search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தள்ளுவண்டி"

    • ஸ்மார்ட்போன் பார்ப்பதை தியாகம் செய்ய வேண்டும்.
    • கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி கடினமாக உழைத்தேன்.

    புதுடெல்லி:

    டெல்லியில் உள்ள ஒரு தெருவில் தள்ளுவண்டி கடை மூலம் வடா பாவ் விற்பனை செய்யும் சந்திரிகா தீக்சித் என்ற பெண் தினமும் ரூ.40 ஆயிரம் வருமானம் ஈட்டி வருகிறார். இது சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து அவர் பிக்பாஸ் ஓடிடி 3 நிகழ்ச்சியில் பங்கேற்று நாடு முழுவதும் பிரபலமாகியுள்ளார்.

    நன்றாக படித்துள்ள சந்திரிகாவுக்கு ஒரு நல்ல வேலை கிடைத்தது. ஆனால் அவருக்கு சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்து வந்தது. இதையடுத்து அவர் தள்ளுவண்டியில் வடா பாவ் விற்க முடிவு செய்தார்.அவர் டெல்லியில் உள்ள தெருவில் தள்ளுவண்டியில் விற்கும் வடா பாவ் உணவை மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாங்கி செல்கின்றனர். இதனை சுவையாக தயார் செய்வதால் சந்திரிகாவுக்கு பொதுமக்கள் வடா பாவ் கேர்ள் என்ற பட்டத்தையும் வழங்கியுள்ளனர்.

    இதுகுறித்து சந்திரிகா தீக்சித் அளித்த பேட்டியின் போது கூறியதாவது:- நான் வடா பாவ் விற்று கடினமாக உழைப்பதன் மூலம் தினமும் ரூ.40 ஆயிரம் வரை சம்பாதிக்கிறேன். அனைவரும் இதேபோன்று சம்பாதிக்கலாம்.

    ஆனால் அதற்கு ஸ்மார்ட்போன் பார்ப்பதை தியாகம் செய்ய வேண்டும். 2 வருடங்களுக்கு முன்பு தெருவோரத்தில் தள்ளுவண்டியில் சாதாரணமாகத்தான் தொழிலை ஆரம்பித்தேன். ஆனால் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி கடினமாக உழைத்தேன். இதன் மூலம் கிடைக்கும் பணத்தை கொண்டு எனது மகனுக்கு சிறப்பான எதிர்காலத்தை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்பதே எனது லட்சியம். இவ்வாறு அவர் கூறினார்.

    • சாலையோர வியாபாரிகளுக்கு தள்ளுவண்டி வழங்கப்பட்டது.
    • நடமாடும் நவீன தள்ளுவண்டிகளை நகர் மன்ற தலைவர் சுந்தரலிங்கம் வழங்கினார்.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகரில் காய்கறி, பூ, பழங்கள், இளநீர், டீக்கடை போன்றவற்றை சுமார் 30-க்கும் மேற்பட்டோர் சாலையோரத்தில் வியாபாரம் செய்து வருகிறார்கள். இவர்களை நகராட்சி நிர்வாகம் கொரோனா கால கட்டத்தில் ஆய்வு செய்தனர். இவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது.

    இவர்கள் வியாபாரத்தை சிரமமில்லாமல் செய்ய தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் நகர் பகுதிக்குள் அமைந்துள்ள சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.24 லட்சம் மதிப்பிலான நடமாடும் நவீன தள்ளுவண்டிகளை நகர் மன்ற தலைவர் சுந்தரலிங்கம் வழங்கினார். துணைத் தலைவர் ரமேஷ், ஆணையாளர் சாந்தி மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

    • சாலையோர வியாபாரிகளுக்கு இலவச தள்ளுவண்டிகள் வழங்கப்பட்டன.
    • ரூ.84.44 லட்சம் மதிப்பீட்டில் நகர் மன்ற தலைவர் துரைஆனந்த் வழங்கினார்.

    சிவகங்கை

    சிவகங்கை நகராட்சிக்குட்பட்ட சாலையோர வியாபாரிகளுக்கான ஆதரவு திட்டத்தின் கீழ் 98 இலவச தள்ளுவண்டிகள் வழங்கப்பட்டன. காய்கறி கடை 15 வண்டிகள், உணவுக்கடைகள் 40, பூக்கடைகள்20, மற்றவைகள் 23 என மொத்தம் 98 இலவச தள்ளுவண்டிகள் ரூ.84.44 லட்சம் மதிப்பீட்டில் நகர் மன்ற தலைவர் துரைஆனந்த் வழங்கினார்.

    நகராட்சி ஆணையாளர் பாஸ்கரன், பொறியாளர் பாண்டீஸ்வரி, நகரமைப்பு அலுவலர் திலகவதி, கவுன்சிலர்கள் ஜெயகாந்தன், சண்முகராஜன், துபாய்காந்தி, விஜயகுமார், கார்த்திகேயன், ராமதாஸ், மற்றும் பயனாளிகள் கலந்து கொண்டனர்.

    • வியாபாரிகளுக்கு தள்ளுவண்டிகள் இலவசமாக வழங்கும் விழா நகராட்சி வளாகத்தில் நடைபெற்றது.
    • காய்கறி பழங்கள் விற்பனை செய்பவர்களுக்கும், பூ வியாபாரம் செய்பவர்களுக்கும் இலவசமாக வழங்கப்பட்டது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் நகராட்சியின் சார்பில் சாலை ஓர வியாபாரிகளுக்கு தள்ளுவண்டிகள் இலவசமாக வழங்கும் விழா நகராட்சி வளாகத்தில் நடைபெற்றது.

    விழாவிற்கு நகர மன்ற தலைவர் புகழேந்தி தலைமையில் வகித்தார் நிகழ்ச்சியில் ரூ. 22.50 லட்சம் மதிப்புள்ள 21 காய்கறி பழங்கள் விற்பனை செய்பவர்களுக்கும், .10 பூ வியாபாரம் செய்பவர்களுக்கும் சேர்த்து 31 வண்டிகளை நகர மன்ற தலைவர் புகழேந்தி வழங்கினார்.

    நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் ஹேமலதா ஒன்றிய பொறியாளர் முகமது இப்ராஹிம் துணை தலைவர் மங்களநாயகி மற்றும் நகராட்சி உறுப்பினர்கள் நகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    ×