search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உறுப்பு"

    • தன்னார்வமாக ரத்த தானம் செய்வோம் என உறுதி மொழி எடுக்கப்பட்டது.
    • பொதுமக்கள், மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள், செவிலியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    அந்தியூர்:

    மத்திய அரசால் ஆயுஷ்மான் பவ என்ற திட்டமானது தொடங்கப்பட்டது.

    இதன் தொடர்ச்சி யாக அந்தியூர் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உறுப்பு தானம் மற்றும் ரத்த தானம் செய்வ தன் அவசியம் குறித்து வட்டார மருத்துவ அலுவலர் சக்தி கிருஷ்ணன் தலைமையில் உறுதிமொழி எடுக்கப்பட்டது.

    ரத்தத்தின் தேவையை கருத்தில் கொண்டு ரத்த தானம் செய்வதன் அவசியம் குறித்தும், குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், உறவினர்கள், சக ஊழியர்கள் மற்றும் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவேன் என்றும்,

    ஒருவருக்கு ரத்தம் தேவைப்படும்போது இனம், மதம், பாகுபாடு இன்றி எந்த உயிரிழப்பும் ஏற்படாத இருக்க தன்னார்வமாக ரத்த தானம் செய்வோம் என உறுதி மொழி எடுக்கப்பட்டது.

    மேலும் நம் நாட்டில் உறுப்புகள் மற்றும் திசுக்களின் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு உடல் உறுப்பு தேவைப்படுபவர்களுக்கு புதிய வாழ்வு அளிக்க தங்கள் மரணத்திற்கு பிறகு பயன்படுத்த கூடிய எனது மற்றும் எனது குடும்ப உறுப்பினர்களின் உறுப்புகள் மற்றும் திசுக்களை தானம் செய்வதாக உறுதி மொழி எடுக்கப்பட்டது.

    இந்நிகழ்வில் பொதுமக்கள், மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள், செவிலியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • ட்ரோன்களை பயன்படுத்துவது மூலம் போக்குவரத்து நேரத்தை கணிசமாக குறைக்க முடியும் எனவும் கூறப்பட்டுள்ளது.
    • போக்குவரத்து சிக்கலைத் தீர்க்க இது மிகவும் புதுமையான அணுகுமுறையாகும்.

    மருத்துவமனைகளில் விரைவான உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு உதவும் வகையில் மனித உறுப்புகளை ட்ரோன் மூலம் கொண்டு செல்லும் இந்தியாவின் முதல் முன்மாதிரி திட்டத்தை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தொடங்கி வைத்தார்.

    தற்போது விமான நிலையத்திலிருந்து சாலை வழியாக எடுத்துச் செல்லும் முறைக்கு மாறாக, விமான நிலையத்திலிருந்து பதப்படுத்தப்பட்ட மனித உறுப்புகளை சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. ட்ரோன்களை பயன்படுத்துவது மூலம் போக்குவரத்து நேரத்தை கணிசமாக குறைக்க முடியும் எனவும் கூறப்பட்டுள்ளது.

    ட்ரோன் திட்டத்தை தொடங்கி வைத்து பிறகு மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுங்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியதாவது:-

    வேகம் மற்றும் தடையற்ற போக்குவரத்து ஆகியவற்றின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்வதன் மூலம், உறுப்புகளை எடுத்துச் செல்வதற்கான தளவாடங்களில் விரைவில் புதுமை தேவைப்படும். அதில் வரவேற்கத்தக்க பரிந்துரைகளில் ஒன்றுதான் ட்ரோன்களைப் பயன்படுத்துவது.

    போக்குவரத்து சிக்கலைத் தீர்க்க இது மிகவும் புதுமையான அணுகுமுறையாகும். இந்த திட்டத்தில் எம்ஜிஎம் ஹெல்த்கேர் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மருத்துவமனை ஒரு பகுதியாக இருப்பதை நான் பாராட்டுகிறேன்.

    இந்த சாதனை பெருமையை மட்டுமல்ல, சுகாதாரத் துறையில் ஒரு புதிய அளவுகோலை உருவாக்குகிறோம் என்ற திருப்தியையும் தருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×