என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
நீங்கள் தேடியது "பாலியல்தொல்லை"
- அரசு பள்ளிகளில் மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
- அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திமுக அரசை குற்றம்சாட்டி வருகின்றன.
தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சம்பவங்கள் தற்போது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
சமீபத்தில், கிருஷ்ணகிரி, திருச்சி, திருப்பூர் மாவட்டங்களில் பள்ளிகளில் மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
இந்த விவகாரத்தில் அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திமுக அரசை குற்றம்சாட்டி வருகின்றன.
இந்நிலையில், பள்ளிகளில் பாலியல் சார்ந்த துன்புறுத்தல்கள், தொல்லை இருந்தால் தெரிவிக்க வேண்டிய புகார் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, பாலியல் தொடர்பாக புகார்கள் பள்ளி மாணவ, மாணவிகள் 14417 என்ற இலவச தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.
தயக்கமின்றி புகார் தெரிவித்தால் சம்மந்தப்பட்ட நபர்கள் மீது துறைசார்ந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிகல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும், பள்ளிகளில் பாதுகாப்பற்ற சூழல், தேர்வு, உயர்கல்வி வழிகாட்டுதலுக்கும் இலவச தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஆட்டோவில் பெண் கடத்தி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
- கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் எதிரே வெளி ஆட்டோக்களுக்கு அனுமதி இல்லை.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் எதிரே வெளி ஆட்டோக்களுக்கு அனுமதி இல்லை என ஆட்டோக்களுக்கு தாம்பரம் காவல்துறை புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆட்டோவில் பெண் கடத்தி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், கிளாம்பாக்கத்தில் ஆட்டோக்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்க காவல் துறை சார்பில் முடிவு முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி:-
* கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் எதிரே வெளி ஆட்டோக்களுக்கு அனுமதி இல்லை.
* காவல்துறையில் பதிவு செய்த ஆட்டோக்களை மட்டுமே கிளாம்பாக்கம் எதிரில் இருந்து இயக்க வேண்டும்.
* கிளாம்பாக்கத்தில் ஆட்டோவில் ஏறும் முன் பயணிகள் ஓட்டுனரின் பதிவுச் சான்றிதழை பரிசோதிக்கலாம்.
* பதிவு செய்யாமல் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து ஆட்டோக்களை இயக்கினால் பறிமுதல் செய்யப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
- மாணவி தினசரி பள்ளிக்கு தனியார் பஸ்சில் வருவது வழக்கம்.
- திருமணமானதை மறைத்து 10-ம் வகுப்பு மாணவியை கடத்தி சென்றார்.
கோவை:
கோவை அருகே உள்ள இடையர்பாளையத்தை சேர்ந்த 14 வயது மாணவி. இவர் ஆர்.எஸ்.புரத்தில் உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.
மாணவி தினசரி பள்ளிக்கு தனியார் பஸ்சில் வருவது வழக்கம். அப்போது அந்த பஸ்சில் கண்டக்டராக வேலை பார்த்த தொண்டாமுத்தூர் அருகே உள்ள தென்னமநல்லூரை சேர்ந்த சகாதேவன் (வயது 25) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.
இவருக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி மற்றும் குழந்தை உள்ளது. ஆனால் மாணவியிடம் சகாதேவன் திருமணமானதை மறைத்து பழகி வந்தனர். இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. 2 பேரும் கடந்த 6 மாதங்களாக ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர்.
சம்பவத்தன்று மாணவியின் பெற்றோர் உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கும்பகோணத்துக்கு சென்றனர். மாணவி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். இதனை அறிந்த சகாதேவன் மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி அவரை தொண்டாமுத்தூரில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு கடத்தி சென்றார்.
அங்கு வைத்து அவர் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார்.
மாணவியின் வீட்டிற்கு சென்ற அவரது மாமா அவர் வீட்டில் இல்லாதது கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் அவர் மாணவியை செல்போன் மூலமாக தொடர்பு கொண்டு எங்கே இருக்கிறாய் என கேட்டார். அப்போது தான் சகாதேவன் ஆசை வார்த்தை கூறி மாணவியை கடத்தி சென்றது தெரிய வந்தது. இதனையடுத்து அவர் தொண்டாமுத்தூருக்கு சென்று மாணவியை மீட்டார்.
பின்னர் இது குறித்து தொண்டாமுத்தூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் ேபாக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
பின்னர் திருமணமா னதை மறைத்து 10-ம் வகுப்பு மாணவியை கடத்தி சென்று பாலியல் ெதால்லை கொடுத்த சகாதேவனை கைது செய்தனர்.
பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.