என் மலர்
நீங்கள் தேடியது "ராஜா எம்.எல்.ஏ."
- முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி தேவநேய பாவாணருக்கு மணிமண்டபம் அமைத்து திறந்து வைத்தார்.
- பரிபூரணம் இறப்பிற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.
சங்கரன்கோவில்:
தமிழ் மொழியின் சிறப்புகளைப் போற்றி வளர்த்ததோடு அதனை உலகறிய செய்த தமிழறிஞர் பெருமக்கள் பலரில் தேவநேய பாவாணர் குறிப்பிடத்தக்கவர். இவர் சங்கரன்கோவில் அருகே உள்ள கோமதிமுத்துபுரத்தில் பிறந்தவர்.
தன்னுடைய வாழ்வின் பெரும்பகுதியைத் தமிழ் மொழியின் வளர்ச்சிக்காவும், ஆராய்ச்சிக்காகவும் செலவழித்தவர். அவருக்கு மணி மண்டபம் அமைக்க வேண்டும் என்பது தமிழ் ஆர்வலர்களின் நெடுநாள் கோரிக்கையாக இருந்தது. அதை ஏற்று 2007-ம் ஆண்டு முதல்-அமைச்சராக இருந்த கருணாநிதி மதுரை அண்ணா நகரில் ரூ.40 லட்சம் செலவில் தேவநேய பாவாணருக்கு மணிமண்டபம் அமைத்து திறந்து வைத்தார்.
அந்த மணிமண்டபத்தை பராமரிக்கும் பொறுப்பை பாவாணரின் பேத்தி ஏ.எம்.டி.பரிபூரணத்திடம் அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதி ஒப்படைத்தார். அதற்காக பரிபூரணத்திற்கு செய்தி மக்கள் தொடர்பு துறையில் பணி ஆணை வழங்கினார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் பரிபூரணம் உடல்நலக் குறைபாட்டால் உயிரிழந்தார். அவரது இறப்பிற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். அவரது மறைவை ஒட்டி சங்கரன்கோவில் அருகே உள்ள ஆண்டார்குளம் கிராமத்தில் உள்ள இல்லத்து க்கு சங்கரன்கோவில் ராஜா எம்.எல்.ஏ நேரில் சென்று பரிபூரணம் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அப்போது தேவநேய பாவாணர் குடும்பத்தினர் மறைந்த பரிபூரணத்திற்கு அப்போதய முதல்-அமைச்சர் கருணாநிதி அரசு வேலை வழங்கியதை போல அவரது மகளான மனோசாந்திக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ.விடம் குடும்பத்தினர் கோரிக்கை மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட எம்.எல்.ஏ. இதுகுறித்து முதல்-அமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
- சங்கரன்கோவில் மின்வாரிய தொ.மு.ச. சார்பில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் நிகழ்ச்சி நடந்தது.
- வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. மின்வாரிய தொ.மு.ச. கொடியேற்றி இனிப்புகள் வழங்கினார்.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவிலில் மின்வாரிய தொ.மு.ச. மாநில பொதுச் செயலாளர் மணிமாறன் ஆலோசனையின் படி, சங்கரன்கோவில் மின்வாரிய தொ.மு.ச. சார்பில் தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் நிகழ்ச்சி நடந்தது.
தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். சங்கரன்கோவில் யூனியன் சேர்மன் லாலா சங்கரபாண்டியன், சேர்மன் உமா மகேஸ்வரி, தொ.மு.ச. திட்ட செயலாளர் மகாராஜன், திட்டத்தலைவர் தங்கமாரிமுத்து, திட்ட பொருளாளர் சத்யராஜ் முன்னிலை வகித்தனர்.
இதில் பங்கேற்ற தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. மின்வாரிய தொ.மு.ச. கொடியேற்றி இனிப்புகள் வழங்கினார். அதனை தொடர்ந்து ஏழை எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
தொடர்ந்து மின்வாரிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளையும் வழங்கினார். இதில் மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பெரியதுரை, இளைஞர் அணி சரவணன், தி.மு.க. மாவட்ட மாணவரணி உதயகுமார், கார்த்திக், தொ.மு.ச.வை சேர்ந்த சத்தியராஜ், வெள்ளத்துரை, கலாவதி, கருப்பசாமி, கிருஷ்ணகுமார், பால்ராஜ், கிருஷ்ணசாமி, முத்துபாண்டியன் சிவசுப்பிரமணியன், பேச்சிமுத்து, தி.மு.க. அவைத்தலைவர் முப்புடாதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை கோட்டச் செயலாளர் சரவணமுருகையா செய்திருந்தார்.
- கோவில்பட்டி முதல் பருவக்குடி வரை உள்ள சாலையில் நடுவப்பட்டி பகுதி வரை மட்டுமே சாலை விரிவாக்க பணிகள் செய்யப்பட்டுள்ளது.
- அடைக்கலாபுரம் கிராமத்திற்கு செல்லும் சாலையை மேம்படுத்த வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.
சங்கரன்கோவில்:
நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் வேலுவை சந்தித்து தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. மனு அளித்தார். அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
கோவில்பட்டி முதல் பருவக்குடி வரை உள்ள சாலையில் நடுவப்பட்டி பகுதி வரை மட்டுமே சாலை விரிவாக்க பணிகள் செய்யப்பட்டுள்ளது. நடுவபட்டியில் இருந்து பருவக்குடி வரை சாலை விரிவாக்க பணிகளை மேற்கொள்ள வேண்டும், குருவிகுளம் ஒன்றியம் குருவிகுளம், ராமலிங்கபுரம், அத்திப்பட்டி வழியாக கழுகுமலை செல்லும் சாலை பழுதடைந்து உள்ளதால் அதனை சரி செய்ய வேண்டும். திருவேங்கடம் முதல் ஆலங்குளம் வரை குருவிகுளம் வழியாக செல்லும் சாலையை விரிவுபடுத்த வேண்டும் மேலநீலிதநல்லூர் ஊராட்சி ஒன்றியம் சங்கரன்கோவில் முதல் நெல்லை வரை செல்லும் சாலையில் இருந்து அடைக்கலாபுரம் கிராமத்திற்கு செல்லும் சாலையை மேம்படுத்த வேண்டும்.
மேலும் சுமார் 60 ஆயிரம் மக்கள் தொகை கொண்ட சங்கரன்கோவில் நகர்ப்பகுதியில் வியாபார ரீதியாகவும், கல்வி மற்றும் மருத்துவ தேவைகளுக்காக சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் சங்கரன்கோவில் நகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக புறவழிச்சாலை புளியம்பட்டியில் இருந்து களப்பாகுளம், நெடுங்குளம் வாயிலாக தெற்குத் சங்கரன்கோவில் பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதிகளில் முடிவடையும் வகையில் திட்டமிடப்பட்டுள்ள சங்கரன் கோவில் புறவழிச்சாலை பணிகளை விரைவாக தொடங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சங்கரன்கோவிலில் தி.மு.க. சார்பில் சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் பிறந்தநாள் விழா நடந்தது
- வீரபாண்டிய கட்டபொம்மன் படத்திற்கு ராஜா எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவிலில் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் பிறந்தநாள் விழா நடந்தது. இதில் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தலைமை தாங்கி அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த வீரபாண்டிய கட்டபொம்மன் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர் சீனிவாசன், மாவட்ட வக்கீல் அணி மருதப்பன், ஒன்றிய செயலாளர் பெரியதுரை, நகர செயலாளர் பிரகாஷ், இளைஞர் அணி சரவணன், மாணவரணி கார்த்திக் மற்றும் பாரதிராஜா, சங்கர், வக்கீல் சதீஷ், பிரகாஷ், ஜெயக்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
- ராஜா எம்.எல்.ஏ., முன்னிலையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தி.மு.க.வில் இணைந்தனர்.
- நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் தங்கவேலு, நகராட்சி தலைவி உமா மகேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சங்கரன்கோவில்:
நகரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவரும், வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலருமான தலைவன் கோட்டை விஜயபாண்டின் தலைமையில் வாசுதேவநல்லூர் சட்டமன்றத்தில் உள்ள கிராமங்களான தலைவன் கோட்டை, ஈச்சம்பொட்டல்புதூர், நொச்சிகுளம், ஆண்டார்குளம், வடமலாபுரம், நகரம், துரைச்சாமிபுரம், முள்ளிக்குளம், தாருகாபுரம், பாறைப்பட்டி, நெல்கட்டும்செவல், அரியூர், கீழப்புதூர், சங்கனாப்பேரி, மலையடிக்குறிச்சி ஆகிய ஊர்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தி.மு.க.தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ., முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் தங்கவேலு, சங்கரன்கோவில் நகராட்சி தலைவி உமா மகேஸ்வரி, நகரச் செயலாளர் பிரகாஷ், ஒன்றிய செயலாளர் பெரியதுரை, புளியங்குடி நகர செயலாளரும் நகர மன்ற துணைத் தலைவருமான அந்தோணிசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். புதிதாக கட்சியில் இணைந்தவர்களை மாவட்ட செயலாளர் ராஜா சால்வை அணிவித்து வரவேற்றார்.
- வியாபாரிகளும், பொதுமக்களும் கேரளா செல்ல இந்த பாலருவி ரெயில் உபயோகமாக இருந்து வந்தது.
- 6 மாதத்தில் 2.34 லட்சம் பயணிகளை பாவூர்சத்திரம் ரெயில் நிலையம் கையாண்டுள்ளது.
சங்கரன்கோவில்:
ரெயில்வே ஆலோசனை குழு உறுப்பினர் ராஜா எம்.எல்.ஏ., மத்திய ரெயில்வே மந்திரிக்கு ஒரு கடிதம் எழுதி யுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
நெல்லையில் இருந்து அம்பை, பாவூர்சத்திரம் தென்காசி, கொல்லம் வழியாக கேரள மாநிலம் பாலக்காட்டுக்கு (வண்டி எண் 16791/16792) பாலருவி எக்ஸ்பிரஸ் கொரோனா ஊரடங்கிற்கு முன் கடையம் மற்றும் பாவூர்சத்திரம் ரெயில் நிலையங்களில் இரு மார்க்கங்களிலும் நின்று சென்றது.
இந்நிலையில் பாலக்காடு செல்லும்போது பாவூர்சத்தி ரத்திலும், பாலக்காட்டில் இருந்து வரும் போது கடை யத்திலும் நிற்காமல் செல்கிறது. இந்த ரெயில் மூலம் தமிழகத்தில் இருந்து வணிக ரீதியாக கடையம், பாவூர் சத்திரம் சுற்று வட்டார பொது மக்களும், வியாபாரிகளும் கேரளாவில் உள்ள புனலூர், கொட்டாரக்கரை, கொல்லம், கோட்டயம் மற்றும் எர்ணாகுளம் செல்ல இந்த ரெயில் சேவையை பயன்படுத்தி வந்தனர்.
கேரளா செல்ல இந்த பாலருவி ரெயில் உபயோகமாக இருந்து வந்தது. வர்த்தக ரீதியாக லாபம் தரும் நிலையங்களாக கணக்கி டப்பட்டு கடையம், பாவூர் சத்திரம் ரெயில் நிலையங்களுக்கு மீண்டும் நிறுத்தங்கள் வழங்குவதற்கு வர்த்தக ரீதியாகவும், இயக்கு தல் ரீதியாகவும் சாத்தியக் கூறுகள் உள்ளது என்று 4.10.21 அன்று மதுரை ரெயில்வே கோட்ட மூத்த இயக்குதல் பிரிவு மேலாளர், தெற்கு ரெயில்வே தலைமை அலுவலகத்தில் உள்ள தலைமை பயணி கள் போக்குவரத்து மேலாள ருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
மேலும் கொரோ னாவுக்கு முன்பு கடையம், பாவூர் சத்திரம் ரெயில் நிலை யங்களில் பாலருவி எக்ஸ்பிரஸ் நின்று சென்ற நிலையில், அக்டோபர் 2019 முதல் மார்ச் 2020 வரை 6 மாத காலகட்டங்களில், 23.4 லட்சம் வருமானத்துடன் 2.34 லட்சம் பயணிகளை பாவூர்சத்திரம் ரெயில் நிலையமும், 15.7 லட்சம் வருமானத்துடன் 1.31 லட்சம் பயணிகளை கடையம் ரெயில் நிலையமும் கையாண்டுள்ளது.
மேலும் இந்த நெல்லை- தென்காசி வழித்தடத்தில் இயங்கும் ஒரே தினசரி விரைவு ரெயில் இதுவா கும். தமிழக அரசால் நியம னம் செய்யப்பட்ட ரெயில்வே ஆலோசனை குழு உறுப்பினர் என்ற முறையில், கடையம் மற்றும் பாவூர்சத்திரத்தில் இரு மார்க்கங்களிலும் பாலருவி எக்ஸ்பிரஸ் ரெயில் நின்று செல்ல வேண்டும் என்பது எனது கோரிக்கையாகும். இதனை உடனடியாக நிறைவேற்றித்தர வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- திறப்பு விழாவுக்கு நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி தலைமை தாங்கினார்.
- பூங்காவை தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க.செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் காவேரி நகரில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சுமார் ரூ.70 லட்சம் மதிப்பீட்டில் புதிய பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு சங்கரன்கோவில் நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி தலைமை தாங்கினார்.
தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் பரமகுரு, ஒன்றிய செயலாளர் பெரியதுரை, நகர செயலாளர் பிரகாஷ், நகராட்சி சுகாதார அலுவலர் பாலச்சந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க.செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. கலந்துகொண்டு பூங்காவை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இதில் நகர அவைத் தலைவர் முப்பிடாதி, நகர துணைசெயலாளர்கள் கே.எஸ்.எஸ். மாரியப்பன், முத்துக்குமார் சுப்புத்தாய், இளைஞர் அணி சரவணன், முகேஷ் மற்றும் கேபிள் கணேசன், வெங்கடேஷ் வீரமணி, வீரா, ஜிந்தா மைதீன், சம்பத், ஜெயகுமார், பிரகாஷ் மற்றும் நகராட்சி கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் பூத் கமிட்டிகள் அமைத்து தீவிர களப்பணி ஆற்ற வேண்டும் என ராஜா எம்.எல்.ஏ. பேசினார்.
- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
சங்கரன்கோவில்:
தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயல் வீரர்கள் கூட்டம் சங்கரன்கோவில் ரெயில்வே பீடர் சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடந்தது. மாவட்ட அவைத் தலைவர் பத்மநாபன் தலைமை தாங்கினார்.
தலைமை செயற்குழு உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான தங்கவேலு, பரமகுரு, மாநில வர்த்தக அணி இணைச் செயலாளர் முத்துச்செல்வி, மாவட்ட துணை செயலாளர்கள் புனிதா, ராஜதுரை, மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நகர செயலாளர் பிரகாஷ் வரவேற்றார். மாநில செயற்குழு உறுப்பினர் யு.எஸ்.டி. சீனிவாசன் தொகுத்து வழங்கினார். சிறப்பு அழைப்பாளராக தென்காசி வடக்கு மாவட்டதி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசுகையில், மார்ச் 1- ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை நலத்திட்டங்கள் வழங்கும் விழாவாக கொண்டாட வேண்டும், பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் பூத் கமிட்டிகள் அமைத்து தீவிர களப்பணி ஆற்ற வேண்டும் என்றார்.
தொடர்ந்து கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு மோதிரம் வழங்குவது, காச நோயாளிகளுக்கு உணவு வழங்குவது, ரத்ததானம் வழங்குவது,மூத்த உறுப்பினர்களுக்கு பொற்கிழி வழங்குவது, ஏழை எளியவர்களுக்கு நலத்திட்டங்கள், மாற்றுத்திற னாளிகளுக்கு மூன்று சக்கர வண்டி, கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இதில் ஒன்றிய செய லாளர்கள் பெரியதுரை, மதி மாரிமுத்து, தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் வேல்சாமிபாண்டியன், தேவா , வெள்ளத்துரை, சாகுல் ஹமீது, சங்கரன்கோவில் மாரிசாமி, பராசக்தி, மாரிசாமி, மகேஸ்வரி, புளியங்குடி நகர செயலாளர் அந்தோணிசாமி, நகராட்சி சேர்மன்கள் சங்கரன்கோவில் உமா மகேஸ்வரி, புளியங்குடி விஜயா , பேரூர் செயலாளர்கள் சிவகிரி டாக்டர் செண்பக விநாயகம், ராயகிரி குருசாமி, வாசுதேவநல்லூர் ரூபிபாலசுப்பிரமணியன், திருவேங்கடம் மாரிமுத்து, பேரூராட்சி தலைவர்கள் சிவகிரி கோமதிசங்கரி, ராயகிரி இந்திரா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- உலக வன உயிரின நாள் விழா தென்காசி ரெயில் நிலையத்தில் நடந்தது.
- தமிழ்நாடு அரசு மரம் நடுவதை ஊக்கப்படுத்தி வருகிறது என ராஜா எம்.எல்.ஏ. கூறினார்.
தென்காசி:
தமிழ்நாடு வனத்துறை மற்றும் தென்னக ரெயில்வே இணைந்து நடத்திய உலக வன உயிரின நாள் விழா தென்காசி ரெயில் நிலையத்தில் நடந்தது.
இதில் ரெயில்வே ஆலோசனைக் குழு உறுப்பினர் பாண்டியராஜா வரவேற்று பேசி வன உயிரினங்களின் முக்கியத்துவம் மற்றும் மரங்கள் நடுவதின் நன்மைகள் குறித்து எடுத்துரைத்தார்.
மரம் நடும் விழாவை தொடங்கி வைத்து ரெயில்வே ஆலோசனை குழு உறுப்பினர் சங்கரன்கோவில் ராஜா எம்.எல்.ஏ., கூறியதாவது:- தமிழ்நாடு அரசு மரம் நடுவதை ஊக்கப்படுத்தி வருகிறது. மரங்கள் நடுவது குறித்து பள்ளி மாணவர்களுக்கு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
தென்காசி ரெயில் நிலையத்தில் தற்போது மரங்கள் வெட்டப்பட்டு வந்த நிலையில் சில வருடங்களில் நிறைய மரங்கள் வளர்ப்பதற்கு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறோம். மரம் நடுவது முக்கியமல்ல அதனை நல்ல முறையில் பராமரித்து பரெிய மரமாக உருவாக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தென்காசி பிராணா அமைப்பு சார்பில் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. இதில் மாவட்ட வன அலுவலர் டாக்டர்முருகன் உத்தரவின்படி, குற்றாலம் வனச்சரக அலுவலர் பாலகிருஷ்ணன் மேற்பார்வையில் குற்றாலம் பிரிவு வனவர் பிரகாஷ், மதுரை ரெயில்வே கோட்ட சுகாதார மேற்பார்வையாளர் ராச்செலின் ஜெனிலா, தென்காசி ரெயில் பயணிகள் சங்கத்தலைவர் வெங்கடேசன், பசிஇல்லா தமிழகம் நிர்வாகி முகமது அலி ஜின்னா, பிராணா மரம் வளர் அமைப்பைச் சார்ந்த நிர்வாகிகள், காவல்துறை அதிகாரிகள், வனத்துறை அதிகாரிகள், ரெயில்வே துறை அதிகாரிகள், ரெயில் பயணிகள் சங்க நிர்வாகிகள், சுகாதார ஊழியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- குழந்தைகள் அனைவரும் படிப்பு மட்டுமின்றி விளையாட்டுகளிலும் தனி கவனம் செலுத்த வேண்டும் என ராஜா எம்.எல்.ஏ. கூறினார்.
- சங்கரன்கோவில் பகுதியில் நிலத்தடி நீர் குறைவாக உள்ள சூழ்நிலை உள்ளது என்று ராஜா எம்.எல்.ஏ. கூறினார்.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவிலில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பள்ளி குழந்தைகளுக்கு விளை யாட்டை ஊக்குவிக்கும் வகையில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி ஜெயமாதா பள்ளியில் நடந்தது.
விளையாட்டு உபகரணங்கள்
நிகழ்ச்சிக்கு தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். சங்கரன்கோவில் நகர செய லாளர் பிரகாஷ், நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி சரவணன், பஞ்சாயத்து தலைவர் சிவசங்கரி முன்னிலை வகித்தனர். இதில் விளையாட்டு உபகரணங்கள் மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கி தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. பேசியதாவது:-
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குழந்தைகள் மீது அதிக பிரியம் மிகுந்த அக்கறை உள்ளவர். எந்த நிகழ்ச்சிக்கு சென்றாலும் குழந்தைகளை கண்டால் வாகனத்தில் இருந்து இறங்கி குழந்தைகளிடம் கலந்துரை யாடல் செய்துவிட்டு தான் செல்வார்.
நிலத்தடி நீர்
மேலும் குழந்தைகளின் கல்வி மற்றும் விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில் பல முத்தான திட்டங்களை அறிவித்து வருகின்றார். குழந்தைகள் அனைவரும் படிப்பு மட்டுமின்றி விளையாட்டுகளிலும் தனி கவனம் செலுத்த வேண்டும்.
சங்கரன்கோவில் பகுதியில் நிலத்தடி நீர் குறைவாக உள்ள சூழ்நிலை உள்ளது. எனவே மாணவ- மாணவிகள், ஆசிரியர்கள் அனைவரும் தங்கள் பகுதிகளில் மரக்கன்றுகளை நட வேண்டும். இதனால் நிலத்தடி நீர் உயரும் வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
கலந்து கொண்டவர்கள்
தொடர்ந்து குழந்தை களின் சிலம்பாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. இதில் பள்ளி நிர்வாகிகள் ஆரோக்கிய மேரி, ஜோசப்சின்னத்துரை, நகர அவைத் தலைவர் முப்புடாதி, நகர துணை செயலாளர்கள் கே.எஸ்.எஸ். மாரியப்பன், முத்துக்குமார், இளைஞர் அணி சரவணன், மாணவரணி கார்த்தி, அப்பாஸ்அலி, தகவல் தொழில்நுட்ப பிரிவு ராஜ், வார்டு செயலாளர்கள் வீராசாமி, வீரமணி, நகராட்சி கவுன்சிலர்கள் ராஜா ஆறுமுகம், புஷ்பம், விஜயகுமார் மற்றும் யோசேப் செல்வராஜ், கே.எஸ்.எஸ். சங்கர், தாஸ், ஜெயகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. கலந்துகொண்டு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கினார்.
- சில்லிகுளம் ஆதி திராவிடர் காலனியில் தார் சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் தொகுதி மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றியத்தில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் வக்கீல் பெரியதுரை தலைமையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
இதில் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. கலந்துகொண்டு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கினார். சங்கரன்கோவில் டி.டி.டி.ஏ. மனவளர்ச்சி குன்றியோர் பள்ளியில் சிறப்பு குழந்தைகளுக்கு உணவு வழங்கப்பட்டது. தொடர்ந்து நவநீதகிருஷ்ணாபுரத்தில் புதிய ரேஷன் கடை திறப்பு பெரிய கோவிலான் குளத்தில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் தார்ச்சாலை பணிகளை தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து இந்திரா காலனியில் ராஜா எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் கழிவுநீர் ஓடை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. பெரிய கோவிலான்குளத்தில் அரசு ஆரம்ப தொடக்கப்பள்ளி மாணவ- மாணவிகளுக்கு ரூ.5 ஆயிரம் மதிப்பிலான விளையாட்டுப் பொரு ட்களை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
சில்லிகுளம் ஆதி திராவிடர் காலனி ராஜா எம்.எல்.ஏ. தொகுதி மேம்பா ட்டு நிதியிலிருந்து ரூ. 10 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.
தொடர்ந்து குருக்கள்பட்டி அரசு ஆரம்ப தொடக்கப்பள்ளி மாணவ-மாணவிகள், குருக்கள்பட்டி டி.டி.டி.ஏ. தொடக்கப்பள்ளி மாணவ -மாணவிகளுக்கு ரூ.5 ஆயிரம் மதிப்பிலான விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டது. தொடர்ந்து கருத்தானூரில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
இதில் அவைத் தலைவர் பரமையா, ஒன்றிய துணைச் செயலாளர் சின்னக்குருசாமி, சந்திர சேகரன், மாவட்ட பிரதிநிதி சண்முகப்பாண்டியன், செந்தூர்ப்பாண்டியன், பொருளாளர் முத்து ப்பாண்டியன், வர்த்தக அணி செந்தில்குமார், வக்கீல் அணி தனசேகரன், அய்யாதுரை, சங்கரன்கோவில் நகரக் செயலாளர் பிரகாஷ், இளைஞர் அணி சரவணன், முகேஷ், விவசாய தொழிலாளர் அணி குமாஸ்தா முருகன், ஆதிதிராவிடர் நல அணி ஒப்பந்தக்காரர் ராஜ் என்ற கருப்பசாமி, சிறுபான்மையின் நல அணி மரியலூயிஸ்பாண்டியன், பசுபதிபாண்டியன், வீராசாமி, மாணவர் அணி வீரமணி, வக்கீல் சதீஷ்குமார், கோ மருதப்பபுரம் ஊராட்சி மன்ற தலைவர் வீரம்மாள், பெரியகோவிலாங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் பிச்சைப்பாண்டியன், மலையாங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் கண்ணன், இலந்தைகுளம் ஊராட்சி மன்ற தலைவர் சுரேஷ், ஜெயலட்சுமி கிளைக் கழகச் செயலாளர் துரை, கருத்துப்பாண்டியன், அவை தலைவர் கணபதி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- கல்லூரி முதல்வர் அப்துல் காதிர் தலைமையில் கருத்தரங்க மாநாடு நடந்தது.
- ஒவ்வொரு துறைகளுக்கும் தனித்தனியாக விவாத அரங்குகள் அமைக்கப்பட்ட இருந்தது.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் அருகே நடுவக்குறிச்சியில் அமைந்துள்ள மனோன் மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக் கல்லூரியில் கொரோனா காலத்திற்குப் பிந்தைய உலக நிலவரங்கள் என்ற தலைப்பில் ஒரு நாள் சர்வதேச பல்துறை கருத்தரங்க மாநாடு கல்லூரி முதல்வர் அப்துல் காதிர் தலைமையில் நடந்தது.
பாவூர்சத்திரம் செந்தூர் ஜூவல்லரி நிர்வாக இயக்குனர் சந்திரசேகரன் முன்னிலை வகித்தார். உடற்கல்வி இயக்குனர் கணேசன் வரவேற்றார்.
பேராசிரியர் சகிலா பானு வாழ்த்தி பேசினார்.கருத்தரங்கத்தை தொடங்கி வைத்து சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா பேசுகையில், கொரோனா காலத்திற்கு பிந்தைய உலக நடப்புகள் என்ற தலைப்பில் நடக்கும் இந்த மாநாட்டில் பேசப்படுகின்ற கருத்துக்களை மாணவ-மாணவிகள் மனதில் பதிய வைத்து தங்களுடைய கல்வி மேம்பாட்டிற்காகவும் வாழ்க்கையின் முன்னேற்றத் திற்காகவும் பயன் படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.
தொடர்ந்து மலேசியா நாட்டின் மஹ்சா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஆண்டனி சாம்ராட் பேசுகையில், கொரோனா வைரஸ் எவ்வாறு உருமாற்றம் பெறுகிறது, நமது உடலின் உள்ளுறுப்புகள் எவ்வாறு பாதிக்கப்படுகிறது என்பது பற்றி எடுத்துக் கூறி, கொரோனா பாதித்தவர்கள் வருடத்திற்கு ஒருமுறை தங்களுடைய உடல் நிலையை மருத்துவரின் ஆலோசனையின்படி பரிசோதனை செய்து கொள்ள வேண்டும், அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.
பின்னர் மலேசியா மஹ்சா பல்கலைக்கழகம் மற்றும் சங்கரன்கோவில் மனோ கல்லூரி இடையே பேராசிரியர்கள் பரிமாற்ற புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
தென்கொரியா பல்கலைக்கழகப் பேராசிரி யர் டாக்டர் பவட், நியூயார்க் ஐக்கிய நாடுகள் சபையில் பணிபுரியும் பிரவீன் சூசை ஆண்டனி ஆகியோர் ஆன்லைன் வழியாகவும் கலந்து கொண்டு பங்கேற் பாளர்களின் வினாக்களுக்கு விளக்கம் அளித்தனர்.
தொடர்ந்து ஒவ்வொரு துறைகளுக்கும் தனித் தனியாக விவாத அரங்கு கள் அமைக்கப்பட்டு அந்த துறைகள் பற்றி எடுத்துரைக் கப்பட்டது.
இதில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தமிழ் துறை தலைவர் நவநீத கிருஷ்ணன், பேராசி ரியர்கள் முருகையா, சந்தானகுமார், பேராசிரியர்கள்நெல்லை வக்கீல் முருகேசன், வித்யா, சாரநாதன் பாலமுருகன், லெனின் செல்வநாயகம், பால் மகேஷ், ஆனந்தகுமார், மகாலட்சுமி, நாகம்பட்டி ராம பாண்டி, உதயசங்கர், புஷ்பராணி, அருள் மனோகரி, சுரேஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை மாநாட்டின் ஒருங்கிணைப் பாளர் பேராசிரியர் வினோத் வின்சென்ட் ராஜேஷ் செய்திருந்தார்.