search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆசிரியர் தினவிழா"

    • யு.கே.ஜி. மாணவர் முகுந்தன் சுப பைரவ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
    • விழாவில் மாணவ, மாணவிகள் ஆசிரியர்களுக்கு குரு சமர்ப்பணம் செய்தனர்.

    தென்காசி:

    இலஞ்சி பாரத் மாண்டிசோரி பள்ளியில் ஆசிரியர் தினவிழாவினை முன்னிட்டு குரு சமர்ப்பணம் நிகழ்ச்சி நடைபெற்றது. கல்வி ஆலோசகர் உஷா ரமேஷ் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் பாலசுந்தர் முன்னிலை வகித்தார். முன்னதாக மாணவி அனுபாமா, ஹரிணி இறைவணக்கப் பாடல் பாடினர். ராபியாஸனா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். ஐஸ்வர்யா வரவேற்று பேசினார். இதில் யு.கே.ஜி. மாணவர் முகுந்தன் சுப பைரவ் டாக்டர் ராதாகிருஷ்ணன் போல் வேடமணிந்து சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

    மழலையர் பிரிவு முதல் 5-ம் வகுப்பு மாணவ, மாணவிகள் டாக்டர் ராதாகிருஷ்ணன் போல வேடமணிந்து வந்திருந்தனர். மேலும் 6 முதல் 9-ம் வகுப்பு மாணவர்கள் மகாபாரதம், ராமாயண கதாபாத்திரங்கள் வேடமணிந்து யாகசாலை அமைத்து இறைவழிபாடு நடத்தினர். தொடர்ந்து 10, 11 மற்றும் பிளஸ்-2 வகுப்பு மாணவ, மாணவிகள் ஆசிரியர்களுக்கு குரு சமர்ப்பணம் செய்தனர். முடிவில் மாணவி ரட்சனா நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை பாரத் கல்விக் குழுமத்தின் தலைவர் மோகனகிருஷ்ணன், செயலாளர் காந்திமதி மோகன கிருஷ்ணன், ஆலோசகர் உஷா ரமேஷ், இயக்குனர் ராதாபிரியா மற்றும் பள்ளி முதல்வர் பாலசுந்தர் ஆகியோர் செய்திருந்தனர்.

    • புதுக்கோட்டை மாவட்டம் சத்தியமங்கலம் கீரை. தமிழ்ச்செல்வன் கல்வி நிறுவனத்தில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது.
    • காவேரி நகர் அரசினர் மேல்நிலைப்பள்ளி தமிழ் ஆசிரியர் சி.வேல்முருகன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு டாக்டர் ராதாகிருஷ்ணன் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மாவட்டம் சத்தியமங்கலம் கீரை. தமிழ்ச்செல்வன் கல்வி நிறுவனத்தில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது. இதில் செவிலியர் கல்லூரி நான்காம் ஆண்டு மாணவி ஆர்.விசித்ரா வரவேற்றார். கீரை.தமிழ்ச்செல்வன் கல்வி நிறுவனங்களின் தலைவர் கீரை.தமிழ்ராஜா தலைமை தாங்கினார். செயலாளர் எஸ்.பீட்டர் முன்னிலை வகித்தார்.

    காவேரி நகர் அரசினர் மேல்நிலைப்பள்ளி தமிழ் ஆசிரியர் சி.வேல்முருகன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு டாக்டர் ராதாகிருஷ்ணன் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது அவர் பேசுகையில், இன்றைய மாணவிகள் எதிர்காலத்தில் சிறந்து விளங்க வேண்டுமெனவும், திறமை மிக்கவர்களாகவும், தேசப்பற்று உள்ளவர்களாகவும், மேதைகளாகவும், அறிஞர்களாகவும், வல்லுநர்களாகவும் உருவாகிட வேண்டுமெனவும் தெரிவித்தார்.

    விழாவில் செவிலியர் கல்லூரி முதல்வர் வி.எஸ்.நிர்மலா ஆசிரியர் தின வாழ்த்துகளை கூறி வாழ்த்துரை வழங்கினார். விழாவையொட்டி மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழா நிகழ்ச்சிகளை கல்வியியல் கல்லூரி தமிழ் விரிவுரையாளர் பி.தீபா தொகுத்து வழங்கினார். நிறைவில் செவிலியர் கல்லூரி நான்காம் ஆண்டு மாணவி ஆர்.காயத்ரி நன்றி கூறினார்.

    • டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான ஆசிரியர் தினத்தை முன்னிட்டு புதுக்கோட்டை மௌண்ட் சீயோன் சர்வதேசப் பள்ளியில் ஆசிரியர்களின் பணியை பாராட்டும் விதமாக மாணவ, மாணவிகளால் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
    • இந்நிகழ்வுக்கு பள்ளியின் தலைவர் டாக்டர் ஜோனத்தன் ஜெயபரதன் தலைமை தாங்கினார்.

    புதுக்கோட்டை :

    டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான ஆசிரியர் தினத்தை முன்னிட்டு புதுக்கோட்டை மௌண்ட் சீயோன் சர்வதேசப் பள்ளியில் ஆசிரியர்களின் பணியை பாராட்டும் விதமாக மாணவ, மாணவிகளால் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

    இந்நிகழ்வுக்கு பள்ளியின் தலைவர் டாக்டர் ஜோனத்தன் ஜெயபரதன் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் டாக்டர் ஜலஜா குமாரி முன்னிலை வகித்தார்.

    நிகழ்ச்சியில் பள்ளி தலைவர் ஜோனத்தன் ஜெயபரதன் பேசுகையில், ஆசிரியர் பணி என்பது தன்னலம் இல்லாத தியாகப்பணி, ஒவ்வொருவரும் நமது இரண்டாம் பெற்றோர்களாம் ஆசிரியர்களுக்கு நன்றியுள்ளவர்களாக செயல்பட வேண்டும்.

    முதல் பெண் ஆசிரியையாகிய சாவித்திரி பாய் பூலேவை போல ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் தமது பணியை அறப்பணியாக்கி செயல்பட்டு வருகின்றனர் என்று பேசினார்.

    அதனைத் தொடர்ந்து கவிதை,பேச்சு, நாடகம், நடனம், பாடல் என்று பல கோணங்களில் ஆசிரியர்களை வாழ்த்தும் விதமாக மழலையார் பிரிவு முதல் மேல்நிலைப் பிரிவு வரை அனைத்து மாணவ மாணவிகளாலும் கலை நிகழ்ச்சிகளை நடத்தினர். விழா நிறைவில் பள்ளி முதல்வர் நன்றி கூறினார்.

    • ராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரியில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது.
    • விழாவை கல்லூரி தாளாளர் டாக்டர் சின்னத்துரை அப்துல்லா குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

    ராமநாதபுரம்

    ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரியில் மாணவ, மாணவியர்களுக்கான கல்வி விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் தாமு கலந்து கொண்டு மாணவ, மாணவிகளிடையே கலாம் அவர்களின் சிந்தனை மற்றும் அவர்களின் எதிர்காலம் குறித்த கருத்துக்களை எடுத்துரைத்தார். மேலும் ஆசிரியர் தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு நடிகர் தாமு பரிசுகளை வழங்கினார்.

    விழாவில் கல்லூரி தாளாளர் டாக்டர் சின்னத்துரை அப்துல்லா குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். கல்லூரி முதல்வர் பெரியசாமி வரவேற்புரை நிகழ்த்தினார். கல்லூரியின் இனிய தமிழ் சங்க ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் நெடுமால் புகழேந்தி நன்றியுரை வழங்கினார். விழாவிற்கான ஏற்பாடுகளை கல்லூரியின் இனிய தமிழ் சங்க உறுப்பினர்கள் மற்றும் பேராசிரியர்கள் செய்தனர். செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரியில் ஆசிரியர் தின விழா கொண்டாட்டம் தாளாளர் டாக்டர் சின்னத்துரை அப்துல்லா தலைமையில் நடைபெற்றது.

    ×