search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போலீஸ்காரர்"

    • விருதுநகர் அருகே வத்திராயிருப்பில் போலீஸ்காரருக்கு கொலைமிரட்டல் விடுக்கப்பட்டது.
    • இது சம்பந்தமாக 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றுபவர் முனியாண்டி. இவர் சம்பவத்தன்று வ.புதுப்பட்டி பகுதியில் ரோந்து சென்றார். அப்போது அதே பகுதியை சேர்ந்த பாரதி, ரஞ்சித்குமார், முத்துகுமார், வசந்த், வினீத் ஆகிய 5 பேர் அந்த பகுதியில் ரோந்து வரக்கூடாது என போலீஸ்காரரிடம் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. மேலும் போலீஸ்காரர் முனியாண்டி மீது கம்பு, கற்களை வீசி அந்த கும்பல் தாக்கியுள்ளது.

    இதுகுறித்து முனியாண்டி வத்திராயிருப்பு போலீசில் புகார் செய்தார். அதில் மேற்கண்ட 5 பேர் தன்னை பணி செய்ய விடாமல் தடுத்ததோடு கல்வீசி தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக குறிப்பிட்டுள்ளார். அதன் அடிப்படையில் 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • போலீஸ் சீருடையில் மது அருந்திவிட்டு ஒரு டீ கடையில் விழுந்து கிடந்துள்ளார்.
    • இச்சம்பவம் குறித்து தகவலறிந்த போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் அவர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுத்து தற்காலிக பணியிடை நீக்கம் செய்துள்ளார்.

    கொடுமுடி:

    ஈரோடு மாவட்டம் கொடுமுடி போலீஸ் நிலையத்தில் 2-ம் நிலை காவலராக பணிபுரிந்து வருபவர் நல்லசாமி (வயது 35). இவர் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோபிசெட்டிபாளையம் அருகே கொளப்பலூரில் பாதுகாப்பு பணிக்காக நியமிக்கப்பட்டிருந்தார்.

    அப்போது அவர் போலீஸ் சீருடையில் மது அருந்திவிட்டு ஒரு டீ கடையில் விழுந்து கிடந்துள்ளார். அப்போது அங்கு நின்ற பொதுமக்கள் சிறுவல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து போலீசார் அங்கு செல்வதற்குள் நல்லசாமி அங்கிருந்து தப்பித்து தலைமறைவாகி விட்டார்.

    இச்சம்பவம் குறித்து தகவலறிந்த போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் அவர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுத்து தற்காலிக பணியிடை நீக்கம் செய்துள்ளார். போலீசார் ஒருவர் மது போதையில் கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

    ×