search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "2-வது முறையாக"

    கண்காணிப்பு காமிரா பதிவுகளை கைப்பற்றி விசாரணை

    கன்னியாகுமரி, மார்ச்.2-

    கன்னியாகுமரி நடுத்தெருவை சேர்ந்தவர் லால் சந்த் (வயது 55).

    இவர் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் சன்னதி தெருவில் பாலாஜி பேன்சி ஸ்டோர் என்ற பெயரில் கடை நடத்தி வருகிறார். இங்கு மேலா ளராக பக்சாராம் (50) பணி யாற்றி வருகிறார்.

    இவர் நேற்று முன் தினம் இரவு 9 மணிக்கு வழக்கம் போல் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார். பின்னர் நேற்று காலை கடையை திறப்பதற்காக வந்தார். அப்போது கடையின் உள் பக்க அறையின் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்துள்ளது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    மேலும் கடையின் மேற் கூரை ஆஸ்பெஸ்டாஸ் சீட்டும் உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்த அவர், கடையில்உள்ள கல்லா பெட்டியை திறந்து பார்த்தார். அப்போதுஅதில் வைத்திருந்தரூ.14ஆயிரத்து 500திருட்டு போய் இருந்தது தெரிய வந்தது.

    இதுபற்றி கன்னியாகுமரி போலீசுக்கு அவர் தகவல் கொடுத்தார். அதன்பேரில் துணை சூப்பிரண்டு ராஜா தலைமையில் போலீசார் சம்பவ இடத் துக்கு விரைந்து சென்று விசா ரணைநடத்தினார்கள்.

    கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு தடயங்களை பதிவு செய்த னர். கடந்த 4 மாதங் களுக்கு முன்பு இதே கடையில் மேற் கூரையை உடைத்து ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் கொள்ளை அடிக்க ப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

    அதில் துப்பு துலங்கு வதற்கு முன்பு இப்போது 2-வது முறையாக கொள்ளை நடந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிரா பதிவுகளை கைப்பற்றி அதில் சந்தேகப்படும் படியான உருவம் பதிவாகி உள்ளதா? என ஆய்வு செய்து வருகின்றனர்.

    • சென்னையில் இருந்து யூரியா உரம் ெரயில் மூலம் ஈரோடு வந்தடைந்ததை வேளாண்மை இணை இயக்குநர் சின்னசாமி ஆய்வு செய்தார்.
    • குறைபாடுகள் ஏதேனும் இருக்கும் பட்சத்தில், விவசாயிகள் உடனடியாக சம்பந்தப்பட்ட வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்களுக்கு தகவல் தெரிவிக்கலாம்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் பாசனத்திற்காக தடப்பள்ளி-அரக்கன் கோட்டை மற்றும் காளிங்கராயன் ஆகிய கால்வாய்களிலும், சம்பா பாசனத்திற்காக கீழ் பவானி மற்றும் மேட்டூர் வலது கரை ஆகிய கால்வாய் களிலும் தண்ணீர் திறந்து விடப்பட்டு நெல் சாகுபடி பணிகள் மேற் கொள்ளப்பட்டு வருகிறது.

    மேலும் கரும்பு, வாழை, மஞ்சள், மரவள்ளி, நிலக் கடலை, மக்காச்சோளம், எள் ஆகிய பயிர்களும் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் 'ஒரே நாடு ஒரே உரம்" திட்டத்தின் கீழ் 2-வது முறையாக 'பாரத்" யூரியா உரம் சென்னையில் இருந்து எம்.எப்.எல் நிறுவனத்தின் மூலம் 1,060 மெட்ரிக் டன்கள் ெரயில் மூலம் ஈரோடு வந்தடை ந்ததை வேளாண்மை இணை இயக்குநர் சி.சின்னசாமி ஆய்வு செய்தார்.

    ஆய்வின் போது அவர் தெரிவித்ததாவது:

    ஈரோடு மாவட்டத்தில் விவசாயிகள் பயிர் சாகுபடி மேற்கொள்ள ஏதுவாக தற்போது யூரியா உரம் 4,765 மெ.டன்னும், டி.ஏ.பி உரம் 1,914 மெ.டன்னும், பொட்டாஷ் உரம் 1,205 மெ.டன்னும், காம்ப்ளக்ஸ் உரம் 10,877 மெ.டன்னும், சூப்பர் பாஸ்பேட் 818 மெ.டன்னும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங் களில் போதிய அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

    மேலும் உரங்களின் அதிகபட்ச விற்பனை விலை மற்றும் இருப்பு விவரங்களை விலைப் பலகையில் தெளிவாக எழுதி கடையின் முன் விவசாயிகளுக்கு தெரியும்படி வைப்பது,

    விற்பனை ரசீதில் விவசாயிகள் கையொப்பம் பெற்று உரங்கள் வழங்குவது, அனைத்து விற்பனைகளையும் விற்பனை முனைய கருவி மூலம் மட்டுமே விற்பனை செய்வது, உரிய முதன்மை ச்சான்று படிவங்களை நிறுவனங்களிடமிருந்து பெற்று உரங்களை கொள்முதல் செய்வது,

    உரங்களை அங்கீகரிக்கப்பட்ட இடங்களில் மட்டும் இருப்பு வைத்திருப்பது ஆகியவற்றை தவறாமல் பின்பற்ற அனைத்து உர விற்பனை யாளர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது.

    மேலும் உரங்களுடன் சேர்த்து பிற பொருட்களை கட்டாயப்படுத்தி விவசா யிகளுக்கு வழங்கக்கூடாது. மீறும் உர விற்பனை நிலையங்கள் மீது உரக்கட்டுப்பாடு ஆணை 1985-ன் படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

    குறைபாடுகள் ஏதேனும் இருக்கும் பட்சத்தில், விவசாயிகள் உடனடியாக சம்பந்தப்பட்ட வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்களுக்கு தகவல் தெரிவிக்கலாம்.

    மேலும் விவசாயிகள் தங்கள் வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில் வழங்கப்படும் திரவ உயிர் உரங்களை பெற்று பயன்படுத்துவதோடு திண்டலில் உள்ள வேளாண்மைத் துறையின் மண் பரிசோதனை நிலையத்தில் மண் பரிசோதனை செய்து அதில் பரிந்துரைக்கப்படுவதற்கு ஏற்ப உரங்களை பெற்று பயன்படுத்தி உர செலவை குறைத்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • ஆப்பக்கூடல் ஏரியானது தனது முழு கொள்ளளவான 16.59 மில்லியன் கன அடி நிரம்பி மூன்று வழிந்தோடிகள் வழியாக உபரி நீர் வெளியேறி பவானி ஆற்றில் கலக்கிறது.
    • கடந்த ஜனவரி மாதம் 14-ந் தேதி நிரம்பிய ஏரி தற்போது 2-வது முறையாக ஒரே ஆண்டில் நிரம்பி யுள்ளது குறிப்பிடத்தக்கது.

    ஆப்பக்கூடல்:

    ஈரோடு மாவட்டம் சத்தி-பவானி சாலையின் வழியாக அமைந்துள்ளது ஆப்பக்கூடல் ஏரி. ஆப்பக்கூடல் சாலையி னையொட்டி சுமார் 57 ஏக்கர் பரப்பளவில் இந்த ஏரி அமைந்துள்ளது.‌

    கடந்த சில நாட்களாக அந்தியூர், ஆப்பக்கூடல் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதனால் வரட்டுப்பள்ளம் அணை நிரம்பி உபரி நீர் வெளியேறி வருகிறது.

    இந்நிலையில் நேற்று இரவு ஆப்பக்கூடல் ஏரியானது தனது முழு கொள்ளளவான 16.59 மில்லியன் கன அடி நிரம்பி மூன்று வழிந்தோடிகள் வழியாக உபரி நீர் வெளியேறி பவானி ஆற்றில் கலக்கிறது.

    ஆப்பக்கூடல் ஏரியில் உபரிநீர் வெளியேறி ரம்மி யமாக காட்சியளிப்பதால் இதனை காண பொதுமக்கள் ஆர்வத்துடன் அங்கு வந்து செல்கின்றனர். ஆங்காங்கே சிலர் மீன் பிடித்து செல்வ தையும் காண முடிகிறது.

    கடந்த ஜனவரி மாதம் 14-ந் தேதி நிரம்பிய ஏரி தற்போது 2-வது முறையாக ஒரே ஆண்டில் நிரம்பி யுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • கொட்டரை மருதையாறு நீர்த்தேக்கம் 2-வது முறையாக வழிந்து ஓடுகிறது.
    • ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள கொட்டரை கிராமத்தில் மருதையாற்றின் குறுக்கே நீர்த்தேக்கம் கட்டப்பட்டுள்ளது. இந்த நீர்த்தேக்கம் மூலம் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்தநிலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 5 நாட்களாக பலத்த மழை பெய்து வருவதால் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் கொட்டரை கிராமத்தில் உள்ள மருதையாறு நீர்த்தேக்கம் நிரம்பி வழிகிறது. தற்போது கடல்போல் காட்சியளிக்கும் நீர்த்தேக்கத்தில் இளைஞர்கள், சிறுவர், சிறுமிகள் புகைப்படம் எடுத்து மகிழ்ந்து வருகிறார்கள். கொட்டை மருதையாறு நீர்த்தேக்கம் இந்த ஆண்டில் பெய்த மழையால் 2-வது முறையாக நிரம்பி உள்ளது குறிப்பிடத்தக்கது."

    ×