search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தண்ணீர் வரத்து அதிகரிப்பு"

    • சுற்றுவட்டார பகுதியில் ஏரி, குளம் உள்ளிட்ட ஏராளமான நீர்நிலைகள் உள்ளன.
    • கடந்த 6 மாதங்களாக எதிர்பார்த்த அளவு மழை பெய்யாததால் நீர்நிலைகள் முற்றிலும் தண்ணீர் இன்றி வறண்டு போய் காணப்பட்டது.

    பள்ளிபாளையம்:

    நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் சுற்றுவட்டார பகுதியில் ஏரி, குளம் உள்ளிட்ட ஏராளமான நீர்நிலைகள் உள்ளன. கடந்த 6 மாதங்களாக எதிர்பார்த்த அளவு மழை பெய்யாததால் நீர்நிலைகள் முற்றிலும் தண்ணீர் இன்றி வறண்டு போய் காணப்பட்டது. இதனால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டது. பல இடங்களில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக பள்ளிபாளையம் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் நீர்நிலைக்கு மழைநீர் வர தொடங்கியுள்ளது. வறண்ட நிலையில் காணப்பட்ட நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளதால் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது. இதனால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • மேற்கு தொடர்ச்சி மலைப்ப குதியில் மீண்டும் கன மழை பெய்யத் தொடங்கியுள்ளது.
    • இன்று காலை முல்லைப்பெரியாறு அணைக்கு 737 கன அடி நீர் வருகிறது. அணையின் நீர் மட்டம் 120.10 அடியாக உள்ளது.

    கூடலூர்:

    கேரளாவில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு ள்ளது. குறிப்பாக இடுக்கி மாவட்டத்தில் மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுக்க ப்பட்டுள்ளது. இதனால் மேற்கு தொடர்ச்சி மலைப்ப குதியில் மீண்டும் கன மழை பெய்யத் தொடங்கியுள்ளது.

    கடந்த சில நாட்களாக நீர் வரத்து குறைந்திருந்த நிலையில் இன்று காலை முல்லைப்பெரியாறு அணைக்கு 737 கன அடி நீர் வருகிறது. அணையின் நீர் மட்டம் 120.10 அடியாக உள்ளது. அணையில் இருந்து தமிழக பகுதிக்கு 400 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    வைகை அணையின் நீர் மட்டம் 49.59 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் மதுரை மாநகர குடிநீருக்காக 69 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 47.95 அடி. வரத்தும் திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணை நீர் மட்டம் 76.88 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    பெரியாறு 24.2, தேக்கடி 21.6, கூடலூர் 2.6, உத்தம பாளையம் 1.4, சண்முகாநதி அணை 2.2 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.

    • நீர்மட்டம் 117 அடியாக பராமரிப்பு
    • அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது

    திருவண்ணாமலை:

    கிருஷ்ணகிரி அணையில் இருந்து தென்பெண்ணை ஆற்றில் தொடர்ந்து தண்ணீர் திறந்து விடப்படுவதால், திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 15,360 கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. அணையின் பாதுகாப்பு கருதி தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்படுகிறது. 119 அடி உயரம் உள்ள அணையின் நீர்மட்டம் 117 அடியாக பராமரிக்கப்படுகிறது. அணையில் 7,875 மில்லியன் கன அடி தண்ணீர் உள்ளது.

    59. 04 அடி உயரம் உள்ள குப்ப நத்தம் அணையின் நீர்மட்டம் 57 அடியாக தொடர்ந்து பராமரிக்கப்படுகிறது. அணைக்கே வினாடிக்கு 280 கன அடி தண்ணீர் செய்யாற்றில் வெளியேற்றப்படுகிறது. அணையில் 644.30 மில்லியன் கன அடி தண்ணீர் உள்ளது அணைப்பகுதியில் 28.1 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

    22.97 அடி உயரம் உள்ள மிருகண்டா நதி அணையின் நீர்மட்டம் 18.37 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 97 கன அடி தண்ணீர் வருகிறது.அணையில் இருந்து 87 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அணையில் 62.32 மில்லியன் கன அடி தண்ணீர் உள்ளது.

    அணை பகுதியில் 110.4 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. 62.32 அடி உயரம் உள்ள செண்பகத் தோப்பு அணையின் நீர்மட்டம் 50.15 அடியை எட்டியுள்ளது.அணைக்கு வினாடிக்கு 30 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 10 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    ×