search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இணையதளம் முடக்கம்"

    • மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

    வங்காளதேசத்தில் சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு அரசு வேலை வாய்ப்புகளில் 30 சதவீதம் இடஒதுக்கீட்டை எதிர்த்து மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். இதில் நாடு முழுவதும் வன்முறை வெடித்தது. 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோர் காயம் அடைந்தனர்.

     இதையடுத்து வங்காளதேசத்தில் இணைய தள சேவை முடக்கப்பட்டது. மாணவர்கள் போராட்டத்தால் இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டது. இதனால் வன்முறை ஓய்ந்தது.

    இந்த நிலையில் வங்காளதேசத்தில் இணைய தள சேவை மீண்டும் வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் கூறும்போது, இணைய தளம் மற்றும் மொபைல் இணைய இணைப்பு தற்போது முழு செயல்பாட்டுடன் மீட்டமைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தது.

    • ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் இன்று காலையில் சரிவர செயல்படவில்லை.
    • டெல்லியில் உள்ள ஐ.ஆர்.சி.டி.சி. தலைமை அலுவலகத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    சென்னை:

    நாடு முழுவதும் ரெயிலில் பயணம் செய்ய ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் வழியாக முன்பதிவு செய்யப்படுகிறது. தினமும் லட்சக்கணக்கானவர்கள் இந்த இணையதளத்தை பயன்படுத்துகின்றனர்.

    முன்பதிவு மட்டுமின்றி தட்கல் டிக்கெட் பெறவும், முன்பதிவை ரத்து செய்யவும் பெருமளவில் பயன்படுத்துகின்றனர்.

    இந்த நிலையில் ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் இன்று காலையில் சரிவர செயல்படவில்லை. அதன் வேகம் குறைந்ததால் முன்பதிவு மற்றும் தட்கல் டிக்கெட் பெறுவதில் சிரமம் ஏற்பட்டது.

    தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஐ.ஆர்.சி.டி.சி.யின் இணையதளமும், செல்போன் செயலியும் முடங்கியது.

    டெல்லியில் உள்ள ஐ.ஆர்.சி.டி.சி. தலைமை அலுவலகத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதனை சரி செய்வதற்கு சில மணி நேரம் ஆகும். இணையதளம் செயல்பாடு சீராகும் வரையில் டிக்கெட் கவுண்டர்களில் சென்று முன்பதிவு செய்யவும், ரத்து செய்யவும் பயணிகள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று ஐ.ஆர்.சி.டி.சி. அதிகாரிகள் கூறினர்.

    மேலும் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு ஆஸ்க் திஷா வாய்ப்பை பயன்படுத்தி டிக்கெட் பெறலாம். இ-வால்லெட் என்ற வசதியையும் பயன்படுத்தலாம். இதற்கு பயணிகள் ஐடி மற்றும் பாஸ்வேர்டை செலுத்தி உள்ளே நுழையலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ஒட்டன்சத்திரத்தில் இணையதளம் முடங்கியதால் பத்திர பதிவு பணிகள் பாதிக்கப்பட்டது
    • தடையற்ற சேவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

    ஒட்டன்சத்திரம்:

    ஒட்டன்சத்திரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் ஏராளமான விவசாய நிலங்கள் உள்ளன. வளர்ந்து வரும் நகரான ஒட்டன்சத்திரத்தில் புதிய குடியிருப்புகள் உருவாகி வருகின்றன.

    இங்கு செயல்படும் சார்பதிவாளர் பத்திர பதிவு அலுவலகத்தில் தினசரி நூற்றுக்கணக்கானோர் பத்திர பதிவு செய்கின்றனர். முகூர்த்த நாட்களில் பத்திர பதிவு மேலும் அதிகரிக்கும். கடந்த 2 நாட்களாக முகூர்த்த நாள் என்பதால் காலை முதலே பொதுமக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

    ஆனால் அலுவலகத்தில் இணையதளம் முடங்கியதால் பணிகள் பாதிக்கப்பட்டன. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் நீண்டநேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. எனவே தடையற்ற சேவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

    ×