search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விமான பணிப்பெண்"

    • ராபின் பார் என்ற ஓவிய கலைஞர் இண்டிகோ ஏர்லைன்சில் பயணம் செய்கிறார்.
    • ஒரு வெள்ளை காகிதத்தில் விமான பணிப்பெண்ணிடம் கையெழுத்து வாங்கும் காட்சிகளுடன் வீடியோ தொடங்குகிறது.

    பார்க்கும் நபர்களை அச்சு அசலாக வரையும் ஓவியர்கள் பலர் இருக்கிறார்கள். ஆனால் பறக்கும் விமான பயணத்தின் போது ஓவியர் ஒருவர் தனது அசத்தலான திறமையை காட்டும் வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது.

    அதில், ராபின் பார் என்ற ஓவிய கலைஞர் இண்டிகோ ஏர்லைன்சில் பயணம் செய்கிறார். அப்போது அவர், ஒரு வெள்ளை காகிதத்தில் விமான பணிப்பெண்ணிடம் கையெழுத்து வாங்கும் காட்சிகளுடன் வீடியோ தொடங்குகிறது.

    பின்னர் அந்த பணிப்பெண்ணின் கையெழுத்தை வைத்தே அவர் பிரமிக்க வைக்கும் வகையில் ஒரு காதல் ஜோடியின் புகைப்படமாக வரைந்த காட்சிகள் பயனர்களை மிகவும் ரசிக்க செய்துள்ளது.

    இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் பயனர்கள் பலரும் அவரது திறமையை பாராட்டி கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.


    • டோனி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் மூலமாக எல்ஜிஎம் படத்தை தயாரித்துள்ளார்.
    • இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.

    இந்திய அணியின் முன்னாள் கேப்டன் டோனி. டி20 உலகக் கோப்பை, கிரிக்கெட் உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி மற்றும் ஆசிய கோப்பையை வென்று கொடுத்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 5 முறை சாம்பியன்ஸ் டிராபி வாங்கி கொடுத்துள்ளார்.

    கடந்த ஐபிஎல் தொடரில் முழங்கால் வலியுடன் விளையாடினார். தொடர் முடிந்த பிறகு மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் முழங்கால் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அதன் பிறகு ஓய்விற்காக ராஞ்சியில் உள்ள தனது வீட்டிற்கு சென்றார். அங்கு ஓய்வில் இருந்து வந்தார்.


    டோனி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் மூலமாக எல்ஜிஎம் படத்தை தயாரித்துள்ளார். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் டோனி, தனது மனைவியுடன் கலந்து கொண்டார்.இதற்காக டோனி தனது மனைவி சாக்ஷியுடன் சென்னை வந்த வீடியோ அப்போது வெளியானது.

    இந்நிலையில் டோனி அதே ஹேர்ஸ்டைல் மற்றும் அதே காஸ்ட்யூம் உடன் இருக்கும் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் டோனி விமானத்தில் தூங்கியபடி வருகிறார். அருகில் அவரது மனைவி சாக்ஷி அமர்ந்திருக்கிறார்.

    இதனை விமானப்பணிப்பெண் வீடியோவாக தனது மொபையில் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ தான் தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் விமான பணிப்பெண் கொடுத்த ரியாக்ஷன் குயிட்டாக இருந்ததாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    • விமானத்தில் சென்ற டோனி கேண்டி க்ரஷ் கேம் விளையாடிக் கொண்டிருந்தார்.
    • எந்தளவுக்கு உங்களை பிடிக்கும் என்று அந்த விமான ஊழியர் பெண்கள் ஒரு துண்டு எழுதியதையும் அவரிடம் கொடுத்தனர்.

    இந்திய அணியின் முன்னாள் கேப்டனான எம்எஸ் டோனி, 2019 உலக கோப்பையுடன் ஓய்வு பெற்று, ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். குறிப்பாக இந்த வருடம் மீண்டும் சென்னையை மிகச் சிறப்பாக வழி நடத்தி 5-வது கோப்பையை வென்று கொடுத்துள்ளார்.

    இந்நிலையில் விமானத்தில் பணிப்பெண் ஒருவர் எம்எஸ் டோனிக்கு பரிசு ஒன்றை வழங்கிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், விமானத்தில் பணிபுரியும் பெண் ஊழியர் ஒருவர் நிறைய சாக்லேட் மற்றும் பிஸ்கட் இனிப்பு பண்டங்களை தட்டில் வைத்து டோனியிடம் சென்று நீட்டினார். அந்த சமயத்தில் மிகவும் ஆர்வமாக கேண்டி க்ரஷ் விளையாட்டை டேப்லட் போனில் விளையாடிக் கொண்டிருந்த அவர் அதை பார்த்து ஆச்சரியமடைந்தார்.

    மேலும் எந்தளவுக்கு உங்களை பிடிக்கும் என்று அந்த விமான ஊழியர் பெண்கள் ஒரு துண்டு எழுதியதையும் அவரிடம் கொடுத்தனர். அதை சிரித்த முகத்துடன் வாங்கிக் கொண்ட டோனி சில அன்பான வார்த்தைகளை பேசினார். மேலும் இவ்வளவு சாக்லேட்டுகள் எனக்கு எதற்கு இது மட்டும் போதும் என்று ஒரே ஒரு இனிப்பை மட்டும் எடுத்துக்கொண்டு எஞ்சியவற்றை அந்த பெண்ணிடமே கொடுத்து விட்டார்.

    டோனி கேண்டி கிரஷ் விளையாடுகிறார் என்று தெரிந்ததும் அந்த வார்த்தையும் விளையாட்டும் தற்போது ட்விட்டரில் ட்ரெண்ட்டாகி வருகிறது. 

    • பழங்குடியின பெண்களும் கல்வியில் முன்னேறவும், வேலைவாய்ப்புகள் பெறவும் கேரள அரசு பல்வேறு திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது.
    • கேரளாவில் பழங்குடியின பெண் ஒருவர் விமான பணிப்பெண் வேலையில் சேருவது இதுவே முதல் முறையாகும்.

    திருவனந்தபுரம்:

    கேரளாவை சேர்ந்த பழங்குடியின பெண் ஒருவருக்கு விமான பணிப்பெண் வேலை கிடைத்துள்ளது.

    ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினத்தவருக்கு அரசு பல்வேறு சலுகைகளை அளித்தாலும் இன்னும் அவர்கள் அதனை முழுமையாக பயன்படுத்தி கொள்வதில்லை.

    இதனை மாற்றி பழங்குடியின பெண்களும் கல்வியில் முன்னேறவும், வேலைவாய்ப்புகள் பெறவும் கேரள அரசு பல்வேறு திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது.

    அரசின் திட்டங்கள் பழங்குடியின பெண்களை சென்றடைய அரசு மேற்கொண்ட முயற்சியின் காரணமாக கண்ணூர் பகுதியை சேர்ந்த கோபிகா என்ற பழங்குடியின பெண் விமான பணிப்பெண் பயிற்சியில் சேர்ந்தார்.

    இதற்கு தனியார் பயிற்சி மையங்களில் படித்தால் லட்சக்கணக்கில் செலவாகும். ஆனால் இவர் அரசின் உதவி தொகையை பெற்று இப்பயிற்சியில் சேர்ந்தார்.

    பயிற்சி நிறைவு பெற்று அவர் விரைவில் விமான பணிப்பெண் வேலையில் சேர உள்ளார். அடுத்த மாதம் அவர் பணிக்கு செல்ல உள்ளார். கேரளாவில் பழங்குடியின பெண் ஒருவர் விமான பணிப்பெண் வேலையில் சேருவது இதுவே முதல் முறையாகும்.

    இது பற்றிய தகவல் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதில் கோபிகா விமான பணிப்பெண் உடையுடன் இருக்கும் புகைப்படங்களும் பதிவிடப்பட்டுள்ளன.

    இதனை பார்த்த பலரும் பழங்குடியின பெண் கோபிகாவுக்கு பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.

    ×