என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அண்டோனியோ குட்டரெஸ்"

    • காங்கோவில் ஐ.நா. பணியில் பணியாற்றி வருபவர் இந்திய வீராங்கனை மேஜர் ராதிகா சென்.
    • உண்மையான தலைவர் என ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் பாராட்டினார்.

    நியூயார்க்:

    ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் வீரர்களின் சர்வதேச தினம் மே 30-ம் தேதி அன்று கடைப்பிடிக்கப்படுகிறது.

    இந்நிலையில், காங்கோவில் ஐ.நா. பணியில் பணியாற்றி வரும் இந்திய வீராங்கனை மேஜர் ராதிகா சென், மதிப்புமிக்க 2023 ஐக்கிய நாடுகளின் ராணுவ பாலின வழக்கறிஞர் விருது பெறுகிறார்.

    காங்கோ ஜனநாயகக் குடியரசில் ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் பணியாளராக பணியாற்றினார் மேஜர் சென். இங்குள்ள உலக அமைப்பின் தலைமையகத்தில் நாளை நடைபெறும் விழாவில் குட்டரெசிடம் இருந்து மதிப்புமிக்க 2023 ஐக்கிய நாடுகளின் ராணுவ பாலின வழக்கறிஞர் விருதை பெறுகிறார்.

    அவர் மார்ச் 2023 முதல் ஏப்ரல் 2024 வரை காங்கோ ஜனநாயகக் குடியரசின் கிழக்குப் பகுதியில் பட்டாலியனுக்கான படைப்பிரிவின் தளபதியாக பணியாற்றினார். மேஜர் சுமன் கவானிக்கு பிறகு இந்த மதிப்புமிக்க விருதைப் பெறும் 2-வது இந்திய அமைதி காக்கும் வீரர் மேஜர் சென் ஆவார்.

    மேஜர் சென்னின் சேவையைப் பாராட்டிய குட்டரெஸ், அவர் ஒரு உண்மையான தலைவர் மற்றும் முன்மாதிரி. அவரது சேவை ஐக்கிய நாடுகள் சபைக்கு ஒரு உண்மையான வரவு. வடக்கு கிவுவில் அதிகரித்து வரும் மோதல் சூழலில், அவரது துருப்புக்கள் பெண்கள் மற்றும் சிறுமிகள் உட்பட மோதலால் பாதிக்கப்பட்ட சமூகங்களுடன் தீவிரமாக ஈடுபட்டன. பணிவு, இரக்கம் மற்றும் அர்ப்பணிப்புடன் அவர்களின் நம்பிக்கையைப் பெற்றார் என குறிப்பிட்டுள்ளார்.

    இதுதொடர்பாக, மேஜர் ராதிகா சென் கூறுகையில், விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு நன்றி. சவாலான சூழலில் பணியாற்றும் அனைத்து அமைதி காக்கும் படையினரின் கடின உழைப்புக்கு அங்கீகாரம் அளிப்பதால் இந்த விருது எனக்கு சிறப்பு வாய்ந்தது. மேலும் சமூகத்தில் ஒரு நேர்மறையான மாற்றத்தைக் கொண்டுவர தங்களால் இயன்றதை வழங்குகிறது என தெரிவித்தார்.

    • இஸ்ரேல் மீதான ஈரான் தாக்குதலை உலக நாடுகள் கண்டித்தன.
    • இதைச் செய்யாமல் மவுனம் காப்பவருக்கு இஸ்ரேலில் கால் வைக்க தகுதி இல்லை.

    ஜெருசலேம்:

    இஸ்ரேல், காசா இடையிலான போரில் ஹமாஸ் அமைப்பினருக்கு ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்களும், லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பினரும் ஆதரவு அளித்து வருகின்றனர். அவர்களை அழிக்கும் வகையில் இஸ்ரேல் தொடர்ச்சியாக வான்வழித் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது.

    ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் மற்றும் முக்கியத் தளபதி கொல்லப்பட்டனர். இதற்குப் பதிலடி கொடுப்போம் என ஈரான் தெரிவித்திருந்தது.

    இதற்கிடையே, நேற்று இரவு இஸ்ரேல் மீது ஈரான் 200-க்கும் அதிகமான ஏவுகணைகளை வீசியது. ஹைபர்சோனிக் வகை ஏவுகணை மூலம் இந்த தாக்குதலை ஈரான் நடத்தியதால் அங்கு போர்ப்பதற்றம் நிலவுகிறது.

    இந்நிலையில், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் இஸ்ரேல் நாட்டிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது என அந்நாட்டு வெளியுறவுத்துறை மந்திரி இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்தார். இதுதொடர்பாகஅவர் கூறியதாவது:

    இஸ்ரேல் மண்ணில் ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் காலடி எடுத்து வைக்க தகுதியற்றவர். இஸ்ரேல் மீதான ஈரான் தாக்குதலை உலக நாடுகள் கண்டித்தன. இதனை செய்யாமல் மவுனம் காக்கும் யாருக்கும் இஸ்ரேல் மண்ணில் கால் வைக்க தகுதி கிடையாது. ஹமாஸ், ஹிஸ்புல்லா, ஹவுதி மற்றும் தற்போது ஈரானின் பயங்கரவாதிகளை ஆதரிக்கும் நபர் இஸ்ரேல் வரலாற்றின் ஒரு கறையாக நினைவு கூரப்படுவார் என தெரிவித்தார்.

    • ஐ.நா.சபை பொதுச் செயலாளராக அன்டோனியோ குட்டரெஸ் 2-வது முறை தேர்வானார்.
    • இவர் அரசுமுறைப் பயணமாக இன்று இந்தியா வந்தடைந்தார்.

    புதுடெல்லி:

    ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரான அன்டோனியோ குட்டரெஸ் அரசுமுறைப் பயணமாக இன்று இந்தியா வந்தடைந்தார்.

    போர்ச்சுகல் நாட்டின் முன்னாள் பிரதமரான இவர், கடந்த 2017-ம் ஆண்டு ஐ.நா. சபை பொதுச் செயலாளராக பதவியேற்றார். தொடர்ந்து ஜனவரி 1, 2022ம் ஆண்டு முதல் இரண்டாவது முறையாக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.

    இந்தியா வந்துள்ள ஐ.நா.சபை பொது செயலாளர் பிரதமர் மோடி மற்றும் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் ஆகியோரை சந்திக்க உள்ளார்.

    • ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளராக அன்டோனியோ குட்டரெஸ் 2-வது முறை தேர்வானார்.
    • இவர் அரசுமுறைப் பயணமாக இன்று (அக்டோபர் 18-ம் தேதி ) இந்தியா வருகிறார்.

    நியூயார்க்:

    ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரான அன்டோனியோ குட்டரெஸ், அரசுமுறைப் பயணமாக இன்று (அக்டோபர் 18-ம் தேதி ) இந்தியா வருகிறார்.

    போர்ச்சுகல் நாட்டின் முன்னாள் பிரதமராக இவர் கடந்த 2017-ம் ஆண்டு ஐ.நா. பொதுச் செயலாளராக பதவியேற்றார். தொடர்ந்து ஜனவரி 1, 2022ம் ஆண்டு முதல் இரண்டாவது முறையாக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.

    இந்நிலையில், 3 நாள் அரசுமுறைப் பயணமாக அக்டோபர் 18-ம் தேதி இந்தியா வருகை தர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    இந்தியா வரும் ஐநா பொது செயலாளர் பிரதமர் மோடி மற்றும் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் ஆகியோரை சந்திக்கிறார்.

    இரண்டாவது முறையாக பொறுப்பேற்றுள்ள அண்டோனியோ குட்டரெஸ் இந்தியா வருவது இதுவே முதல் முறை என கூறப்படுகிறது.

    • பாகிஸ்தானுக்கு ஆதரவாக முழு ஐ.நா அமைப்பைத் திரட்ட அனைத்தையும் செய்வேன்.
    • பருவநிலை மாற்றத்தை தடுக்க, பாகிஸ்தான் குறைந்த பங்களிப்பதை வழங்கியுள்ளது.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் பெய்த கனமழை, வெள்ளம் தொடர்பான இயற்கை பேரிடர்களில் சிக்கி கடந்த ஜூன்மாதம் முதல் இதுவரை 1,391 பேர் உயிரிழந்துள்ளனர். வெள்ளம், கனமழை காரணமாக நாடு முழுவதும் 3 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என அந்நாட்டு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், பாகிஸ்தானுக்கு சென்றுள்ள ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார். இஸ்லாமாபாத்தில் உள்ள தேசிய வெள்ள மீட்பு மற்றும் ஒருங்கிணைப்பு மையத்திற்கு பிரதமர் ஷாபாஸ் ஷெரீப்புடன் சென்று ஆய்வு செய்த குட்டரெஸ், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளுக்காக பாகிஸ்தான் அரசை பாராட்டு தெரிவித்தார்.

    பாகிஸ்தானின் தற்போதைய நிலைமை குறித்து சர்வதேச சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அந்நாட்டிற்கு ஆதரவாக முழு ஐ.நா அமைப்பைத் திரட்டவும் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன் என்றும் அவர் உறுதியளித்தார். பருவநிலை மாற்றத்தை தடுக்க பாகிஸ்தான் போன்ற நாடுகள் குறைந்த பங்களிப்பதையே வழங்கியுள்ளதாகவும், இதன் காரணமாக அந்த நாடுகள் அதன் விளைவுகளால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார்.

    இயற்கை பேரழிவு தவறான இலக்கை தாக்கியுள்ளது, பருவநிலை மாற்றத்திற்கு பொறுப்பானவர்கள்தான் இந்த வகையான சவால்களை எதிர்கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். வளர்ந்த நாடுகள் காற்று மாசு அளவை வெகுவாகக் குறைக்க வேண்டும்,வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள சவாலை எதிர்கொள்ள பாகிஸ்தானுக்கு ஆதரவை வழங்குவது சர்வதேச சமூகத்தின் கடமை என்றும் அவர் தெரிவித்தார்.

    • பாகிஸ்தானில் பெய்த கனமழைக்கு இதுவரை 1,300க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
    • கனமழை, வெள்ள பாதிப்புகளை நேரில் பார்வையிட ஐ.நா. பொதுச்செயலாளர் பாகிஸ்தான் சென்றுள்ளார்.

    லாகூர்:

    பாகிஸ்தானில் கடந்த ஜூலை மாதம் தொடங்கிய பருவமழை தீவிரமடைந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டியது. இதன் காரணமாக நாட்டில் பல்வேறு நகரங்களை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.

    நாட்டின் ஒட்டுமொத்த நிலப்பரப்பில் 3-ல் 1 பங்கு தண்ணீரில் மூழ்கியுள்ளதாக பாகிஸ்தான் பருவநிலைமாற்ற மந்திரி தெரிவித்தார்.

    பாகிஸ்தானில் பெய்த கனமழை, வெள்ளம் அது தொடர்பான இயற்கை பேரிடர்களில் சிக்கி இதுவரை 1,391 பேர் உயிரிழந்துள்ளனர். வெள்ளம், கனமழை காரணமாக நாடு முழுவதும் 3 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என அந்நாட்டு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், பாகிஸ்தானில் பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிப்பு அடைந்துள்ள பகுதிகளை பார்வையிட ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் அந்நாட்டுக்குச் சென்றுள்ளார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் வழங்குகிறார். மேலும், உலக நாடுகள் பாகிஸ்தானுக்கு உதவ வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    • பாகிஸ்தானில் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத வகையில் மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளது.
    • அங்கு கனமழை, வெள்ளத்துக்கு இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

    நியூயார்க்:

    பாகிஸ்தானில் தென்மேற்கு பருவமழையையொட்டி கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத வகையில் மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இதனால், நாடு முழுவதும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. வெள்ளம் அதிகம் பாதித்த 110 மாவட்டங்களில் சுமார் 57 லட்சம் பேர் தங்குமிடம் மற்றும் உணவு இல்லாமல் உள்ளனர்.

    பாகிஸ்தானில் கனமழை, வெள்ளத்துக்கு இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர் என தேசிய பேரிடர் ஆணையம் தெரிவித்துள்ளது.

    நாடு முழுவதும் தேசிய அவசர நிலையை அறிவித்து, மீட்பு நடவடிக்கைகளை அரசு துரிதப்படுத்தி வருகிறது. பருவமழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின் விளைவாக பாகிஸ்தானின் மூன்றில் ஒரு பகுதி நீரில் மூழ்கியுள்ளதாக அந்நாட்டின் பருவநிலை மாற்றத்துறை மந்திரி ஷெர்ரி ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில், பாகிஸ்தானில் வெள்ளத்தால் சேதமடைந்த பகுதிகளை ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலாளர் அண்டோனியோ குட்டரெஸ் அடுத்த வாரம் பார்வையிட உள்ளேன் என தெரிவித்துள்ளார்.

    இலங்கை அதிபர் சிறிசேனாவை தொடர்பு கொண்ட ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ், அங்கு விரைவில் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்துமாறு வலியுறுத்தினார். #UNChief #AntonioGuterres #SriLanka
    நியூயார்க்:

    இலங்கையில் பிரதமராக இருந்த ரனில் விக்ரமசிங்கேயை கடந்த 26-ந் தேதி அதிரடியாக நீக்கிய அதிபர் சிறிசேனா, புதிய பிரதமராக முன்னாள் அதிபர் ராஜபக்சேவை நியமித்தார். ஆனால் தனது பதவிநீக்கம் சட்டவிரோதமானது எனக்கூறிய ரனில் விக்ரமசிங்கே, தனது பெரும்பான்மையை நிரூபிக்க நாடாளுமன்றத்தை கூட்டுமாறு வலியுறுத்தினார்.

    ஆனால் இதற்கு மறுத்த அதிபர் சிறிசேனா, நாடாளுமன்றத்தையும் வருகிற 16-ந் தேதி வரை முடக்கி வைத்து உத்தரவிட்டார். இதற்கு சபாநாயகர் கரு ஜெயசூர்யா பலத்த எதிர்ப்பு தெரிவித்தார். அத்துடன் நாடு முழுவதும் போராட்டங்களும், வன்முறையும் வலுத்து வருகிறது. இலங்கையின் இந்த திடீர் நெருக்கடி நிலைக்கு உலக நாடுகளும் கவலை வெளியிட்டன.



    இதைத்தொடர்ந்து சபாநாயகர் கரு ஜெயசூர்யாவுடன் ஆலோசனை நடத்திய அதிபர் சிறிசேனா, நாடாளுமன்ற முடக்கத்தை திரும்ப பெற்றார். எனவே நாடாளுமன்றம் 5-ந் தேதி (நாளை) கூடும் என முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால் இதை ராஜபக்சேவின் ஆதரவாளர்கள் மறுத்தனர்.

    இதனால் நாடாளுமன்றம் கூடுவதில் சந்தேகம் இருந்து வந்த நிலையில், சபாநாயகர் நேற்று முன்தினம் அதிபர் சிறிசேனாவை தொடர்பு கொண்டு பேசினார். பின்னர் அவர் நாடாளுமன்றத்தை 7-ந் தேதி (புதன்கிழமை) கூட்டுவதற்கு அதிபர் ஒப்புக்கொண்டதாக அறிவித்தார். இதன் மூலம் நாடாளுமன்றம் கூடுவது உறுதி செய்யப்பட்டது.

    இந்த நிலையில் அதிபர் சிறிசேனாவை ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பங்களுக்கு கவலை தெரிவித்த குட்டரெஸ், அங்கு அனைத்துக்கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி நிலைமையை சீராக்குவதற்கு உதவ முன்வந்தார்.

    மேலும் இலங்கையில் அமைதி, பாதுகாப்பு மற்றும் சட்டத்தின் ஆட்சியை உறுதி செய்ய வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டிய குட்டரெஸ், அங்கு நாடாளுமன்றத்தை கூட்டி விரைவில் வாக்கெடுப்பு நடத்த நடவடிக்கை எடுக்குமாறும் சிறிசேனாவை வலியுறுத்தினார்.

    இதைப்போல இலங்கைக்கான ஐ.நா. பிரதிநிதியான ஹனா சிங்கரும் அதிபர் சிறிசேனா, சபாநாயகர் கரு ஜெயசூர்யா உள்ளிட்ட தலைவர்களை நேரில் சந்தித்து, ஆன்டனியோ குட்டரெசின் செய்தியை அளித்தார்.

    இதற்கிடையே நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க தனக்கு போதுமான உறுப்பினர்களின் ஆதரவு தற்போது இருப்பதாக ராஜபக்சே கூறியுள்ளார். ரனில் விக்ரமசிங்கே கட்சியை சேர்ந்த குறைந்தது 5 உறுப்பினர்களாவது தன்னுடைய அணிக்கு மாறி இருப்பதாகவும் அவர் கூறினார். இதைப்போல தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து விலகி தனியாக செயல்பட்டு வரும் வன்னி மாவட்ட எம்.பி. சிவசக்தி ஆனந்தனும் ராஜபக்சேவுக்கு ஆதரவு அளிப்பதாக கூறியுள்ளார். இதன் மூலம் தனக்கு மந்திரி பதவி கிடைக்கும் எனவும், அதனால் தொகுதி மக்களுக்கு மிகப்பெரிய சேவை செய்ய முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

    மேலும் தமிழ் தேசிய கூட்டமைப்பை சேர்ந்த யாழ்ப்பாண மாவட்ட எம்.பி.க்கள் 2 பேர் மற்றும் முல்லைத்தீவு, மன்னாரை சேர்ந்த தலா ஒரு எம்.பி. என மேலும் 4 பேரும் ராஜபக்சேவை ஆதரிப்பார்கள் எனவும் அவர் கூறியதாக தகவல் வெளியாகி இருக்கிறது. முன்னதாக தமிழ் எம்.பி. ஒருவர் நேற்று முன்தினம் ராஜபக்சே அணிக்கு தாவி, மந்திரியாக பதவியேற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

    225 உறுப்பினர் இலங்கை நாடாளுமன்றத்தில் ஆட்சியமைப்பதற்கான பெரும்பான்மை பெற 113 உறுப்பினர்களின் ஆதரவு வேண்டும். இலங்கையில் அரசியல் நெருக்கடி ஏற்படுவதற்கு முன் ரனில் விக்ரமசிங்கேவின் கட்சிக்கு 106 உறுப்பினர்களும், ராஜபக்சே, சிறிசேனா கூட்டாணிக்கு 95 எம்.பி.க்களும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
    அணு ஆயுத ஒப்பந்த விவகாரத்தில் அமெரிக்காவும், ரஷியாவும் பேசித் தீர்த்துக்கொள்ளும் என்று ஐ.நா. சபை பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். #UNChief #AntonioGuterres
    நியூயார்க்:

    ரஷியாவுடன் 1987-ம் ஆண்டு செய்து கொண்ட ஐ.என்.எப். ஒப்பந்தம் என்று அழைக்கப்படுகிற நடுத்தர தூர அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகிக்கொள்ளப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கடந்த 20-ந் தேதி அதிரடியாக அறிவித்தார்.

    இந்த ஒப்பந்தத்தை மீறி ரஷியா செயல்படுவதாக குற்றம் சாட்டி, இந்த முடிவை டிரம்ப் அறிவித்தது உலக அரங்கை அதிர வைத்துள்ளது. இது ஆயுதப்போட்டிக்கு வழிவகுக்கும் என சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

    ஆனால் இந்தப் பிரச்சினையை அமெரிக்காவும், ரஷியாவும் பேசித் தீர்த்துக்கொள்ளும் என்று ஐ.நா. சபை பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    இதுபற்றி அவரது செய்தி தொடர்பாளர் பர்ஹான் ஹக் கூறுகையில், “ ஐ.என்.எப். ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்கா கூறி உள்ள கருத்தை ஐ.நா. சபை பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் அறிந்துள்ளார். அதே நேரத்தில் தற்போது ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுகளை இரு நாடுகளும் பேசித் தீர்த்துக்கொள்ளும் என்று அவர் நம்பிக்கை வைத்துள்ளார்” என்று குறிப்பிட்டார்.

    இதற்கிடையே அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன், ரஷியாவுடன் பேச்சு வார்த்தை நடத்துவதற்காக மாஸ்கோ போய்ச் சேர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.  #UNChief #AntonioGuterres 
    ×