என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தபால் துறை"
- பயோமெட்ரிக் முறையை பயன்படுத்தி, முக அடையாளம் வைத்தும், டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க ஏற்பாடு செய்துள்ளது.
- சேவை கட்டணமாக ரூ.70 தபால்காரரிடம் செலுத்த வேண்டும்.
சென்னை:
ஓய்வூதியர்கள் தொடர்ந்து ஓய்வூதியம் பெற தங்கள் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டி உள்ளது. இதற்காக 'இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி' திட்டத்தின் கீழ் ஓய்வூதியர்களின் வீட்டு வாசலிலேயே, பயோமெட்ரிக் முறையை பயன்படுத்தி, முக அடையாளம் வைத்தும், டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க ஏற்பாடு செய்துள்ளது.
ஓய்வூதியர்கள் தங்கள் பகுதி தபால்காரரிடம் ஆதார், செல்போன் எண், பி.பி.ஓ.எண் மற்றும் ஓய்வூதிய வங்கி கணக்கு விவரங்களை தெரிவித்து, கைவிரல் ரேகை பதிவு செய்தால், ஒரு சில நிமிடங்களில் டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்க முடியும். இதற்கு சேவை கட்டணமாக ரூ.70 தபால்காரரிடம் செலுத்த வேண்டும்.
அதேபோல் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் சுயநிதி பள்ளிகளில் மாநில பாடதிட்டத்தில் தமிழ் வழியில் 3 முதல் பிளஸ்-2 வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு, மத்திய, மாநில அரசுகள் வழங்கும் கல்வி உதவித் தொகைகள், ஊக்கத்தொகைகள் பெறுவதற்கு ஆதார் எண் இணைக்கப்பட்ட வங்கி கணக்கு அவசியமாகும்.
5-ம் வகுப்பு வரை படிப்பவர்களுக்கு தபால் துறை கணக்கும், 6 முதல் பிளஸ்-2 வரை படிப்பவர்களுக்கு தபால் துறை வங்கி கணக்கும் தொடங்க தமிழக பள்ளிக்கல்வி துறையுடன் தபால் துறை புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. எனவே பள்ளிகளிலோ அல்லது தபால் நிலையங்களில் கணக்குகளை தொடங்கலாம் என்று முதன்மை தபால் துறை தலைவர் சுவாதி மதுரிமா தெரிவித்துள்ளார்.
- நமது உணர்வுகளை வெளிப்படுத்தும் கடிதமாக மட்டுமல்லாமல், அனைத்து துறை சார்ந்த தகவல்களும் கடிதம் மூலமே கிடைக்கப்பெற்று வந்தது.
- நவீன உலகில் வளர்ந்து விட்ட தொலைத்தொடர்பு துறையால் பேஸ்புக், வாட்ஸ்அப் என நவீன உலகின் விதவிதமான தொழில் நுட்பத்திலான ஆப்களில் தகவல்களை எளிதாக சில வினாடிகளில் பரிமாற்றம் செய்து விடுகிறோம்.
திருச்சி,
ஆரம்ப காலங்களில் தகவல் பரிமாற்றத்தில் மிகச்சிறந்த சேவையாற்றி வந்தது தபால் என்றால் நிச்சயமாக அதை மறுக்க முடியாது. உள்ளத்தின் உணர்வுகளை, எண்ணத்தின் வெளிப்பாடுகளை வரிகளால் வலிகளோடு, உணர்ச்சியாய் வெளிப்படுத்திட தபால் இன்றியமையாத சேவையாக அமைந்திருந்தது.
இதனால் அஞ்சலகங்களின் பயன்பாடும் மக்களுக்கு மிக தேவையுள்ளதாகவே அமைந்திருந்தது. இதற்னகெ இங்கிலாண்டு லெட்டர் என சில கடிதங்களும் அஞ்சல் நிறுவனங்கள் மூலம் வழங்கப்படும். இது நமது உணர்வுகளை வெளிப்படுத்தும் கடிதமாக மட்டுமல்லாமல், அனைத்து துறை சார்ந்த தகவல்களும் கடிதம் மூலமே கிடைக்கப்பெற்று வந்தது.
ஆனால் நவீன உலகில் வளர்ந்து விட்ட தொலைத்தொடர்பு துறையால் பேஸ்புக், வாட்ஸ்அப் என நவீன உலகின் விதவிதமான தொழில் நுட்பத்திலான ஆப்களில் தகவல்களை எளிதாக சில வினாடிகளில் பரிமாற்றம் செய்து விடுகிறோம். இதனால் இப்போதுள்ள தலைமுறைக்கு கடிதம் என்றால் என்னவென்று கேட்கும் நிலையோடு கடிதம் எப்படி எழுத வேண்டும் என்று தெரியாத நிலை உள்ளது.
இந்நிலையில்தான் தபால் தினத்தை முன்னிட்டு திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த சமுத்திரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்வு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. பள்ளியின் தலைமை ஆசிரியர் ராஜசேகரன் மாற்றும் இருபால் ஆசிரியர்கள் முயற்சியில் சுமார் 240 மாணவ, மாணவிகளுக்கு அஞ்சல் துறையில் இருந்து கடிதங்கள் வாங்கி வந்து கொடுக்கப்பட்டது.
இதையடுத்து முதல் முறையாக தபால் கடிதத்தை பார்த்ததாக கூறிய மாணவர்களிடம் கடிதம் தொடர்பான விளக்கங்களை ஆசிரியர்கள் கூறினர். இதையடுத்து அவர்கள் முதல் முறையாக தங்களின் பெற்றோருக்கு மடலாக எழுதினர். இதுமட்டுமின்றி ஆசிரியர்கள், உறவினர்கள், நண்பர்கள் என் தங்களின் விருப்பதிற்கு உரியவர்களுக்கு உள்ளங்களில் தோன்றிய எண்ணங்களை வரிகளாக எழுதினர்.
வாழ்வின் இலக்கு என்ன என்பதையும் அனைத்து மாணவ, மாணவிகளும் கடிதங்களில் குறிப்பிட்டு இருந்தனர். மேலும் சில மாணவர்கள் தங்கள் தந்தையின் குடிப்பழக்கத்தால் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சினை மற்றும் குடும்பத்தில் நிம்மதி இழந்து வாழும் நிலையையும் விளக்கி கூறி இருந்தனர். சில மாணவர்கள் குடித்து விட்டு வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் பிரச்சனை, உயிர் உறுப்புக்களின் இழப்பு ஆகியவை பற்றியும் வேதனையோடு பதிவு செய்து இருந்தனர்.
வாகனங்களில் செல்லும் போது போக்குவரத்து விதிகளை மதிக்க வேண்டும், இயற்கையை நேசித்து இருக்கும் இடத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும், வளம் நிறைந்த பகுதியாக நம் வாழும் வசிக்கும் பகுதி விளங்க அரசு வலியுறுத்துவது போல், மக்கும் மக்காத குப்பைகளை தரம் பிரித்து தூய்மை பணியாளர்களிடம் வழங்க வேண்டும்,
கல்வி இல்லா கிராமமே இல்லை என்ற நிலையில் நாம் கற்ற கல்வியின் மூலம் கல்வி பணியாற்றிட வேண்டும் என அதிகமான வரிகளை எழுதி இருந்தனர். பின்னர் மாணவ, மாணவிகள் தாங்கள் எழுதிய கடிதங்களை அஞ்சல் பெட்டியில் போட்டனர். அரசு பள்ளியில் தபால் சேவையை மீண்டும் புத்துணர்ச்சி அளிக்கும் வகையில் நடந்த இந்த நிகழ்ச்சி அனைவருக்கும் முன்னுதாரமாக அமைந்ததுடன் அனைத்து தரப்பு மக்களின் கவனத்தையும் வெகுவாக ஈர்த்தது. மடல்களால் நிறைந்த தபால் பெட்டி வரும் தலைமுறைக்கு தபால் குறித்த ஆர்வத்தை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.
- வங்கிகளில் சேமிப்பு கணக்கு துவங்குவது போலவே தபால் நிலையத்தில் சேமிப்பு கணக்கு துவங்கலாம் என்பது அனைவரும் அறிந்தது
- வங்கி இல்லாத சிறிய கிராமங்களிலும் தபால் நிலையம் மூலமாக சாமானியர்கள் சேமிப்பு கணக்கு துவங்கியுள்ளனர்.
திருப்பூர் :
வங்கிகளில் சேமிப்பு கணக்கு துவங்குவது போலவே தபால் நிலையத்தில் சேமிப்பு கணக்கு துவங்கலாம் என்பது அனைவரும் அறிந்தது. வங்கி இல்லாத சிறிய கிராமங்களிலும் தபால் நிலையம் மூலமாக சாமானியர்கள் சேமிப்பு கணக்கு துவங்கியுள்ளனர். இங்கு 9வகையான சேமிப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.இத்திட்டங்களில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு, செல்போன் எண் மூலமாக கணக்கை எளிதில், கையாளும் வகையில், இ பாஸ்புக் வசதியை தபால் துறை அறிமுகம் செய்துள்ளது.
இது குறித்து திருப்பூர் கோட்ட கண்காணிப்பாளர் விஜயதனசேகர் கூறியதாவது:-
இந்திய தபால் துறையின் www.indiapost.gov.in என்ற இணையதளத்தில் 'இ பாஸ்புக்' வசதிக்கான லிங்க் வழங்கப்பட்டுள்ளது. இதில் எந்நேரமும் சேமிப்பு கணக்குகளின் இருப்பு, முழுமையான பரிவர்த்தனை விவரங்கள் அனைத்தையும் எளிதாக அறிந்து கொள்ள முடியும். பதிவிறக்கம் செயது கொள்ளலாம்.வாடிக்கையாளர் தங்கள் செல்போன் எண்ணை சேமிப்பு கணக்கில் இணைத்தால் போதும். நெட்பேங்கிங், மொபைல் பேங்கிங், வசதி இல்லை எனினும் சேமிப்பு கணக்கு இருப்புத்தொகை, தபால் அலுவலக சேமிப்பு கணக்கின் முழுமையான பரிவர்த்தனை விவரங்களை அறியலாம். செல்வமகள் மற்றும் பொது வருங்கால வைப்பு நிதி கணக்குகளின் குறைந்த பரிவர்த்தனை விபரங்களை தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு அவர் கூறினார்.
ரூ.10 லட்சத்துக்கு விபத்து காப்பீடு தபால் துறையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து திருப்பூர் கோட்ட கண்காணிப்பாளர் விஜயதனசேகர் கூறியதாவது:-இத்திட்டத்தில் 18 முதல் 65 வயதுள்ளவர்கள் சேரலாம். தபால்காரர் மூலம் விரல் ரேகையை பதிவு செய்து 399 ரூபாய் செலுத்தி 5 நிமிடங்களில் காப்பீடு திட்டத்தில் இணையலாம்.விபத்தினால் ஏற்படும் உயிரிழப்பு, நிரந்தர முழு ஊனம், பகுதி ஊனம், பக்கவாதம் ஏற்பட்டால் 10 லட்சம் ரூபாய், விபத்தினால் ஏற்படும் மருத்துவ செலவுகள் உள்நோயாளி செலவுகளுக்கு அதிகபட்சம் 60 ஆயிரம், புறநோயாளி செலவுகளுக்கு அதிகபட்சம் 30 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.விபத்தினால் மரணம், பக்கவாதம் ஏற்பட்டவரின் குழந்தைகளின் (அதிகபட்சம் இரண்டு குழந்தைகள்) கல்வி செலவுக்கு ஒரு லட்சம் வரை வழங்கப்படும். விபத்தினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நாட்களுக்கு தினப்படி தொகையாக ஆயிரம் ரூபாய் (9 நாட்களுக்கு), விபத்தில் பாதிக்கப்பட்டவரை பார்க்க செல்லும் குடும்பத்தினரின் பயணச் செலவுகளுக்கு அதிகபட்சம் 25 ஆயிரம், விபத்தில் ஒருவர் உயிரிழக்க நேரிட்டால் ஈமக்கிரியை செய்ய 5 ஆயிரம் வரை வழங்கப்படும்.விபத்துகளால் ஏற்படும் உடல் நலம், நிதி நெருக்கடிகளையும் உயிரிழப்பு களால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து குடும்பத்தின் எதிர்காலத்தை உறுதி செய்யலாம். இவ்வாறு அவர் கூறினார்.
- 399 ரூபாயில் 10 லட்சம் ரூபாய்க்கான விபத்து காப்பீடு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
- 5 நிமிடங்களில் காப்பீடு திட்டத்தில் இணையலாம்.
திருப்பூர் :
தபால் துறையின் இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கி 399 ரூபாயில் 10 லட்சம் ரூபாய்க்கான விபத்து காப்பீடு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளதாக திருப்பூர் கோட்ட தபால் கண்காணிப்பாளர் விஜயதனசேகர் தெரிவித்தார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இந்திய போஸ்ட் பேமென்ட் வங்கி, டாடா ஏ.ஐ.ஜி., ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து, மிக குறைந்த பிரீமியம் தொகையுடன் 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள காப்பீடு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.இதில் 18 முதல் 65 வயது உள்ளவர்கள் சேரலாம், தங்கள் பகுதியில் உள்ள தபால்காரர் மூலம் விரல் ரேகையை பதிவு செய்து ரூ. 399 செலுத்தி5 நிமிடங்களில் காப்பீடு திட்டத்தில் இணையலாம்.விபத்தினால் ஏற்படும் உயிரிழப்பு, நிரந்தர மற்றும் பகுதி ஊனம், பக்கவாதம் ஏற்பட்டால், 10 லட்சம் வரையிலும் விபத்தினால் ஏற்படும் மருத்துவ செலவுகள் உள்நோயாளி செலவுகளுக்கு அதிகபட்சம் ரூ. 60 ஆயிரம் வழங்கப்படும்.புற நோயாளி செலவுகளுக்கு அதிகபட்சம் 30 ஆயிரம், விபத்தில் மரணம் பக்க வாதம் ஏற்பட்டவரின் இரு குழந்தைகள் கல்வி செலவுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை வழங்கப்படும். விபத்து நேரங்களில் ஏற்படும் நிதி நெருக்கடி உயிரிழப்புகளால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து குடும்பத்தினரின் எதிர்காலத்தை உறுதி செய்ய முடியும். திருப்பூர் மக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம்.இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்