search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பேரூராட்சி அலுவலகம்"

    • கொடுமுடி பேரூராட்சியின் தலைவரின் கணவரான சுப்பிரமணியத்தின் தலையீடு பேரூராட்சி நிர்வாகத்தில் அதிகம் உள்ளது.
    • தி.மு.க நிர்வாகிகள் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானபடுத்தினர்.

    கொடுமுடி:

    ஈரோடு மாவட்டம் கொடுமுடி பேரூராட்சியின் தலைவராக தற்போது உள்ளவர் திலகவதிசுப்பிரமணி. இவரது கணவர் பேரூராட்சி நிர்வாகத்திலும், பேரூராட்சிக்கு வரவேண்டிய நிதி ஆதாரங்களிலும் தலையிட்டு பேரூராட்சிக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தி வருவதுடன் பேரூராட்சி அலுவலகத்தை தனது விருப்பத்திற்கு பயன்படுத்தி வருகிறார். இவருக்கு சொந்தமான ராட்சத ஜெனரேட்டர்கள் உள்ளிட்டவற்றை நிறுத்தி வைக்கும் இடமாக பேரூராட்சி வளாகத்தை பயன்படுத்தி வருகிறார்.

    பேரூராட்சியி்ன் தலைவரின் முகவரியிட்டு பேரூராட்சிக்கு வரும் கடிதங்களை தலைவரது கணவர் சுப்பிரமணி பெற்றுக்கொள்வதுடன் மன்றக்கூட்டங்களிலும் கலந்துகொண்டு முடிவுகளை எடுக்கசொல்லி நிர்வாகத்தை சீர்குலைக்கிறார். அத்துடன் பேரூராட்சியில் கவுன்சிலர்களாக உள்ளவர்களை மரியாதை குறைவாக நடத்துகிறார் என்பன உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை முன்வைத்து அது சம்பந்தமான கண்டனவரிகள் அடங்கிய பதாகைகளுடன் நேற்று 12 கவுன்சிலர்கள் கொடுமுடியில் உள்ள பேரூராட்சி அலுவலகத்துக்கு வந்து காலவரையற்ற போராட்டத்தை துவங்கினர்.

    இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

    கொடுமுடி பேரூராட்சியின் தலைவரின் கணவரான சுப்பிரமணியத்தின் தலையீடு பேரூராட்சி நிர்வாகத்தில் அதிகம் உள்ளது. இதனை கண்டித்து தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரவேண்டும் என்பதை வலியுறுத்தி கடந்த 3-ம்தேதி கொடுமுடி பேரூராட்சியின் செயல் அலுவலர் மற்றும் பேரூராட்சிகளின் துணை இயக்குனரிடம் மனு அளித்துள்ளோம். அந்த மனு மீது இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

    இந்த விஷயத்தை மாவட்ட செயலாளரும் அமைச்சருமான முத்துசாமியின் கவனத்துக்கு கொண்டு சென்றோம், அவரும் பல முறை இருதரப்பிடமும் பேசிவிட்டார். இருந்த போதும் தலைவரின் கணவர் மாறவில்லை, என்றனர்.

    கொடுமுடி பேரூராட்சி அலுவலகத்தில் கவுன்சிலர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டது குறித்து அறிந்த கொடுமுடி ஒன்றிய தி.மு.க நிர்வாகிகள் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானபடுத்தினர். அவர்களிடம் தங்களது முடிவை உறுதிபட தெரிவித்த கவுன்சிலர்கள் கொடுமுடி பேரூராட்சி தலைவரை மாற்றும் வரை தங்களது போராட்டம் தொடரும் என தெரிவித்துவிட்டு தங்களது போராட்டத்தை நேற்று மாலை தற்காலிகமாக ஒத்திவைத்தனர்.

    • வரி செலுத்தாதவர்களின் வீடு தேடி சென்று தீவிரமாக வசூல் செய்து வருகின்றனர்.
    • அலுவலகத்திற்கு நேரில் வந்து வரி செலுத்திய மூதாட்டியை பலரும் பாராட்டினர்.

    அவினாசி:

    அவினாசி பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளது. இதற்கான வரியினங்களை நிர்வாகத்தினர் தீவிரமாக வசூலிப்பதற்காக அனைத்து வார்டு பகுதிகளிலும் மைக் மூலம் வரியினங்களை செலுத்துமாறு அறிவுறுத்தி வருகின்றனர். இருப்பினும் வரி செலுத்தாதவர்களின் வீடு தேடி சென்று தீவிரமாக வசூல் செய்து வருகின்றனர். இந்த நிலையில் அவினாசி சீனிவாசபுரத்தை சேர்ந்த 91 வயதான ராஜாமணி என்ற மூதாட்டி நடக்க முடியாத நிலையிலும் கையில் கம்பு ஊன்றியபடி அவினாசி பேரூராட்சி அலுவலகத்திற்கு வந்து தனது வீட்டுக்கு செலுத்த வேண்டிய வரியை செலுத்தி ரசீது பெற்று சென்றார். இதுகுறித்து மூதாட்டி கூறுகையில், அரசுக்கு செலுத்த வேண்டிய வரிபணத்தை அந்தந்த காலகெடுவுக்குள் கட்டுவது நமது கடமை. அதை கட்டாமல் இருந்தால் பெரும் குறையாக எனக்கு தோன்றும். வரித்தொகையை கட்டிமுடித்ததில் நான் திருப்தியடைந்தேன் என்று கூறி அங்கிருந்த அலுவலர்களை இருகரம் கூப்பி வணக்கம் தெரிவித்து புறப்பட்டு சென்றார். வசதி வாய்ப்பு இருப்பவர்கள் வரியினங்களை செலுத்த காலம் கடத்தும் நிலையில் நடை தளர்ந்த நிலையிலும், அலுவலகத்திற்கு நேரில் வந்து வரி செலுத்திய மூதாட்டியை பலரும் பாராட்டினர்.

    • ராம பட்டினம் கிராமத்தில் சுமார் 2500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் குடியிருந்து வருகின்றனர்.
    • 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.

    தாராபுரம் :

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த கொளத்துப்பாளையம் பேரூராட்சி அருகே ராம பட்டினம் எனும் கிராமத்தில் சுமார் 2500க்கும்மேற்பட்ட பொதுமக்கள் குடியிருந்து வருகின்றனர். இங்குள்ள பொதுமக்கள் தினசரி கூலி வேலைக்கு சென்று வருகின்றனர்.

    இங்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள், அங்கன்வாடி பள்ளியில் 50க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் தற்போது அங்கன்வாடி பள்ளி சமையலறையை ஒட்டி கொளத்துப்பாளையம் பேரூராட்சிக்கு புறக்கழிப்பிடம் கட்டப்பட்டு வருகின்றன .அங்கு கழிப்பிடம் கட்ட வேண்டாம் , குழந்தைகளுக்கு தொற்றுநோய் மற்றும் காய்ச்சல் பரவும். ஆகையால் மாற்று இடங்களில் கட்ட வேண்டுமென வலியுறுத்தினர். கலெக்டரிடமும் மனு கொடுத்தனர். கொளத்துப்பாளையம் பேரூராட்சி செயல் அலுவலர், கொளத்துப்பாளையம் பேரூராட்சி தலைவி ஆகியோரிடம் வலியுறுத்தினர். ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை.இதனை கண்டித்து பேரூராட்சி வளாகம் முன்பு இன்று பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். 

    • சாக்கடை வசதி அமைக்க கோரி கடந்த 2 வருடங்களுக்கு முன்பு பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.
    • அதைத்தொடர்ந்து ஐ.யூ.டி.எம் திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்து சாக்கடை கால்வாய் அமைக்க ஆக்கிரம்புகள் செய்யப்பட்டன.

    காடையாம்பட்டி:

    சேலம் மாவட்டம் காடையாம்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட தீவட்டிப்பட்டி காலனி பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியில் சாக்கடை வசதி அமைக்க கோரி கடந்த 2 வருடங்களுக்கு முன்பு பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். அதைத்தொடர்ந்து ஐ.யூ.டி.எம் திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்து சாக்கடை கால்வாய் அமைக்க ஆக்கிரம்புகள் செய்யப்பட்டன.

    இந்த நிலையில் குடியிருப்புகள் முன்பு பள்ளம் தோண்டப்பட்டது. அன்று முதல் இன்று வரை எந்த பணியும் செய்யாமல் இருப்பதால் குடியிருப்புகள் முன்பு தோண்டப்பட்ட பள்ளத்தில் மழை நீர் தேங்கி உள்ளது. இதனால் மக்கள் நடமாட்டம் செய்ய முடியாமல் அவதியில் உள்ளனர்.

    நேற்று அப்பகுதி மக்கள் காடையாம்பட்டி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் பேரூராட்சி அலுவலர் மயில்வாகனத்திடம் கால்வாய் அமைக்க மனு வழங்கினர். பேரூராட்சி தலைவர் குமார் உடனடியாக நடவடிக்கை எடுத்து சாக்கடை கால்வாய் அமைத்து தரப்படும் என்று கூறினார். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

    ×