என் மலர்
நீங்கள் தேடியது "தமிழக அணி"
- 43 விளையாட்டுகளில் போட்டி நடக்கிறது.
- 37 மாநிலங்களை சேர்ந்த 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை:
38-வது தேசிய விளையாட்டு போட்டி உத்தரகாண்டில் நாளை மறுநாள் (28-ந்தேதி) தொடங்குகிறது. பிப்ரவரி 14-ந்தேதி வரை இந்தப் போட்டி நடக்கிறது.
இதில் 37 மாநிலங்களை சேர்ந்த 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 43 விளையாட்டுகளில் போட்டி நடக்கிறது.
உத்தரகாண்டில் நடைபெறும் இந்த தேசிய விளையாட்டுப் போட்டியில் 393 பேர் தமிழக அணி பங்கேற்கிறது. 31 விளையாட்டுகளில் வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள்.
தமிழக அணியை வழியனுப்பும் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் (கிட்ஸ்) வழங்கும் நிகழ்ச்சி தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கம் சார்பில் நேரு உள் விளையாட்டு அரங்கில் நடை பெற்றது.
தமிழ்நாடு ஒலிம்பிக் சங்க தலைவர் ஐசரி கணேஷ், பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா ஆகியோர் விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு சீருடைகள், உபகரணங்களை வழங்கினார்கள். தமிழக வீரர், வீராங்கனைகள் பதக்கங்களை கைப்பற்றி பெருமை சேர்க்க வேண்டும் என்று அவர்கள் வாழ்த்தினார்கள். தமிழ்நாடு ஒலிம்பிக் சங்க பொருளாளர் செந்தில் தியாகராஜன், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய பொதுமேலாளர் (பொறுப்பு) சுஜாதா உள் ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
- தமிழக அணி 2-வது இன்னிங்சில் 305 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
- சண்டிகர் 2வது இன்னிங்சில் 193 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
சேலம்:
90-வது ரஞ்சி டிராபி கிரிக்கெட் போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 32 அணிகள் 4 பிரிவாகப் பிரிக்கப்பட்டு தங்களுக்குள் மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் காலிறுதிக்கு முன்னேறும்.
இதில் டி பிரிவில் இடம்பெற்ற தமிழக அணி தனது 6-வது லீக் ஆட்டத்தில் சண்டிகர் அணியுடன் மோதியது. டாஸ் வென்ற சண்டிகர் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய தமிழகம் முதல் இன்னிங்சில் 301 ரன்கள் எடுத்தது. ஆண்ட்ரே சித்தார்த் சதமடித்து 106 ரன்கள் எடுத்தார்.
தொடர்ந்து ஆடிய சண்டிகர் முதல் இன்னிங்சில் 204 ரன்களில் ஆல் அவுட் ஆனது. ஷிவம் பாம்ப்ரி 108 ரன்கள் எடுத்தார்.
97 ரன்கள் முன்னிலை பெற்ற தமிழகம் 2-வது இன்னிங்சை தொடர்ந்தது. தமிழக அணி 5 விக்கெட்டுக்கு 305 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது. பொறுப்புடன் ஆடிய விஜய் சங்கர் 150 ரன்கள் குவித்தார்.
இதையடுத்து, 403 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு சண்டிகர் அணி களமிறங்கியது. அந்த அணி 50 ஓவரில் 193 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் தமிழக அணி 209 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மனன் வோரா சதம் வீணானது.
தமிழகம் சார்பில் சாய் கிஷோர், அஜித் ராம் தலா 4 விக்கெட் வீழ்த்தினர். ஆட்ட நாயகன் விருது விஜய் சங்கருக்கு வழங்கப்பட்டது.
- ஆண்களுக்கான கூடைப்பந்து போட்டியில் தமிழ்நாடு அணி தங்கப்பதக்கம் வென்றது.
- பேட்மிண்டன் போட்டியில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் தமிழகத்தின் ரூபன் குமார்-ஹரிகரன் ஜோடி வெள்ளி பதக்கம் வென்றது.
அகமதாபாத்:
36-வது தேசிய விளையாட்டு போட்டி குஜராத் மாநிலத்தில் 6 நகரங்களில் நடந்து வருகிறது.
நேற்றைய போட்டியில் தமிழக அணி 5 பதக்கங்களை வென்றது. ஆண்களுக்கான கூடைப்பந்து போட்டியில் தமிழ்நாடு அணி தங்கப்பதக்கம் வென்றது. இந்த போட்டியில் பஞ்சாப்பை 97-89 என்ற புள்ளி கணக்கில் தமிழ்நாடு வீழ்த்தியது.
கூடைப்பந்து போட்டியின் பெண்கள் பிரிவின் இறுதி சுற்றில் தமிழகம் 62-67 என்ற புள்ளி கணக்கில் தெலுங்கானாவிடம் தோற்றது. இதன் மூலம் தமிழக அணி வெள்ளி பதக்கம் வென்றது.
பேட்மிண்டன் போட்டியில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் தமிழகத்தின் ரூபன் குமார்-ஹரிகரன் ஜோடி வெள்ளி பதக்கம் வென்றது. கலப்பு இரட்டையர் பிரிவில் ஹரிகரன்-நர்த்தனா ஜோடி வெண்கலம் வென்றது.
நேற்றைய போட்டி முடிவில் தமிழக அணி 19 தங்கம், 20 வெள்ளி, 19 வெண்கலம் என 58 பதக்கங்களுடன் தொடர்ந்து 4-வது இடத்தில் நீடிக்கிறது.
- போபாலில் ஏழுவர் விளையாடும் சிறுவர்களுக்கான தேசிய அளவிலான கால்பந்து போட்டி நடைபெற்றது.
- 12 மாநிலத்தை சேர்ந்த அணிகள் பங்கேற்றன.
திருப்பூர் :
மத்திய பிரதேச மாநிலம் போபாலில் ஏழுவர் விளையாடும் 14 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கான தேசிய அளவிலான கால்பந்து போட்டி நடைபெற்றது. இதில் கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா, மத்திய பிரதேசம், மணிப்பூர் உள்பட 12 மாநிலத்தை சேர்ந்த அணிகள் பங்கேற்றன. இந்த போட்டி லீக் மற்றும் நாக்-அவுட் முறையில் நடைபெற்றது.
இதில் தமிழ்நாடு அணிக்கும், மத்திய பிரதேச அணிக்கும் இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில் மத்திய பிரதேச அணி வென்றது. தமிழ்நாடு அணி 2-வது இடத்தை பிடித்தது.தமிழ்–நாடு, ஆந்–திரா பேரில் 8 சிறுவர்கள் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள். தேசிய அளவில் சிறந்த கோல் கீப்பர் பட்டத்தை திருப்பூர் வீரர் முகுந்தன் ஆதித்யா வென்றார். மத்திய பிரதேசத்தில் இருந்து ரெயில் மூலம் நேற்று மாலை திருப்பூர் வந்த வீரர்களுக்கு பல்வேறு கட்சியினர், முக்கிய நிர்வாகிகள் வரவேற்றனர். அகில இந்திய ஏழுவர் கால்பந்து கழக மாநில செயலாளர் ஹரிகரசுதன், துணை செயலாளர் திவ்யபாரதி, வீரர்களின் பெற்றோர் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
- தமிழக அணி 709 புள்ளிகளை குவித்து ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
- பதக்கம் மற்றும் பல சாதனைகளை புரிந்த தமிழக வீரர் , வீராங்கனைகளை தமிழ்நாடு தடகள சங்க செயலாளர் சி.லதா பாராட்டினார்.
சென்னை:
33-வது தென் மண்டல ஜூனியர் தடகள போட்டி ஆந்திர மாநிலம் குண்டூரில் 3 நாட்களாக நடந்தது. 14,16,18 மற்றும் 20 வயதுக்குட்பட்ட பிரிவில் நடந்த போட்டியில் தமிழக அணி சார்பில் 100 சிறுவர்களும் , 98 சிறுமிகளும் ஆக மொத்தம் 198 பேர் பங்கேற்றனர்.
இதில் தமிழக அணி 709 புள்ளிகளை குவித்து ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. மொத்தம் உள்ள 8 பிரிவுகளில் தமிழ்நாடு 6 பிரிவில் முதல் இடத்தை பிடித்து முத்திரை பதித்தது.
14 வயதுக்குட்பட்ட சிறுமியரில் கேரளாவும், சிறுவர் பிரிவில் தெலுங்கானாவும் முதல் இடத்தை பிடித்தன. மற்ற அனைத்து பிரிவுகளிலும் தமிழகம் ஆதிக்கம் செலுத்தியது.
பதக்கம் மற்றும் பல சாதனைகளை புரிந்த தமிழக வீரர் , வீராங்கனைகளை தமிழ்நாடு தடகள சங்க செயலாளர் சி.லதா பாராட்டினார்.
- தமிழக அணிகளை தமிழ்நாடு தடகள சங்ச செயலாளர் சி.லதா அறிவித்துள்ளார்.
- 14, 16, 18 மற்றும் 20 வயதுக்குட்பட்ட பிரிவுகளில் போட்டிகள் நடக்கிறது.
சென்னை:
33-வது தென்மண்டல ஜூனியர் தடகள போட்டி ஆந்திர மாநிலம் குண்டூரில் வருகிற 9-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை நடக்கிறது.
14, 16, 18 மற்றும் 20 வயதுக்குட்பட்ட பிரிவுகளில் போட்டிகள் நடக்கிறது. இந்தப் போட்டிக்கான தமிழக அணிகளை தமிழ்நாடு தடகள சங்ச செயலாளர் சி.லதா அறிவித்துள்ளார். 98 சிறுமிகளும், 100 சிறுவர்களும் ஆக மொத்தம் தமிழக அணிக்கு 198 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.