என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கேரள சுற்றுலா பயணிகள் வருகை குறைவு"

    • கோத்தகிரியில் கேத்தரின் நீர்வீழ்ச்சி உள்ளது.
    • அறிவிப்பு பலகை வைத்து சுற்றுலா பயணிகளுக்கு அறிவுறுத்த வேண்டும்

    அரவேணு

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் கேத்தரின் நீர்வீழ்ச்சி உள்ளது. இந்த நீர்வீழ்ச்சியை காணவும், இயற்கை அழகை கண்டு ரசிக்கவும் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் இருப்பார்கள்.

    இந்த பகுதிக்கு செல்லும் பாதை மலைப்பாதையாகும். இதனால் கவனமுடன் செல்ல வனத்துறையினரும் அறிவுரை வழங்கி வருகிறார்கள்.

    அப்படி வரும் சுற்றுலா பயணிகளில் சிலர், ஆபத்தை உணராமல் ஆபத்தான இடங்களுக்கு சென்று புகைப்படம் எடுத்து வருகின்றனர். எனவே இந்த பகுதிகளில் எல்லாம் அறிவிப்பு பலகை வைத்து சுற்றுலா பயணிகளுக்கு அறிவுறுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    • பழனி-கொடைக்கானல் சாலையில் சவரிக்காடு பகுதியில் மண்சரிவு ஏற்பட்டது. இதேபோல் பெரியகுளத்தில் இருந்து அடுக்கம் வழியாக செல்லும் சாலையிலும் மண்சரிவு ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    • கேரளாவில் இருந்து பழனி வழியாக வரும் சுற்றுலா பயணிகள் நீண்டதூரம் சுற்றி வத்தலக்குண்டு வழியாக செல்ல வேண்டும் என்பதால் அவர்கள் பயணத்தை தவிர்த்து விடுகின்றனர்.

    கொடைக்கானல்:

    மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். குறிப்பாக கேரளாவில் இருந்து அதிகளவில் கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் வருகின்றனர்.

    ஓணம் பண்டிகையையொட்டி கேரளாவில் இருந்து அதிகளவு சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வருவது வழக்கம். அவர்கள் பெரும்பாலும் பழனி வழியாக கொடைக்கானல் வருகின்றனர். கடந்த சில நாட்களாக இங்கு கனமழை பெய்து வருகிறது.

    இதனால் பழனி-கொடைக்கானல் சாலையில் சவரிக்காடு பகுதியில் மண்சரிவு ஏற்பட்டது. இதேபோல் பெரியகுளத்தில் இருந்து அடுக்கம் வழியாக செல்லும் சாலையிலும் மண்சரிவு ஏற்பட்டதால் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது வத்தலக்குண்டு சாலை வழியாக மட்டுமே சுற்றுலா வாகனங்கள் சென்று வருகின்றன.

    அந்த சாலையிலும் பால விரிவாக்க பணிகள் நடைபெறுவதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இதனால் பெரும்பாலான பயணிகள் கொடைக்கானலுக்கு வருவதை தவிர்த்து வருகின்றனர். கேரளாவில் இருந்து பழனி வழியாக வரும் சுற்றுலா பயணிகள் நீண்டதூரம் சுற்றி வத்தலக்குண்டு வழியாக செல்ல வேண்டும் என்பதால் அவர்கள் பயணத்தை தவிர்த்து விடுகின்றனர்.

    இதனால் கேரளாவில் இருந்து வரும் பயணிகள் கூட்டம் வெகுவாக குறைந்துள்ளது. வருகிற 8-ந்தேதி ஓணம் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. அதையொட்டி அதிகளவில் கேரள பயணிகள் வருவார்கள். எனவே பழனி சாலையில் விரைவில் சீரமைப்பு பணிகளை முடிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

    பயணிகள் வருகை குறைவால் சிறுகுறு வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். மழை குறைந்த நிலையில் அடுத்த வாரம் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ×