என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மாணவர்கள் படுகாயம்"
- மாணவர்களை ஏற்றி வர கல்லூரி நிர்வாகம் சார்பில் பஸ்கள் இயக்கப்படுகிறது.
- விபத்து குறித்து திருக்கோவிலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருக்கோவிலூர்:
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே எறையூரில் தனியார் கலை அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் பயிலும் மாணவர்களை ஏற்றி வர கல்லூரி நிர்வாகம் சார்பில் பஸ்கள் இயக்கப்படுகிறது.
அதன்படி இக்கல்லூரிக்கு சொந்தமான பஸ், எம்.தாங்கலில் இருந்து 10-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளை ஏற்றிக்கொண்டு இன்று காலை கல்லூரிக்கு புறப்பட்டது. இந்த பஸ் அதே ஊரில் உள்ள வளைவில் திரும்பியபோது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது.
இதில் சாலையோர பள்ளத்தில் பக்கவாட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. மாணவர்களின் அலறல் சத்தம் கேட்டு அவ்வழியே சென்றவர்கள் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில் 3 மாணவர்கள், 2 மாணவிகள் படுகாயமடைந்தனர். உடனடியாக 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு காயமடைந்த மாணவர்களை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், விபத்து குறித்து திருக்கோவிலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் திடீர் பரபரப்பை உருவாக்கியது.
- மாற்றுச்சான்றிதழ் வாங்குவதற்காக பெரம்பலூரில் உள்ள தனியார் கல்லூரி நோக்கி காரில் இன்று காலை சென்றுள்ளனர்.
- எதிர் திசையில் கள்ளகுறிச்சியில் இருந்து சிதம்பரம் நோக்கி வந்த தனியார் பஸ் கார் மீது பலமாக மோதியது.
கடலூர்:
விருத்தாசலம் ஆயியார்மடம் தெருவைச் சேர்ந்த தமிழேந்தி மகன் அன்புச்செல்வன் (வயது 18), காமராஜ் நகரை சேர்ந்த ராமதாஸ் மகன் சன்முகம் (18), ஜனார்த்தனன் (18) ஆகிய 3 பேரும் விருத்தாசலத்தில் இருந்து மாற்றுச்சான்றிதழ் வாங்குவதற்காக பெரம்பலூரில் உள்ள தனியார் கல்லூரி நோக்கி காரில் இன்று காலை சென்றுள்ளனர். அப்போது மணலூர் என்ற இடத்தில் எருமனூர் பாலத்திலிருந்து வேப்பூர் செல்ல காரை திருப்பிய போது, எதிர் திசையில் கள்ளகுறிச்சியில் இருந்து சிதம்பரம் நோக்கி வந்த தனியார் பஸ் கார் மீது பலமாக மோதியது.
ரயில்வே மேம்பாலம் அருகே நடந்த இந்த விபத்தில் காரில் வந்த 3 பேரும் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்தனர். அந்த சாலை வழியே சென்றவர்கள் 3 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலமாக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு 3 பேரும் அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து விருத்தாசலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
விபத்து குறித்து மணலூர் பகுதி பொதுமக்கள் கூறும்போது, விபத்து நடந்த இடத்தில் வேகத்தடைகளோ, பேரிகார்டுகளோ அமைக்கப்படாமல் இருப்பதால் இந்த பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. 3 சாலைகள் சந்திக்கும் முக்கிய இடமாக இருப்பதால் விபத்து ஏற்படும் பகுதியாக உள்ளது எனவும், அரசு உரிய நடவடிக்கை எடுத்து இந்த பகுதியில் பேரிகார்டு, வேகத்தடைகள் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
- பட்டாளங்காடு பிரிவு பகுதியில் சென்ற போது அந்த வழியாக வந்த சரக்கு வேன் எதிர்பாராத விதமாக பள்ளி வேன் மீது மோதியது.
- வேனில் சென்ற 10 மாணவ-மாணவிகள் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.
பெரும்பாறை:
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ் மலை பண்ணைக்காட்டில் தனியார் பள்ளி உள்ளது. அந்த பள்ளிக்கு மாணவ-மாணவிகள் தினமும் வேனில் வந்து செல்கின்றனர்.
இந்த நிலையில் நேற்று மாலையில் பள்ளி முடிந்ததும் மாணவ-மாணவிகளை ஏற்றிக்கொண்டு பள்ளி வேன் புறப்பட்டது. பின்னர் தாண்டிக்குடி பகுதியை சேர்ந்த மாணவ, மாணவிகளை இறக்கி விட்டுவிட்டு, மங்களம்கொம்பு நோக்கி வேன் சென்று கொண்டிருந்தது.
பட்டாளங்காடு பிரிவு பகுதியில் சென்ற போது அந்த வழியாக வந்த சரக்கு வேன் எதிர்பாராத விதமாக பள்ளி வேன் மீது மோதியது. இதில் வேனில் சென்ற 10 மாணவ-மாணவிகள் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். இது குறித்து தாண்டிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.
மலைச்சாலையில் அதிக வேகத்தில் வாகனங்கள் செல்வதால் பள்ளி வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றன. எனவே மலைச்சாலையில் ஆபத்தான வளைவுகளை குறிக்கும் வகையில் குவியாடி லென்ஸ் பொருத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
- விருத்தாசலம் அருகே கல்லூரி பஸ் மீது லாரி மோதியதில் மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்.
- சம்பவத்தை பார்த்த அருகிருந்தவர்கள் உடனடியாக ஆம்புலன்சிற்கு தகவல் கொடுத்தனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் தொழுதுரை சேர்ந்த தனியார் பொறியியல் கல்லூரி பஸ் இன்று காலை மாணவர்களுடன் விருத்தாசலத்தில் இருந்து தொழுதூர் நோக்கி கல்லூரிக்குச் சென்று கொண்டிருந்தது. அப்போது விருத்தாசலம் அடுத்த சாத்தியம் என்ற இடத்தில் அருகே நின்று கொண்டு மாணவர்களை பேருந்திற்குள் ஏற்றி கொண்டிருந்தபோது விருத்தாசலத்தில் இருந்து வேப்பூர் நோக்கி சென்ற லாரி, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் ஓரமாக நின்று கொண்டிருந்த கல்லூரி பஸ்சின் பின்புறம் பலமாக மோதியது.
இதில் பஸ்சில் இருந்த 40-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவத்தை பார்த்த அருகிருந்தவர்கள் உடனடியாக ஆம்புலன்சிற்கு தகவல் கொடுத்தனர். விபத்தில் காயம் அடைந்த கல்லூரி மாணவர்கள் விருத்தாசலம் அரசு மருத்துவமனையிலும், பலத்த காயமடைந்த மாணவர்கள் சிகிச்சைக்காக கடலூர் மற்றும் விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க பட்டுள்ளனர்.சம்பவம் குறித்து விபத்து ஏற்படுத்திய லாரியை பறிமுதல் செய்த விருத்தாசலம் போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்