search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வஉசி பிறந்தநாள்"

    • ஆங்கிலேயரின் பொருளாதாரச் சுரண்டலுக்கு எதிராகக் கப்பலோட்டி, சிறையில் வாடிய ‘கப்பலோட்டிய தமிழர்’ வ.உ.சிதம்பரனார் அவர்களது புகழ் வாழ்க!
    • பெருமகனாரின் தியாக வாழ்வை, இளைஞர்களுக்குப் பயிற்றுவித்து அவரது பெருமையைப் போற்றுவோம்!

    சென்னை:

    கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பதிவில்,

    ஆங்கிலேயரின் பொருளாதாரச் சுரண்டலுக்கு எதிராகக் கப்பலோட்டி, சிறையில் வாடிய 'கப்பலோட்டிய தமிழர்' வ.உ.சிதம்பரனார் அவர்களது புகழ் வாழ்க!

    நாட்டுத் தொண்டும் - மொழித் தொண்டும் தனது இரு கண்கள் என வாழ்ந்திட்ட அந்தப் பெருமகனாரின் தியாக வாழ்வை, இளைஞர்களுக்குப் பயிற்றுவித்து அவரது பெருமையைப் போற்றுவோம்! என்று தெரிவித்துள்ளார்.

    • தியாகத்தின் முழு உருவான ‘செக்கிழுத்த செம்மல்’ வ.உ.சிதம்பரனாரின் பிறந்த நாளில் அவரது தியாகத்தைப் போற்றிடுவோம்.
    • தற்சார்பு-தன்னிறைவு போன்றவற்றை உண்மையாக நெஞ்சில் ஏந்தி செயல்பட்ட வ.உ.சிதம்பரனார் வழிநடப்போம்.

    சென்னை:

    கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் பிறந்தநாளை முன்னிட்டு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

    சுதேசி இயக்கத்திற்கு இலக்கணமாய்த் திகழ்ந்து, தியாகத்தின் முழு உருவான 'செக்கிழுத்த செம்மல்' வ.உ.சிதம்பரனாரின் பிறந்த நாளில் அவரது தியாகத்தைப் போற்றிடுவோம். தற்சார்பு-தன்னிறைவு போன்றவற்றை உண்மையாக நெஞ்சில் ஏந்தி செயல்பட்ட அவரது வழிநடப்போம்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • சுதந்திர போராட்ட வீரர் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 151-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது.
    • வ.உ.சிதம்பரனார் சிலைக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    ஓட்டப்பிடாரம்:

    சுதந்திர போராட்ட வீரர் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 151-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது.

    இதையொட்டி தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் நினைவு இல்லத்தில் உள்ள அவரது முழுஉருவ வெண்கல சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    அரசு சார்பில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமையில் வ.உ.சிதம்பரனார் சிலைக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    பின்னர் 41 பயனாளிகளுக்கு ரூ. 5.30 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் சண்முகையா, மார்க்கண்டேயன், மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், கோவில்பட்டி சப்-கலெக்டர் மகாலெட்சுமி, ஓட்டப்பிடாரம் யூனியன் தலைவர் ரமேஷ், யூனியன் ஆணையாளர்கள் வெங்கடாச்சலம், பாண்டியராஜன் தாசில்தார் நிஷாந்தினி, சமூக பாதுகாப்பு திட்டதாசில்தார் செல்வக்குமார் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    ×