என் மலர்
நீங்கள் தேடியது "கட்டுமானப் பணி"
- அவர்கள் அங்கு இருப்பதை மணல் லாரி ஓட்டுநர் அறிவில்லை
- கொட்டகையின்மீது லாரியில் இருந்த மணலை இறக்கியுள்ளார்
மகாராஷ்டிராவில் கட்டுமானத் தளத்தில் நடந்த விபத்தில் 5 தொழிலாளிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஜல்னா மாவட்டத்தின் ஜாப்ராபாத் தாலுகாவில் உள்ள பசோடி-சந்தோலில் பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அந்த இடத்தில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட கொட்டகையில் தொழிலாளர்கள் இன்று காலை தூங்கிக் கொண்டிருந்தனர்.
அவர்கள் அங்கு இருப்பதை அறியாத மணல் லாரி ஓட்டுநர், அவர்களின் கொட்டகையின்மீது லாரியில் இருந்த மணலை இறக்கியுள்ளார். இதில் ஒரு சிறுவன் உட்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உயிரிழந்த தொழிலாளர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பியோடிய லாரி ஓட்டுனரை தேடி வருகின்றனர்.
- அரசினா் தொழிற்பயிற்சி நிலையம் பல்வேறு தொழில் சாா்ந்த பாடப் பிரிவுகளுடன் செயல்பட்டு வருகிறது.
- மேலும், 4.0 என்ற புதிய தொழில்நுட்பத்தில் உயா் தொழில்நுட்பப் பிரிவுகள் 2023 ஆக.1 முதல் தொடங்கப்பட உள்ளன.
நாமக்கல்:
நாமக்கல் அருகே கீரம்பூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையம் பல்வேறு தொழில் சாா்ந்த பாடப் பிரிவுகளுடன் செயல்பட்டு வருகிறது. தற்போது 176 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனா். மேலும், 4.0 என்ற புதிய தொழில்நுட்பத்தில் உயா் தொழில்நுட்பப் பிரிவுகள் 2023 ஆக.1 முதல் தொடங்கப்பட உள்ளன.
கீரம்பூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் (டாடா நிறுவனத்தின் முழுமையான பங்களிப்பில்) ரூ.3.73 கோடி மதிப்பீட்டில் பணிமனையுடன் கூடிய ஆய்வகம் கட்டுமானப் பணிக்கான பூமி பூஜை நேற்று நடைபெற்றது.
அப்போது மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஷ்குமாா் கூறுகையில், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சாா்பில் கீரம்பூா், கொல்லிமலை அரசினா் தொழிற்பயிற்சி நிலையங்களில் தலா ரூ. 3.73 கோடி மதிப்பீட்டில் புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய பணிமனை மற்றும் ஆய்வக கட்டடம் கட்டும் பணி தற்போது தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
லாரி கூண்டு கட்டும் பணிமனைகள் நிறைந்த நகரமாக நாமக்கல் விளங்குவதால் அதனடிப்படையில் இங்கு மோட்டாா் வாகன பழுது பாா்ப்பு குறித்த படிப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பினை மாணவா்கள் பயன்படுத்திக் கொண்டு தங்களை தொழில்நுட்பத்திற்கு ஏற்றவாறு மேம்படுத்தி கொள்ள வேண்டும் என்றாா்.
இந்த நிகழ்ச்சியில், பொதுப்பணித்துறை செயற்பொறியாளா் அருள், நாமக்கல் அரசினா் தொழிற்பயிற்சி நிலைய முதல்வா் ரவிச்சந்திரன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.