search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேவர் சிலை"

    • ஐ.ஜே.கே. சார்பில் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
    • தலைவர் டாக்டர் ரவி பச்சமுத்து கலந்து கொண்டு மாலை அணிவித்தார்.

    மதுரை

    முத்துராமலிங்கத்தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு மதுரை கோரிப் பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு ஐ.ஜே.கே. கட்சி சார்பில் மாலை அணிவித்து மரி யாதை செலுத்தப்பட்டது. தலைவர் டாக்டர் ரவி பச்சமுத்து கலந்து கொண்டு மாலை அணிவித்தார்.

    மாநில அமைப்பு செய லாளரும், மதுரை மாநகர் மாவட்ட தலைவ ருமான அன்னை இருதய ராஜ் தலைமை தாங்கினார். இதில் மாநில இளைஞரணி செயலாளர் வரதராஜன், மகளிரணி செயலாளர் அமுதா ராஜேஸ்வரன், மாநில போராட்டக்குழு செயலாளர் சிமியோன் சேவியர் ராஜ், மாநில விளம்பரப்பிரிவு செய லாளர் முத்தமிழ் செல்வன், மாநில துணை தலைவர்கள் நெல்லை ஜீவா, இளவரசி, ஆனந்த முருகன்,

    மாநில இளைஞரணி துணை தலைவர் சுரேஷ், தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் துரை பாண்டியன், கன்னியாகுமரி மாவட்ட தலைவர் காசின், கரூர் மாவட்ட தலைவர் பிரகாஷ் கண்ணா, திண்டுக் கல் கிழக்கு மாவட்ட தலை வர் ரஞ்சித்குமார், மாநில தகவல் தொழில்நுட்ப ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    மதுரை வடக்கு மாவட்ட தலைவர் ஞானசேகரன், மதுரை கிழக்கு மாவட்ட தலைவர் செந்தில்குமார், மாநகர் மாவட்ட செயலாளர் செந்தூர் பாண்டி, பொரு ளாளர் முத்துராஜா, மாநில மகளிரணி துணை செயலா ளர் சகிலாபுரோஸ், மாநகர் மாவட்ட முதன்மை அமைப்பு செயலாளர் ஜான்பெனடிக், மாவட் அமைப்பு செயலாளர் அமிர்தகிருஷ்ணன், தென் மண்டல அமைப்பு செய லாளர் வினோத்குமார்,

    மதுரை மேற்கு மாவட்ட செயலாளர் பிரபுராஜன், மாநில இளைஞரணி இணை செயலாளர் மோகன்குமார், மதுரை கிழக்கு மாவட்ட செயலாளர் நீலமேகம், மதுரை வடக்கு மாவட்ட செயலாளர் ராபின்சன், வடக்கு மாவட்ட பொருளாளர் சூசை அமல்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தேவர் சிலைக்கு வழங்கப்பட்ட வெள்ளி கவசம் விஷேச நாட்களில் அணிவிக்கப்படும்.
    • முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தகவல் தெரிவித்துள்ளார்.

    கமுதி

    ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராம லிங்கத்தேவர் நினைவிடம் அமைந்துள்ளது. இங்கு தேவரின் 115-வது ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை நேற்று நடைபெற்றது.

    இதில் முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு தேவர் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.பின்னர் நினைவிடத்தில் உள்ள தேவர் சிலைக்கு ஓ.பன்னீர்செல்வம் வெள்ளி ருத்ராட்ச மாலை அணிவித்து தீபாராதனை காட்டினார்.

    வெள்ளி கவசம்

    இதைத்தொடர்ந்து தேவர் நினைவிட பொறுப்பாளர் காந்தி மீனாள் நடராஜன் மற்றும் நிர்வாகிகளை சந்தித்தார். அவர்களிடம் தேவர் சிலைக்கு அணிவிப்பதற்காக புதிதாக செய்யப்பட்ட வெள்ளி கவசத்தை ஓ.பன்னீர்செல்வம் வழங்கினார். வெள்ளி கவசம் 10 ½ கிலோ எடை கொண்டதாகும்.

    வெள்ளி கவசம் வழங்கும் நிகழ்ச்சியின் போது முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மற்றும் மனோஜ்பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர், வெற்றிவேல், எம்.பி.க்கள் ரவீந்திரநாத், தர்மர், முன்னாள் எம்.பி. கோபாலகிருஷ்ணன், அய்யப்பன் எம்.எல்.ஏ. உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    புதிதாக வெள்ளி கவசம் வழங்கியது குறித்து ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது:-

    இன்றைக்கு அ.தி.மு.க. சார்பில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு வெள்ளி கவசம் வழங்கியுள்ளோம். இங்குள்ள அறக்கட்டளை நிர்வாகத்தினர் அந்த வெள்ளி கவசத்தை அவர்கள் பொறுப்பில் வைத்துக் கொண்டு எப்போதெல்லாம் விஷேச நாட்களில் அதனை சாற்ற வேண்டுமோ அப்போ தெல்லாம் அவர்கள் முறைப்படி சாற்றுவதற்கு உரிமை கொடுத்துள்ளோம்.

    அ.தி.மு.க. ஒருங்கி ணைப்பாளர் நான் தான். அந்த அடிப்படையில் அ.தி.மு.க. சார்பில் நான் வெள்ளி கவசம் வழங்கியிருக்கிறேன். அ.தி.மு.க.வில் 1 ½ கோடி தொண்டர்கள் ஒன்றிணைய வேண்டும் என்பது தான் எங்கள் விருப்பமாகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தேவர் நினைவிட கும்பாபிஷேகம் மற்றும் ஜெயந்தி விழா பசும்பொன்னில் நாளை தொடங்குகிறது.
    • பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    கமுதி:

    ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் இருக்கும் அவரது சிலைக்கு முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந்த 2014-ம் ஆண்டு 13 கிலோ தங்க கவசத்தை வழங்கினார்.

    அந்த தங்க கவசம் மதுரை அண்ணாநகரில் உள்ள வங்கி லாக்கரில் அ.தி.மு.க. மற்றும் பசும்பொன் தேவர் நினைவாலயம் பெயரில் வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் முத்துராமலிங்க தேவர் குருபூஜைக்கு 3 நாட்களுக்கு முன்னதாக வங்கியில் இருந்து தங்க கவசம் எடுத்து செல்லப்பட்டு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு அணிவிக்கப்படும்.

    பின்பு குருபூஜை விழா முடிந்ததும் தங்க கவசம் மீண்டும் வங்கி லாக்கரில் வைக்கப்படும். லாக்கரில் உள்ள தங்க கவசத்தை அ.தி.மு.க. பொருளாளரும், பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவாலய பொறுப்பாளர்களும் கையெழுத்திட்டு வங்கியில் இருந்து பெற்று செல்வார்கள்.

    இந்த நிலையில் இந்த ஆண்டு அ.தி.மு.க.வில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக தேவர் தங்க கவசத்தை தங்களுக்கு வழங்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் தனித்தனியாக கேட்டுக்கொண்டனர். ஆனால் தங்களிடம் தான் வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பில் அ.தி.மு.க. பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. விசாரணை முடிவில் அ.தி.மு.க.வின் 'ஏ' மற்றும் 'பி' தரப்பில் பல்வேறு பிரச்சினை இருப்பதால் தங்ககவசத்தை அவர்களிடம் வழங்க உத்தரவிட முடியாது. மதுரை மற்றும் ராமநாதபுரம் மாவட்ட வருவாய் அதிகாரிகளும், தேவர் நினைவாலய பொறுப்பாளர்களும் வங்கியில் கையெழுத்து போட்டு தங்க கவசத்தை பெற்றுக்கொள்ளலாம் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

    இதையடுத்து மதுரை வங்கியில் இருந்த தேவர் தங்க கவசத்தை மதுரை மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல், தேவர் நினைவாலய பொறுப்பாளர் காந்தி மீனாள் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். இதைத்தொடர்ந்து தேவர் தங்க கவசம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பசும்பொன்னுக்கு எடுத்து செல்லப்பட்டது.

    அங்கு ராமநாதபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) ராஜசேகரிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்பு மதுரை மற்றும் ராமநாதபுரம் மாவட்ட வருவாய் அதிகாரிகள், தேவர் நினைவாலய பொறுப்பாளர்கள் முன்னிலையில் தேவர் சிலைக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டது. தங்க கவசம் அணிவிக்கப்பட்ட தேவர் சிலைக்கு வருவாய் துறை அதிகாரிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    தேவர் சிலைக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டதை தொடர்ந்து அங்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நிலையில் தேவர் நினைவிட கும்பாபிஷேகம் மற்றும் ஜெயந்தி விழா பசும்பொன்னில் நாளை தொடங்குகிறது. இதனால் அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    பசும்பொன் பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    • மூக்கையா தேவர் சிலைக்கு மாலை அணிவிக்க திரண்டு வருமாறு ஆர்.பி.உதயகுமார் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
    • தேவர் நினைவிடத்தில் நாளை (6-ந்தேதி) கலை 10.45 மணிக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்படும்.

    திருமங்கலம்

    சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான ஆர்.பி. உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    அரசியலிலும், பொது சேவையிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவரும், நாடாளுமன்ற உறுப்பின ராகவும், சட்டமன்ற உறுப்பி னராகவும் மக்களுக்கு பணியாற்றியவர் பி.கே.மூக்கையா தேவர்.

    அவரது 43-வது நினைவு நாளையொட்டி அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆணைக்கிணங்க உசிலம்பட்டியில் உள்ள பசும்பொன் முத்துராம லிங்கத்தேவர் கல்லூரியில் அமைந்திருக்கும் பி.கே.மூக்கையா தேவர் நினைவிடத்தில் நாளை (6-ந்தேதி) கலை 10.45 மணிக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்படும்.

    இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விசுவநாதன், திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ, மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ., அமைப்புச் செயலாளர் ஜக்கையன், மேலூர் சட்டமன்ற உறுப்பினர் பெரியபுள்ளான் என்ற செல்வம் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பார்த்திபன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் தவசி நீதிபதி ஆகியோர்கள் கலந்து கொள்கின்றனர்.

    பி.கே.மூக்கையா தேவருக்கு புகழ் அஞ்சலி செலுத்து வண்ணம் முன்னாள், நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர பேரூர், கிளை நிர்வாகிகள், வார்டு நிர்வாகிகள், மாவட்ட அணி நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள், செயல் வீரர்கள் மற்றும் செயல் வீராங்கனைகள் அனைவரும் அணி திரண்டு வரும்படி கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×