search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மல்லிகைப்பூ விலை"

    • தொடர் மழை காரணமாக பூக்கள் விளைச்சல் குறைந்துள்ளது.
    • சங்கரன்கோவில் மலர் சந்தையில் பூக்களின் வரத்து குறைவாக உள்ளது.

    தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.

    அதனால், தொடர் மழை காரணமாக பூக்கள் விளைச்சல் குறைந்துள்ளது. இதன் விளைவாக சங்கரன்கோவில் மலர் சந்தையில் பூக்களின் வரத்து குறைவாக உள்ளது.

    இந்நிலையில், இன்று சங்கரன்கோவில் மலர் சந்தையில் ஒரு கிலோ மல்லிகைப்பூ 7 ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    அதேசமயம் கன்னியாகுமரி தோவாளை மலர்சந்தையில் ரூ.4000-க்கு விற்பனையாகிறது.

    நாளை இந்தாண்டின் கடைசி முகூர்த்த நாள் என்பதும் மல்லிகைப்பூ விலை உயர்வுக்கு காரணம் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் பல்வேறு பகுதிகளில் பூக்களின் விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்தும் குறைந்துள்ளது.
    • மேலும் செண்டு மல்லி கிலோ ரூ.120-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    ஈரோடு:

    தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் பல்வேறு பகுதிகளில் பூக்களின் விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்தும் குறைந்துள்ளது.

    இதன் எதிரொலியாக பூக்கள் தேவை அதிகரித்து விலையும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

    இந்த நிலையில் வரும் 8-ந் தேதி ஓணம் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி பூக்களின் தேவை அதிகரித்து உள்ளது.மேலும் கோவில்களில் தொடர்ந்து திருவிழா மற்றும் முகூர்த்த நாட்கள் வர உள்ளதால் பூக்களின் தேவை மேலும் அதிக ரித்துள்ளது.

    ஈரோடு பஸ் நிலையத்தில் பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது.

    இங்கு தினமும் அந்தியூர், சத்தியமங்கலம் ,சேலம், திண்டுக்கல், ஓசூர் போன்ற பகுதிகளிலிருந்து பூக்கள் வரத் ஆகி வருகின்றது. இந்நிலையில் கடந்த வாரம் ரூ.500- க்கு விற்கப்பட்ட மல்லிகைப்பூ விலை இந்த வாரம் மழை காரணமாக வரத்து குறைந்ததால் மல்லிகை பூக்களின் விலை மேலும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

    இன்று ஈரோடு மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ. 2000-க்கு மேல் விற்பனையானது. மேலும் ஓணம் பண்டிகை வருவதால் இன்னும் வரும் நாட்களில் இதன் விலை மேலும் உயரும் என எதிர்பார்க்க ப்படுகிறது.

    இதேபோல் மற்ற பூக்களின் விலையும் அதிகரித்துள்ளது. ஈரோடு மார்க்கெட்டில் பூக்களின் விலை கிலோவில் வருமாறு:-

    முல்லை - 400, ஜாதிப்பூ - 300, ரோஜா பூ - 200, சம்மங்கி - 145, செவ்வந்தி பூ - 160, பட்டுப் பூ - 50.

    இதே போல் சத்திய மங்கலம் பூ மார்க்கெட்டில் இன்று காலை மல்லிகைப்பூ கிலோ ரூ.2400-க்கு விற்பனையானது. இங்கு இருந்து ஓணம் பண்டிகை க்காக அதிகளவு கேரளாவுக்கு மல்லிகைப்பூக்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருவதால் விலை உயர்ந்து உள்ளதாக வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் தெரிவித்தனர். மேலும் செண்டு மல்லி கிலோ ரூ.120-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    ×