என் மலர்
நீங்கள் தேடியது "பத்மா விருதுகள்"
- 2026-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகளுக்கு விண்ணப்பிக்கும் நடைமுறை தொடங்கியது.
- இந்த விருதுகளுக்கு ஜூலை மாதம் 31-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
புதுடெல்லி:
இந்தியாவின் உயரிய விருதுகளான பத்ம விபூஷண், பத்ம பூஷண் மற்றும் பத்மஸ்ரீ ஆகிய விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தன்று அறிவிக்கப்படும்.
கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூகப்பணி, அறிவியல், பொறியியல், பொது விவகாரங்கள், சிவில் சேவை உள்ளிட்ட துறைகளில் சிறந்தவர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. இனம், தொழில், பதவி, பாலின வேறுபாடின்றி அனைத்து நபர்களும் இந்த விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
இந்நிலையில், 2026-ம் ஆண்டுக்கான விருதுகளுக்கு விண்ணப்பிக்கும் நடைமுறை நேற்று தொடங்கியது. ஜூலை 31-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். தேசிய விருதுகள் இணையதளமான https://awards.gov.in என்ற தளத்தில் மட்டுமே விண்ணப்பங்களை அனுப்பமுடியும்.
இதுதொடர்பான விரிவான விவரங்கள் மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணையதளமான https://mha.gov.in மற்றும் பத்ம விருதுகளுக்கான இணைய தளமான https://padmaawards.gov.in என்ற தளத்திலும் உள்ளன. விருதுகள் தொடர்பான விதிகள் இணையதளத்தில் https://padmaawards.gov.in/AboutAwards.aspx என்ற இணைப்பில் வெளியிடப்பட்டுள்ளன என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
- பொதுசேவை புரிந்தவர்கள் பத்மா விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம்.
- குடியரசு தின விழா அன்று பத்ம விருதுகளை ஒன்றிய அரசு ஒவ்வொரு ஆண்டும் வழங்கி வருகிறது.
சேலம்:
சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
குடியரசு தின விழா அன்று பத்ம விருதுகளை ஒன்றிய அரசு ஒவ்வொரு ஆண்டும் வழங்கி வருகிறது. நமது தேசத்திற்கு நற்பெயரையும், புகழையும் ஈட்டித் தந்து தன்னலமிக்க பொது சேவை, தனித்துவமான வேலை மற்றும் விதிவிலக்கான சாதனை போன்ற மேன்மை பொருந்திய பணிகளுக்காக ஒன்றிய அரசாங்கம் பத்ம விருதுகள் வழங்க அறிவித்துள்ளது.
கலை, அறிவியல், இலக்கியம், விளையாட்டு, மருத்துவம், கல்வி, தொழில்நுட்பம், சமூக நலன், பொதுப் பணிகள், தொழில் மற்றும் இதர பிரிவுகளில் மிகவும் குறிப்பிடத்தக்க மற்றும் அசாதாரணமான பணிகள் ஆற்றியவர்களுக்கு வருகிற 2023-ம் ஆண்டு நடைபெற உள்ள குடியரசு தின விழா அன்று பத்ம விருதுகள் வழங்க அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விருதுகளுக்கான விண்ணப்பங்களை www.padmaawards.gov.in என்ற இணையதள முகவரியில் 15-ந் தேதிக்குள் விண்ணப்பித்துப் பயன்பெறலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.