என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பஸ் படிக்கட்டு"
- குறைவான பஸ் வசதியால் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் ஆபத்தை உணராமல் படியில் தொங்கியபடி பயணிக்கின்றனர்.
- தவித்த மாணவர்களை அங்கிருந்த பொதுமக்கள் தங்கள் இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு அழைத்துச் சென்றனர்.
பல்லடம்:
பல்லடத்தில் இருந்து மாதப்பூர் வழியாக ஏராளமான பள்ளி மாணவர்கள், பல்லடம் மற்றும் பொங்கலூரில் உள்ள அரசு பள்ளிகளுக்கு செல்கின்றனர். பல்லடத்திலிருந்து சமத்துவபுரம், மாதப்பூர் வழியாக காலை நேரத்தில் ஒரு அரசு பஸ், ஒரு தனியார் பஸ் மட்டுமே இயக்கப்படுகிறது. குறைவான பஸ் வசதியால் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் ஆபத்தை உணராமல் படியில் தொங்கியபடி பயணிக்கின்றனர்.
இது குறித்து பலமுறை கோரிக்கை வைத்தும் மனு அளித்தும் இதுவரை கூடுதல் பஸ்கள் இவ்வழித்தடத்தில் இயக்குவதற்கு அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் கூறுகின்றனர். இதற்கிடையே நேற்று காலை மாதப்பூரில் இருந்து பொங்கலூர் அரசு பள்ளிக்குச் சென்ற 5 மாணவர்களை கூட்ட நெரிசல் காரணமாக பஸ்சில் இருந்து இறக்கிவிட்டு சென்றதால், பள்ளிக்கு செல்ல முடியாமல் அந்த மாணவர்கள் அவதிக்குள்ளாகினர்.
இந்தநிலையில் பள்ளிக்கு செல்ல முடியாமல் தவித்த மாணவர்களை அங்கிருந்த பொதுமக்கள் தங்கள் இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு அழைத்துச் சென்றனர்.
பஸ்சுக்காக நல்லா கவுண்டம்பாளையத்தில் இருந்து மாதப்பூர் வரை 2 கிலோமீட்டர் தூரம் நடந்தே வருவதாகவும் மாதப்பூரில் இருந்து பொங்கலூர் செல்ல முறையான பஸ்வசதி இல்லாததால் பள்ளிக்கு உரிய நேரத்தில் செல்ல முடியாத நிலை உள்ளதாகவும் பள்ளி மாணவர்கள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து அரசு பஸ் ஓட்டுனரிடம் கேட்டபோது, பல்லடம், சமத்துவபுரம், மாதப்பூர், நல்லா கவுண்டம்பாளையம் ஆகிய பகுதிகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் காலை நேரத்தில் வருகின்றனர்.
கூடுதல் பஸ் வசதி இல்லாத காரணத்தால் கூட்ட நெரிசல் ஏற்படுவதாகவும் இது குறித்து அரசு போக்குவரத்து டிப்போவில் தெரிவித்துள்ளதாகவும், கூடுதல் பஸ்களை இயக்கினால் மட்டுமே இந்தப்பிரச்சனை தீரும் என்று தெரிவித்தார்.
- திருமங்கலம் அருகே பஸ் படிக்கட்டில் பயணம் செய்த மின்வாரிய ஊழியர் தவறி விழுந்து பலியானார்.
- இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமங்கலம்
திருமங்கலம் வேங்கட சமுத்திரத்தை சேர்ந்தவர் ராஜா. மின்வாரிய ஊழியர். இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். தற்போது டி. கல்லுப்பட்டி மின்வாரிய அலுவலகத்தில் மின்பாதை ஆய்வாளராக பணியாற்றினார்.
இரவு பணி என்பதால் டி.கல்லுப்பட்டி செல்வதற்காக திருமங்கலத்தில் இருந்து செங்கோட்டை செல்லும் அரசு பஸ்சில் ஏறி கல்லுப்பட்டிக்கு சென்றுள்ளார். பஸ்சில் இடமில்லாததால் படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்தார்.
அந்த பஸ் திருமங்கலம்- ராஜபாளையம் சாலையில் உள்ள டி.புதுப்பட்டியை அடுத்த தனியார் மருத்து வமனை அருகில் உள்ள வளைவில் திரும்பும் போது படிக்கட்டில் அமர்ந்திருந்த ராஜா எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்தார்.
உடனடியாக பஸ்சை டிரைவர் நிறுத்தி பார்த்த போது ராஜா தலையில் அடிபட்டு சம்பவ இடத்தி லேயே உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்து கல்லுப்பட்டி போலீசுக்கு தகவல் அளிக்கப்பட்டது. போலீசார் ராஜாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மாணவர்கள், மாணவிகள் அதிக அளவில் கல்லூரிக்கு செல்ல அந்த பஸ்சில் வந்தனர்.
- படிக்கட்டு வரை கல்லூரி மாணவிகளும் பெண்களும் நின்று கொண்டிருந்தனர்
அனுப்பர்பாளையம் :
திருப்பூரில் இருந்து கோவை செல்லும் தனியார் பஸ் திருமுருகன்பூண்டி பஸ் நிறுத்தத்திற்கு காலை 8 மணிக்கு வந்தது. அப்போது பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்தது. கல்லூரி மாணவர்கள், மாணவிகள் அதிக அளவில் கல்லூரிக்கு செல்ல அந்த பஸ்சில் வந்தனர். முன்புறத்தில் படிக்கட்டு வரை கல்லூரி மாணவிகளும் பெண்களும் நின்று கொண்டிருந்தனர். அப்போது முன்புறம்,பின்பக்கத்திலும் மாணவர்கள் சிலர் படிக்கட்டில் நின்று பயணம் செய்துள்ளனர். மேலும் படிக்கட்டில் நின்று சத்தம் போட்டும் கிண்டல் அடித்தும் வந்துள்ளனர். இதனால் பெண்களும் பயணிகளும் முகம் சுழித்தனர்.
பஸ் கண்டக்டர் மாணவர்களிடம் பஸ்சிற்குள் வரச்சொல்லி வலியுறுத்தினார். ஆனால், மாணவர்கள் கேட்காமல் தொடர்ந்து பஸ் படிக்கட்டில் நின்றுகொண்டு கைகளை வெளியே வீசி வந்துள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த பஸ் டிரைவர் பஸ்சை பூண்டி பஸ் நிறுத்தத்தில் நிறுத்தினார். பின்னர் கீழே இறங்கி வந்து பஸ் படிக்கட்டில் நின்று கொண்டு வந்தால் நான் பஸ்சை எடுக்கமாட்டேன் என்று உறுதிபடகூறி கீழேயே நின்று கொண்டார். மாணவர்களின் இந்த செயல் பயணிகள் -பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. எனவே இது போன்ற செயலில் ஈடுபடும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- மாணவர்கள் பஸ் படிக்கட்டில் பயணம் செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என விருதுநகர் கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
- காவல்துறை மற்றும் போக்குவரத்து துறை அலுவலர்கள் இது குறித்து தனி கவனம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
அருப்புக்கோட்டை
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள செம்பட்டி கிராமத்தில் மழையால் சாலை சேதமடைந்து பள்ளமாகி தண்ணீர் தேங்கி குளம்போல் காட்சி அளித்தது.
அந்த பாதையில் பள்ளி மாணவர்கள் அரசு பஸ்சில் ஆபத்தான முறையில் படிக்கட்டில் பயணம் செய்யும் செய்தி மாலை மலரில் நேற்று வெளியானது. இது குறித்து மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி, பஸ் படிக்கட்டில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பயணம் செய்தாலோ, விதி முறைகள் மீறினாலோ மாணவர்கள் மீதும், தொடர்புடைய வாகன ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் மீதும் மோட்டார் வாகன சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.
படிக்கட்டில் பயணம் செய்யும் மாணவர்கள் மீது கல்வித் துறை மற்றும் காவல் துறையின் மூலம் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். காவல்துறை மற்றும் போக்குவரத்து துறை ஆகிய அலுவலர்கள் இது குறித்து தனி கவனம் செலுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று கலெக்டர் மேகநாத ரெட்டி தெரிவித்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்