search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஷகிப் அல் ஹசன்"

    • இந்தக் கொலை வழக்கில் 147 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
    • அதில் ஷகிப் அல் ஹசன் பெயரும் இடம் பெற்றுள்ளது.

    டாக்கா:

    வங்கதேசத்தில் கடந்த இரு மாதமாக நடைபெற்ற கலவரங்களில் நூற்றுக்கு மேற்பட்டோர் பலியாகினர்.

    இந்தக் கலவரத்தின்போது ரபிகுல் இஸ்லாம் என்பவரின் மகன் ஆகஸ்ட் 5-ம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார். இதுதொடர்பான வழக்கு அடாபூர் காவல்நிலையத்தில் நடந்து வருகிறது.

    இந்தக் கொலை வழக்கில் சுமார் 150-க்கு மேற்பட்ட நபர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். அதில் ஷகிப் அல் ஹசன் பெயரும் இடம் பெற்றுள்ளது.

    முன்னாள் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, வங்கதேச கிரிக்கெட் அமைப்பின் முன்னாள் தலைவர் நஜ்முல் ஹுசைன் என பல முக்கிய நபர்களின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன. கலவரத்துக்கு முன்பு வரை வங்கதேசத்தை ஆண்ட அவாமி லீக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தார் ஷகிப் அல் ஹசன்.

    தற்போது 37 வயதாகும் ஷகிப் அல் ஹசன் வங்கதேச கிரிக்கெட் அணியின் மூத்த வீரராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • நேற்று இரவு நடைபெற்ற போட்டியில் இந்தியா, வங்காளதேசம் அணிகள் மோதின.
    • இந்திய அணியின் கேப்டன் ரோகித்தின் விக்கெட்டை ஷகிப் அல் ஹசன் வீழ்த்தினார்.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்று நடந்து வருகிறது.

    ஆன்டிகுவாவில் நேற்று இரவு நடைபெற்ற போட்டியில் இந்தியா, வங்காளதேசம் அணிகள் மோதின. அப்போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோகித்தின் விக்கெட்டை ஷகிப் அல் ஹசன் வீழ்த்தினார்.

    இதன் மூலம் டி20 உலக கோப்பை தொடரில் 50 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் பவுலர் என்ற சாதனையை ஷகிப் அல் ஹசன் படைத்தார்.

    டி20 உலகக்கோப்பையில் 40 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 19.50 பவுலிங் சராசரியுடனும் 6.89 எக்கனாமியுடன் சிறப்பாக பந்துவீசி 50 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.

    • டி20 கிரிக்கெட்டில் இருந்து ஷகிப் அல் ஹசன் ஓய்வை அறிவிக்க வேண்டும் என்று சேவாக் கூறியிருந்தார்.
    • அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சேவாக் யார் என்று ஷகிப் கேள்வி எழுப்பினார்.

    கிங்ஸ்டவுன்:

    டி20 உலகக்கோப்பை தொடரில் நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் 25 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணி அபார வெற்றியை பெற்றது. இந்த போட்டியில் வங்கதேச பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறிய போது, அனுபவ வீரர் ஷகிப் அல் ஹசன் 46 பந்துகளில் 64 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார்.

    முன்னதாக தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் ஷகிப் அல் ஹசன் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார். அப்போது இந்திய ஜாம்பவான் சேவாக் ஷகிப் அல் ஹசன் அதிக அனுபவங்களை கொண்ட வீரர். வங்கதேச அணியின் கேப்டனாக நீண்ட காலம் செயல்பட்டுள்ளார். ஆனால் டி20 கிரிக்கெட்டில் ஷகிப்பின் செயல்பாடுகள் மோசமான இருந்துள்ளன. இதனை நினைத்து அவர் வெக்கப்பட வேண்டும். டி20 கிரிக்கெட்டில் இருந்து ஷகிப் அல் ஹசன் ஓய்வை அறிவிக்க வேண்டும் என்று காட்டமாக பேசியிருந்தார்.

    இந்த நிலையில் ஷகிப் அல் ஹசன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் சேவாக்கின் விமர்சனம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ஷகிப் அல் ஹசன், எந்த வீரரும் யாருக்கும் பதில் அளிக்க வேண்டிய அவசியமில்லை. ஒரு வீரரின் பணி என்னவென்றால், அணியின் வெற்றிக்கு உதவுவது தான்.

    பேட்ஸ்மேனாக, பவுலராக, ஃபீல்டராக சிறப்பாக செயல்பட்டு அணியை வெற்றிபெற வைக்க வேண்டும். மற்றபடி யாருக்கும் பதிலளிக்க தேவையில்லை. அதேபோல் ஒரு வீரரால் அணியின்வெற்றிக்கு பங்களிக்க முடியவில்லை என்றால், நிச்சயம் சில விவாதங்கள் வரும். அதில் எந்த தவறும் இல்லை என்று நினைக்கிறேன். ஆனால் எனது ஆட்டம் குறித்து நான் எப்போதும் கவலைக் கொண்டதில்லை.

    என் கிரிக்கெட் வாழ்க்கை முழுக்கவே அப்படி தான் இருந்திருக்கிறேன். கிரிக்கெட்டில் ஒருநாள் உங்களுக்கான நாளாக இருக்கும். மற்றொரு நாள் இன்னொரு வீரருக்கான நாளாக இருக்கும். நன்றாக பவுலிங் செய்வதே எனது பணி. விக்கெட் வீழ்த்துவதற்கு கொஞ்சம் அதிர்ஷடமும் தேவை என்று நினைப்பதாக என்று தெரிவித்துள்ளார்.

    • இலங்கைக்கு எதிரான போட்டியில் ஷகிப் அல் ஹசன் ஆட்டநாயகனான தேர்வு செய்யப்பட்டார்.
    • வங்காளதேசம் தனது கடைசி லீக் போட்டியில் நவம்பர் 11-ம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மோதுகிறது.

    சிட்டகாங்:

    டெல்லியில் நேற்று நடந்த உலக கோப்பை லீக் தொடரில் வங்காளதேசம், இலங்கை அணிகள் மோதின. இதில் முதலில் ஆடிய இலங்கை 279 ரன்களில் ஆல் அவுட்டானது. அடுத்து ஆடிய வங்காளதேசம் 41.1 ஓவரில் 282 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இந்தப் போட்டியின்போது ஷகிப் அல் ஹசனுக்கு கைவிரலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அவர் 3 முதல் 4 வாரங்கள் ஓய்வில் இருக்க வேண்டும் என டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர். இதையடுத்து, உலக கோப்பை 2023 தொடரில் இருந்து ஷகிப் அல் ஹசன் விலகியுள்ளார்.

    நவம்பர் 11-ம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் ஷகிப் அல் ஹசன் விளையாட மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ஷகிப் ஏற்கெனவே வங்காளதேச ஒருநாள் கிரிக்கெட் அணிக்கு கேப்டனாக செயல்பட்டு உள்ளார்.
    • அவர் இறுதியாக 2017-ம் ஆண்டு அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் கேப்டனாக செயல்பட்டார்.

    டாக்கா:

    வங்காளதேச கிரிக்கெட் அணி வரும் 30-ம் தேதி இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடைபெறும் ஆசிய கோப்பை தொடரில் விளையாட உள்ளது. அதனை அடுத்து சொந்த ஊரில் நியூசிலாந்துக்கு எதிராக ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. அதன் பின் இந்தியாவில் வரும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ள ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க உள்ளது.

    இந்நிலையில் வங்காளதேச அணியின் ஒருநாள் போட்டியின் கேப்டன் பதவியிலிருந்து தமிம் இக்பால் திடீரென விலகினார். மேலும் காயம் காரணமாக ஆசிய கோப்பை தொடரில் இருந்தும் விலகியுள்ளார். இதனையடுத்து புதிய கேப்டனை தேர்ந்தெடுக்கும் முயற்சியில் வங்காளதேச கிரிக்கெட் வாரியம் இறங்கியது.

    அதன்படி வங்காளதேச கிரிக்கெட் அணியின் உலகக்கோப்பை மற்றும் ஆசிய கோப்பை தொடருக்கான கேப்டனாக ஆல்ரவுண்டர் ஷகிப் அல் ஹசன் நியமிக்கப்பட்டுள்ளார். ஷகிப் ஏற்கெனவே வங்காளதேச ஒருநாள் கிரிக்கெட் அணிக்கு கேப்டனாக செயல்பட்டு உள்ளார். அவர் இறுதியாக 2017-ம் ஆண்டு அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் கேப்டனாக செயல்பட்டார்.

    இது குறித்து வங்காளதேச கிரிக்கெட் வாரிய தலைவர் நஸ்முல் ஹாசன் கூறுகையில்:-

    வரவிருக்கும் பெரிய தொடர்களை கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளோம். மிகவும் சிக்கலான நேரத்தில் அணிக்கு ஷகிப் அல் ஹசனை கேப்டனாக நியமித்துள்ளோம். உலகக்கோப்பைக்கு இன்னும் 2 மாதங்களே உள்ள நிலையில் ஷகிப்பை தவிர வேறு சிறந்த கேப்டனையும் தேர்வு செய்ய இயலாது. உலகக்கோப்பை மற்றும் ஆசிய கோப்பை தொடருக்கான அணியை நாளை அறிவிக்க உள்ளோம்' என கூறினார்.

    இதன் மூலம் ஷகிப் வங்காளதேசத்தின் மூன்று வடிவிலான போட்டிகளிலும் கேப்டனாகி உள்ளார். கடந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து டெஸ்ட் மற்றும் டி20 அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். ஷகிப் கடந்த 2011-ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரிலும் வங்காளதேச அணியை வழிநடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கேப்டன் பதவிக்கு ஷகிப் அல் ஹசன், லிட்டன் தாஸ் மற்றும் மெஹிதி ஹசன் மிராஸ் ஆகியோர் போட்டியில் உள்ளனர்.
    • ஆசியக் கோப்பைக்கான அணிகளை அறிவிக்க ஆசிய கிரிக்கெட் கவுன்சில் ஆகஸ்ட் 12-ம் தேதி வரை காலக்கெடு நிர்ணயித்துள்ளது.

    இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்பட 6 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இலங்கையில் அடுத்த மாதம் 30-ந்தேதி முதல் செப்டம்பர் 17-ந்தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    ஆகஸ்ட் 30 முதல் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ள ஆசியக் கோப்பைக்கான அணிகளை அறிவிக்க ஆசிய கிரிக்கெட் கவுன்சில் ஆகஸ்ட் 12-ம் தேதி வரை காலக்கெடு நிர்ணயித்துள்ளது.

    இந்நிலையில் வங்காளதேச அணி கேப்டன் யார் என்பது குறித்து பிசிபி இன்னும் வரை அறிவிக்கவில்லை. அந்த பதவிக்கு ஷகிப் அல் ஹசன், லிட்டன் தாஸ் மற்றும் மெஹிதி ஹசன் மிராஸ் ஆகியோர் போட்டியில் உள்ளனர்.

    இது குறித்து பிசிபி தலைவர் நஸ்முல் கூறியதாவது:-

    இன்னும் சில நாட்களில் அணியை அறிவிப்போம். கேப்டனையும் அறிவிப்போம் என்றார். மேலும் ஷகிப்பை ஒருநாள் கேப்டனாக தேர்ந்தெடுப்பது எளிதான முடிவு என்றும் ஷகிப்பின் இறுதி முடிவுக்காக பிசிபி காத்திருக்கும் என்றும் கூறினார்.

    • மார்ச் மாதத்திற்கான சிறந்த வீரர் விருதுக்கு ஷகிப் அல் ஹசன் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
    • கேன் வில்லியம்சன், ஆசிப் கான் பெயர்களும் இந்தப் பட்டியலில் உள்ளன.

    துபாய்:

    ஒவ்வொரு மாதமும் சிறந்த கிரிக்கெட் வீரரை தேர்வு செய்து ஐசிசி கவுரவித்து வருகிறது.

    இந்நிலையில், மார்ச் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனைகளை தேர்வு செய்ய தலா 3 வீரர் மற்றும் வீராங்கனைகளை ஐசிசி பரிந்துரைத்துள்ளது.

    நியூசிலாந்தின் நட்சத்திர பேட்ஸ்மேன் கேன் வில்லியம்சன், வங்காள தேசத்தின் ஆல் ரவுண்டர் ஷகிப் அல் ஹசன் மற்றும் யுஏஇ-யை சேர்ந்த ஆசிப் கான் ஆகியோரது பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.

    இந்த மூவரில் அதிக வாக்குகள் பெறுபவருக்கு ஐசிசி மார்ச் மாதத்திற்கான சிறந்த வீரர் விருது வழங்கப்படும்.

    இதேபோல், மார்ச் மாதத்திற்கான சிறந்த வீராங்கனை விருதுக்கு சிபோனா ஜிம்மி (பப்புவா நியூ கினியா), ஹென்றிட் இஷிம்வே (ருவாண்டா), ரவினா ஓ (பப்புவா நியூ கினியா) ஆகியோரது பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

    • இலங்கைக்கு எதிராக வங்கதேச அணி 17 ரன்களை எக்ஸ்ட்ராகளாக வழங்கியிருந்தது.
    • சுழற்பந்து வீச்சாளர்கள் நோ-பால் வீசுவது குற்றம்

    துபாய்:

    ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஆசியகோப்பை கிரிக்கெட் தொடரில் லீக் சுற்றில் கடைசி ஆட்டத்தில் வங்கதேசம் – இலங்கை அணிகள் மோதின. இதில் வெற்றி பெற்றும் அணீ சூப்பர்-4 சுற்றுக்கு முன்னேறும் என்ற அழுத்தமான நிலையில் இரு அணிகளும் மோதின.

    இதில் 184 ரன்கள் இலக்கை துரத்திய இலங்கை 19.2 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து வெற்றி பெற்றது. வங்கதேச அணிக்கு இது 2-வது தோல்வியாக அமைந்தது. இதனால் தொடரில் இருந்து வெளியேறியது. இலங்கைக்கு எதிராக வங்கதேச அணி 17 ரன்களை எக்ஸ்ட்ராகளாக வழங்கியிருந்தது.

    இதில் 4 நோ-பால்கள் அடங்கும். முக்கியமாக ஆட்டத்தின் 20-வது ஓவரில் இலங்கை அணிக்கு கடைசி 3 பந்துகளில் 4 ரன்கள் தேவையாக இருந்த நிலையில் மெஹிதி ஹசன் நோ-பால் வீசினார். இதன் வாயிலாக 3 ரன்களை எளிதாக பெற்று வெற்றியை வசப்படுத்திய இலங்கை அணி சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியது.

    இது குறித்து வங்கதேச அணியின் கேப்டன் ஷகிப் அல்ஹசன் கூறும்போது:-

    பேட்டிங்கை பொறுத்தவரையில் நாங்கள் கூடுதலாக 10 முதல் 15 ரன்களை எடுத்தோம். மெஹிதி ஹசன் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டுள்ளார். எந்த ஒரு கேப்டனும் நோ-பால் வீசுவதை விரும்ப மாட்டார்கள். நாங்கள் நிறைய நோ-பால் மற்றும் அகலப்பந்துகளை வீசினோம்.

    இது சிறந்த பந்துவீச்சு அல்ல. சுழற்பந்து வீச்சாளர்கள் நோ-பால் வீசுவது குற்றம் ஆகும். நாங்கள் அழுத்தத்தில் இருந்ததாக நினைக்கிறேன். உலகக் கோப்பையை கருத்தில் கொண்டு இந்த விஷயத்தில் அதிகம் கவனம் செலுத்த வேண்டும். படிப்படியாக முன்னேற்றம் காண விரும்புகிறோம். இறுதி கட்ட ஓவர்களில் நாங்கள் இன்னும் சிறப்பாக செயல் பட வேண்டும் என நினைக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×