என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தென்னந்தோப்பு"
- தென்னங் கன்றுகளை ஆடு, மாடுகள் கடித்து விடக்கூடாது என்பதற்காக தென்னங்கண்றுகளை சுற்றி வலைபோட்டு வேலி
- வனத்துறையினர் ராட்சத மலைப்பாம்பை பாதுகாப்பான அடர்ந்த காட்டுப் பகுதியில் கொண்டு விட்டனர்.
கன்னியாகுமரி :
அகஸ்தீஸ்வரத்தைச் சேர்ந்தவர் சிவகுமார். இவருக்கு சொந்தமான தென்னந்தோப்பு சுசீந்திரம் அருகே உள்ள வழக்கம்பாறை சகாயபுரம் பகுதியில் உள்ளது. இந்த தோப்பில் உள்ள தென்னங் கன்றுகளை ஆடு, மாடுகள் கடித்து விடக்கூடாது என்பதற்காக தென்னங்கண்றுகளை சுற்றி வலைபோட்டு வேலி அமைத்துள்ளார்.
இந்த வலையில் இன்று காலை ராட்சத மலைப்பாம்பு ஒன்று சிக்கிக்கொண்டது. இந்த நிலையில் சிவகுமார் இன்று காலை அந்த தென்னந்தோப்புக்கு சென்றார். அப்போது அங்கு உள்ள ஒரு வலையில் ராட்சத மலைப்பாம்பு ஒன்று சிக்கியபடி வெளியில் வர முடியாமல் தவித்துக் கொண்டிருந்தது. உடனே அவர் இது பற்றி கன்னியாகுமரி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் கன்னியாகுமரி தீயணைப்பு நிலைய அலுவலர் பென்னட் தம்பி தலைமையில் நிலைய சிறப்பு அலுவலர் பாலகிருஷ்ணன் மற்றும் தீயணைக்கும் படை வீரர்கள் சீனிவாசன், தளவாய், ரமேஷ்குமார் மற்றும் குழுவினர் அந்த தென்னந்தோப்புக்கு விரைந்து சென்றனர். அந்த தென்னந்தோப்பில் உள்ள வலையில் சிக்கி இருந்த ராட்சத மலை பாம்பை லாவகமாக பிடித்தனர். அந்த ராட்சத மலைப்பாம்பு 10 அடி நீளம் கொண்டதாக இருந்தது. பின்னர் தீயணைக்கும் படையினர் அந்த ராட்சத மலைப்பாம்பை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.அதைத் தொடர்ந்து வனத்துறையினர் அந்த ராட்சத மலைப்பாம்பை பாதுகாப்பான அடர்ந்த காட்டுப் பகுதியில் கொண்டு விட்டனர்.
- ராஜபாளையம் அருகே தென்னந்தோப்பில் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம் செய்கின்றன.
- யானை கூட்டங்களை வனப்பகுதிக்குள் விரட்டுவதுடன் இழப்பீடு வழங்க வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டது.
ராஜபாளையம்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சேத்தூர் மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதியையொட்டி செல்ல பிள்ளை ஊரணி அருகே ராமகிருஷ்ண ராஜா என்பவருக்கு சொந்தமான தென்னந்தோப்பு உள்ளது. இந்த தோப்புக்குள் நேற்றிரவு காட்டு யானைகள் புகுந்தன.
அவை அங்கிருந்த 40-க்கும் மேற்பட்ட தென்னங்கன்றுகளை அடியோடு பிடுங்கி சேதப்படுத்தியது. அதே போல் அந்த பகுதியில் இருந்த பனை மரங்களையும் சேதப்படுத்தி உள்ளது.இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த விவசாயி கூறியதாவது:-
காய்ப்பு பருவத்திற்கு வந்த பாதி மரங்களும், 2 வருடங்கள் வளர்த்த தென்னங்கன்று களும் யானைகளால் பாதிக்கப்பட்டுள்ளது. ரூ.1 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது. தென்னந்தோப்பில் முகாமிட்டுள்ள யானை கூட்டங்களை வனப்பகுதிக்குள் விரட்டுவதுடன் இழப்பீடு வழங்க வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தென்னை சாகுபடி அதிகளவு மேற்கொள்ளப்படுகிறது.
- இதற்கு எந்த விதமான கட்டணமும் செலுத்த தேவையில்லை.
மடத்துக்குளம் :
தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ், தென்னந்தோப்புகளில் வட்ட பாத்தி மற்றும் வரப்புகள் அமைக்க விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து மடத்துக்குளம் வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் சுரேஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மடத்துக்குளம் தாலுகாவில் தென்னை சாகுபடி அதிகளவு மேற்கொள்ளப்படுகிறது. தென்னந்தோப்புகளில், தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ், சுற்றிலும் வட்டப்பாத்திகள் எடுக்கவும், வரப்புகள் அமைப்பதற்கும் அனுமதிக்கப்பட்டுள்ளது.இதற்கு எந்த விதமான கட்டணமும் செலுத்த தேவையில்லை. மூன்று ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே, வேலை உறுதியளிப்பு திட்ட தொழிலாளர்களை பயன்படுத்திக்கொள்ள முடியும்.கிராம ஊராட்சியைச்சேர்ந்த விவசாயிகள், அதே ஊரில், ஆதார் முகவரி உள்ள விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்;
ஒன்றிய அதிகாரிகளுக்கு மனு அனுப்பி வைக்கப்பட்டு, முன்னுரிமை அடிப்படையில், ஊராட்சிகளுக்கு பணி ஆணை வழங்கப்படுகிறது.இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விருப்பம் உள்ள விவசாயிகள், சிறு, குறு விவசாயி சான்று, ஆதார், அடங்கல், ரேஷன் கார்டு நகல், பாஸ்போஸ்ட் சைஸ் போட்டோ-2, ஆகியவற்றுடன், மடத்துக்குளம் வட்டார தோட்டக்கலைத்துறை அலுவலர்களை அணுகலாம்.மேலும் விபரங்களுக்கு, துங்காவி, மெட்ராத்தி, தாந்தோணி, காரத்தொழுவு, ஜோத்தம்பட்டி, கடத்தூர், மைவாடி ஊராட்சிகளை சேர்ந்த விவசாயிகள், உதவி தோட்டக்கலை அலுவலர் தாமோதரன் 96598 38787 என்ற எண்ணிலும், வேடபட்டி, சோழமாதேவி, கொழுமம்,பாப்பான்குளம் ஊராட்சியை சேர்ந்த விவசாயிகள் நித்யராஜ் 63821 29721 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்