search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாடக்குறிப்பு"

    • இணையதள முகவரியில் விளம்பர அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
    • தேர்விற்கான பாடக்கு றிப்புகள் வழங்கப்பட்டு, மாதிரி தேர்வுகளும் நடத்தப்பட உள்ளது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி வெளியிட்டுள்ள செய்திகு றிப்பில் கூறியிரு ப்பதாவது:-

    தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணை யத்தால் தமிழக அரசில் காலியாக உள்ள பல்வேறு காலிப்பணி யிடங்களுக்கா ன அறிவிப்பு தொகுதி 1 மற்றும் 2 மற்றும் தொகுதி 4 தேர்வுகளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட உள்ளது.

    மேலும், இந்த தேர்வுகள் குறித்த கல்வித்தகுதி, வயது வரம்பு, காலிப்பணியிடங்கள் போன்ற இதர விவரங்களை www.tnpsc.gov.in என்ற இணையதள முகவரியில் விளம்பர அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

    மேற்கண்ட அறிவிப்பை எதிர்நோக்கி இலவச பயிற்சி வகுப்புகள் மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் வழியாக தருமபுரம் ஆதீனம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாளை (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு தொடங்கி வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.இந்த தேர்விற்கான பாடக்கு றிப்புகள் வழங்கப்பட்டு, மாதிரி தேர்வுகளும் நடத்தப்பட உள்ளது.

    எனவே, இந்த பயிற்சி வகுப்பில் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த அரசு பணிக்கு தயாராகுபவர்கள் தங்களது பெயர் மற்றும் கல்வித்தகுதியை குறிப்பிட்டு 94990 55904 என்ற வாட்ஸ்-அப் எண்ணிற்கு தகவல் அனுப்பி தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும். போட்டி தேர்வு எழுதுபவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி பயனடையலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நில அளவர், வரைவாளர், அளவர், உதவி வரைவாளர் உள்ளிட்ட 1089 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
    • தேர்வுக்கு தயார் செய்யும் விதம், தேர்வுக்கான பாடக்குறிப்புகள், தேர்வில் வெற்றி பெறுவதற்கான ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளன.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிரு ப்பதாவது:-

    தமிழ்நாடுஅரசு பணியாளர் தேர்வாணைய த்தால் நில அளவர், வரைவாளர், அளவர், உதவி வரைவாளர் உள்ளிட்ட 1089 காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியி டப்பட்டுள்ளது.

    இதற்கான கல்வித்குதி டிப்ளமோ சிவில், ஐ.டி.ஐ. சர்வேயர், ஐ.டி.ஐ. வரைவாளர் முடித்திருக்க வேண்டும். இந்த தேர்வு நவம்பர் மாதம் 6-ந்தேதி நடைபெறுகிறது.

    இந்த தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு தஞ்சை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக நாளை (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு தொடங்கி நடத்தப்படுகிறது.

    அன்றையதினம் தேர்வு க்கு தயார் செய்யும்விதம், தேர்வுக்கான பாடக்குறிப்புகள், தேர்வில் வெற்றி பெறு வதற்கான ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளன.

    பெயரை பதிவு செய்யலாம் . மேலும் தொடர்ந்து இந்த பயிற்சி வகுப்பானது அனுபவிமிக்க சிறப்பு வல்லுனர்களை கொண்டு நடத்தப்படுவதோடு, பாடக்குறிப்புகள் வழங்கப்பட்டு, மாதிரித்தேர்வுகளும் நடத்தப்பட உள்ளன. எனவே போட்டித்தேர்வுக்கு தயாராகும் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் தங்களது பெயர், கல்வித்த குதியினை 8110919990 என்ற வாட்ஸ்-அப் எண்ணிற்கு அனுப்பிபெயரை பதிவு செய்து கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×