search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அபிஷேக் பானர்ஜி"

    • காங்கிரஸ் கட்சி எம்.பி. கே சுரேஷ் சபாநாயகர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.
    • இது தொடர்பாக எங்களிடம் ஆலோசிக்கவில்லை என திரிணாமுல் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

    துணை சபாநாயகர் பதவியை விட்டுக்கொடுக்க மறுத்துள்ள காரணத்தினால் காங்கிரஸ் கட்சி கே. சுரேஷை சபாநாயகர் போட்டிக்கு நிறுத்தியுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஓம் பிர்லா நிறுத்தப்பட்டுள்ளார். ஒருமனதாக சபாநாயகரை தேர்வு செய்ய என்டிஏ விரும்புகிறது. துணை சபாநாயகர் பதவியை விட்டுக்கொடுத்தால்தான் ஒருமனதாக சபாநாயகரை தேர்வு செய்ய சம்மதிப்போம் என காங்கிரஸ் தெரிவித்துள்ளார்.

    ஒருவேளை போட்டி ஏற்பட்டால் காங்கிரஸ் கட்சி அனைத்து எதிர்க்கட்சிகளிடமும் ஆதரவு கேட்க வேண்டும். திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு 30 இடங்களுக்கு மேல் உள்ளது. இதனால் அந்த கட்சியின் ஆதரவும் முக்கியது.

    இந்நிலையில் இந்தியா கூட்டணி சார்பில் சபாநாயகர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்வது குறித்து எங்களிடம் எந்தவிதமான ஆலோசனையும் நடத்தப்படவில்லை என திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. அபிஷேக் பானர்ஜி தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அபிஷேக் பானர்ஜி கூறுகையில் "இது தொடர்பாக எங்களை யாரும் தொடர்பு கொள்ளவில்லை. எந்தவிதமான பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை. துரதிருஷ்டவசமாக ஒருதலைபட்சமான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. எங்களுடைய கட்சி தலைவர் மம்தா பானர்ஜி சபாநாயகர் தேர்தல் தொடர்பாக முடிவு செய்வார்" என்றார்.

    மக்களவையில் எம்.பி.க்கள் பதவி ஏற்றுக் கொண்டிருந்தபோது அபிஷேக் பார்னஜி உடன் ராகுல் காந்தி பேசிக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கட்சிகளை உடைக்கும் விளையாட்டில் இறங்க பா.ஜனதா முயற்சி செய்தும், அதில் வெற்றி பெற முடியவில்லை.
    • எங்கள் கட்சியில் இருந்து இரண்டு எம்.பி.க்களை அவர்கள் இழுத்துக் கொண்டனர்.

    மேற்கு வங்காளத்தில் உள்ள முர்சிதாபாத் மக்களவை தொகுதிக்கான பகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் அபிஷேக் பானர்ஜி ரோடு ஷோ நடத்தினார்.

    அப்போது அபிஷேக் பானர்ஜி கூறியதாவது:-

    கட்சிகளை உடைக்கும் விளையாட்டில் இறங்க பா.ஜனதா முயற்சி செய்தும், அதில் வெற்றி பெற முடியவில்லை. எங்கள் கட்சியில் இருந்து இரண்டு எம்.பி.க்களை அவர்கள் இழுத்துக் கொண்டனர். அதற்குப் பதிலாக அவர்களுடைய எம்.பி.க்கள் அர்ஜுன் சிங், பாபுல் சுப்ரியோ எங்கள் கட்சியில் இணைந்தனர்.

    சமீபத்தில் அமலாக்கத்துறை சோதனையை பயன்படுத்தி தபாஸ் ராய்-ஐ இணைத்துக் கொண்டது. பா.ஜனதாவின் குறைந்தது டாப் 10 தலைவர்கள் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைய வரிசையில் உள்ளனர். சரியான நேரத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தனது கதவை திறக்கும். பா.ஜனதா மேற்கு வங்காள மாநிலத்தில் இருந்து வெளியேற்றப்படும்" என்றார்.

    இதற்கு பா.ஜனதா செய்தி தொடர்பாளர் சமிக் பட்டச்சார்யா பதில் கூறுகையில் "இது தொடர்பாக கூறுவதில் ஒன்றுமே இல்லை. மேற்கு வங்காளத்தில் தோல்வியை சந்திக்க இருக்கும் விரக்தியில் அரசியல் சொல்லாடல்தான் இது. மக்களவை தேர்தல் முடிந்த உடன், திரிணாமுல் காங்கிரஸ் அட்டை பெட்டை போல் சிதைந்து போகும்" என்றார்.

    • தேர்தல் ஆணையம் பாஜகவுக்கு சாதகமாக உள்ளது - மம்தா பானர்ஜி
    • திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி அபிஷேக் பானர்ஜி ஹெலிகாப்டர் சோதனை செய்யப்பட்டது

    அலிபுர்துவாரில் நடைபெற்ற தேர்தல் பிரசார பேரணியில் கலந்து கொண்டு பேசிய மம்தா பானர்ஜி, "தேர்தல் ஆணையம் பாஜகவுக்கு சாதகமாக உள்ளது. மேற்கு வங்காளத்தில் ஏதேனும் ஒரு கலவரம் நடந்தால் கூட ஆணையத்திற்கு வெளியே உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவேன் என்று தெரிவித்துள்ளார்.

    பாஜகவின் உத்தரவின் பேரில் முர்ஷிதாபாத் காவல் துணைக் கண்காணிப்பாளரை தேர்தல் ஆணையம் நீக்கியுள்ளது. இப்போது, முர்ஷிதாபாத் மற்றும் மால்டாவில் கலவரம் நடந்தால், அதற்கு தேர்தல் ஆணையமே பொறுப்பாகும். கலவரம் மற்றும் வன்முறையைத் தூண்டும் வகையில், போலீஸ் அதிகாரிகளை மாற்ற பாஜக விரும்புகிறது.

    நேற்று திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி அபிஷேக் பானர்ஜி ஹெலிகாப்டர் சோதனை செய்யப்பட்டது. இதே போல் தேர்தல் பிரச்சார வேலைகளில் ஈடுபடும் பா.ஜ.க தலைவர்களின் ஹெலிகாப்டர்களிலும், தேர்தல் ஆணைய பறக்கும் படை சோதனை செய்யுமா?" என்று அவர் கேள்வி எழுப்பினார்.

    அபிஷேக் பானர்ஜியை தொடர்ந்து, காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி ஹெலிகாப்டரும் சோதனைக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.

    • தொகுதிப் பங்கீடு குறித்த முடிவை முதலில் எடுப்பதே கூட்டணி தர்மமாகும்.
    • இதற்காக நாங்கள் 7 மாதமாக காத்திருக்கிறோம் என்றார் எம்.பி. அபிஷேக் பானர்ஜி.

    கொல்கத்தா:

    மேற்கு வங்காள மாநிலத்தில் மக்களவைத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடும் என கடந்த வாரம் மம்தா பானர்ஜி அறிவித்தார்.

    இந்நிலையில், மம்தா பானர்ஜியின் உறவினரும், எம்.பி.யுமான அபிஷேக் பானர்ஜி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    தொகுதிப் பங்கீடு குறித்த முடிவை முதலில் எடுப்பதே கூட்டணி தர்மமாகும்.

    இதற்காக நாங்கள் 7 மாதமாகக் காத்திருக்கிறோம். ஆனால், காங்கிரஸ் எந்த முடிவையும் அறிவிக்கவில்லை.

    தேசிய அளவில் காங்கிரசுடன் திரிணாமுல் காங்கிரஸ் கூட்டணியில் நீடித்து வருகிறது.

    ஆனாலும் மேற்கு வங்காளத்தில் ஜனாதிபதி ஆட்சி நடைபெற வேண்டும் என மாநில காங்கிரஸ் தலைவர் ஆதீர் ரஞ்சன் சவுத்ரி கூறி வருகிறார். இந்தக் கோரிக்கை பா.ஜ.க.வுடையதா அல்லது காங்கிரசுடையதா? எங்களுடைய பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு என தெரிவித்தார்.

    இதன்மூலம் காங்கிரஸ் மீது மம்தா மீண்டும் கடும் அதிருப்தி அடைந்து இருப்பதாகக் கருதப்படுகிறது.

    • மத்திய பாதுகாப்புப்படை உதவியுடன் வெற்றி பெற வெளியில் இருக்கும் நபர்கள் விரும்புகிறார்கள்
    • எந்த தேர்தலாக இருந்தாலும் மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ்தான் வெற்றி பெறும்

    மேற்கு வங்காள மாநிலத்தில் அடுத்த மாதம் 8-ந்தேதி பஞ்சாயத்து தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கலின்போது வன்முறை ஏற்பட்டது. இதில் 6 பேர் உயிரிழந்தனர். பா.ஜனதா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மத்திய பாதுகாப்புப்படை உதவியுடன் வேட்புமனு, தேர்தல் நடைபெற வேண்டும் என மேற்கு வங்காள மாநில உயர்நீதிமன்றத்தில் முறையிட்டனர். நீதிமன்றமும் மத்திய பாதுகாப்புப்படை பாதுகாப்புடன் வேட்புமனு நடைபெற வேண்டும் என உத்தரவிட்டது.

    உயர்நீதிமன்ற தீர்ப்பை பா.ஜனதா கட்சி வரவேற்றுள்ளது.

    இந்த நிலையில் மம்தா பானர்ஜியின் உறவினரும், எம்.பி.யுமான அபிஷேக் பானர்ஜி தெற்கு 24 பர்கானஸ் மாவட்டத்தில் உள்ள டைமண்ட் ஹார்பர் நாடாளுமன்ற தொகுதிக்குபட்ட பகுதியில் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்டார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    பா.ஜனதா இந்த பஞ்சாயத்து தேர்தலில் எல்லா இடங்களிலும் தோல்வியை சந்திக்கும். அதேபோல் வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலிலும் தோல்வியை சந்திக்கும். இதை குறித்து வைத்துக்கொள்ளுங்கள். சட்டசபை, பாராளுமன்றம் என எந்த தேர்தலாக இருந்தாலும் மக்கள் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக வாக்கு அளிப்பார்கள். பா.ஜனதா புறந்தள்ளப்படுவார்கள்.

    மத்திய பாதுகாப்புப்படை துணையுடன் வெற்றி பெறலாம் என்று யாராவது நினைத்தால், அது அவர்களின் தவறாக இருக்கும். உங்களுக்கு (பா.ஜனதா) பாதுகாப்புப்படை உளளது. ஆனால், எங்களுக்கு மக்களுடைய ஆதரவு உள்ளது. எங்களுக்கு ஆதரவாக இருக்கும் மக்களை நாங்கள் நம்புகிறோம்.

    தேர்தலுக்கு முன் பிரச்சாரத்திற்காக இங்கு வரும் வெளியாட்களை சார்ந்து நாங்கள் இருக்கவில்லை. ஏனென்றால், அதற்குப்பின் தேவைப்படும்போது அவர்கள் இங்கு இருப்பதில்லை.

    திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் வெளியில் இருப்பவர்களை எதிர்த்து போராட வேண்டும். அவர்கள் மத்திய படை துணையுடன் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் பஞ்சாயத்து தேர்தலில் வெற்றிபெற்று விடலாம என நம்புகிறார்கள்.

    மத்திய அரசு எனது குடும்பத்தை துன்புறுத்துகிறது. இதனால் என்னுடைய அரசியல் நடவடிக்கையை தடுத்துவிட முடியாது.

    இவ்வாறு அபிஷேக் பானர்ஜி தெரிவித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மேற்கு வங்காள மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி. இவரின் அண்ணன் மகன் அபிஷேக் பானர்ஜி.
    • அபிஷேக் பானர்ஜி நாடாளுமன்ற உறுப்பினராகவும் உள்ளார். இவரது மனைவி ருஜிரா.

    மேற்கு வங்காள மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி. இவரின் அண்ணன் மகன் அபிஷேக் பானர்ஜி. நாடாளுமன்ற உறுப்பினராகவும் உள்ளார். இவரது மனைவி ருஜிரா. இவரிடம் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை பல முறை பலகோடி ரூபாய் சுரங்க மோசடி தொடர்பாக விசாரணை நடத்தியுள்ளது.

    இந்த நிலையில் இவர் இன்று கொல்கத்தா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து வெளிநாடு புறப்பட சென்றார். அப்போது அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார்.

    • மம்தாவின் உறவினரான அபிஷேக் பானர்ஜி லோக்சபா எம்.பி.யாகவும், அக்கட்சியின் பொதுச் செயலாளராகவும் உள்ளார்.
    • சட்டவிரோத பணப் பரிமாற்ற விசாரணைக்காக அமலாக்கத்துறை முன் அபிஷேக் பானர்ஜி இன்று ஆஜரானார்.

    கொல்கத்தா:

    மேற்கு வங்காளத்தில் முதல் மந்திரி மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. மம்தாவின் உறவினரான அபிஷேக் பானர்ஜி அக்கட்சியின் பொதுச் செயலாளராக உள்ளார்.

    மேற்கு வங்காளத்தின் அன்சோல் பகுதியில் நடந்த நிலக்கரி சுரங்க முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ.யும், அமலாக்கத் துறையும் வழக்குப்பதிவு செய்துள்ளன. இதில் முதல் மந்திரி மம்தா பானர்ஜியின் சகோதரர் மகனும், திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவருமான அபிஷேக் பானர்ஜி எம்.பி.க்கும் தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது.

    இந்த விவகாரத்தில் ரூ.1,300 கோடிக்கு சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதில் அபிஷேக் பானர்ஜி மற்றும் அவரது மனைவிக்கும் தொடர்பிருப்பதாக புகார் எழுந்தது. இது குறித்து இருவரிடமும் அமலாக்கத் துறை ஏற்கனவே விசாரணை நடத்தியது.

    இதற்கிடையே, அபிஷேக் பானர்ஜியின் உறவினரான மேனகாவின் வங்கிக்கணக்கில் நடந்த பணப் பரிமாற்றம் குறித்து விசாரிப்பதற்காக, செப்டம்பர் 2-ம் தேதி கொல்கத்தாவில் உள்ள அலுவலகத்தில் ஆஜராகும்படி அபிஷேக் மற்றும் மேனகாவுக்கும் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியிருந்தது.

    இந்நிலையில், சட்டவிரோத பணப் பரிமாற்ற விசாரணைக்காக கொல்கத்தாவில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் அபிஷேக் பானர்ஜி இன்று ஆஜரானார்.

    அப்போது அவர் கூறுகையில், விசாரணைக்காக என்னை 30 முறை அழைத்தாலும் நான் வருவேன். பா.ஜ.க. காலில் விழமாட்டேன். தேசியக் கொடி விவகாரத்தில் அமித்ஷாவின் மகனைத் தாக்கியதால் அமலாக்கத்துறை அல்லது சிபிஐ மூலம் என்னை அச்சுறுத்த முடியாது என தெரிவித்தார்.

    • மம்தாவின் உறவினரான அபிஷேக் பானர்ஜி லோக்சபா எம்.பி. மற்றும் அக்கட்சியின் பொதுச் செயலாளராகவும் உள்ளார்.
    • சட்டவிரோத பணப் பரிமாற்றம் விசாரணைக்கு ஆஜராகும்படி அபிஷேக் பானர்ஜிக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியது.

    கொல்கத்தா:

    மேற்கு வங்காளத்தில் முதல் மந்திரி மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. மம்தாவின் உறவினரான அபிஷேக் பானர்ஜி அக்கட்சியின் பொதுச் செயலாளராக உள்ளார்.

    இதற்கிடையே, மேற்கு வங்காளத்தின் அன்சோல் பகுதியில் நடந்த நிலக்கரி சுரங்க முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ.யும், அமலாக்கத் துறையும் வழக்குப்பதிவு செய்துள்ளன. இதில் முதல் மந்திரி மம்தா பானர்ஜியின் சகோதரர் மகனும், திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவருமான அபிஷேக் பானர்ஜி எம்.பி.க்கும் தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது.

    இந்த விவகாரத்தில் ரூ.1,300 கோடிக்கு சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதில் அபிஷேக் பானர்ஜி மற்றும் அவரது மனைவிக்கும் தொடர்பிருப்பதாக புகார் எழுந்தது. இது குறித்து இருவரிடமும் அமலாக்கத் துறை ஏற்கனவே விசாரணை நடத்தியது.

    இந்நிலையில், அபிஷேக் பானர்ஜியின் உறவினரான மேனகாவின் வங்கிக்கணக்கில் நடந்த பணப் பரிமாற்றம் குறித்து விசாரிப்பதற்காக, வரும் 2ம் தேதி கொல்கத்தாவில் உள்ள அலுவலகத்தில் ஆஜராகும்படி அபிஷேக் மற்றும் மேனகாவுக்கும் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது.

    ×