search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஹங்கேரி"

    • லீக் சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
    • இரு போட்டிகளில் ஹங்கேரி தோல்வியை தழுவி இருந்தது.

    ஜெர்மனியில் நடைபெற்று வரும் ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான யூரோ கோப்பை கால்பந்து போட்டியில் 24 அணிகள் பங்கேற்றுள்ளன. இந்த அணிகள் ஆறு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும்.

    லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவில் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள், 3-வது இடத்தை பிடிக்கும் நான்கு அணிகள் என மொத்தம் 16 அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெறும். அதன்படி க்ரூப் ஏ-வில் இடம்பெற்றுள்ள ஸ்காட்லாந்து மற்றும் ஹங்கேரி அணிகள் இடையிலான போட்டி நேற்று நள்ளிரவு நடைபெற்றது.

    நடப்பு யூரோ கோப்பையின் முதல் இரு போட்டிகளில் தோல்வியை தழுவிய ஹங்கேரி இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே நாக் அவுட் சுற்று வாய்ப்பை எதிர்பார்க்க முடியும் என்ற கட்டாயத்தில் களமிறங்கியது. ஸ்காட்லாந்து அணியும் இதேபோன்ற சூழலில் போட்டியில் களமிறங்கியது.

    அந்த வகையில், இரு அணிகளும் துவக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தின. எனினும், போட்டி முடிய பத்து நிமிடங்கள் இருந்த சமயத்தில் ஹங்கேரி வீரர் கெவின் சோபோத் கோல் அடிக்க அந்த அணி முன்னேற்றம் கண்டது.

    போட்டி முடிவில் ஸ்காட்லாந்து அணியின் கோல் அடிக்கும் முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை. இதன் காரணமாக ஹங்கேரி அணி 1-0 என்ற வகையில் வெற்றி பெற்றது. 

    • ஹங்கேரி அணி துவக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி வந்தது.
    • அந்த அணி முதல் கோலை அடித்தது.

    யூரோ கோப்பை கால்பந்து தொடரில் நேற்றிரவு நடைபெற்ற போட்டியில் க்ரூப் ஏ-வில் இடம்பெற்றுள்ள ஜெர்மனி மற்றும் ஹங்கேரி அணிகள் மோதின. இந்த போட்டியில் ஹங்கேரி அணி துவக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி வந்தது.

    முந்தைய போட்டியில் சுவிட்சர்லாந்து அணியை வெற்றி பெற்ற நிலையில், ஹங்கேரியை வீழ்த்தும் முனைப்பில் ஜெர்மனி அணி விளையாடியது. போட்டியின் முதல் பத்து நிமிடங்களில் ஜெர்மனி களத்தில் செட் ஆகும் வரை மட்டும் ஹங்கேரி வீரர்கள் ஆதிக்கம் இருந்தது. திடீரென இந்த நிலையில், மாற்றம் ஏற்பட்டது.

    ஜெர்மனி வீரர்கள் கோல் அடிப்பதில் தீவிரம் காட்டினர். இதற்கு பலன் அளிக்கும் வகையில், ஜெர்மனி அணி முதல் கோலை அடித்தது. இதைத் தொடர்ந்து ஹங்கேரி அணி தடுப்பாட்டத்தில் கவனம் செலுத்தியது. முதல் பாதியில் ஜெர்மனி அணி ஒரு கோலில் முன்னிலை வகித்தது.

    எனினும், இரண்டாவது பாதியிலும் கோல் அடிக்கும் முனைப்பில் ஜெர்மனி தீவிரம் காட்டியது. அந்த வகையில் ஜெர்மனி வீரர் குண்டோகன் தனது 19 வது சர்வதேச கோல் அடிக்க, அந்த அணி 2-0 என்ற அடிப்படையில் முன்னிலை பெற்றது. தொடர்ந்து போட்டி முழுக்க ஜெர்மனி ஆதிக்கம் செலுத்தியது. முடிவில் ஜெர்மனி அணி 2-0 என்ற அடிப்படையில் வெற்றி பெற்றது.

    இந்த வெற்றியின் மூலம் அந்த அணி நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. ஜெர்மனி அணி இதுவரை விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. ஹங்கேரி அணி விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வியை தழுவியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • நேட்டோ உறுப்பினரை எந்த நாடு தாக்கினாலும் அனைத்து நாடுகளும் ஒன்றாக எதிர்க்கும்
    • நீண்ட காலமாக ஸ்வீடன் எந்த போரிலும் பங்கேற்காமல் நடுநிலைமை வகித்தது

    இரண்டாம் உலகப் போருக்கு பிறகு அமெரிக்காவின் தலைமையில் 31 நாடுகள் ஒன்றிணைந்து அமைத்த அணி நேட்டோ (North Atlantic Treaty Organization).

    நேட்டோ அமைப்பில் உள்ள ஒரு நாட்டை வேறொரு நாடு தாக்கவோ அல்லது ஆக்கிரமிக்கவோ முற்பட்டால், அனைத்து நேட்டோ நாடுகளும் ஒருங்கிணைந்து அந்த நாட்டிற்கு ஆதரவாக நிற்கும்.

    நேட்டோ அமைப்பில் ஒரு நாடு உறுப்பினராக சேர விரும்பினால், அனைத்து நாடுகளும் அந்த விண்ணப்பத்தை அங்கீகரிக்க வேண்டும்.

    சுமார் 200 வருடங்களாக எந்த உலகப் போரிலும் பங்கேற்காமல் நடுநிலைமை வகித்த ஸ்வீடன், ரஷிய-உக்ரைன் போருக்கு பிறகு அமெரிக்க-சார்பு நிலைக்கு மாறியது.

    2022ல் உக்ரைனை ரஷியா ஆக்கிரமித்த பிறகு ஸ்வீடன், (NATO) நேட்டோ அமைப்பில் உறுப்பினராக விண்ணப்பித்தது.

    ஆனால், ஸ்வீடன் தனக்கு எதிரான நாடு எனக் கூறி ஸ்வீடனின் இணைப்பை ஹங்கேரி ஆதரிக்க மறுத்து வந்தது.

    இந்நிலையில், ஹங்கேரி தனது நிலையை மாற்றி கொண்டது.

    ஹங்கேரியின் பிரதமர் விக்டர் ஓர்பன் (Viktor Orban), "இரு நாடுகளும் ஒருவருக்காக மற்றொருவர் இறக்கவும் தயாராக உள்ள நாடுகள்" எனக் கூறி ஸ்வீடன் நேட்டோவில் இணைவதற்கு சம்மதம் தெரிவித்தார்.


    ஹங்கேரியின் ஒப்புதல் குறித்த தகவல் வந்த நிலையில் நேற்று ஸ்வீடன் பிரதமர் உல்ஃப் க்ரிஸ்டர்ஸன் (Ulf Kristersson) மகிழ்ச்சி தெரிவித்தார்.

    ஹங்கேரியின் இந்த முக்கிய முடிவு குறித்து நேட்டோ பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டால்டன்பர்க், "நேட்டோ, முன்னை காட்டிலும் வலுவான மற்றும் பாதுகாப்பான அமைப்பாகவும் மாறி விட்டது" என (Jens Stoltenberg) தெரிவித்தார்.

    மற்றொரு நேட்டோ உறுப்பினர் நாடான துருக்கி, தனது நாட்டிற்கு எதிரான குர்து இன பிரிவினைவாதிகளுக்கு ஆதரவளிப்பதாக குற்றம் சாட்டி ஸ்வீடன் இணைய சம்மதிக்கவில்லை.

    ஆனால், கடந்த ஜனவரி மாதம், தனது முடிவை மாற்றிக் கொண்ட துருக்கி, ஸ்வீடன் நேட்டோ உறுப்பினராக ஆதரவளித்தது.

    • அரசு நடத்தும் குழந்தைகள் இல்ல நிர்வாகி மீது பாலியல் துஷ்பிரயோக வழக்கு தொடரப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
    • அதிபர் கடாலின் நோவக்குக்கு எதிர்ப்பு வலுத்தது. அவர் பதவி விலகக்கோரி போராட்டங்கள் நடந்தன.

    ஹங்கேரி நாட்டுப் பெண் அதிபராக இருந்தவர் கடாலின் நோவக். இவர் பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய நபருக்கு மன்னிப்பு வழங்கினார்.

    அரசு நடத்தும் குழந்தைகள் இல்ல நிர்வாகி மீது பாலியல் துஷ்பிரயோக வழக்கு தொடரப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

    அந்த நிர்வாகிக்கு அதிபர் கடாலின் நோவக் மன்னிப்பு வழங்கி இருந்தார். இதற்கு நீதித்துறை மந்திரி ஜூடிட் லர்கா அனுமதி அளித்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதிபர் கடாலின் நோவக்குக்கு எதிர்ப்பு வலுத்தது. அவர் பதவி விலகக்கோரி போராட்டங்கள் நடந்தன.

    இந்த நிலையில் கடாலின் நோவக் அதிபர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்து ராஜினாமா செய்தார். இது தொடர்பாக அவர் தொலைக்காட்சியில் கூறும்போது நான் ஒரு தவறு செய்துவிட்டேன். குழந்தைகள் இல்ல நிர்வாகி, துஷ்பிரயோகம் செய்யவில்லை என்று நம்பி மன்னிப்பு வழங்க முடிவு செய்தேன்.

    ஆனால் அதில் நான் தவறு செய்துவிட்டேன். இன்று நான் உங்களை அதிபராக சந்திப்பது கடைசி நாள் என்றார்.

    அதேபோல் நீதித்துறை மந்திரி வர்காவும் பதவி விலகினார்.

    • கிராமப்புற ரெயில் கிராசிங்கில் கேட் மற்றும் சிக்னல் ஏதுவும் இல்லை.
    • ரெயில் பயணிகள் யாரும் காயம் அடையவில்லை.

    புதபெஸ்ட்:

    ஹங்கேரி நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள குன்பெஹெர்டோ கிராமத்திற்கு அருகே ரெயில்வே கிராசிங்சை வாகனம் ஒன்று கடக்க முயன்றபோது வேகமாக வந்த ரெயில் மோதியது.

    இந்த விபத்தில் அந்த வாகன டிரைவர் உள்பட 7 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரெயில் ஓட்டுனர் சிறு காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் ரெயில் பயணிகள் யாரும் காயம் அடையவில்லை என்று காவல்துறை அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    அந்த கிராமப்புற ரெயில் கிராசிங்கில் கேட் மற்றும் சிக்னல் ஏதுவும் இல்லை என கூறப்படுகிறது. இந்த விபத்தை அடுத்து அந்த ரெயில் பாதையின் பாதிக்கப்பட்ட பகுதி மூடப்பட்டதாக ஹங்கேரி ரெயில்வே நிறுவனம் தெரிவித்துள்ளது.

    ×