search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின்னணு"

    • 4-ம் ஆண்டு மாணவி நிகிதா வரவேற்றார்.
    • சங்கத்தில் வரவிருக்கும் திட்டங்களை பற்றிய கண்ணோட்டத்தை வழங்கினார்

    நாகர்கோவில் :

    அஞ்சுகிராமம் அருகே பால்குளத்தில் உள்ள ரோகிணி பொறியியல் கல்லூரியில் மின்னணு மற்றும் தொலை தொடர்பியல் பொறியியல் துறையின் சங்க தொடக்க விழா நடைபெற்றது.

    கல்லூரி தலைவர் நீல மார்த்தாண்டன், துணை தலைவர் நீல விஷ்ணு, நிர்வாக இயக்குனர் பிளஸ்ஸி ஜியோ ஆகியோர் தலைமை தாங்கினர். 4-ம் ஆண்டு மாணவி நிகிதா வரவேற்றார். கல்லூரி முதல்வர் ராஜேஷ் தலைமை உரையாற்றினார்.

    நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக பேராசிரியர் அருள் லின்ஸ்லி கலந்துகொண்டு மாணவர்களுக்கு துறை சார்ந்த அறிவுரை வழங்கினார். சங்கத்தின் மாணவ பொதுச்செயலாளர் கபிலேஷ் ஆண்டு அறிக்கை வாசித்தார்.

    சங்கத்தின் மாணவ துணை தலைவர் ராஜசுனில் சங்கத்தில் வரவிருக்கும் திட்டங்களை பற்றிய கண்ணோட்டத்தை வழங்கினார். சங்க ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் டாக்டர் ஸ்ரீதேவி, சங்க பொறுப்பாளர்களை அறிமுகம் செய்து வைத்தார். துறைத்தலைவர் டாக்டர் மோகன லட்சுமி சிறப்பு விருந்தினருக்கு நினைவு பரிசு வழங்கி கவுரவித்தார். முடிவில் மாணவ இணை செயலாளர் விஷ்ணு காந்த் நன்றி கூறினார்.

    • கலெக்டர் ஸ்ரீதர் திறந்து வைத்தார்
    • கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், கிள்ளியூர், விளவங்வோடு, பத்மநாபபுரம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளும், கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியும் உள்ளது.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், கிள்ளியூர், விளவங்வோடு, பத்மநாபபுரம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளும், கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியும் உள்ளது. இங்கு தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் மின்னணு எந்திரங்கள் கட்டுப்பாட்டு கருவி, வி.வி.பேட் எந்திரங்கள் திங்கள்நகர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திலும், தோவாளை தாலுகா அலுவலகத்திலும் வைக்கப்பட்டு வந்தது. இந்த எந்திரங்களை நாகர்கோவில் கலெக்டர் வளாகத்தில் வைக்க மின்னணு வாக்கு ப்பதிவு எந்திர கிடங்கு கட்டப்பட்டது.

    ரூ.2 கோடியே 93 லட்சம் செலவில் கட்டிடம் கட்டுமான பணி நடந்தது. தற்பொழுது இந்த பணிகள் முடிவடைந்து இன்று திறக்கப்பட்டது. மின்னணு வாக்குப்பதிவு எந்திர கிடங்கை கலெக்டர் ஸ்ரீதர் திறந்து வைத்தார். தேர்தல் தாசில்தார் சுசிலா மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். அலுவலகம் திறக்கப்பட்டதையடுத்து திங்கள்நகர் ஒழுங்குமுறை விற்பனை கூடம் மற்றும் தோவாளை தாலுகா அலுவ லகத்தில் வைக்கப்பட்டிருந்த மின்னணு எந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவி, வி.வி.பேட் எந்திரங்கள் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திர கிடங்கிற்கு கொண்டுவர ஏற்பாடு செய்யப்பட்டது. லாரிகள் மூலமாக அந்த எந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இங்கு கொண்டுவரப்பட்டது.

    5,204 மின்னணு எந்திரங்களும் 3,760 கட்டுப்பாட்டு கருவியும், 2612 வி.வி.பேட் எந்திரங்கள் என மொத்தம் 11,582 எந்திரங்களை இந்த கட்டிட த்தில் வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    தரை தளம், முதல் தளம், இரண்டாவது தளத்தில் இந்த எந்திரங்கள் அனை த்தும் வைக்கப்படுகிறது. எந்திரங்கள் அனைத்தும் வைக்கப்பட்ட பிறகு அந்த அறைகளை பூட்டி சீல் வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இந்த கட்டிடத்தில் 13 சி.சி.டி.வி. காமிராக்கள் கண்காணிக்க அமைக்கப்பட்டுள்ளது. மேலும் தீயணைப்பு கருவி, லிப்ட் வசதியும் செய்யப்பட்டுள்ளது.

    • மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்ட அறைக்கு ‘சீல்’ வைத்தனர்.
    • அங்கு போலீசார், துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பதிவான ஓட்டு எண்ணிக்கை நேற்று முன்தினம் சித்தோடு ஐ.ஆர்.டி.டி. பொறியியல் கல்லூரியில் நடந்தது.

    இரவு 9.15 மணிக்கு இறுதி சுற்று அறிவிக்கப்பட்டு வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவ னுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் சிவகுமார் வெற்றி பெற்றமைக்கான சான்றிதழை வழங்கினார்.

    இதற்கிடையில் அவ்வப்போது எண்ணி முடிக்கப்பட்ட மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள், கட்டு ப்பாட்டு கருவி, வி.வி.பேட் ஆகியவை பாதுகாப்பு அறையில் கொண்டு சென்று அதற்கான இடத்தில் வைத்தனர்.

    ஓட்டு எண்ணிக்கை முடிந்த பின் அந்த அறையில் தேர்தல் தொடர்பான எந்த பொருட்களும் இல்லாமல் அகற்றினர்.

    பின்னர் வேட்பாளர்கள், அவர்களது முகவர்கள், தேர்தல் பார்வையாளர் ராஜ்குமார் யாதவ், கலெக்டர் கிருஷ்ணனுண்ணி ஆகியோர் முன்னிலையில் மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்ட அறைக்கு 'சீல்' வைத்தனர்.

    அங்கு ஒரு ஏ.டி.எஸ்.பி. தலைமையில் போலீசார், துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    ஓரிரு நாளில் ஓட்டுப்பெட்டிகள் அங்கிருந்து ஈரோடு மாநகராட்சி அலுவல கத்துக்கு கொண்டு வந்து பாதுகாப்பாக வைக்க உள்ளனர்.

    • நேர்காணல் செய்வதற்கான கால அளவு 20-5-2022 ன் படி ஜூலை 1 முதல் செப்டம்பர் 30 வரை ஆகும்.
    • 2508 ஓய்வூதியர்கள் ஆண்டு நேர்காணல் புரியாமல் உள்ளனர்.

    திருப்பூர் :

    தமிழ்நாடு அரசு ஓய்வூதியர்கள்-குடும்ப ஓய்வூதியர்கள் ஆண்டு நேர்காணல் செய்வதற்கான கால அளவு 20-5-2022 ன் படி ஜூலை 1 முதல் செப்டம்பர் 30 வரை ஆகும். திருப்பூர் மாவட்ட கருவூல அலகில் (சார்நிலைக் கருவூல அலுவலகங்கள் உட்பட) நாளது தேதி வரை 2508 ஓய்வூதியர்கள் ஆண்டு நேர்காணல் புரியாமல் உள்ளனர். ஆண்டு நேர்காணல் புரிவதற்கான காலக்கெடு முடிவதற்கு குறைவான நாட்களே உள்ளதால் தங்களது ஓய்வூதியத்தை தொடர்ச்சியாக பெறுவதற்கு, நாளது தேதி வரை ஆண்டு நேர்காணல் புரியாமல் உள்ள ஓய்வூதியதாரர்கள் உடனடியாக தங்களது மின்னணு வாழ்நாள் சான்றினை சமர்ப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    மின்னணு வாழ்நாள் சான்றினை ஜீவன் பிரமான் இணையதளம் வாயிலாக இந்திய தபால் துறை வங்கி, இ-சேவா மற்றும் பொது சேவைமையங்கள் (சேவை கட்டணம் உண்டு) மூலம் சமர்ப்பிக்கலாம். மேலும் கருவூலத்திற்கு நேரில் சென்றும் நேர்காணல் புரியலாம். மின்னணு வாழ்நாள் சான்று சமர்ப்பிக்க அளிக்க வேண்டிய விவரங்கள் : ஆதார் எண், பி.பி.ஓ.,எண், வங்கி கணக்கு எண் மற்றும்செல்போன் ஓ.டி.பி., அளிக்க வேண்டும் என கருவூல அலுவலர் தெரிவித்துள்ளார். 

    ×