடந்த 2002-ம் ஆண்டு பணிபுரிந்த மனோகரன் பண்ருட்டி தனபால் தெருவை சேர்ந்த செந்தில்குமாரிடம் பண்ரு ட்டி நகராட்சிக்கு உட்பட்ட மேலப்பாளையத்தில் உள்ள நகராட்சி நடுநிலை ப்பள்ளியில் மேல்தளம் அமைக்கும் பணியை முடிந்து அதற்குண்டான காசோலை வழங்குவதற்கு ரூ. 2 ஆயிரம் லஞ்சம் பெற்ற போது கடலூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.
இவ்வழக்கை விசாரணை செய்த கடலூர் முதன்மை நீதித்துறை நடுவர் நீதிபன்றம் கடந்த 2015-ம் ஆண்டு மனோகரனை குற்றவாளி என தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பினை எதிர்த்து மனோகரன் 2015-ம் ஆண்டு சென்னைஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இவ்வழக்கின் விசாரணை முடிக்கப்பட்டு கடந்த பிப்ரவரி 9-ந் தேதி மனோகரன் தாக்கல் செய்த மனுவினை தள்ளுபடி செய்து கடலூர் முதன்மை நீதித்துறை நடுவர் நீதிமன்றம், அளித்த தீர்ப்பு செல்லும் என்று அறிவிக்கப்பட்டது. ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் 1 1/2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டணையும், ரூ.4, ஆயிரம் அபராதமும் விதிக்கபட்டது. இந்த தீர்ப்பின்படி கடலூர் ஊழல் தடுப்பு பிரிவினர் மனோகரளை கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
- 50-க்கும் மேற்பட்ட பிளக்ஸ் பேனர்களை நகராட்சி ஊழியர்கள் அகற்றி நடவடிக்கை மேற்கொண்டனர்.
- அபராதத்துடன் கூடிய சிறை தண்டனை வழங்கிட நடவடிக்கை எடுக்கப்படும்.
காங்கயம் :
காங்கயம் நகரின் முக்கிய பகுதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாக அதிகளவில் விளம்பர பதாகைகள் உள்ளிட்ட பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில் காங்கயம் நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் பஸ் நிலைய ரவுண்டானா, போலீஸ் நிலைய ரவுண்டானா, பழையகோட்டை சாலை, கரூர் சாலை, தாராபுரம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த சுமார் 50-க்கும் மேற்பட்ட பிளக்ஸ் பேனரகளை நகராட்சி ஊழியர்கள் அகற்றி நடவடிக்கை மேற்கொண்டனர். இது குறித்து நகராட்சி ஆணையர் எஸ்.வெங்கடேஸ்வரன் கூறியதாவது :- காங்கயம் நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் விளம்பர பதாகை, பிளக்ஸ் பேனர்கள் வைத்திட நகராட்சி ஆணையாளரிடம் முறையாக அனுமதி பெற வேண்டும். தவறினால் நகராட்சி புதிய சட்ட விதிகளை மீறி வைக்கும் விளம்பர பதாகைகளால் ஏற்படும் விபத்துகளுக்கு சம்பந்தப்பட்ட உரிமையாளர் மற்றும் விளம்பரதாரரை முழு பொறுப்பாக்கி, அபராதத்துடன் கூடிய சிறை தண்டனை வழங்கிட நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறி–னார்.
- ஏப்ரல் 30-ந் தேதிக்குள் செலுத்துபவர்களுக்கு வரி தள்ளுபடி செய்யப்படும்.
- இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டுமாறு தெரிவித்துள்ளார்.
வெள்ளகோவில் :
வெள்ளகோவில் நகராட்சி ஆணையாளர் ஆர்.மோகன்குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- வெள்ளகோவில் நகராட்சி பகுதியில் உள்ள பொதுமக்கள் தங்களது 2023- 2024ம் நிதியாண்டிற்கான, சொத்து வரியை இந்த மாதம் ஏப்ரல் 30-ந் தேதிக்குள் செலுத்துபவர்களுக்கு 5 சதவீத வரி தள்ளுபடி செய்யப்படும், எனவே இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டுமாறு தெரிவித்துள்ளார்.
- முகம்மது சம்சுதீன் திருமுருகன்பூண்டி நகராட்சி ஆணையாளராக நியமிக்கப்பட்டார்.
- பொது மக்களுக்கும், நகராட்சி கவுன்சிலர்களுக்கும் திருப்தி இல்லாத நிலையில் இருந்தது.
அனுப்பர்பாளையம்:
திருமுருகன்பூண்டி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நகராட்சியாக தரம் உயர்த்தப் பட்டது. இதையடுத்து முகம்மது சம்சுதீன் திருமுருகன்பூண்டி நகராட்சி ஆணையாளராக நியமிக்கப்பட்டார். ஆனால் தொடக்கத்தில் இருந்தே அவரது செயல்பாடுகள் பொது மக்களுக்கும், நகராட்சி கவுன்சிலர்களுக்கும் திருப்தி இல்லாத நிலையில் இருந்தது. எனவே அவரை மாற்றவேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இது தொடர்பாக மாவட்ட கலெக்டர், நகராட்சித்துறை இயக்குனர் உள்ளிட்டோருக்கு மனுவும் வழங்கப்பட்டது.
இந்த நிலையில் திருமுருகன்பூண்டி நகராட்சி ஆணையாளர் முகம்மது சம்சுதீன் திடீரென தென்காசி மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக ஈரோடு மாவட்டம்பவானிநகராட்சி ஆணையாளராக உள்ள தாமரை திருமுருகன்பூண்டி நகராட்சி ஆணையாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- கடந்த 4 மாதங்களாக வாடகை கட்டவில்லை எனக் கூறப்படுகிறது.
- குடிநீா்க் கட்டணம் செலுத்தாத குடியிருப்புகளுக்கு இணைப்புகள் துண்டிக்கப்படும் என்றாா்.
காங்கயம்:
காங்கயம் பேருந்து நிலைய வணிக வளாகத்தில் நகராட்சிக்குச் சொந்தமான ஒரு கடையை எடுத்து நடத்தி வருபவா் கடந்த 4 மாதங்களாக வாடகை கட்டவில்லை எனக் கூறப்படுகிறது.நிலுவைத் தொகையான ரூ.37 ஆயிரத்தை கட்ட கால அவகாசம் வழங்கியும் கடை உரிமையாளா் கட்டவில்லையாம். இதையடுத்து, காங்கயம் நகராட்சி ஊழியா்கள் கடையை பூட்டி 'சீல்' வைத்தனா்.
இது குறித்து நகராட்சி ஆணையா் எஸ்.வெங்கடேஷ்வரன் கூறியதாவது:- நகராட்சிக்கு உரிய கட்டணங்களை செலுத்தாத கடைகள் பூட்டி 'சீல்' வைக்கப்படுவதோடு, குடிநீா்க் கட்டணம் செலுத்தாத குடியிருப்புகளுக்கு இணைப்புகள் துண்டிக்கப்படும் என்றாா்.
- கொடுமுடி ஆற்றில் இருந்து காங்கயம் நகருக்கு தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம் மூலம் குடிநீா் கொண்டு வரப்படுகிறது.
- நீரேற்று நிலையத்தில் இருந்து மின் மோட்டாா்களை இயக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.
காங்கயம் :
காவிரி ஆற்றில் வெள்ளம் தணிந்தவுடன் காங்கயம் நகருக்கு குடிநீா் வழங்கப்படும் என்று நகராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது.இது குறித்து காங்கயம் நகராட்சி ஆணையா் எஸ்.வெங்கடேஷ்வரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,காவிரி கூட்டுக் குடிநீா்த் திட்டம் மூலம் ஈரோடு மாவட்டம், கொடுமுடி ஆற்றில் இருந்து காங்கயம் நகருக்கு தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம் மூலம் குடிநீா் கொண்டு வரப்படுகிறது.
இந்நிலையில் கொடுமுடி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் தலைமை நீரேற்று நிலையத்தில் இருந்து மின் மோட்டாா்களை இயக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.குடிநீா்த் தட்டுப்பாட்டைப் போக்கும் வகையில் நகராட்சிப் பகுதியில் பொதுமக்களுக்கு குடிநீா் வழங்க போா்க்கால அடிப்படையில் வாகனங்கள் மூலம் குடிநீா் வழங்கப்பட்டு வருகிறது.ஆற்றில் வெள்ளம் தணிந்தவுடன் காங்கயம் நகராட்சி பொதுமக்களுக்கு காவிரி கூட்டுக் குடிநீா்த் திட்டத்தின் மூலம் குடிநீா் சீராக வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்